Tamil Star |
- பொதுநலவாய அமர்வுகளின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றன
- முள்ளிவாய்க்காலை பார்க்கையில் அங்கு ஒரு உக்கிரமான போர் நடைபெற்றுள்ளதை உணரலாம்! ராதிகா சிற்சபேசன்
- அதிக சொக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது! நிபுணர்கள் தகவல்
- வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஆவா குரூப்
- 20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம்
- மனுஷன் வாழ்நாளில் இந்த அதிர்ச்சியை மறக்கவே மாட்டாரு…..
- பாகிஸ்தானில் ராணுவ விமான தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சாவு
- அடக்கடவுளே இப்படியும் கூட சரக்கு இறக்கலாமோ?….
- பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரினது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் – வைகோ
- நடுவர்களை மட்டுமின்றி அரங்கத்தையே அதிர வைத்த சிறுவன்…..
- அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க மாணவர் சடலமாக மீட்பு
- அனல் பறக்க வைக்கும் பூலோகம் டிரைலர்…..
- சிரியா உள்நாட்டு சண்டையில் பிடிபட்ட 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை: அமெரிக்கா, ஐ.நா.அறிவிப்பு
- வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- மிச்சேல் சிஸன்
- சிறுமியின் கேள்விக்கு பதில் அளிக்க தடுமாறும் நடுவர்….
- இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போதியளவு முனைப்பு காட்டப்படவில்லை – மனித உரிமை கண்காணிப்பகம்
- இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் – ஷேவாக்
- திருக்கேதீஸ்வரம் புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது! – எலும்புத்துண்டுகள் மீட்பு
- ஏமனில் மர்ம நபர் சுட்டு முக்கிய தலைவர் பலி
- இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் முன்னேற்றமில்லை – பிரிட்டன்
| பொதுநலவாய அமர்வுகளின் போது உரிமை மீறல்கள் இடம்பெற்றன Posted: 21 Jan 2014 11:42 PM PST
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பிலான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெற்ற காலத்திலும் இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த காலத்தில் கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிற்கு பயணம் செய்ய பாதுகாப்புத் தரப்பினர் அனுமதியளிக்கவில்லை என தெரிவித்துள்ளது. அமர்வுகள் நடைபெற்ற காலத்தில் போராட்டங்கள் பேரணிகள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முள்ளிவாய்க்காலை பார்க்கையில் அங்கு ஒரு உக்கிரமான போர் நடைபெற்றுள்ளதை உணரலாம்! ராதிகா சிற்சபேசன் Posted: 21 Jan 2014 10:58 PM PST
தமிழக ஊடகமான புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்னிபரீட்சை நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ஜனநாயகம் என்பது துளியளவும் கிடையாது. அங்குள்ள மக்கள் ஒரு இராணுவ அடக்குமுறையின் கீழேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல் சர்வதேச அழுத்தங்களின் காரணமாகவே நடைபெற்றது என தெரியவருகின்றது. எனினும் அங்குள்ள மக்கள் ஒரு தெளிவான முடிவையே தேர்தலின் மூலம் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரோ, உறுப்பினர்களோ அங்கு சக்தியற்றவர்களாகவே உள்ளனர். ஏனெனில் வட மாகாண சபையில் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கே உள்ளது தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது. வட பகுதியில் தற்போது முகாம்களிலுள்ள தமிழ் மக்கள் சாப்பிட கூட உணவற்ற நிலையிலேயே தமது வாழ்க்கையை கழித்துக்கொண்டிருப்பதை நான் நேரில் கண்டு வேதனைப்பட்டேன். அங்குள்ள மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் தேவைகளை உடனே நிவர்த்தி செய்வதே தற்போது புலம்பெயர்நாடுகளில் வசிக்கும் மக்களின் கடமை என நான் நினைக்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிக சொக்லேட் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வராது! நிபுணர்கள் தகவல் Posted: 21 Jan 2014 04:27 PM PST
நீரிழிவு நோய் குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைகழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சொக்லேட் மற்றும் சிவப்பு ஒயின் குடிப்பவர்களுக்கு 2வது வகை நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சொக்லேட் மற்றும் சிவப்பு ஒயினில் உள்ள ஆந்தோசியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது, அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. அவற்றை சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் தாக்காது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஆவா குரூப் Posted: 21 Jan 2014 04:22 PM PST
ஆவா குரூப் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸாருடன் உறவுகளைப் பேணினால் வெட்டிக் கொலை செய்வதாக ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸாருடன் ஊடகவியலாளர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என மிரட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் நான்கு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றி வரும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அண்மையில் குறித்த ஆவா குரூப்பைச் சேர்ந்தவர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஆவா குருப்பைச் சேர்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பொலிஸாருடன் இணைந்து உளவுப் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்களை கொலை செய்யப் போவதாக ஆவா குருப் எச்சரித்துள்ளது. இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ஆவா குருப் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரித்துள்ளார். இவ்வாறான குழுக்கள் தலைதூக்க இடமளிக்கக் கூடாது என அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| 20MP கமெராவுடன் Samsung Galaxy S5 விரைவில் அறிமுகம் Posted: 21 Jan 2014 04:08 PM PST
