Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் : தேசியவாத காங்., தலைவர் பவார் திடீர் முடிவு

Posted:

மும்பை : இனி, லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன். கட்சிப் பணிகளில், அதிக நேரத்தை செலவிடுவதற்காகவே, இந்த முடிவை எடுத்துள்ளேன், என, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான, சரத் பவார் தெரிவித்துள்ளார்.தேசியவாத காங்., தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான, சரத் பவார், 73, செய்தியாளர்களிடம், நேற்று கூறியதாவது: கட்சிப்பணி லோக்சபா தேர்தலில், இனி, போட்டியிடுவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன். கட்சியை பலப்படுத்தவும், கட்சி பணிகளை தீவிரப் படுத்தவும், அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதற்காகவே, லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்ற ...

தமிழகத்தில் "ஒருவருக்கு' பிரதமர் கனவு! கோவையில் ஸ்டாலின் கிண்டல்

Posted:

கோவை:""தமிழகத்தில் ஒருவர் பிரதமர் கனவில் உள்ளார். அது பகல் கனவா, நிஜ கனவா என்பது, தேர்தலுக்குப்பின் தெரியும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கோவையில் நேற்று தெரிவித்தார்.தி.மு.க., இளைஞர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிள் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், ஸ்டாலின், குனியமுத்தூரிலுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வீட்டுக்கு சென்றார்.அங்கு ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., கூட்டணியில், புதிய தமிழகம் இணைவதை ...

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் பரிசு: அரசுக்கு ரூ.308 கோடி செலவாகும்

Posted:

சென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 308.28 கோடி ரூபாய் மதிப்பில், பொங்கல் போனஸ் மற்றும் சிறப்பு போனசை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கருணை தொகை:இதுகுறித்த அவரது அறிக்கை:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் முதன் முறையாக, பொங்கலன்று கருணைத் தொகை வழங்குவதை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார்.இதன்படி, 2012 - 13 நிதியாண்டிற்கு, 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு, 30 நாள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கப்படும்.அரசு அலுவலர்களில், 'ஏ' மற்றும் 'பி' பிரிவினர், ...

அழகிரி பேட்டியால் தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தேன்: விஜயகாந்த்

Posted:

''கூட்டணி அமைப்பது தொடர்பாக, என் மனதில் பல ரகசியங்கள் உள்ளன; அதற்காக என்னிடம் ரகசிய குழுவும் உள்ளது. ஆனாலும், அதை யாரும் கண்டு பிடிக்க முடியாது,'' என, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பேசினார்.தே.மு.தி.க., பொதுக்குழு கூட்டத்தில், நேற்று அவர் பேசியதாவது:தே.மு.தி.க.,வில் இருப்பவர்கள் பலரும், கட்சியை விட்டு வெளியே போவதாக சொல்கின்றனர். லோக்சபா தேர்தலுக்குப் பின், மற்ற கட்சியில் உள்ள வர்களை ஓடவைக்க முடியும் என்ற, நம்பிக்கை எனக்கு உள்ளது.மக்களுக்கு எதுவும் செய்யாமல், '40 தொகுதிகளிலும், வெற்றி பெறுவோம்' என, ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். மக்களை ஏமாற்றும், சதி ...

அக்னி பரீட்சையில் வெற்றி பெறுவோம்: அழகிரி ஆதரவாளர்கள் சூளுரை

Posted:

தி.மு.க., தலைவர், கருணா நிதியின் மூத்த மகனும், தி.மு.க., தென்மண்டல அமைப்புச்செயலருமான, அழகிரிக்கு, வரும், 30ம் தேதி, 63வது பிறந்த நாள். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள், மதுரையில், சமீபத்தில்ஒட்டிய போஸ்டர்கள், பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பின. அதிருப்தி அடைந்த கட்சி மேலிடம், அழகிரி ஆதரவாளர்கள், அதிகம் இடம் பெற்றிருந்த, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வை அடியோடு கலைத்து, ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடங்கிய புதிய பொறுப்புக் குழுவை அறிவித்தது.இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:ராமாயணத்தில், மூத்த மகன் ராமனை, வனவாசத்திற்கு அனுப்பி விட்டு, இளைய மகன் பரதனுக்கு மகுடம் ...

