Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


15-இல் இறைச்சிக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை

Posted: 09 Jan 2014 02:05 PM PST

திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் ஜன.15-இல் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்துள்ளார்.

ஓய்வூதியர்களின் குறை களைவு கூட்டம்: 74 மனுக்களுக்குத் தீர்வு

Posted: 09 Jan 2014 02:04 PM PST

கோவை மாவட்ட ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக 86 மனுக்கள் பெறப்பட்டு, 74 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.

வணிக வரி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம்

Posted: 09 Jan 2014 02:04 PM PST

அனைத்து வணிக வரி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

23 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Posted: 09 Jan 2014 02:04 PM PST

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் 23 ஆய்வாளர்கள் வியாழக்கிழமை வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

வெளியூர் செல்வோர் தங்கள் வீடுகளில் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்

Posted: 09 Jan 2014 02:03 PM PST

பண்டிகை நாள்களில் வெளியூர் செல்வோர் தங்கள் வீடுகளில் பாதுகாப்பை உறுதி செய்து செல்வது அவசியம் என்று, போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாளை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பொன்விழா

Posted: 09 Jan 2014 02:03 PM PST

அன்னூர் அருகே வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, பொன்விழா வரும் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

ராஜவேல் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

Posted: 09 Jan 2014 02:03 PM PST

பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ராஜவேல் மற்றும் அவரது மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு (ஜன.10) ஒத்திவைக்கப்பட்டது.

தந்தையைக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது

Posted: 09 Jan 2014 02:03 PM PST

: கோவையில் தந்தையைக் கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மண்டலத்தில் 55 குடிநீர் நிறுவனங்கள் சப்ளையை நிறுத்தின

Posted: 09 Jan 2014 02:02 PM PST

தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தடை உத்தரவு காரணமாக, கோவை மண்டலத்தில் 55 குடிநீர் நிறுவனங்கள் தங்களது குடிநீர் சப்ளையை நிறுத்தியுள்ளன.

வழக்குரைஞர் தாக்கப்பட்ட வழக்கு:மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை

Posted: 09 Jan 2014 02:02 PM PST

துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குரைஞர் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தடாகம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி

Posted: 09 Jan 2014 02:02 PM PST

துடியலூரை அடுத்துள்ள சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிப்.5-இல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

Posted: 09 Jan 2014 02:02 PM PST

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் பிப்ரவரி 5-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கால்நடைச் சந்தைகள் மீண்டும் செயல்பட அனுமதி

Posted: 09 Jan 2014 02:01 PM PST

கோமாரி நோய் காரணமாக மூடப்பட்ட கால்நடைச் சந்தைகளை உரிய உயிர் நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்றி செயல்பட, ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அனுமதியளித்துள்ளார்.

12-இல் அனைத்துகிராம ஊராட்சிகளில் மகிளா சபைக் கூட்டம்

Posted: 09 Jan 2014 02:01 PM PST

கோவை மாவட்டத்தில் ஜனவரி 12-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மகிளா சபைக் கூட்டம் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ராதாகிருஷ்ணனின் 100-ஆவது புத்தகம் வெளியீடு

Posted: 09 Jan 2014 02:01 PM PST

எழுத்தாளரும் சமூக சேவகருமான எஸ்.ராதாகிருஷ்ணனின் 100-ஆவது புத்தக வெளியீட்டு விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

25-இல் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி

Posted: 09 Jan 2014 02:00 PM PST

முருகப்பா குழுமம் சார்பில் கோவையில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினாப் போட்டி ஜனவரி 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் காற்றாலை மின் சக்தி பயிற்சி மையம்

Posted: 09 Jan 2014 02:00 PM PST

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியும், டி.யு.வி. ரெய்ன்லாண்ட் இந்தியா நிறுவனமும் இணைந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் காற்றாலை மின்சாரம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மையத்தை துவக்கியுள்ளன.

இந்தியாவில் கட்டடப் பணி தாமதமாவதற்கு அரசு, அரசியல்வாதிகள் தலையீடு காரணம்

Posted: 09 Jan 2014 02:00 PM PST

இந்தியாவில் உரிய நேரத்தில் கட்டடப் பணிகள் முடிக்காததற்கு அரசு மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடே காரணம் என, எல் அண்ட் டி நிறுவன துணைத் தலைவர் கே.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

தி.மு.க.வுடன் விஜயகாந்த் சேரக் கூடாது!