அதன்படி அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி வெளியிடப்படவுள்ளதாகவும், இவற்றில் 20MP கொண்ட அதி துல்லியமான கமெரா உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் QHD எனும் நவீன தொழில்நுட்பதினைக் கொண்ட திரையினையும் 2,900 mAh மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வெளியிடப்படவுள்ளதாக அத்தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனுஷன் வாழ்நாளில் இந்த அதிர்ச்சியை மறக்கவே மாட்டாரு….. Posted: 21 Jan 2014 04:01 PM PST |
| பாகிஸ்தானில் ராணுவ விமான தாக்குதல்: 25 தீவிரவாதிகள் சாவு Posted: 21 Jan 2014 03:53 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடக்கடவுளே இப்படியும் கூட சரக்கு இறக்கலாமோ?…. Posted: 21 Jan 2014 03:49 PM PST |
| பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரினது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் – வைகோ Posted: 21 Jan 2014 03:45 PM PST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரினது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும். வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004–ல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அவர்கள் தந்த கருணை மனு, ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு, 2013 ல் நிராகரிக்கப்பட்டது. அவர்கள் தூக்கில் இடப்பட இருந்த நிலையில், தூக்குத்தண்டனையை இரத்துச் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் காலின் கொன்சால்வ்ஸ், மும்பை வழக்கறிஞர் யுக்மொகித் சௌத்ரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். இந்த நால்வரும் உண்மையில் நிரபராதிகள் ஆவார்கள். இன்று உச்சநீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்கு கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. உடல்நிலை கெட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத்தண்டனையும் ரத்து ஆகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், திருப்பெரும்புதூர் சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகள் ஆவர். மரண தண்டனையை எதிர்நோக்கியவாறு, 23 ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடியில் மரணத்தை விடக் கொடிய சித்திரவதையை அனுபவித்து வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு அவர்களது கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து, அவர்களைத் தூக்கில் போடுவதற்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்பிறகு, 2011 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடிய போது, உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது, வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மூன்று தமிழரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற ஜனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இன்றைய தீர்ப்பின் அடிப்படையில், அவர்களது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திரநாத் புல்லரின் தூக்குத்தண்டனையும் ரத்து ஆகும் வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, இனி எதிர்காலத்தில் தூக்குத் தண்டனை இந்தியாவில் அறவே அகற்றப்படுவதற்கான வழியைத் திறந்து உள்ளது. தமிழகத்திலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் கவலை அகலும் என்ற நம்பிக்கையைத் தந்து உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் துயர் போக்கும் மாமருந்தாக வரவேற்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுவர்களை மட்டுமின்றி அரங்கத்தையே அதிர வைத்த சிறுவன்….. Posted: 21 Jan 2014 03:42 PM PST |
| அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க மாணவர் சடலமாக மீட்பு Posted: 21 Jan 2014 03:39 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனல் பறக்க வைக்கும் பூலோகம் டிரைலர்….. Posted: 21 Jan 2014 03:32 PM PST |
| சிரியா உள்நாட்டு சண்டையில் பிடிபட்ட 11 ஆயிரம் பேர் சுட்டுக்கொலை: அமெரிக்கா, ஐ.நா.அறிவிப்பு Posted: 21 Jan 2014 03:28 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்- மிச்சேல் சிஸன் Posted: 21 Jan 2014 03:23 PM PST
தேசிய கிறிஸ்தவ போதகர் கூட்டமைப்புடனான சந்திப்பைத் தொடர்ந்து வணக்கஸ்தலங்களில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென்று மிச்சேல் சிஸன் கூறியதாக அமெரிக்க தூதரகம் ருவிட் செய்துள்ளது. அமெரிக்க தூதரகத்தில் இன்று தேசிய கிறிஸ்தவ போதகர் கூட்டமைப்பை தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமெரிக்கத் தூதரக பேச்சாளர் ஜுலியானா ஸ்பவென் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறுமியின் கேள்விக்கு பதில் அளிக்க தடுமாறும் நடுவர்…. Posted: 21 Jan 2014 03:18 PM PST |
| Posted: 21 Jan 2014 03:13 PM PST
