Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திருமலையில் மு.க. அழகிரி

Posted: 05 Jan 2014 01:36 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க, திமுக கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி(படம்) சனிக்கிழமை தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தனர்.

இடஒதுக்கீடு பிரச்னை: ஜனவரி 21-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2014 01:34 PM PST

இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுவதாகக் கூறி, திமுக மாணவர் அணி சார்பில் ஜனவரி 21-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

ஈழ விடுதலைக்கு பேச்சாற்றல் தேவைப்படுகிறது: வைகோ

Posted: 05 Jan 2014 01:32 PM PST

ஈழ விடுதலைக்கு மனிதகுலத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப, மாணவர்களின் பேச்சாற்றல் அவசியமாக இருக்கிறது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

150 அடி உயர டவரில் ஏறி வியாபாரி தற்கொலை மிரட்டல்!

Posted: 05 Jan 2014 01:29 PM PST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே 3-ஆவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி, 150 அடி டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவரை மீட்ட போலீஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.துரைராஜ் காலமானார்

Posted: 05 Jan 2014 01:26 PM PST

உடல்நலக் குறைவு காரணமாக உசிலம்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. துரைராஜ் (63) (படம்), ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

மதுரை அருகே கஞ்சா வியாபாரிகள் மோதல்: இருவர் கொலை

Posted: 05 Jan 2014 01:24 PM PST

மதுரை அருகே கஞ்சா விற்பதில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் சனிக்கிழமை இரவு 2 பேர் கொலை செய்யப்பட்டனர். காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்

Posted: 05 Jan 2014 01:23 PM PST

விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிப்பதுடன், அன்று மதுக்கடைகளை மூட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கள்ளநோட்டு கும்பல்: முக்கிய குற்றவாளி கைது

Posted: 05 Jan 2014 01:17 PM PST

சென்னையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோரை கண்டறியும் முகாம் தொடக்கம்

Posted: 05 Jan 2014 01:17 PM PST

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மன வளர்ச்சி பாதிக்கப்பட்டோரை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் சென்னை அண்ணாநகரில் சனிக்கிழமை(ஜனவரி 4) தொடங்கியது.

ஜனவரி16இல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா

Posted: 05 Jan 2014 01:14 PM PST

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா ஜனவரி 16}ஆம் தேதி நடைபெற உள்ளது.

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல்: கண்டுகொள்ளாத போலீஸார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Posted: 05 Jan 2014 01:13 PM PST

பார்வையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பரவலாக புகார் உள்ளது. ஆனால் அவ்வாறு நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது, தன்னார்வ நுகர்வோர் அமைப்பு விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளது.

படப்பை பகுதியில் 2 குழந்தைகள் காப்பகங்களுக்கு "சீல்'

Posted: 05 Jan 2014 01:12 PM PST

படப்பை பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வந்த இரண்டு குழந்தைகள் காப்பகத்துக்கு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர்.

இந்தியன் வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சி

Posted: 05 Jan 2014 01:11 PM PST

சென்னை சாந்தோமில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் சனிக்கிழமை நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடந்தது. அந்தக் கட்டடத்தின் பெண் உரிமையாளர் கூச்சலிட்டதை அடுத்து வங்கிக்குள் இருந்த மர்மநபர் தப்பியோடி விட்டார். இதனால் நகை, பணம் தப்பியது.

"தென்னக லாரிகள் ஜனவரி 11 முதல் கர்நாடகத்துக்கு இயக்கப்படாது'

Posted: 05 Jan 2014 01:11 PM PST

தமிழகம், புதுவை, கேரளம், ஆந்திரம் ஆகிய தென் மண்டல லாரிகள், ஜனவரி 11 முதல் கர்நாடகத்துக்கு இயக்கப்படாது என்று, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தென் மண்டலத் தலைவர் அனிதாவேலு தெரிவித்தார்.