Posted: 09 Jan 2014 01:59 PM PST

வரும் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் நிலை உருவாகும் என்பதால், அக் கட்சியுடன் விஜயகாந்த் சேரக் கூடாது என்று தமிழருவி மணியன் கூறினார்.

உதகையில் ஆள்கொல்லி விலங்கைத் தேடும் பணி தீவிரம்

Posted: 09 Jan 2014 01:59 PM PST

உதகை அருகே 5 நாள்களில் 3 பேரைக் கொன்ற ஆள்கொல்லி வனவிலங்கைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் 4 கும்கி யானைகளுடன், அதிரடிப்படையினரும், வனத் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலைக்குள் புகுந்த யானைகள்

Posted: 09 Jan 2014 01:59 PM PST

எஸ்டேட் தொழிற்சாலைக்குள் புகுந்து விடியற் காலை வரை முகாமிட்டிருந்த யானைகளால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

சிறந்த குறிக்கோளும், தொடர் முயற்சியுமே வாழ்க்கையை உயர்த்தும்

Posted: 09 Jan 2014 01:58 PM PST

சிறந்த குறிக்கோளும், தொடர் முயற்சியுமே மாணவ சமுதாயத்தை, எதிர்கால வாழ்வை சிறப்படைச் செய்யும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினார்.

பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

Posted: 09 Jan 2014 01:58 PM PST

பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடைபெற்றது.

மான் வேட்டை: இருவர் கைது

Posted: 09 Jan 2014 01:58 PM PST

வனத்தையொட்டியுள்ள தோட்டத்தில் மீன் வலையை விரித்து மானை வேட்டையாடியதாக இருவரை வனத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வெந்நீர் விநியோகிக்கும் திட்டம் அறிமுகம்

Posted: 09 Jan 2014 01:58 PM PST

ஈரோடு மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சுத்தமான வெந்நீர் வழங்க ரூ.6.5 லட்சம் செலவில் சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் இளம்பெண் கொலை வழக்கில் இருவர் கைது

Posted: 09 Jan 2014 01:57 PM PST

பவானிசாகர் அருகே இளம்பெண் கொலை வழக்கில் கோவையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணிக்கம்பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

Posted: 09 Jan 2014 01:57 PM PST

பவானி அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழா

Posted: 09 Jan 2014 01:57 PM PST

கோபி அருகிலுள்ள பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் விழாவில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை குண்டம் இறங்கினர்.                

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted: 09 Jan 2014 01:56 PM PST

சென்னிமலை முருகன் கோவிலில் தை பூச தேர்த் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பொங்கல் பண்டிகை: சூடு பிடித்தது கால்நடை அலங்கார கயிறுகள் விற்பனை

Posted: 09 Jan 2014 01:56 PM PST

பொங்கல் பண்டிகையையொட்டி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை அலங்கார கயிறுகள், செங்கரும்புகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி உறுதி

Posted: 09 Jan 2014 01:56 PM PST

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம் கூறினார்.

தரமான வினாத்தாள்களை உருவாக்கினால்தான் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும்

Posted: 09 Jan 2014 01:56 PM PST

: தரமான வினாத்தாள்களை உருவாக்கினால்தான் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்று இந்திய மொழிகள் நடுவண் நிறுவன முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் ந.நடராசபிள்ளை கூறினார்.

பெயிண்டர் கொலை வழக்கு:நண்பர்கள் 4 பேர் கைது

Posted: 09 Jan 2014 01:55 PM PST

பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர்கள் 4 பேரை சூரம்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கோத்தகிரியில் பகலில் காட்டெருமை உலா: பொதுமக்கள் பீதி

Posted: 09 Jan 2014 01:55 PM PST

கோத்தகிரியில் பகல் நேரத்தில் காட்டெருமை, வீதியில் உலா வந்ததால் பள்ளிக் குழந்தைகளும் பொதுமக்களும் அச்சத்தில் பதறியடித்து ஓட்டம்பிடித்தனர்.

