Tamil Star |
- சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு
- திமிங்கலங்கள் சுட்டுக்கொலை
- ஈரான் எண்ணெய் இறக்குமதி: இலங்கைக்கு அமெரிக்கா தடை
- மழையில் நிற்க வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர்
- மீனவர் விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
- நான் கண் மூடுவதற்குள் சுதந்திர தமிழீழம் மலர்வதை பார்க்க வேண்டும்: வைகோ பேச்சு
- 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் -கோத்தபாய ராஜபக்ச
- மன்னாரில் மீட்கப்படும் எலும்புக் கூடுகள் : ஐ.நா. உடனடியாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் – விக்கிரமபாகு கருணாரட்ண
- 14 வயதான மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்ள கணவரை அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு “பலஸ்தீனின் நட்சத்திரம்” அதியுயர் விருது
- அரசைக் கவிழ்க்க முனையும் அமெரிக்கா
- கண்முன்னே தனது கார் வெடித்துச் சிதறினால்…..
- இணையத்தைக் கலக்கும் ரியல் ஹீரோ…..
- கொடிய முதலையுடன் விளையாட்டு ஏற்படுத்திய விபரீதம்…..
- இப்படி ஒரு சாகச நடனத்தை பார்த்ததுண்டா?…. இதனை எவரும் முயற்சிக்க வேண்டம்….
- இப்படி பறக்குற இவரு மறுஜென்மம் எடுப்பாரா?….
- ஐசிசி பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா
- ஆம் ஆத்மி கட்சி பற்றி ஏ.ஆர்.ரகுமானின் பரபரப்பான கருத்து
- அன்ரோயிட் செல்பேசிகளுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம்
- புதிய பயனர் இடைமுகத்துடன் Good News
| சீனாவில் ஆறு டன் யானை தந்தங்கள் அழிப்பு Posted: 07 Jan 2014 12:09 AM PST
கடந்தாண்டு மட்டும் தந்தங்களுக்காக 35 ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஒரு கிலோ கிராம் யானை தந்தம் கள்ள சந்தையில் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சட்டவிரோதமாக வாங்கும் இந்த தந்தங்களை, மக்கள் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு மாற்றி வீட்டில் வைத்து அழகு பார்க்கின்றனர். இவ்வாறு யானைகள் கொல்லப்படுவது குறித்து கவலையடைந்த சீனா அரசு, அதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் கிலோ யானை தந்தங்களை பொது இடங்களில் வைத்து நேற்று சீனா அழித்தது. அழிக்கப்பட்ட இந்த தந்தங்கள் சீனாவில் பிடிபட்டுள்ள யானை தந்தங்களின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகள் இதுபோன்று யானை தந்தங்களை அழித்ததையடுத்து சீனாவும் பொது இடத்தில் வைத்து அழித்துள்ளது. இருந்தும், எவ்வளவு டன் தந்த குவியல்கள் அங்கு இருக்கிறது என்று தகவல் வெளியிடப்படவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jan 2014 11:46 PM PST
இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன. இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர். ஆனால், காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை. இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர். இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன. இந்த திமிங்கலங்களை மிகப்பெரிய அலை அடித்துவந்து கரையில் விட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. 1998-ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும், 1918-ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈரான் எண்ணெய் இறக்குமதி: இலங்கைக்கு அமெரிக்கா தடை Posted: 06 Jan 2014 11:18 PM PST
இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வொசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகமும், அமெரிக்க அரசுடன் பேச்சுகளை நடத்தியதாகவும், பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுக்களின் போதே, ஈரான் மீதான சில தடைகளை விலக்க உலகத் தலைவர்கள் இணங்கிய போதிலும், எண்ணெய் இறக்குமதி மீதான தடைகள் இன்னமும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியுள்ளது. இலங்கை தனது எண்ணெய் பயன்பாட்டில் 93 சதவீதத்தை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைக்க ஈரான் வாக்குறுதி அளித்ததை அடுத்து ஈரான் மீதான தடைகள் சிலவற்றை விலக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்திருந்தன. இதனால் தம் மீதான எண்ணெய் இறக்குமதி தடை நீங்கும் என்று கருதியிருந்த இலங்கைக்கு அமெரிக்காவின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மழையில் நிற்க வைத்து உரையாற்றிய கல்வி அமைச்சர் Posted: 06 Jan 2014 11:02 PM PST
உடற் பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் நடாத்தப்பட்ட தேசிய நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பங்கேற்றார். இந்த தேசிய நிகழ்வு இப்பாகமுவ மத்திய கல்லூரியில் நடைபெற்றது. குறித்த பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இரவு முழுவதிலும் கடும் மழை பெய்த போதிலும் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வினை பாடசாலை மைதானத்திலேயே நடத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விருந்தினர்கள் மேடையில் அமர்ந்து கொண்ட போதிலும், மாணவ மாணவியர் வெட்ட வெளியில் மழையில் நனைந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் உரையை ஆரம்பித்த போது இலேசான மழை பெய்ததாகவும், உரையைத் தொடரும் போது கடுமையான மழை பெய்தாகவும் குறிப்பிடப்படுகிறது. கடுமையான மழையையும் கருத்திற் கொள்ளாது கல்வி அமைச்சர் 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீனவர் விவகாரம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் Posted: 06 Jan 2014 10:56 PM PST
கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 250 மீனவர்களும், 79 மீனவப் படகுகளும் இலங்கை வசம் உள்ளது. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க தூதரகம் மூலமாக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நான் கண் மூடுவதற்குள் சுதந்திர தமிழீழம் மலர்வதை பார்க்க வேண்டும்: வைகோ பேச்சு Posted: 06 Jan 2014 10:35 PM PST
வாஜ்பாய் இந்திய பிரதமராக இருந்த போது இலங்கைக்கு ராணுவ உதவியோ, பணத்திற்காக ஆயுதமோ விற்பனை செய்யமாட்டோம் என அறிவித்தார். அவர் பிரதமராக இருக்கும் வரை இந்த உறுதி மொழியை பாதுகாத்தார். ஆனால் 2004–ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமர் ஆனதும் சிங்கள ராணுவத்திற்கு உதவி செய்ய ஆரம்பித்தார். இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் தான் காரணம். டெல்லியில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நான் பேசியபோது இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான். இதற்கு காரணமானவர்களை மக்கள் தீர்ப்பாயம் கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டேன். ஈழப்போர் முள்ளி வாய்க்காலோடு முடிவு பெற்று விட்டது என நினைக்க வேண்டாம். முள்ளி வாய்க்கால் மூலம் புதிய பரிணாமம் பெற்று இருக்கிறது. போராளிகளுக்கு என்றுமே தோல்வி இல்லை. தமிழீழம் அமைப்பதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சுதந்திர தமிழீழம் மலர்வதை நான் கண் மூடுவதற்குள் பார்க்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை தட்டிக்கேட்க தயங்க கூடாது, ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். இது மாணவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் பாராளுமன்ற தேர்தல் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எந்த களத்தில் இருந்தாலும் நாங்கள் முழு மன வலிமையோடு இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் -கோத்தபாய ராஜபக்ச Posted: 06 Jan 2014 10:23 PM PST
2015ம் ஆண்டு முற்பகுதியில் பெரிய தேர்தல் நடைபெறும் என்ற எதிர்வை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். குடிசைப் பகுதியில் உள்ளவர்களுக்கான மாடிவீட்டு திட்டத்தின் இரண்டாம் பகுதியின் பணிகளை தெமட்டகொட பிரதேசத்தில் நேற்று பார்வையிட்டபோது அவர் இந்த எதிர்வை வெளியிட்டார். இந்த மாடிவீட்டு திட்டத்தை நீண்ட நாட்களுக்கு தொடரமுடியாது இந்த நவம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்று அவர் இதன்போது அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். 2015 ஆம் ஆண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. எனினும் 2014 ஆம் ஆண்டு நவம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு சில அரசியல் அமைப்பு ரீதியான முட்டுக்கட்டைகள் உள்ளமையை அடுத்தே அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கக்கூடிய ஒருவரான கோத்தபாயவின் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jan 2014 10:12 PM PST
போரின்போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களே இவ்வாறு எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இதுவரை 26 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, இன்னமும் இதன் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "மன்னாரில் தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையை பார்க்கும் போது எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஏனென்றால், போர்க் காலத்தின் போது படையினரிடம் மக்கள் சரணடைந்தார்கள். அதேபோல், அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் பலர் படையினரிடம் சரணடைந்தனர். ஆனால், இன்னமும் இவர்கள் குறித்த தகவல்கள் தெரியவில்லை. ஆகவே, மன்னாரில் தற்போது மீட்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் சடலங்கள் இவர்களுடையதாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு இதை உடனடியாக விசாரணைக்குட்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது, இதுகுறித்த விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையும் உடனடியாக மேற்கொண்டு உண்மையை வெளியுலகிற்குக் கொண்டுவர வேண்டும்" என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 06 Jan 2014 10:05 AM PST
தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் நீண்டகாலமாக தவித்துக்கொண்டிருந்த மகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தலைசுற்றி விழுந்து மரணமடைந்ததாகவும், இதனால் தமது குடும்பம் மிகவும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் தாயாரான சிவாஜினிசிறிலங்கா அதிபருக்கு அனுப்பிவைத்திருக்கும் அவசர கடிதம் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார். கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் வீரலிங்கம் (48 வயது) என்பவரின் மகனான நிதர்ஷனே நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மரணத்தைச் சந்தித்திருக்கின்றார். 