Tamil Star |
- Nokia Lumia 1520v தொடர்பான தகவல்கள் வெளியாகின
- எலி தரும் கிலி
- Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள்
- விரைவில் வருகிறது விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான அப்டேட்
- பத்மஸ்ரீ விருது பெறும் யுவராஜ்
- மற்றுமொரு சாதனையை தனதாக்கினார் டோனி
- மக்களை ஏமாற்றிய மருத்துவருக்கு சிறைத்தண்டனை
- மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்?
- 5 நிமிடத்தில் 14 மசாலா தோசைகள்!….
- இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகள் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்க உள்ளார்
- ஆணைக்குழுவிடம் வடக்கு, கிழக்கில் போரின் போது 13,700 பேரைக் காணவில்லை என முறைப்பாடு
- இலங்கையில் விழுந்த விண்கற்கள்! பூமிக்கு வெளியில் உயிர்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்!
- சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானம் ஜெனிவாவில் – அதிகாரபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா
- அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: மூவர் பலி
- அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஸ்னோடென்
- ட்ரையர்வெய்லரை விவகாரத்து செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி
- சீனாவில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 14 பேர் பலி
- இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி ’டை’யில் முடிவடைந்தது
- அருகம்புல் சாறின் மகத்துவங்கள்
- இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா, சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி
| Nokia Lumia 1520v தொடர்பான தகவல்கள் வெளியாகின Posted: 25 Jan 2014 11:55 PM PST நோக்கியா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் Lumia 1520v சிறிய அளவிலான ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 4.5 அங்குல அளவு, 1268 x 768 Pixel Resolution உடைய WXGA தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரை, 14 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா ஆகியவற்றினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்படுகின்றது. மேலும் Windows Phone 8.1 இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பேசியில் Snapdragon 800 SoC Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவு என்பனவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 25 Jan 2014 11:49 PM PST இந்த உலகில் மனிதர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எலியும் காணப்படுகிறது. மொத்தம் 150க்கும் மேலான எலி வகைகள் உண்டு, எலி கொறிக்கும் பிராணி வகையை சேர்ந்தது, இவைகளால் மனிதர்களுக்கு தீங்குதான் அதிகம். உணவுப் பண்டங்களை அழித்து நாசமாக்குவதுடன், பிளேக் போன்ற நோய் உண்டாகவும் எலிகள் காரணமாக அமைகின்றன. எலியின் சராசரி ஆயுட்காலம் இரண்டு வருடங்கள் தான், ஆனால் இந்த குறுகிய கால இடைவெளிக்குள் நூற்றுக்கணக்கில் எலிகள் இனப்பெருக்கம் செய்து விடுகின்றன. ஒரு பெண் எலி ஆண்டுக்கு நான்கைந்து […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள் Posted: 25 Jan 2014 11:39 PM PST கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட எடிட்டிங் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Photoshop Express எனும் இம்மென்பொருளை Adobe நிறுவனம் தயாரித்துள்ளது. முற்று முழுதாக இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படும் இம்மென்பொருளானது KitKat பதிப்புடன் இணைத்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விரைவில் வருகிறது விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான அப்டேட் Posted: 25 Jan 2014 11:36 PM PST மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரபல்யம் வாய்ந்த இயங்குதளமான விண்டோஸ் 8.1 இற்குரிய முதலாவது அப்டேட் ஆனது மார்ச் மாதம் 11ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரோ பயனர் இடைமுகம் கொண்ட அப்பிளிக்கேஷன்களை உள்ளடக்கிய இந்த இயங்குதளமானது டெக்ஸ்டாப் கணினிகளில் இலகுவான முறையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இப்புதிய அப்டேட்டே விண்டோஸ் 8.1 இயங்குதளத்தின் இறுதி அப்டேட் ஆக இருக்கும் என கருதப்படுகின்றது. காரணம் அடுத்த வருடம் விண்டோஸ் 9 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளமை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பத்மஸ்ரீ விருது பெறும் யுவராஜ் Posted: 25 Jan 2014 11:30 PM PST இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகிய இருவரும் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த வீரர், வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பயஸ் ஏற்கனவே விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது பெற்றுள்ளார் […] |