அரசுப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நிறைவு விழா

Posted: 09 Jan 2014 01:54 PM PST

கூடலூர் ஹெல்த்கேம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது  .

வேட்டி தினத்தையொட்டி உதகை கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை துவக்கம்

Posted: 09 Jan 2014 01:54 PM PST

வேட்டி தினத்தையொட்டி உதகையிலுள்ள கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது.

சத்துணவு அமைப்பாளர் தாற்காலிக பணியிடை நீக்கம்

Posted: 09 Jan 2014 01:54 PM PST

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கோடப்பமந்து அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு  அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற கல்விக்கு அதிக நிதி

Posted: 09 Jan 2014 01:53 PM PST

நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காகத்தான் கல்விக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளதாக, சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.

கல்வியில் முன்னேறினால் இந்தியாதான் முன்னோடி! : பிரணாப்

Posted: 09 Jan 2014 01:53 PM PST

இந்தியர்கள் அனைவரும் முழுமையான கல்வியறிவு பெற்றால், உலகை வழிநடத்தும் முன்னிலை நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னோடியாகத் திகழும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில்  மாவட்ட திட்டக்குழுத் தலைவர் ஆய்வு

Posted: 09 Jan 2014 01:53 PM PST

பல்லடம் அருகேயுள்ள சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கோவை மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.கனகராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்

Posted: 09 Jan 2014 01:52 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66 -ஆவது பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு பெண் மருத்துவரிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

Posted: 09 Jan 2014 01:52 PM PST

அவிநாசி அருகே அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் ஐந்தரைப் பவுன் தாலிக்கொடியை மர்ம நபர் வியாழக்கிழமை பறித்துச் சென்றார்.

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jan 2014 01:52 PM PST

சிஐடியு துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில், உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் நால்ரோட்டில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் மின்வாரிய அலுவலகம் முற்றுகை

Posted: 09 Jan 2014 01:51 PM PST

தங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததை கண்டித்து தாராபுரம், ஜீவாநகர் பகுதியை சேர்ந்த மக்கள், தாராபுரம், மின் வாரிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

வேட்டி தினம்: தமிழக அரசுக்கு ராம்ராஜ் காட்டன் நன்றி

Posted: 09 Jan 2014 01:51 PM PST

தமிழகத்தில் அனைவரும் வேட்டி கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் வேட்டி தினத்தை அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

குடிநீர் விற்பனை நிறுவனத்திற்கு சீல்

Posted: 09 Jan 2014 01:51 PM PST

உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த குடிநீர் விற்பனை நிறுவனத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் முதல்வர்

Posted: 09 Jan 2014 01:51 PM PST

தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் வகையில் கல்வித் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வியாழக்கிழமை பேசினார்.

இன்றுமுதல் ஹெல்மெட் அணிய வேண்டும்

Posted: 09 Jan 2014 01:50 PM PST

திருப்பூர் மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர், வெள்ளிக்கிழமை(இன்று) முதல் ஹெல்மெட் அணிய வேண்டும்.

விவேகானந்தர் உலகப்புகழ் பெற உதவியவர்கள் தமிழர்கள்!

Posted: 09 Jan 2014 01:50 PM PST

சுவாமி விவேகானந்தர் உலகப்புகழ் பெற உதவியவர்கள் தமிழர்கள் என்று, காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பேசினார்.

ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

Posted: 09 Jan 2014 01:50 PM PST

திருப்பூர், ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சனிக்கிழமை (ஜன.11) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு, கருடசேவை , சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற உள்ளன.

வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் எப்போது?

Posted: 09 Jan 2014 01:49 PM PST

நிலம் கையகப்படுத்தப்பட்டு 9 வருடங்களாகியும், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு இதுவரை சொந்தக் கட்டடம் அமைக்காத நிலை நீடித்து வருகிறது.

ஜனவரி 10 மின் தடை

Posted: 09 Jan 2014 01:49 PM PST

காங்கயம் கோட்டம், முத்தூர் துணை நிலையத்தில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வெள்ளிக்கிழமை (ஜன.10) கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்

தாராபுரத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

Posted: 09 Jan 2014 01:49 PM PST

அமராவதி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததை தொடர்ந்து, தாராபுரம் நகரில் 5 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுதிறது.