தொடர்ந்து 50 மணிநேரம் "டிரம்ஸ்' வாசித்து சென்னை மாணவர் சாதனை

Posted: 05 Jan 2014 01:09 PM PST

சென்னையை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் 50 மணிநேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

காலமானார் நடிகை லட்சுமிகாந்தம்

Posted: 05 Jan 2014 01:07 PM PST

பழம்பெரும் தமிழ் நடிகை லட்சுமிகாந்தம் (93) புதுவை வில்லியனூரில் சனிக்கிழமை காலமானார்.

"பிளஸ் 2 முடித்தாலும் செலவு மதிப்பீட்டாளர் பயிற்சி பெறலாம்'

Posted: 05 Jan 2014 01:02 PM PST

பிளஸ் 2 முடித்தாலும், வேலைவாய்ப்பினைத் தரும் செலவு மதிப்பீட்டாளர் பயிற்சியைப் பெறலாம் என்று அது தொடர்பான பயிற்சியை அளிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த விவகாரம்: ஓய்வு பெற்ற ஊழியர்கள் உதவியுடன் ரயில்களை இயக்க ஆலோசனை

Posted: 05 Jan 2014 01:01 PM PST

ரயில்வே தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பொது மக்களை பாதிக்காத வகையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் மூலம் ரயில்களை இயக்குவது குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பிப்ரவரி 3-ல் புதிய நீதிக் கட்சியின் பொதுக்குழு

Posted: 05 Jan 2014 12:59 PM PST

சென்னையில் பிப்ரவரி 3-ம் தேதி புதிய நீதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: கருணாநிதி கண்டனம்

Posted: 05 Jan 2014 12:59 PM PST

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி பிறந்த நாள்: கருணாநிதி வாழ்த்து

Posted: 05 Jan 2014 12:57 PM PST

மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி தனது 46-ஆவது பிறந்தநாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் உருப்படாது: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

Posted: 05 Jan 2014 12:44 PM PST

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைத்தால் உருப்படாது என்று திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி கூறினார்.

அம்மா திட்ட முகாமில் 71 மனுக்கள்

Posted: 05 Jan 2014 12:27 PM PST

கலசப்பாக்கத்தை அடுத்த பத்தியவாடி கிராமத்தில் நடந்த தமிழக அரசின் அம்மா திட்ட முகாமில் 71 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மதுக் கடைகளை மூட வேண்டும்

Posted: 05 Jan 2014 12:26 PM PST

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

"சமுதாய மேம்பாட்டுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்'

Posted: 05 Jan 2014 12:26 PM PST

பொறியியல் பட்டம் பெறும் மாணவ-மாணவியர்கள் சமுதாய மேம்பாட்டுக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று சென்னை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை இயக்குநர் பி.சிவக்குமார் அறிவுரை வழங்கினார்.

6 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி தொடக்கம்

Posted: 05 Jan 2014 12:26 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச பொங்கல் சிறப்புப் பரிசு மற்றும் வேட்டி-சேலை வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

செங்கம் ஒன்றியத்தில் பட்டறிவு பயணம்

Posted: 05 Jan 2014 12:26 PM PST

போளூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் செங்கம் ஒன்றியத்துக்கு   பட்டறிவு பயணமாக அண்மையில் சென்றன

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை: பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு

Posted: 05 Jan 2014 12:25 PM PST

திருவண்ணாமலை மாவட்டம் நாகாப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளுமாறு பதிவுதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கி.செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Posted: 05 Jan 2014 12:25 PM PST

போளூரை அடுத்த களம்பூரில் தமிழக அரசின்  ஈராண்டு சாதனைகள் குறித்த விளக்க துண்டுப் பிரசுரத்தை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் அரசு, தனியார் பள்ளிகள் கோப்பையை வென்றன

Posted: 05 Jan 2014 12:25 PM PST

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் அரசு, தனியார் பள்ளிகள் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றன.

காந்தி பேரவைக் கூட்டம்

Posted: 05 Jan 2014 12:24 PM PST

திருவண்ணாமலை மாவட்ட காந்தி பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, நகராட்சி டவுன்ஹால் பள்ளியில் நடைபெற்றது.