2009ம் ஆண்டு மார்ச் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தில் கைதான சுப்பிரமணியம் வீரலிங்கம் கடந்த ஐந்தாண்டு காலமாக விசாரணைகள் எதுவும் இன்றி கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவரது மூத்த மகனான நிதர்சனே ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இவரது ஏனைய 3 பிள்ளைகளும் பெண்களாவர். வீரலிங்கம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவரது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது மூத்த மகனும் மரணமடைந்திருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். "என்னுடைய 14 வயதான மகனைப் பறிகொடுத்து தவித்துக்கொண்டு நிற்கின்றேன். தயவு செய்து என்னுடைய கணவரை இப்போதாவது விடுதலை செய்யுங்கள். அவர் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். என்னுடைய மூத்த மகன் தந்தையின் பிரிவு ஏக்கத்தினால் பல ஆண்டுகாலமாக தவித்துக்கொண்டு இருந்தவர். திடீரென தலைசுற்றி விழுந்து ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்திருக்கின்றார். இதனால் எமது குடும்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மகனின் இறுதிச் சடங்குகளில் பங்குகொள்வதற்காவது எனது கணரை விடுதலை செய்யுங்கள்" என மனைவி சிறிலங்கா அதிபரிடம் உருக்கமாகக் கோரியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு “பலஸ்தீனின் நட்சத்திரம்” அதியுயர் விருது Posted: 06 Jan 2014 09:55 AM PST
"இலங்கைக்கும் பலஸ்தீன அரசுக்கும் இடையிலான உறவு தனித்துவமானது. பலஸ்தீன அரசுக்கும் நட்புறவுமிக்க பலஸ்தீன மக்களுக்கும் நாம் எப்போதும் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்" என இவ்விருது வழங்கும் விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதேவேளை, இலங்கை மக்கள் சார்பாக ஜனாதிபதி ராஜபக்ஷ, முன்னால் பலஸ்தீன் ஜனாதிபதி யாசிர் அரபாத்துக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கும் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன' விருதினை வழங்கிவைத்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசைக் கவிழ்க்க முனையும் அமெரிக்கா Posted: 06 Jan 2014 09:51 AM PST
ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கண்முன்னே தனது கார் வெடித்துச் சிதறினால்….. Posted: 06 Jan 2014 09:36 AM PST |
| இணையத்தைக் கலக்கும் ரியல் ஹீரோ….. Posted: 06 Jan 2014 09:27 AM PST |
| கொடிய முதலையுடன் விளையாட்டு ஏற்படுத்திய விபரீதம்….. Posted: 06 Jan 2014 09:20 AM PST |
| இப்படி ஒரு சாகச நடனத்தை பார்த்ததுண்டா?…. இதனை எவரும் முயற்சிக்க வேண்டம்…. Posted: 06 Jan 2014 09:14 AM PST |
| இப்படி பறக்குற இவரு மறுஜென்மம் எடுப்பாரா?…. Posted: 06 Jan 2014 09:01 AM PST |
| ஐசிசி பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா Posted: 06 Jan 2014 08:39 AM PST
117 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா அணி மூன்றாம் இடத்திலும் உள்ளது. ஆஷஸ் தொடரில் 5 டெஸ்டிலும் தோற்றதால் இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு பின்தங்கியது. பாகிஸ்தான்(102 புள்ளிகள்) 5வது இடத்திலும், இலங்கை 6வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 7வது இடத்திலும், நியூசிலாந்து 8வது இடத்திலும், ஜிம்பாப்வே 9வது இடத்திலும், வங்கதேசம் கடைசி இடத்திலும் உள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆம் ஆத்மி கட்சி பற்றி ஏ.ஆர்.ரகுமானின் பரபரப்பான கருத்து Posted: 06 Jan 2014 08:38 AM PST டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது குறித்து கருத்து வெளியிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரகுமான் இன்று 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் சினிமா மற்றும் அரசியல் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். அதில். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ்கிறார்கள். அவர்களுக்கென நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வாழ்க்கையிலிருந்து நிறைய கற்கிறோம். மற்றவர்கள் மூலமாக பல அனுபவங்களை பெறுகிறோம். எனது 47வது வயதில் அதையெல்லாம் நினைத்து பார்க்கிறேன். அதிலிருந்து நான் கற்கும் விடயம், மற்றவர்கள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அன்ரோயிட் செல்பேசிகளுக்கான புதிய ஹேம் கொன்ட்ரோலர் அறிமுகம் Posted: 06 Jan 2014 08:28 AM PST சம்சுங் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான தனது ஹேம் கொன்ரோலரை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் Wikipad நிறுவனம் சொற்ப கால இடைவெளியில் மற்றுமொரு ஹேம் கொன்ரோலரை அறிமுகம் செய்துள்ளது. இச்சாதனத்தினை அனைத்து வகையான அன்ரோயிட் கைப்பேசிகளிலும் செயற்படுவதுடன் சில Windows 8 கைப்பேசிகளிலும் செயற்படக்கூடியன என தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய பயனர் இடைமுகத்துடன் Good News Posted: 06 Jan 2014 08:13 AM PST
ஏனைய RSS அப்பிளிக்கேஷன்களை விடவும் Feedly, Feedbin, FeedWrangler மற்றும் NewsBlur போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது புதிய பயனர் இடைமுகம் உட்பட மேலும் சில புதிய வசதிகளை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுடன் Facebook, Twitter, Tumblr, Flickr, 500px, Linkedin, Vimeo, Instagram, Soundcloud, Readability, Pocket, Delicious போன்ற சமூகவலைத்தளங்களை உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



