படித்தவர்களுக்கு அடிக்கப்போகிறது 'லக்':பழசுகளுக்கு 'கல்தா' - புதியவர்களை களமிறக்குகிறார் ஜெ.,

Posted:

லோக்சபா தேர்தல் தேதி, அடுத்த சில நாட்களில், அறிவிக் கப்பட உள்ளதால், அதற்கான ஆயத்த பணிகளில், அ.தி.மு.க., முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது தேர்தலில், போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன விண்ணப்ப கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள்,ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.'தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது' என, தெரிந்தும் கூட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், நிர்வாகி என்ற முறையில், பணம் கட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம்,கொடநாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர், ஜெ., அங்கிருந்தபடியே, வேட்பாளர்களை, தேர்வு ...

திருமணத்துக்கு முன் உடலுறவில் ஈடுபடுவது தவறு: டில்லி கோர்ட் தீர்ப்பு

Posted:

புதுடில்லி: 'திருமணத்துக்கு முன், உடல் உறவில் ஈடுபடுவது, முறைகேடான செயல்; எந்த மதமும் இதை ஏற்காது' என, டில்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.டில்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், டில்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு:நட்பு, காதல்...:கடந்த, 2006ல், டில்லியில் பிரபலமான தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினேன். அப்போது, இணையதளம் மூலமாக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும், அடிக்கடி சந்தித்தோம். எங்களின் நட்பு, காதலாக மாறியது.என்னை திருமணம் செய்து கொள்வதாக, அந்த இளைஞர் வாக்குறுதி அளித்தார். இதை ...

ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வெற்றி பயணம்: தோல்விகளை துாளாக்கினர் விஞ்ஞானிகள்

Posted:

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சியில், முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட்ட, ஜி.எஸ்.எல்.வி., டி - 5 ராக்கெட், நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம், 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் பெற்ற நாடுகளின் வரிசையில், ஆறாவது நாடாக, இந்தியாவும் இணைந்து கவுரவம் பெற்றிருக்கிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்களை ஏவி வருகிறது. குறைந்த எடையிலான, செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள், அதிகளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்:அதிக எடை கொண்ட ...

மக்களின் வலி மற்றும் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறேன்: நரேந்திர மோடி பேச்சு

Posted:

புதுடில்லி: ''மக்களின் வலி மற்றும் கஷ்டங்களை உணர்ந்திருக்கிறேன். அந்த வலி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற கூடிய பலத்தை கொடுக்கிறது ,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.யோகா குரு பாபா ராம்தேவ், டில்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், நரேந்திர மோடி பேசியதாவது:நான் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். நமது நாட்டு மக்கள் மிகவும் சிறந்தவர்கள். ரயிலில் டீ ...

'டாஸ்மாக்'கிற்கு எதிரான தீர்மானத்தால் தே.மு.தி.க.,வினர் அதிர்ச்சி : இளைஞர்கள் நலன் குறித்து விஜயகாந்த் அதிக கவலை

Posted:

சென்னை அருகேயுள்ள, பொன்னேரியில், நேற்று நடைபெற்ற, விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், 'டாஸ்மாக்' கடைகளை அதிக அளவில், அரசு திறப்பதற்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, அவரது கட்சியினரை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது இத்தீர்மானம்.அத்துடன், இளைஞர்கள் நலன் குறித்து, அதிக கவலை கொண்டிருப்பது போல, தே.மு.தி.க., காட்டியிருப்பது, அரசியல், 'ஸ்டன்ட்' என்றும் விமர்சிக்கப்படுகிறது.வலியுறுத்தல்:'பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்' என, ராமதாசின், பாட்டாளி மக்கள் கட்சி, வைகோவின், மறுமலர்ச்சி திராவிட ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™