Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தலைமக்கட்கு உரிய குணங்கள்!

Posted: 05 Jan 2014 01:53 PM PST

தலைமகனுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன. அறிவு : எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வது அறிவு. நிறை : காப்பன காத்து கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஓர்ப்பு : ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். கடைப்பிடி : கொண்ட பொருள் மறவாமை. தலைமகளுக்கு உரிய குணங்கள் நான்கு. அவை: அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன. அச்சம் : பெண்மையின் தான் காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. மடம் : கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. நாணம் ...

பேச மருக்கும் உன் உதடு

Posted: 05 Jan 2014 09:46 AM PST

(பேச மருக்கும் உன் உதடு) "என்னிடம் பேசாத உதடுகளை விட எப்பவும் பேசிக்கொண்டே இருக்கும் உன் கண்களையே அதிகமாக விரும்புகிறேன்......!!!!! (pesa marukkum un uthadu) "Ennidam pesaatha uthadugalai vida eppavum pesikkonde irukkum un kangalaiye athigamaaga virumpukiren.......!!!!! ==*==*==*==*==*==*==*== by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை kathal Kavithai love sms kathal kavithai love sms காதல் கவிதை லவ் காதல் கவிதை லவ்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்

Posted: 05 Jan 2014 09:32 AM PST

தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கை கோளை  ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி டி-5, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று ஆரம்பித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிருந்து இன்று மாலை சரியாக 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ...

பெய்த மழை

Posted: 05 Jan 2014 07:59 AM PST

காட்டிக்கொடுத்தது
பெய்த மழை
சாலையின் ஊழல்.

கும்பலாய் படையெடுப்பு
கை வைத்தவனைத் தாக்க
தேனீக்கள்.

சுருதி சுத்தம்
தேசம் முழுதும்
பஞ்சப் பாட்டு.

மழை இல்லை
வேகமாய் வளர்கிறது
விலைவாசி.

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை - பாரெங்கும் பரவும் பறை

Posted: 05 Jan 2014 07:45 AM PST

தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பறை இசை அமெரிக்காவிலும் பரவி வருகிறது பெரும்பாலும் அமெரிக்காவாழ் தமிழர்கள் நமது தொன்மையான பறை இசைக்கு அவ்வளவாக ஆர்வம் காட்டியது கிடையாது. பரத நாட்டியம், மிருதங்கம், கர்நாடக சங்கீதம் போன்ற கலைகளுக்குத்தான் அங்கு ஆர்வம் இருந்தது. ஆனால் இப்போது பறை இசைக்கு, இளைய தலைமுறை அமெரிக்கத் தமிழர்களிடம் மவுசு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின்செயின்ட் லூயிஸ் நகரில் வசிக்கும் தமிழர்களான பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் ...

17000 பதிவுகள் கடந்த ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்தலாம் வாங்க ....

Posted: 05 Jan 2014 04:53 AM PST

17000 பதிவுகள் வாழ்த்துகள் பாட்டி மேலும் பல ஆயிரம் (வடைகளை சுட்டு ) பதிவுகளை கடக்கவும் வாழ்த்துகள்

மாக்ஸிம் கார்க்கி தன் காதலிக்கு எழுதிய கடிதம்

Posted: 05 Jan 2014 04:44 AM PST

அன்புள்ள ஒல்கா, உனக்குக் கடிதம் எழுத வேண்டும் என்ற ஆசை என் மனத்தில் எழும்போது கூடவே கொஞ்சம் வேதனையும் எழுகிறது. உனக்குப் படிக்கத் தெரியாது. என் அன்புக் கடிதத்தைப் புரிந்துகொள்ள நீ வேறு யாருடைய உதவியையாவது தேட வேண்டும். இந்தத் தடங்கலின் காரணமாக என் இதய உணர்ச்சிகளையும் அடக்கிக் கடிதம் எழுத வேண்டியிருக்கிறது. உனக்கு இயற்கையாகவே பிறந்துள்ள அழகு மாதிரி கல்வியும் பிறந்திருக்கக் கூடாதா என என் மனம் ஏங்குகிறது. ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என்னிடம் கல்வி இருக்கிறது. உன்னிடம் அழகு இருக்கிறது. ...

புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் நமது ஜாஹீதாபானு அக்காவை வாழ்த்தலாம் வாங்க

Posted: 05 Jan 2014 04:37 AM PST

நமது ஈகரைன் செல்ல பாட்டி அருமையான அக்கா ஜாஹீதாபானு அவர்கள் புதிய மகளிர் அணியாக பொறுப்பு ஏற்று இருக்கும் இந்த வேளையில் அவர்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: வாழ்த்துக்கள் அக்கா......

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 05 Jan 2014 04:32 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

காகம் குறித்து அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் காணப்படும் நம்பிக்கை

Posted: 05 Jan 2014 04:27 AM PST

-- - அமெரிக்கப் பழங்குடி மக்களிடம் காணப்படும் காகத்தைப் பற்றிய கருத்துகள்.. 'ஜார்ஜ் நோல்ஸ்'என்பவரது, ஆய்வுப்படி அவர்கள் , - ஒரு காக்கை பறந்து வந்தால் சோகம் இரு காக்கை வந்தால் மகிழ்ச்சி மூன்று வந்தால் திருமணம் நான்கு வந்தால் பிறப்பு நிகழப் போகிறது ஐந்து வந்தால் வெள்ளி கிடைக்கும் ஆறு வந்தால் தங்கம் வெல்லலாம் ஏழு வந்தால் யாருக்கும் தெரியாத ரகசியம் தெரியப் போகிறது எட்டு வந்தால் மரணப் படுக்கையில் இருப்பவர்க்கு சொர்க்கம் ஒன்பது வந்தால் இறப்பவர்க்கு நரகம் பத்து ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (192)

Posted: 05 Jan 2014 04:11 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

காற்றாடி எங்கு கிடைக்கும் உதவுங்கள்

Posted: 05 Jan 2014 04:01 AM PST

நண்பர்களுக்கு காலை வணக்கம்
என் பசங்களுக்கு காற்றாடி வேண்டும் என கேட்கிறார்கள், பக்கத்து ப்ளாட்டில் பறக்க
விட்டிருப்பதை பார்த்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு வேண்டும் என கேட்கிறார்கள்,
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
நன்றி

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 05 Jan 2014 02:38 AM PST

'மனிதனும் மிருகமும்' தொடர் 9 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-9 'மனிதனும் மிருகமும்' அனைவருக்கும் நடிகர் திலகத்தின் இனிய நினைவுகளோடு கூடிய என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 'வெளி வந்த நாள்: 04-12-1953 கதை வசனம் பாடல்கள் – எஸ்.டி.சுந்தரம் இசை – எம். கோவிந்தராஜுலு நாயுடு. ஸ்டூடியோ – ரேவதி தயாரிப்பு – ரேவதி புரடக்ஷன்ஸ்     இயக்கம் – கே.வேம்பு,  எஸ்.டி.சுந்தரம் நடிக நடிகையர்: 'நடிகர் திலகம்'சிவாஜி கணேசன் மாதுரி தேவி எம்.என்.ராஜம் கே. சாரங்க பாணி டி.ஆர். ராமச்சந்திரன் ...

தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன்

Posted: 04 Jan 2014 11:40 PM PST

தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 - நன்றி : தினமணி குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை! பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை. குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி ...

தமிழ்ச் செல்வங்கள் - சொல்

Posted: 04 Jan 2014 11:37 PM PST

தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் - தினமணி சொல் - 1 'சொல்' என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. "நெல்' என்பது ஒரு பொருள். சொல் "நெல்' என்னும் பொருள் தருதலைப் புலமையாளரும் கண்டனர்; பொதுமக்களும் கண்டனர். நெற்பயிர் கதிர் வாங்குவதற்குக் கருக்கொள்கிறது. அக் கருக்கொண்ட நிலை "சூல்' என்பதாம். நெற்பயிர் சூல் கொண்ட நிலையில், பசும்பாம்பு போல் தோன்றுகிறதாம். உற்றுப் பாருங்கள் உண்மையில் வியப்பு தோன்றும்! என்ன அருமையான உவமை எனப் பாராட்டத் தோன்றும். சூல் முதிர்ந்து கதிர் வெளிப்பட்டுத் தலை நிமிர்ந்து ...