நம்மாழ்வாரின் நினைவஞ்சலிக் கூட்டம்

Posted: 05 Jan 2014 12:24 PM PST

திருவண்ணாமலை அகம் அறக்கட்டளை சார்பில், இயற்கை வாழ்வியல் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் நினைவஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

2013-ம் ஆண்டில் 1,589 சாலை விபத்துகள்

Posted: 05 Jan 2014 12:24 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2013-ம் ஆண்டில் மட்டும் 1,589 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் இவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள்

2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 05 Jan 2014 12:24 PM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார்.

நீதிபதி கங்குலி விரைவில் ராஜினாமா?

Posted: 05 Jan 2014 12:19 PM PST

பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே. கங்குலி, மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பண்டிட்கள் காஷ்மீர் திரும்ப மேற்கொண்ட நடவடிக்கை வெற்றி பெறவில்லை: ஒமர் அப்துல்லா

Posted: 05 Jan 2014 12:19 PM PST

காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் குடும்பங்கள் மீண்டும் அவரவர் வீடு திரும்புவதற்கு அரசு எடுத்த நடவடிக்கை வெற்றி பெறவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

Posted: 05 Jan 2014 12:17 PM PST

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி5 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பொங்கல் சிறப்புப் பரிசு வழங்கல்

Posted: 05 Jan 2014 12:16 PM PST

குளித்தலை அருகே அய்யர்மலையில் பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குளித்தலை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 05 Jan 2014 12:16 PM PST

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்தப்பட்ட விற்பனைக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் நகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.

இருதரப்பினரிடையே மோதல்: 10 பேர் மீது வழக்கு

Posted: 05 Jan 2014 12:15 PM PST

ஆலங்குடி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈழ விடுதலைக்கு பேச்சாற்றல் அவசியப்படுகிறது

Posted: 05 Jan 2014 12:15 PM PST

ஈழ விடுதலைக்கு உலகெங்கும் உள்ள மனிதகுலத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப, மாணவர்களின் பேச்சாற்றல் அவசியமாக இருக்கிறது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

நாகையில் தொடரும் கடல் சீற்றம்

Posted: 05 Jan 2014 12:15 PM PST

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, நாகையில் கடந்த மூன்று நாட்களாக கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது.

நெடுஞ்சாலைகளில் 2 லட்சம் மரக் கன்று நட முடிவு

Posted: 05 Jan 2014 12:14 PM PST

சாக்குப் பைகளில் மரம் வளர்த்து தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் 2 லட்சம் மரக் கன்று நடுவது என்று திருநெல்வேலியைச் சேர்ந்த பசுமை அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் காணிக்கையாக செலுத்தப்பட்ட நாணயங்களை மீட்க இலங்கை விருப்பம்

Posted: 05 Jan 2014 12:14 PM PST

இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இந்தியக் கோவில்களில் காணிக்கையாகச் செலுத்திய 20 டன் நாணயங்களை திரும்பக் கொண்டுசெல்ல அந்நாட்டு அரசு விரும்புகிறது.

ஜனவரி இறுதியில் தொடர் உண்ணாவிரதம்: ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்கள் முடிவு

Posted: 05 Jan 2014 12:14 PM PST

ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி சென்னையில் ஜனவரி மாத இறுதி வாரத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனத் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கூட்டுறவு ஊழியர்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது.

விலையில்லாப் புத்தகங்கள் அளிப்பு

Posted: 05 Jan 2014 12:13 PM PST

வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3-ம் பருவத்துக்கான விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

போலீஸ் போல நடித்து நகைகள் பறிப்பு

Posted: 05 Jan 2014 12:13 PM PST

கரூர் சின்னஆண்டாங்கோவில் முத்துநகரைச் சேர்ந்த பஞ்சாபிகேசன் மனைவி தமிழரசி (52). இவர் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

ஆடு திருடியவர்கள் கைது

Posted: 05 Jan 2014 12:13 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகேயுள்ள ஆலங்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ம. கருப்பையா (30).  இவரது 3 ஆடுகள் சில நாள்களுக்கு முன் காணாமல்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 05 Jan 2014 12:12 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டுப் போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பு  உண்ணாவிரதம் இருந்தனர்.