| மற்றுமொரு சாதனையை தனதாக்கினார் டோனி Posted: 25 Jan 2014 11:23 PM PST இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் சமநிலையான நான்கு போட்டிகளில் விளையாடிய முதல் அணித்தலைவர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். 2011ம் ஆண்டு உலகக் கிண்ண தொடரின்போது பெங்களூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், பிப்ரவரி 2012ம் ஆண்டு அடிலெய்டில் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இந்தியா சமன் செய்திருந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் டோனி இடம்பெற்றிருந்தார். […] |
| மக்களை ஏமாற்றிய மருத்துவருக்கு சிறைத்தண்டனை Posted: 25 Jan 2014 11:17 PM PST
பிசியோதெரபிஸ்ட் ஆன இவருக்கு வயது 39, இவர் தனது நண்பர்களுடன் இணைந்து ஹோம் ஹெல்த் கேர் என்ற நிறுவனம் ஆரம்பித்தார். இதன் மூலம் கடந்த 2012ம் ஆண்டில் மருத்துவ காப்பீடு தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. அதாவது, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வெற்று ஆவணங்களில் கையெழுத்து வாங்கி பணமோசடி செய்துள்ளனர், இதன் மூலம் 70 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து குப்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளதுடன், மோசடி செய்த 62 கோடி ரூபாயை உரியவர்களிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? Posted: 25 Jan 2014 11:00 PM PST இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார். மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல்களிலும் விரிவாக எழுதப்படவில்லை. அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| 5 நிமிடத்தில் 14 மசாலா தோசைகள்!…. Posted: 25 Jan 2014 10:49 PM PST |
| இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைகள் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்க உள்ளார் Posted: 25 Jan 2014 10:42 PM PST
அமர்வுகளில் இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை எதிர்வருமு; மார்ச் மாதம் 26ம் திகதி சமர்ப்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிவிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நவனீதம்பி;ள்ளை தமது அறிக்கைகளில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நர்டுகள் அமைப்பின் மனித உரிமைப் பாதுகாப்பு தொடர்பிலான பொறிமுறைiயை உரிய முறையில் அமுல்படுத்தி, உரிமைகளை உறுதிப்படுத்துவதே பிரதான நோக்கம் என நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆணைக்குழுவிடம் வடக்கு, கிழக்கில் போரின் போது 13,700 பேரைக் காணவில்லை என முறைப்பாடு Posted: 25 Jan 2014 10:22 PM PST காணாமற்போனோர் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவுக்கு இதுவரை 13,700 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில், போரின் போது காணாமற்போனவர்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள அதிபர் ஆணைக்குழுவிடம் இதுவரை செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளில் 9,300 முறைப்பாடுகள் பொதுமக்கள் தொடர்பானவையாகும். ஏனைய 4300 முறைப்பாடுகள் சிறிலங்கா படையினர் தொடர்பானவை. கிளிநொச்சியில் கடந்த 18ம் நாள் தொடக்கம் 21ம் நாள் வரை நடத்தப்பட்ட ஆணைக்குழுவின் முதல் விசாரணை அமர்வை அடுத்து, அந்தப் பகுதியில் காணாமற்போன 162 பேர் தொடர்பான சட்டமா […] |
| இலங்கையில் விழுந்த விண்கற்கள்! பூமிக்கு வெளியில் உயிர்கள் உள்ளன என்பது ஆய்வில் நிரூபணம்! Posted: 25 Jan 2014 09:59 PM PST இலங்கையில் 2012-ம் ஆண்டின் இறுதியிலும் 2013-ம் ஆண்டின் முற்பகுதியிலும் விண்கற்கள் விழுந்த இடத்தை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக பாதுகாக்குமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரிட்டிஷ் விஞ்ஞானியான சந்திரா விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதன்படி, பொலநறுவையை அண்டிய அரலகங்வில பிரதேசம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடமாக பாதுகாக்கப்பட உடனடி நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்துள்ளதாக பிபிசியிடம் பேசிய விஞ்ஞானி சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறிலங்காவுக்கு எதிராக மூன்றாவது தீர்மானம் ஜெனிவாவில் – அதிகாரபூர்வமாக அறிவித்தது அமெரிக்கா Posted: 25 Jan 2014 09:50 PM PST
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தை முன்வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்கத் தூதுவர் சிசன், இம்மாதம் முதல் வாரத்தில் தமக்குத் தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்தே, சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் தமக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: மூவர் பலி Posted: 25 Jan 2014 09:37 PM PST
இதுபற்றி தகவல் அறிந்த பொலிஸார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் உள்ளிட்ட மூவர் மரணமடைந்துள்ளனர். அதில் ஒருவன் அருகில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்து மீட்கப்பட்டன. எனவே, அவன் தாக்குதல் நடத்திய நபராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வணிக வளாகம் முழுவதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடந்தபோது உயிருக்குப் பயந்து கடைகளிலும், உணவகங்களிலும் பதுங்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன்: ஸ்னோடென் Posted: 25 Jan 2014 09:21 PM PST
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு பல்வேறு நாடுகளை உளவு பார்த்த விவகாரத்தை அந்த அமைப்பின் முன்னாள் ஊழியர் ஸ்னோடென் கடந்த ஆண்டு ஜூனில் அம்பலப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வப்போது ஆதாரங்களுடன் அவர் வெளியிடும் ரகசிய தகவல்களால் அமெரிக்கா அடிக்கடி ஆட்டம் காண்கிறது. தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள ஸ்னோடென்னுக்கு ஆதரவாக "பிரீ ஸ்னோடென்" என்ற பெயரில் தனி இணையதளம் செயல்பட்டு வருகிறது. அந்த இணையதள வாசகர்களின் கேள்வி களுக்கு ஸ்னோடென் வியாழக்கிழமை நேரடியாகப் பதிலளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, எனது தாய் நாடான அமெரிக்காவுக்குச் திரும்பிச் செல்ல ஆசைதான். ஆனால், அங்கு என் மீது நேர்மையாக விசாரணை நடத்தப்படாது. எனவே நான் ஒருபோதும் அமெரிக்காவுக்குச் திரும்பிச் செல்ல மாட்டேன். ஊழல்கள், தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு அமெரிக்க சட்ட விதிகளில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. அந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அது இப்போதைக்கு நடக்காது. தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான தொலை பேசி உரையாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டது. இவை உள்பட பல்வேறு முறைகேடுகளில் என்.எஸ்.ஏ. ஈடுபட்டது என்று ஸ்னோடென் குற்றம் சாட்டினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ட்ரையர்வெய்லரை விவகாரத்து செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி Posted: 25 Jan 2014 09:03 PM PST பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் பிரபல பத்திரிகையாளரான வாலெரி ட்ரையர்வெய்லருடன் (48) வாழ்ந்து வந்தார். ஒல்லோந்த் ஏற்கனவே திருமணமாகி மனைவி செகோலின் ராயலை விவாகரத்து பெற்றிருந்தார். அந்த திருமணம் மூலம் 4 குழந்தைகள் உள்ளனர். தற்போது ஜனாதிபதி ஒல்லோந்த் வாழ்ந்து வரும் காதலியும் இரண்டாவது தடவை விவாகரத்து ஆனவர். இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் ஜனாதிபதியுடன் சேர்ந்து வாழ்வதால் பிரான்சின் முதல் பெண் என்ற அந்தஸ்து பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிகையும், சோசலிஸ்ட் கட்சியின் ஆதரவாளருமான […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவில் மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு: 14 பேர் பலி Posted: 25 Jan 2014 07:18 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா-நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி ’டை’யில் முடிவடைந்தது Posted: 25 Jan 2014 07:10 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அருகம்புல் சாறின் மகத்துவங்கள் Posted: 25 Jan 2014 06:36 AM PST
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால் அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும், மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம். அருகம்புல் சாறின் நன்மைகள் 1. ரத்த சோகை நீங்கி, ரத்தம் அதிகரிக்கும். 2. வயிற்றுப் புண் குணமாகும். 3. ரத்த அழுத்தம் குணமாகும். 4. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 5. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். 6. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும். 7. மலச்சிக்கல் நீங்கும். 8. புற்று நோய்க்கு நல்ல மருந்து. 9. உடல் இளைக்க உதவும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா, சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி Posted: 25 Jan 2014 06:20 AM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