ஊராட்சித் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jan 2014 01:48 PM PST

உடுமலை ஒன்றியம் வட பூதனம் ஊராட்சித் தலைவரை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

Posted: 09 Jan 2014 01:48 PM PST

தாராபுரம் பெரியகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் எடுத்து

மரம் வளர்ப்பு பயிற்சி முகாம்

Posted: 09 Jan 2014 01:48 PM PST

உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் சார்பில், மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி முகாம் எலையமுத்தூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

எல்ஐசி அலுவலர்களுக்கு யோகா பயிற்சி

Posted: 09 Jan 2014 01:48 PM PST

உடுமலை, எல்.ஐ.சி. கிளையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி நடைபெற்றது.

நாற்றுப் பண்ணைகளில் தேங்கிக் கிடக்கும் தென்னங் கன்றுகள்

Posted: 09 Jan 2014 01:47 PM PST

வறட்சி காரணமாக வெள்ளக்கோவிலிலுள்ள நாற்றுப் பண்ணைகளில் ஏராளமான தென்னங்கன்றுகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.

148 கைத்தறி நெசவாளர்களுக்குப் பசுமை வீடுகள்

Posted: 09 Jan 2014 01:47 PM PST

குடியாத்தம் ஒன்றியத்தில், 148 கைத்தறி நெசவாளர்களுக்கு  ரூ. 3.85 கோடியில் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்ட புதன்கிழமை அரசாணைகள் வழங்கப்பட்டன.

மேல்மருவத்தூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க எம்எல்ஏ கோரிக்கை

Posted: 09 Jan 2014 01:47 PM PST

வேலூரில் இருந்து மேல்மருவத்தூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், வேலூர் மண்டல அலுவலகத்துக்கு வேலூர் எம்எல்ஏ வி.எஸ்.விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.3.20 லட்சத்தில் 4 குடிநீர்த் தொட்டிகள்

Posted: 09 Jan 2014 01:46 PM PST

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 4 குடிநீர்த் தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை திறக்கப்பட்டன.

அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை 2 நாள்களுக்குள் அகற்ற வேண்டும்

Posted: 09 Jan 2014 01:46 PM PST

ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்களை சம்பந்தபட்டவர்கள் 2 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கோட்டாட்சியர் மு.பிரியதர்ஷினி தெரிவித்தார்.

ஒழுங்குமுறை கூடத்தில் நாளை பருத்தி விற்பனை தொடக்கம்

Posted: 09 Jan 2014 01:46 PM PST

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி விற்பனை வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது என அதன் கண்காணிப்பாளர் பா.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

கத்தியவாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

Posted: 09 Jan 2014 01:45 PM PST

ஆற்காடு ஒன்றியம் கத்தியவாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தனித்துணை ஆட்சியர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர்

பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

Posted: 09 Jan 2014 01:45 PM PST

சோளிங்கர் பேரூராட்சியில் உள்ள பழமை வாய்ந்த அப்பங்கார குளத்தை நபார்டு திட்டம் மற்றும் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ1.12 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைத்து பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநங்கைகளின் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் ஏற்படுத்த பரிந்துரை

Posted: 09 Jan 2014 01:45 PM PST

திருநங்கைகளின் பாதுகாப்புக்காக தனிச் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என நீதித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.5 மாஜிஸ்திரேட் பிரபாகரன் கூறினார்.

தோல் தொழிற்சாலைகளுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை

Posted: 09 Jan 2014 01:45 PM PST

சுற்றுச்சூழலுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் தோல் தொழிற்சாலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மு.செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஆவின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2.30 கோடி

Posted: 09 Jan 2014 01:44 PM PST

நடப்பாண்டில் ரூ.2.30 கோடி செலவில் ஆவின் பால் பண்ணை உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பெருந்தலைவர் த.வேலழகன் தெரிவித்தார்.