தமிழ்ச் செல்வங்கள் - கொக்கு

Posted: 04 Jan 2014 11:27 PM PST

தமிழ்ச் செல்வங்கள்: - புலவர் இரா.இளங்குமரன் கொக்கு பறவைகள் சில ஒன்று கூடுகின்றன; மகிழ்வாகக் கூச்சலிடுகின்றன; எதற்காகவோ சண்டையும் போடுகின்றன. அவற்றின் ஒலியைக் குழந்தை நிலையில் இருந்து மாந்தன் கேட்கிறான்; அவ்வொலி "கொக்', "கொக்' என அவனுக்குப் படுகின்றது. அவ்வொலியால் அதனைக் "கொக்கு' என்று வழங்குகின்றான். பின்னர் அப்பெயரைப் பலரும் வழங்குகின்றனர். அப்பெயர் சூட்டிய நாள் தொட்டு இன்று வரை நிலைத்துவிட்டது. "கொக்', "கொக்' என்றதால் வந்த பெயர், அப்பறவையைக் காணாத இடத்தும் வழங்கப்பட்டது. வரிவடிவம் ...

குக்கிராமத்தில் குறளின் குரல்!

Posted: 04 Jan 2014 11:24 PM PST

திருவள்ளுவரின் புகழ் இன்றளவும் எங்கெல்லாமோ ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு ஓங்கி ஒலிக்கும் ஓர் இடம் சீனாங்குடி என்ற குக்கிராமம். ஆம், வள்ளுவருக்குக் கோயில்கட்டி அவரை தெய்வமாக வழிபடும் அளவுக்கு அச்சிறிய கிராமம் பெரும்புகழை அடைந்திருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள சீனாங்குடியில் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டப்பட்டு, பொங்கல் வைத்து வழிபாடுகளும், சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. திருவள்ளுவரே இத்திருக்கோயிலின் ...

NEOCUBE-இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா,எங்கு கிடைக்கும்

Posted: 04 Jan 2014 11:13 PM PST

NEOCUBE அல்லது BUCKY BALLS எனப்படும் சிறு சிறு காந்த குண்டுகளாக இருக்கும் .இவற்றை கொண்டு நாம் எந்த வகையான பொம்மையும் செய்யலாம்.இது வரை பல லட்ச மாடல் பொமைகள் செய்யலாம் என்று கண்டு பிடித்துள்ளனர் .இதை ஏதாவது கடைகளில் பார்த்ததுண்டா........

கண்கள் பேசியது kankal pesiadhu

Posted: 04 Jan 2014 11:11 PM PST

[கண்கள் பேசியது]

"பேச மாட்டேன் என்று
சொல்லிவிட்டு கண்களாலே பேசுகிறியே மௌனமாய் இது ஞாயமா!!!

நீ நேசிப்பவரை நினைத்து சிந்தும் கண்ணீர் கூட பேசும்
நீ நேசிப்பவரை உண்மையாக நேசித்தாள்!!
==*==*==*==*==*==*==
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை

tamil kavithai love kathal kathal love tamil kathal kavithai
sms kavithai

காதல் கவிதை தமிழ் கவிதை காதல் தோல்வி லவ்

திருவெம்பாவை

Posted: 04 Jan 2014 10:58 PM PST

புலமை இரண்டு வகைப்படும். ஒன்று கல்விப் புலமை; மற்றொன்று அருட்புலமை. அருட்புலமை இறைவனது திருவருளை உடன் கொண்டதாகும். அத்தகைய அருட்புலவர் பலர் தொன்றுதொட்டு தமிழகத்திலேயே விளங்கி வந்துள்ளனர். அந்த வரிசையில் திகழ்ந்தவர் "ஆளுடைய அடிகள்'. "திருவாதவூரடிகள்' என்றும் சிறப்பித்துச் சொல்லப் பெறுபவர் மாணிக்கவாசகர். ÷பெரும்பாலும் உலகியல் இலக்கியமாகவே விளங்கிவந்த தமிழ் இலக்கியத்தை, அருளியலிலக்கியமாக மாற்றியவர் மாணிக்கவாசகர் என்றால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. அதற்கு முதல் எடுத்துக்காட்டாக அவர் அருளிச் ...

வாழ்த்தொலி கேட்டவள் யார்?

Posted: 04 Jan 2014 10:56 PM PST

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்'' என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது. வரதராஜபிள்ளை ...

