மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவில் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி: வட மாநில வாலிபர்கள் கைது
- டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கோரி கொச்சி மாஜிஸ்திரேட்டிடம் மனைவி மனு
- மணிப்பூரில் இன்று குண்டுவெடிப்பு
- தெலுங்கானா மசோதாவை திருப்பி அனுப்பும் தீர்மானம்: அனுமதி கேட்டு சபாநாயகருக்கு நோட்டீஸ்
- ராஜஸ்தானில் ஏ.டி.எம். எந்திரத்துடன் ரூ.20 லட்சம் கொள்ளை
- ஆந்திராவில் மாணவியிடம் பாலியல் கொடுமை: ஆசிரியர் கைது
- இளைஞர்களுக்கு வாய்ப்பு: அத்வானி, ஜோஷிக்கு மேல்சபை எம்.பி. பதவி-பா.ஜனதா ஆலோசனை
- டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார்: மன்மோகன் சிங், சோனியா பங்கேற்பு
- ஹைதராபாத்தின் நகைக்கடையில் 23 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு
- தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தபோதிலும் போர்விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு விருது
- உத்தரபிரதேசம் வளர்ச்சி அடையவில்லையா?: மோடி குற்றச்சாட்டுக்கு அகிலேஷ்யாதவ் பதிலடி
- பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விருப்பம்
- அரியானாவில் கொள்ளையர்களுடன் தைரியமாக மோதிய பாதுகாவலர்கள்: கொள்ளை முயற்சி முறியடிப்பு
- மோடி-ஊடகங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் சோம்நாத் பாரதி
- சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு உதவுவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு
- ஓடும் பஸ்சில் இருந்து இளம்பெண்ணை அடித்து கீழே தள்ளிய கண்டக்டர்
- நடிகர் கமல்ஹாசன்-விஞ்ஞானி மஷேல்கர் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள்
- ஊழல் ஜனநாயகத்தை அரித்து தின்னும் புற்றுநோயாக இருக்கிறது: குடியரசுதின உரையில் ஜனாதிபதி பேச்சு
- சசிதரூர், எனது சகோதரிக்கு தீங்கிழைத்திருப்பார் என்பது கற்பனை செய்யமுடியாத ஒன்று: சுனந்தா சகோதரர்
- மும்பையிலும் மின்சாரக் கட்டணத்தை குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன்: காங். எம்.பி. சஞ்சய் நிருபம் மிரட்டல்
| கேரளாவில் ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி: வட மாநில வாலிபர்கள் கைது Posted: 25 Jan 2014 11:14 PM PST ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களை தாக்கி பணம் பறிப்பது, ரகசிய நம்பரை நூதன முறையில் திருடி பணத்தை அபேஸ் செய்வது, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை அடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்கள் கடை பிடிக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பொதுமக்களிடம் வங்கி நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். |
| டி.பி. சந்திரசேகரன் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கோரி கொச்சி மாஜிஸ்திரேட்டிடம் மனைவி மனு Posted: 25 Jan 2014 11:06 PM PST கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்து புரட்சிக்கர மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய டி.பி. சந்திரசேகரன் கடந்த 2012–ம் ஆண்டு கோழிக்கோடில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோழிக்கோடு சிறப்பு கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். 24 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். |
| மணிப்பூரில் இன்று குண்டுவெடிப்பு Posted: 25 Jan 2014 10:45 PM PST நாடுமுழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் இந்த சம்பவம் நடந்தது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். குண்டு வைத்தவர்களை |