2013ம் ஆண்டில் பாரியளவிலான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் போதியளவு முனைப்பு காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேசமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிப்பதில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக அரசாங்கம் அறிவித்த போதிலும், உலகம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான பெறுபேறுகளுக்காக காத்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். மெய்யான வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமாயின் சர்வதேச சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2014ம் ஆண்டுக்கான மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இலங்கை அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2006ம் ஆண்டு திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தல் உள்ளிட்ட சில அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் இலங்கையர்கள் பல்வேறு வழிகளில் தண்டிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சட்டம் ஒழுங்கு ஆபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் – ஷேவாக் Posted: 21 Jan 2014 03:07 PM PST
இந்த நிலையில் ஷேவாக் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், '7-வது ஐ.பி.எல். போட்டி ஏலத்தில் காலிஸ், யுவராஜ்சிங் போன்ற சிறந்த வீரர்களை வாங்க அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி என்னை மீண்டும் ஏலத்தில் எடுக்கும் என்று நம்புகிறேன். நானும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக நீண்ட நாட்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். இந்திய அணிக்காக மீண்டும் தொடக்க வீரராக விளையாட முடியும் என்று நம்புகிறேன். ' என்று தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருக்கேதீஸ்வரம் புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது! – எலும்புத்துண்டுகள் மீட்பு Posted: 21 Jan 2014 03:04 PM PST
இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் இடம்பெற்றன. இதன் போது இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் சில கண்டு பிடிக்கப்பட்டன. எனினும் முழுமையான மனித எலும்புக்கூடுகள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதேவேளை நாளை மீண்டும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளது. மனித புதைகுழி தொடர்பாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன கருத்து தெரிவிக்கையில், மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் அதன் மரணம் சம்பவித்த விதத்தினை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும். குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்சசியாக மனித எழும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றன. பாரியளவிலான தடயப் பொருட்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை. குறித்த மனித புதைகுழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஏமனில் மர்ம நபர் சுட்டு முக்கிய தலைவர் பலி Posted: 21 Jan 2014 02:59 PM PST
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் முன்னேற்றமில்லை – பிரிட்டன் Posted: 21 Jan 2014 02:55 PM PST
உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அந்த நாடுகளில் மனித உரிமைகள் நிலவரம் எப்படியிருந்தது என்பதை விபரிக்கிறது. கடந்த ஆண்டு இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடைபெற்ற போது, மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் பார்வை அதன் மீது கூடுதலாக இருந்த போதிலும், அதில் முன்னேற்றத்தை காண முடியவில்லை என்று பிரிட்டிஷ் அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. தமது இந்தக் கருத்துக்கு ஆதாராமாக சில விடயங்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கொழும்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு நிகழ்வில் பங்குபெற வடபகுதியைச் சேர்ந்த, காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு போக முற்பட்ட வேளையில், இராணுவத்தினரால் அவர்கள் தடுக்கப்பட்டனர் என்று கூறும் அந்த அறிக்கை, நவம்பர் மாதம் 14 ம் தேதி அந்த நிகழ்வின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் கூறுகிறது. அந்த நிகழ்வுக்கு சென்ற ஒரு தமிழ் இளைஞர் காவல்துறையால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டார் என்றும், தாக்குதலுக்கு உள்ளானார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல கொழும்பில் அதேமாதம் 15 மற்றும் 16 ம் தேதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி முன்னெடுத்த விழிப்புணர்வு நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் நீதிமன்றத்திலிருந்து ஒரு தடையாணையை பெற்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல கொமன்வெல்த் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் அச்சுறுத்துப்பட்டு பவேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர், சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதையும் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கடந்த டிசம்பரில் தெரிவித்திருப்பது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்றும் பிரிட்டிஷ் அரசின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