குப்பைக் கிடங்கை மூடக்கோரி பொதுமக்கள் மறியல்

Posted: 09 Jan 2014 01:44 PM PST

வேலூரை அடுத்த சதுப்பேரி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

என்ஜினில் கோளாறு: எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

Posted: 09 Jan 2014 01:44 PM PST

குவாஹாட்டியில் இருந்து பெங்களூரு செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை காலை 8.35 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்ட போது திடீரென அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

ஆற்காடு பள்ளிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று

Posted: 09 Jan 2014 01:43 PM PST

ஆற்காடு ஸ்ரீ லட்சுமி அம்மாள் அறக் கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் பள்ளி, நர்சிங் கல்லூரி,பயிற்சிப் பள்ளி உள்ளிட்டவைகளுக்கு பி.எம்.ஆர்.யூ. நிறுவனம் மூலம் அண்மையில் ஐ.எஸ்.ஓ தரச்

ஆதார் அட்டை பிரச்னை: போராட்டம் நடத்த பாஜக முடிவு

Posted: 09 Jan 2014 01:43 PM PST

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தும் ஆம்பூர் கேஸ் ஏஜென்சி முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என ஆம்பூர் நகர பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

1,215 இசுலாமியப் பள்ளி மாணவர்கள் நூலக உறுப்பினர்களாக சேர்ப்பு

Posted: 09 Jan 2014 01:43 PM PST

வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1,215 பள்ளி மாணவர்கள் வாணியம்பாடி மாவட்ட கிளை நூலகத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர்.

ஜனவரி 10 மின் தடை

Posted: 09 Jan 2014 01:42 PM PST

குடியாத்தம் கோட்டத்துக்கு உள்பட்ட பரவக்கல் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வரும் வெள்ளிக்கிழமை (10.1.2014) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கி.மணிவண்ணன்

அறநிலையத் துறை அதிகாரிகள் அலட்சியம் கோவில் உண்டியல் பணம் செல்லரித்து நாசம்

Posted: 09 Jan 2014 01:42 PM PST

ஆம்பூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலில் உண்டியல் திறந்து நீண்ட காலமானதால் அதில் காணிக்கை ரூபாய் நோட்டுகள் செல்லரித்து சிதைந்து போயிருந்தது புதன்கிழமை தெரியவந்துள்ளது. இது அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் பு

"லாப நோக்கமின்றி செய்வதே சுகாதாரச் சேவை'

Posted: 09 Jan 2014 01:42 PM PST

லாப நோக்கமின்றி செய்யும் சுகாதாரச் சேவை பாராட்டத்தக்கது என்றார் அரிமா சங்கங்களின் ஆளுநர் எம்.எஸ்.முருகப்பா.

வெளிநாட்டினர் வருகைப் பதிவு அவசியம்: எஸ்.பி. அறிவுரை

Posted: 09 Jan 2014 01:41 PM PST

வேலூர் மாவட்டத்தில் வெளிநாட்டினர் வந்து தங்கும் நிலையில், விடுதி உரிமையாளர்கள், மருத்துவமனை, கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் அவர்களின் வருகைப் பதிவு செய்வது அவச

சாலைப் பணியாளர் தற்கொலை

Posted: 09 Jan 2014 01:41 PM PST

அரக்கோணத்தை அடுத்த நந்திவேடுதாங்கலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (44). நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பணியாளராக பணிபுரியும் இவர் தீராத வயிற்றுவலி காரணமாக வீட்டில் இருந்த பூச்சிமருந்தைக்

கிராமத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு

Posted: 09 Jan 2014 01:40 PM PST

ஆம்பூர் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 10 வயது சிறுவன் புதன்கிழமை சுற்றித்திரிந்துள்ளான். அங்கு ஒசூர் செல்ல வழி கேட்டுள்ளான். சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவனைப் பற்றிய விவரங்களை

விஐடி பேராசிரியருக்கு விருது

Posted: 09 Jan 2014 01:40 PM PST

நவீன உள்கட்டமைப்பு திட்டம் குறித்த ஆராய்ச்சிக்காக விஐடி பேராசிரியர் பிஜிஸ் சாமுய்-க்கு 2013-ம் ஆண்டுக்கான ஐஜிஎஸ் சர்தார் ரேஷம் சிங் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Posted: 09 Jan 2014 01:39 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்தத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

குண்டர் சட்டத்தில் இளைஞருக்கு சிறை

Posted: 09 Jan 2014 01:39 PM PST

ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த இளைஞரை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுந்தரனார் பல்கலை.யில் பொங்கல் விழா

Posted: 09 Jan 2014 01:39 PM PST

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய  திருப்பள்ளியெழுச்சி - பாடல் 6

Posted: 09 Jan 2014 01:39 PM PST

பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின் றார்அணங் கின்மண வாளா! செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!