| தெலுங்கானா மசோதாவை திருப்பி அனுப்பும் தீர்மானம்: அனுமதி கேட்டு சபாநாயகருக்கு நோட்டீஸ் Posted: 25 Jan 2014 10:32 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான ''ஆந்திரா மறு சீரமைப்பு மசோதாவை ஆந்திர சட்டசபையில் விவாதித்து 23–ந்தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார். ஆனால் இதன் காலக்கெடுவை நீட்டிக்குமாறு ஆந்திர அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் வருகிற 30–ந்தேதி வரை ஜனாதிபதி அவகாசம் அளித்தார். இந்த மசோதா மீது முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி 2 நாள் பேசினார். அப்போது அவர் மாநில பிரிவினையால் ஏற்படும் விளைவுகளை எடுத்துரைத்தார். மாநில பிரிவினையை எதிர்ப்பதை பகிரங்கமாக அறிவித்தார். |
| ராஜஸ்தானில் ஏ.டி.எம். எந்திரத்துடன் ரூ.20 லட்சம் கொள்ளை Posted: 25 Jan 2014 10:13 PM PST ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் டோல்ரோடு பகுதியில் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கொள்ளை கும்பல் ஒன்று இந்த ஏ.டி.எம். எந்திரத்தை பணத்துடன் தூக்கி சென்று விட்டனர். வங்கி அதிகாரிகள் சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் ரூ.20 லட்சம் பணம் இருந்தது. ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். |
| ஆந்திராவில் மாணவியிடம் பாலியல் கொடுமை: ஆசிரியர் கைது Posted: 25 Jan 2014 10:06 PM PST ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சிம்காசலம். அதே பள்ளியில் 5–ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கடந்த சில வாரங்களாக பாலியல் கொடுமையில் ஈடுபட்டு வந்தார். அந்த மாணவியின் தந்தை குடிகாரர். தாய் உடல்நலக்குறைவாக இருக்கிறார். மாணவியின் ஏழ்மையை பயன்படுத்தி ஆசிரியர் தொடர்ந்து கொடுமைபடுத்தியதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டார். பெற்றோர் கேட்டபோது விஷயத்தை சொன்னாள். |
| இளைஞர்களுக்கு வாய்ப்பு: அத்வானி, ஜோஷிக்கு மேல்சபை எம்.பி. பதவி-பா.ஜனதா ஆலோசனை Posted: 25 Jan 2014 09:55 PM PST இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மேல்–சபை எம்.பி. யாகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் டெல்லியில் |
| டெல்லியில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார்: மன்மோகன் சிங், சோனியா பங்கேற்பு Posted: 25 Jan 2014 09:47 PM PST 65–வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்காத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் காலை 10 மணிக்கு நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக அவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து குதிரைப்படை வீரர்கள் புடை சூழ ராணுவ வீரர்கள் அணி வகுத்து அழைத்து வந்தனர். |
| ஹைதராபாத்தின் நகைக்கடையில் 23 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு Posted: 25 Jan 2014 09:28 PM PST ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை நகைக்கடை ஒன்றின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு மர்மநபர்கள் 23 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். |
| தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தபோதிலும் போர்விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு விருது Posted: 25 Jan 2014 08:51 PM PST இந்திய விமானப்படைப் பிரிவில் விங் கமாண்டராகப் பணி புரிந்து வருபவர் ஆதித்ய பிரகாஷ் சிங் ஆவார்.இவர் மிக்-21 பைசன் விமானப் பிரிவில் போர்விமானங்களை இயக்கிவந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் |
| உத்தரபிரதேசம் வளர்ச்சி அடையவில்லையா?: மோடி குற்றச்சாட்டுக்கு அகிலேஷ்யாதவ் பதிலடி Posted: 25 Jan 2014 08:17 PM PST பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசுகையில் அகிலேஷ்யாதவ் ஆட்சி பற்றி சரமாரியாக புகார் கூறினார். நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தொழில் மற்றும் அனைத்து துறையிலும் பின்தங்கி விட்டது என்றார். பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்தால் குஜராத் போல் உத்தரபிரதேசமும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக திகழும் என்றார். |
| பாராளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விருப்பம் Posted: 25 Jan 2014 07:56 PM PST கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மண்டியா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட நடிகை ரக்ஷிதா விரும்புகிறார். |
| அரியானாவில் கொள்ளையர்களுடன் தைரியமாக மோதிய பாதுகாவலர்கள்: கொள்ளை முயற்சி முறியடிப்பு Posted: 25 Jan 2014 02:44 PM PST பெங்களூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் பெண் அதிகாரியை கொடூரமாக கத்தியால் வெட்டி, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பபவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது |
| மோடி-ஊடகங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் சோம்நாத் பாரதி Posted: 25 Jan 2014 01:55 PM PST டெல்லியில் ஆப்பிரிக்க பெண்கள் போதை மருந்து விற்பனை மற்றும் பாலியல் தொழில் செய்வதாக குற்றம் சாட்டிய சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பாரதி, அப்பகுதியில் திடீர் சோதனை செய்தார். அப்போது அவர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் |
| சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு உதவுவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு Posted: 25 Jan 2014 01:20 PM PST ராஜஸ்தானில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு உதவி செய்வதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வந்த அந்தப் பெண், கடந்த ஆண்டு மூத்த சிவில் சர்வீசஸ் |
| ஓடும் பஸ்சில் இருந்து இளம்பெண்ணை அடித்து கீழே தள்ளிய கண்டக்டர் Posted: 25 Jan 2014 12:57 PM PST பெங்களுரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திறன் வளர்ப்பு பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ஆண்ட்ரியா அந்தோணி(23). இவர் நேற்று முன்தினம் மடிவாலாவுக்கு வால்வோ பேருந்தில் சென்றார். அப்போது, கண்டக்டர் வெங்கட்டையா சரியான பயணச்சீட்டு கொடுக்காமல் மிரட்டும் தொனியில் |
| நடிகர் கமல்ஹாசன்-விஞ்ஞானி மஷேல்கர் உள்ளிட்ட 127 பேருக்கு பத்ம விருதுகள் Posted: 25 Jan 2014 09:27 AM PST பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 24 பேருக்கு பத்ம பூஷண் விருது, 101 பேருக்கு பத்ம ஸ்ரீ |
| ஊழல் ஜனநாயகத்தை அரித்து தின்னும் புற்றுநோயாக இருக்கிறது: குடியரசுதின உரையில் ஜனாதிபதி பேச்சு Posted: 25 Jan 2014 06:54 AM PST நாட்டின் 65-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது |
| சசிதரூர், எனது சகோதரிக்கு தீங்கிழைத்திருப்பார் என்பது கற்பனை செய்யமுடியாத ஒன்று: சுனந்தா சகோதரர் Posted: 25 Jan 2014 06:07 AM PST மத்திய அமைச்சர் சசிதரூர் (57) மூன்றாவது முறையாக இரண்டு முறை திருமணம் செய்த காஷ்மீரை சேர்ந்த சுனந்தா புஷ்கர் (52) என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். சமீபத்தில் சுனந்தா புஷ்கரின் டுவிட்டர் வலைதளத்தில், தனது கணவர் சசிதரூர் பாகிஸ்தான் பெண் நிரூபர் மெஹர் தராருடன் தொடர்பில் இருப்பதாக செய்தி |
| Posted: 25 Jan 2014 03:21 AM PST மகராஷ்டிரா அரசு மும்பையைத் தவிர மற்ற இடங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை 20 சதவிகிதம் வரை குறைத்தது. இதை மும்பை நகருக்கும் அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி செயலாளர் மற்றும் மும்பை காங்கிரஸ் எம்.பி.யான சஞ்சய் நிருபம் கடந்த 3 நாட்களாக கண்டிவாலி பகுதியில் உள்ள ரிலையன்ஸ் மின்னலுவகத்தின் வெளியே உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவர் இன்று கூறியதாவது:- தொடர்ச்சியாக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும் எனது உடல்நிலை சீராக உள்ளது. மும்பை நகருக்கும் 20 சதவீத மின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |