Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ராகுல் - லாலு சந்திப்பு : கூட்டணியில் சேர பேச்சு

Posted:

புதுடில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, லாலு பிரசாத் யாதவ், டில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலை சந்தித்து பேசினார்.ராகுல் - லாலு சந்திப்பு : கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ராம்விலாஸ் பஸ்வானின், லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், கூட்டாக தேர்தலை சந்தித்து, பீகாரில், 29 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்த, 2009 தேர்தலில், காங்கிரசை, லாலு கைகழுவியதால், அவர் கட்சி, நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால், பஸ்வான் கட்சி, ஒரு இடத்தில் கூட வெற்றி ...

அழகிரி ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு தி.மு.க.,வில் 'டாடா!': மதுரை மகன் மீது நடவடிக்கை இப்போதைக்கு இல்லை

Posted:

சென்னை: தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்க்க, அழகிரி தெரிவித்த எதிர்ப்பை, கருணாநிதி கண்டித்ததை தொடர்ந்து, அழகிரியின் ஆதரவாளர்கள், ஐந்து பேருக்கு, தி.மு.க., தலைமை, 'டாடா' காட்டி உள்ளது. எனினும், கருணாநிதியின் மதுரை மகனான அழகிரி மீது, இப்போதைக்கு நடவடிக்கை இல்லை என்றே தெரிகிறது. 'அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சி பணிகளில் இருந்து, நான் ஒதுங்கி கொள்கிறேன்' என, ஸ்டாலின் நெருக்கடி கொடுத்ததால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள், மதுரையில் ஒட்டிய ...

பொங்கலுக்கு தி.மு.க., புதுக்கணக்கு: கருணாநிதியுடன் சோனியா தூதர் சந்திப்பு

Posted:

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியை, நேற்று, காங்., தலைவி, சோனியாவின் தூதரும், மத்திய அமைச்சருமான, குலாம்நபி ஆசாத் சந்தித்துப் பேசினார்.மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ஒன்பது ஆண்டுகளாக, பதவி வகித்ததோடு, அந்த அரசுக்கு, தி.மு.க., தொடர்ந்து, ஆதரவும் அளித்து வந்தது. ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்னையைக் காரணம் காட்டி, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக, கடந்த ஆண்டு மத்தியில், தி.மு.க., அறிவித்தது. வரும், ஏப்ரலில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி குறித்து, சமீபத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்குழு ...

இந்தியாவிற்கு நல்ல காலம் பிறக்க பொறுத்திருங்கள்: பிரதமர் பேச்சுக்கு மோடி பதிலடி

Posted:

புதுடில்லி: வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பேசிய, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''பிரதமரின் கருத்து, எனக்கும் உடன்பாடு தான்; இந்தியாவிற்கு நல்ல காலம் பிறக்கத் தான் போகிறது; நான்கு மாதம் பொறுத்திருங்கள். ஊழலுக்கான வாய்ப்புகளை, துவக்கத்திலேயே தடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.டில்லியில், 12வது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. அதில் பேசிய பிரதமர், மன்மோகன் சிங், 'நாட்டின் பொருளாதாரம் மோசம் அடைந்துள்ளதாக, பிரசாரம் செய்யப்படுகிறது. அதை ...

சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு உண்மையே: சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் ஒப்புதல்

Posted:

புதுடில்லி: 'நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உரிமம் வழங்கியதில், சில தவறுகள் நடந்துள்ளன. நல்லதை செய்ய நினைத்ததில், சில, தவறாக முடிந்துள்ளன' என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.'டிவிஷன் பெஞ்ச்': நாட்டின் பல மாநிலங்களில், நிலக்கரி சுரங்கங்களைத் தோண்ட, உரிமம் வழங்கியதில், முறைகேடு நடந்ததாகக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு களை, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து வருகிறது. கடந்த, 1993ம் ஆண்டில்இருந்து, கடந்த ஆண்டு வரை, உரிமம் வழங்கப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முறைகேடாக, உரிமம் ...

7 மணி நேரத்தில் 4,000 ஊழல் புகார் அழைப்பு

Posted:

புதுடில்லி: 'ஆம் ஆத்மி' துவக்கிய, ஊழல், லஞ் சத்திற்கு எதிரான, 'ஹெல்ப்லைன்' போன் வசதியில், ஏழு மணி நேரத்தில், 4,000 தொலைபேசி அழைப்புகள் வந்து உள்ளன.டில்லி மாநில அரசில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்களை கண்டுபிடிக்க, பொதுமக்களுக்கான, அவசர உதவி தொலைபேசி எண்களை, முதல்வர், கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வெளியிட்டார். காலையில், 8:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படும் என்றும், அறிவித்தார். இந்த, 'ஹெல்ப்லைனுக்கு' தொடர்பு கொண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் குறித்த தகவல் சொன்னால், பாதிக்கப்பட்டவரே, புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, லஞ்சம் கேட்டவரை, ஆதாரத்துடன் சிக்க ...

அகிலேஷ் கால் அருகே மண்டியிட்ட போலீஸ் ஐ.ஜி.,

Posted:

லக்னோ: உ.பி., முதல்வர், அகிலேஷ், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, அவர் காலின் அருகே, மண்டியிட்டு, பவ்வியமாக நின்ற, போலீஸ், ஐ.ஜி.,யால், அம்மாநிலத்தில், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில், சில மாதங்களுக்கு முன், முசாபர்நகர் பகுதியில் நடந்த மதக் கலவரம், அரசுக்கு கெட்ட பெயரை பெற்றுத் தந்துள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னமும் சரியான நிவாரணம் வழங்கப்படாத நிலையில், அகிலேஷ் மற்றும் அவரின் தந்தை, முலாயம் சிங்கின் சொந்த ஊரான, சைபையில், கடந்த, 15 நாட்களாக, திருவிழா நடந்தது. அதில், ...

வி.ஐ.பி., கலாசாரம்: 'ஆம் ஆத்மி'யாக மாற முயற்சிக்கிறார் அமைச்சர் ரமேஷ்

Posted:

புதுடில்லி: 'தலைநகர் டில்லியில், வி.ஐ.பி., கலாசாரம் ஒழிய வேண்டும். ராணுவத் தளபதிகள், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பிரதமர், ஜனாதிபதிக்காக, போக்குவரத்தை நிறுத்தும் போக்கு மாற வேண்டும்' என, மத்திய, கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், காங்கிரசைச் சேர்ந்த, ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.மக்கள் வரவேற்பு: எளிய அரசியல் நடவடிக்கை கள், மகத்தான அறிவிப்புகளால், டில்லி நகர மக்களின் ஓட்டுகளைப் பெற்று, முதல்வராகி உள்ள, 'ஆம் ஆத்மி' கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகளை, பிற கட்சிகளின் அரசியல் தலைவர்களும் பின்பற்றத் துவங்கியுள்ளனர். ...

தலைவர் பதவி கனவில் 'ஆம் ஆத்மி'க்கு வராதீங்க

Posted:

''வந்தவுடன் தலைவர் பதவி கிடைத்து விடும் என்ற கனவில், யாரும், 'ஆம் ஆத்மி' கட்சிக்கு வரவேண்டாம்; யார் வந்தாலும், ஆறு மாதத்திற்கு கட்சி உறுப்பினர் தான். அதேபோல், குவார்ட்டர், பிரியாணிக்கு ஆசைப்படுவோரும், எங்கள் கட்சியில் சேர வேண்டாம்,'' என, தமிழக ஆம் ஆத்மி கட்சியின், மாநில குழு உறுப்பினர், ஆனந்த் கணேஷ் கூறினார்.'தினமலர்' நிருபருக்கு, அவர் அளித்த பேட்டி:* தமிழகத்தில், ஆம் ஆத்மி கட்சியை வழி நடத்துவது யார்?மத்திய தலைமையின் கீழ், தமிழகத்தில், கட்சியை வழி நடத்தி செல்வது நாங்களே. கட்சிக்கு எதிராக செயல்பட்ட, ஆறு கமிட்டி உறுப்பினர்களை நீக்கி, நான்கு ...

சபாஷ் ரயில்வே: நான்கு நிமிடங்களில் 'தத்கல்' டிக்கெட் 'புல்'

Posted:

சென்னை: பொங்கலுக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வோர், ரயில் பயணத்தையே பாதுகாப்பாக உணர்வதால், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும் போதுமான ரயில்கள் இல்லாத நிலையில், நேற்று, பொங்கலுக்கான, 'தத்கல்' டிக்கெட் விற்பனை, நான்கு நிமிடங்களில் முடிந்தது. இதையடுத்து பொதுமக்கள் அதிருப்தியுடன் திரும்பினர்.எழும்பூர், சென்ட்ரல் நிலைய முன்பதிவு மையம் உட்பட, சென்னையில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களிலும், 'தத்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய, நேற்று அதிகாலை, 2:00 மணியில் இருந்தே, வரிசையில் மக்கள் காத்திருந்தனர். காலை, 10:00 மணிக்கு, கவுன்ட்டர் திறந்ததும், நான்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™