பாலிடெக்னிக் கல்லூரியில் கருத்தரங்கம்

Posted: 05 Jan 2014 12:12 PM PST

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் மருதையான் கோவில் அருகே உள்ள வரதராஜன் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை சார்பிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பொங்கல் பொருள்கள் விநியோகம்

Posted: 05 Jan 2014 12:11 PM PST

புதுக்கோட்டையில் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் (தலா ரூ. 100)  மொத்தம் ரூ. 4.11 கோடி ரொக்கம் மற்றும் விலையில்லா வேஷ்டி, சேலைகள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை

"கல்விதான் ஆரோக்கிய சமுதாயத்தின் ஆணிவேர்'

Posted: 05 Jan 2014 12:11 PM PST

கல்விதான் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு ஆணிவேர் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல் நாட்டு மொழிகள் துறைத்தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினருமான முனைவர் சொ. சுப்பையா.

இருதரப்பினரிடையே மோதல்: 10 பேர் மீது வழக்கு

Posted: 05 Jan 2014 12:11 PM PST

ஆலங்குடி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேர் மீது சனிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயச் சான்றிதழ் இன்று அளிப்பு

Posted: 05 Jan 2014 12:10 PM PST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கான மதிப்பெண் சான்று மற்றும் பட்டயச்சான்றுகள் திங்கள்கிழை (ஜன. 6)

ஜனவரி 7 மின் தடை

Posted: 05 Jan 2014 12:10 PM PST

அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கண்சிகிச்சை முகாம்

Posted: 05 Jan 2014 12:10 PM PST

பொன்னமராவதியில் இலவச கண்சிகிச்சை முகாம் அரிமா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுகை அருகே ஆடு திருடியவர்கள் கைது

Posted: 05 Jan 2014 12:10 PM PST

புதுக்கோட்டை அருகே 3 ஆடுகளைத் திருடியவர்களை போலீஸார்  ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் அருகேயுள்ள ஆலங்குடி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ம. கருப்பையா (30).

மனைவியின் உடலில்பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கணவன்

Posted: 05 Jan 2014 12:09 PM PST

அடியக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் மத்திய பொதுப்பணித் துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ரத்த தான முகாம்

Posted: 05 Jan 2014 12:09 PM PST

காரைக்கால் மாவட்ட நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் விவேகானந்தர் 150-வது பிறந்தநாள்

மது குடிக்கும் இடமாக மாறிவரும் ஆழித்தேர் கூடம்

Posted: 05 Jan 2014 12:08 PM PST

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குரிய ஆழித்தேரின் கூடம், மது குடிக்கும் இடமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

போலீஸ் காவலில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துக்கு நிதியுதவி

Posted: 05 Jan 2014 12:08 PM PST

நாகூரில் போலீஸ் காவலில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷின் குடும்பத்துக்கு சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

நன்றும் உண்டு; தீதும் உண்டு

Posted: 05 Jan 2014 12:08 PM PST

ஓடும் பேருந்துகளில், ஓய்வுப் பொழுதுகளில் உள்ளங்கையில் உலகத்தை அடக்கிக்கொண்டு தன்னொத்த உணர்வாளர்களை அழைத்து, அன்புச் சொற்களைப் பரிமாறிக்கொள்ள அறிவியல் உலகம் கண்டு தந்த அதிசய வாயில் முகநூல் (ஊஹஸ்ரீங் ஆர்ர்ந்).

சீர்காழி வட்டத்தில் பொங்கல் பரிசு

Posted: 05 Jan 2014 12:08 PM PST

சீர்காழி வட்டத்தில் உள்ள 88 ஆயிரத்து 670 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தகராறு: இரு தரப்பைச் சேர்ந்த 25 பேர் மீது வழக்கு

Posted: 05 Jan 2014 12:08 PM PST

நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக இரு தரப்பைச் சேரந்த 25 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

ஒரு துளி கண்ணீரும் சிறு புன்னகையும்

Posted: 05 Jan 2014 12:07 PM PST

மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பிலும்கூட, தனது உயிர்த்துடிப்பையும், ஆன்ம ஓட்டத்தையும் இழந்து நிற்கும் மிகச் சிறந்த கவிஞர்களும் கவிதைகளும்தான் இந்த உலகில் ஏராளம்.

ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர்

Posted: 05 Jan 2014 12:07 PM PST

கரூர் மாவட்த்தில் ரூ. 140 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தடாகோவில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2014 12:07 PM PST

கரூர் மாவட்டம், தடாகோவில் தேசிய நெடுஞ்சாலை, அரவக்குறிச்சி பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொசுவலைக்கான வாட் வரியை நீக்க வலியுறுத்தல்

Posted: 05 Jan 2014 12:06 PM PST

கொசுவலைக்கான வாட் வரியை நீக்க வேண்டும் என்று சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற அனைத்து தொழில் கூட்டமைப்பு மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தேவை மாற்று அல்ல; மாற்றம்!

Posted: 05 Jan 2014 12:06 PM PST

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் முடிந்த அளவு அதிக இடங்களில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

கோதாவரி நீரை தமிழகத்துக்கு திருப்பி விட வேண்டும்'

Posted: 05 Jan 2014 12:06 PM PST

கடலில் சென்று வீணாகக் கலக்கும் கோதாவாரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விட வேண்டும் என்று கரூரில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் (நாம்) மாநில தலைவர் டி. எஸ். பிரபு ராஜா தெரிவித்தார்.

போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 05 Jan 2014 12:06 PM PST

கரூர் சின்னஆண்டாங்கோவில் முத்துநகரைச் சேர்ந்த பஞ்சாபிகேசன் மனைவி தமிழரசி (52). இவர் சனிக்கிழமை வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.

"தி.மு.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை'

Posted: 05 Jan 2014 12:04 PM PST

தி.மு.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பெரம்பலூரில் 3.15 லட்சம் பேருக்கு வேட்டி,சேலை

Posted: 05 Jan 2014 12:03 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் 3.15 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) எம்.ஏ. சுப்பிரமணியன்.

செஞ்சேரி- ஆலத்தூர் கேட்  சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்

Posted: 05 Jan 2014 12:03 PM PST

பெரம்பலூர் நெடுஞ்சாலைத் துறை சார்பில் செஞ்சேரி முதல் ஆலத்தூர்கேட் வரை 15.6 கி.மீ. நீளமுள்ள தார்ச் சாலை ரூ. 13.5 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி அண்மையில் தொடங்கியது.

தமிழகத்தில் "ஆம் ஆத்மி' போட்டி

Posted: 05 Jan 2014 12:03 PM PST

வரும் மக்களவைத் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இத் தகவலை அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர யாதவ் தெரிவித்தார்.

மாடியிலிருந்துதவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 05 Jan 2014 12:02 PM PST

பெரம்பலூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், இலுப்பூரணி பகுதியைச் சேர்ந்தவர் கோமதி பாண்டியன் மகன் கருப்புசாமி (21).

வேளாண் இயந்திரக்குழு அமைக்க அழைப்பு

Posted: 05 Jan 2014 12:02 PM PST

அரியலூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களைக் கொண்ட வேளாண் இயந்திரக் குழு அமைக்கப்படவுள்ளது.

மருதையாற்றில் மேம்பாலப் பணி மும்முரம்

Posted: 05 Jan 2014 12:02 PM PST

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி - அம்பலவர் கட்டளை இடையே மருதையாற்றில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

தமிழக அரசின் சாதனை விளக்க பிரசாரம்

Posted: 05 Jan 2014 12:01 PM PST

அரியலூரில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை குறித்த துண்டறிக்கையை பொதுமக்களிடம் துரை. மணிவேல் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

குளத்தில் தவறி விழுந்து லாரி ஓட்டுநர் சாவு

Posted: 05 Jan 2014 12:01 PM PST

திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசன் (50). லாரி ஓட்டுநரான இவர் சனிக்கிழமை   வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் முத்தரசன் இறந்து கிடந்தது

நினைவு முற்றத்தைக் காக்கவே பிரசாரம்

Posted: 05 Jan 2014 12:01 PM PST

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குறித்து ரயில் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் புதுக்கோட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