கோடீஸ்வரன்நகரில் சேதமடைந்த அஞ்சல்பெட்டி

Posted: 09 Jan 2014 01:38 PM PST

திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரில் சேதமடைந்துள்ள அஞ்சல்பெட்டியை மாற்ற வேண்டுமென அஞ்சல் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

பாளை.யில் விழிப்புணர்வுக் கூட்டம்

Posted: 09 Jan 2014 01:38 PM PST

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

பூம்புகார் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 09 Jan 2014 01:38 PM PST

பூம்புகார் மாநில விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மணிமுத்தாறு அருகே காட்டுயானைகள் நடமாட்டம்

Posted: 09 Jan 2014 01:38 PM PST

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருகே வியாழக்கிழமை  காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவேகானந்தர் பிறந்த நாள் விழா

Posted: 09 Jan 2014 01:37 PM PST

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், திருநெல்வேலியில் விவேகானந்தரின் 151-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நெல்லை கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

Posted: 09 Jan 2014 01:37 PM PST

திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சாலையில் கழிவுநீரால் அவதி: எஸ்டிபிஐ மறியல் முயற்சி

Posted: 09 Jan 2014 01:37 PM PST

திருநெல்வேலி நகரப் பகுதியில், சாலையில் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுவதைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீஸாரும்,

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் - 26

Posted: 09 Jan 2014 01:37 PM PST

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துள் பாஞ்ச சன்னியமே! போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே; சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே! கோல விளக்கே, கொடியே, விதானமே, ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

போராட்டத்தால் 2 ஆண்டுகளாக கிடப்பில் இடிந்தகரை தூண்டில் வளைவு!

Posted: 09 Jan 2014 01:37 PM PST

இடிந்தகரையில் தூண்டில் வளைவை விரைந்து அமைக்க வேண்டும், 2 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ள பஸ்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சித் தலைவர், மீனவர்கள், கிராம மக்கள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Jan 2014 01:36 PM PST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் 10 ஆண்டுகளாகத் தவிக்கும் மக்கள்!

Posted: 09 Jan 2014 01:36 PM PST

பாளையங்கோட்டை வட்டத்தில் 10 ஆண்டுகளாக சாதிச் சான்று கிடைக்காமல் நாயுடு சமூகத்தினர் பரிதவித்து வருகின்றனர்.

ரேஷன் கடைக்குள் புகுந்த வெள்ளம்: 1000 கிலோ சீனி கரைந்து ஓடியது

Posted: 09 Jan 2014 01:36 PM PST

அம்பாசமுத்திரம் அருகே ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் கரையோரமாக இருந்த ரேஷன் கடைக்குள் வியாழக்கிழமை மழைநீர் புகுந்தது. இதில் 10 மூட்டை சர்க்கரை நீரில் கரைந்து ஓடியது. அரிசி, துவரம் பருப்பு, கோதுமை ஆகியவையும் சேதமடைந்தன.

ஊருடையார்புரம் மன்றத்துக்கு இளையோர் விருது

Posted: 09 Jan 2014 01:36 PM PST

திருநெல்வேலி மாவட்டத்தில் சேவைப் பணியில் சிறப்பாக பணிபுரிந்ததற்காக, ஊருடையார்புரம் உங்கள் நண்பர்கள் மன்றத்துக்கு மாவட்ட இளையோர் மன்ற விருது வழங்கப்பட்டது.

சிவகிரி அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி சாவு: தம்பதி மீது வழக்கு

Posted: 09 Jan 2014 01:35 PM PST

சிவகிரி அருகே வியாழக்கிழமை, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பு

Posted: 09 Jan 2014 01:35 PM PST

நான்குனேரி, வள்ளியூர் உரிமையியல் நீதிமன்றத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றங்களைப் புறக்கணித்தனர்.

நாளைய மின்தடை

Posted: 09 Jan 2014 01:35 PM PST

சென்னையில் 11 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™