பாலிடெக்னிக் கல்லூரியில்பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்

Posted: 05 Jan 2014 12:01 PM PST

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை எஸ்எஸ்ஆர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன்

Posted: 05 Jan 2014 12:00 PM PST

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும்,அவர்களின் பிரச்னைகள் தீரவும் துப்பாக்கி வழங்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அறந்தாங்கி, பொன்னமராவதியில் பொங்கல் சிறப்புப் பரிசு அளிப்பு

Posted: 05 Jan 2014 12:00 PM PST

அறந்தாங்கியில் அரசின் இலவச வேஷ்டி, சேலை மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டையில் விரைவில் சுற்றுலாத் துறை அலுவலகம்: அமைச்சர்

Posted: 05 Jan 2014 12:00 PM PST

புதுக்கோட்டையில் விரைவில் சுற்றுலாத் துறைக்கென தனி அலுவலகம் அமைக்கப்படும் என்றார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன்.

திருமயத்துக்கு சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்

Posted: 05 Jan 2014 11:59 AM PST

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வருகிற 11-ம் தேதி நடைபெறவுள்ள பரமபதவாசல் திறப்பு விழாவையொட்டி, திருச்சி- காரைக்குடி வழித்தடத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நினைவு முற்றத்தைக் காக்க பிரசாரம்

Posted: 05 Jan 2014 11:59 AM PST

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் குறித்து ரயில் மூலம் பிரசாரம் மேற்கொள்ளும் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார்.

சென்னையில் உண்ணாவிரதம் நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு

Posted: 05 Jan 2014 11:58 AM PST

சென்னையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்வது என ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

6.20 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் சிறப்புப் பரிசு

Posted: 05 Jan 2014 11:58 AM PST

தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.20 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் சிறப்புப் பரிசு வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2014 11:58 AM PST

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 விலை அறிவிக்க வலியுறுத்தி, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் நெல் பயிர்களுடனும், நாமம் போடப்பட்ட அட்டையைக் கழுத்தில் அணிந்து கொண்டும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காந்தியப் பொருளாதாரக் கொள்கையே தேவை

Posted: 05 Jan 2014 11:58 AM PST

காந்தியப் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும் என்றார் குமரப்பா செண்டினரி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் ஜி.ஆர். ஸ்ரீதர்.

குழந்தைகள் தின போட்டி பரிசளிப்பு

Posted: 05 Jan 2014 11:57 AM PST

கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், லயனஸ் சங்கம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது

தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் லட்சத்தீவு அருகே கடலில் தத்தளிப்பு

Posted: 05 Jan 2014 11:57 AM PST

தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் தோணியுடன் லட்சத்தீவுகள் அருகே நடுக்கடலில் தத்தளிப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. அவர்களை மீட்கும் பணியில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்புச் சுவர் அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

Posted: 05 Jan 2014 11:57 AM PST

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி ஆற்றுக்குள் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். அந்த இடத்தை விபத்து பகுதி என அறிவித்து பலகை, தடுப்புச் சுவர்

நாகை: 4.26 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு

Posted: 05 Jan 2014 11:56 AM PST

நாகை மாவட்டத்தில் 4.26 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

பிப்ரவரி 2-ல் தேர்தல் கூட்டணி அறிவிப்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted: 05 Jan 2014 11:56 AM PST

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து பிப்ரவரி 2-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

விஷம் குடித்த பெண் சாவு

Posted: 05 Jan 2014 11:56 AM PST

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

ஆர்ப்பாட்டம்

Posted: 05 Jan 2014 11:56 AM PST

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறக்கப்படும் மண்பாண்டங்கள்

Posted: 05 Jan 2014 11:56 AM PST

தமிழக மக்களின் வாழ்க்கையுடனும், கலாசாரத்துடனும் இணைந்திருந்த   குயவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

குளத்தில்தவறி விழுந்து லாரி ஓட்டுநர் சாவு

Posted: 05 Jan 2014 11:55 AM PST

திருவாரூர் அருகே சனிக்கிழமை குளத்தில் தவறி விழுந்து லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்தவர் முத்தரசன் (50). லாரி ஓட்டுநரான இவர் சனிக்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லையாம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™