ஆசைகள்

Posted: 04 Jan 2014 09:52 PM PST

கொடியில்
துவைத்த உள்ளாடைகள்
தொங்கிக் கொண்டிருந்தன
வெட்கப்பட்டு
உட்கார வந்தக் காகம்
நினைத்தது
மனித மனங்களின்
ஆசைகள் எண்ணி…

ஆண்மையின்
கம்பீர நிலை
ஆன்மீகத்தின்
ஆனந்த நிலை
இந்தியப் பாரம்பர்யப்
பரதக் கலை
வடிவமே
நடராஜரின்
நடனச் சிலை.
  

வாழ்க்கை

Posted: 04 Jan 2014 08:57 PM PST

ஊதி ஊதி வாயில் போட்டு
சுவைக்கிறாள் மண்ணில்
உதிர்ந்த நாவல் பழம்.

யார் கோபம் வந்து தாக்கிப்
பொசுக்கினாலும் உடையாது
சூட்சும மனம்.

அடுப்பில் பொங்கி வழிகிறது
கொதிக்கும் பால்
எங்கோ அலைகிறது துயர மனம்.

""ஆத்திச் சூடி'' எழுதிய
ஒளவையார்; உலகின்
முதல் ஹைக்கூ கவி.

கற்பிதங்களால் ஆனது
கலைகள்; நிகழும்
அற்புதங்களால் ஆனது வாழ்க்கை.

வாழ்க்கை

Posted: 04 Jan 2014 08:55 PM PST

ஊதி ஊதி வாயில் போட்டு
சுவைக்கிறாள் மண்ணில்
உதிர்ந்த நாவல் பழம்.

யார் கோபம் வந்து தாக்கிப்
பொசுக்கினாலும் உடையாது
சூட்சும மனம்.

அடுப்பில் பொங்கி வழிகிறது
கொதிக்கும் பால்
எங்கோ அலைகிறது துயர மனம்.

""ஆத்திச் சூடி'' எழுதிய
ஒளவையார்; உலகின்
முதல் ஹைக்கூ கவி.

கற்பிதங்களால் ஆனது
கலைகள்; நிகழும்
அற்புதங்களால் ஆனது வாழ்க்கை.

உணர்வு

Posted: 04 Jan 2014 08:43 PM PST

" சாப்பிடுவதற்காக ஒரு கவளம் சோற்றை நாம் கையில் எடுக்கிற போது அதில் நூறு பேருடைய வியர்வை கலந்திருக்கிறது என்கிற உணர்வு நமக்கு வரவேண்டும், அப்போதுதான் நமக்கு இந்த சமூகத்தின்பால் அன்பு வரும், அக்கறை வரும்.

நமக்கு தேவையான ஒவ்வொன்றையும் தருகிற இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது ஒரு வகையில் திரும்பச் செலுத்த வேண்டும் என்கிற உணர்வு வரும். "

-- பேராசிரியர். பெரியார்தாசன்

வீடு

Posted: 04 Jan 2014 08:39 PM PST

என் வீடு அன்னையின் அழகிய கைவண்ணம்... நிலநடுக்கம் என்று சொன்னாலே நடுங்கும்... செழித்த பயிர்களுக்கு நடுவே பழுத்த இலைகளாலான மாடி வீடு... மாடி வீடு, என் மனமகிழ்ச்சிக்கு நான் வைத்த செல்லப்பெயர்!!!! மழை பெய்தால் மன்வாசனை வீதியிலும் என் வீட்டிலும்... சுவர்கள் கலவையினால் அல்ல என் கவலைகளால்....... இரவில் விளக்கேற்றுகிறது விட்டில்கள் கதவை திற காற்று வரட்டும் திறக்கவே வேண்டாம் வரும் கிழிந்த கீற்றுகளின் வாயிலாக....... விதவையின் நெற்றியாய் வாசல் கோலமின்றி அலங்கோலமாய்.....! மோட்டுவளையில் ...

வேலன்:-புகைப்படங்களை எளிதில் பார்வையிட

Posted: 04 Jan 2014 05:52 PM PST

நமக்கான புகைப்படங்களை சுலபமாகவும் எளிதாகவும் பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து நம்மிடம் உஎள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பல்வேறு வகைகளில் புகைப்படங்களை நாம் பார்வையிடலாம். தம்ப்நெயில் வியூ..ஐகான்வியூ.சிறிய ஐகான்வியூ.லிஸ்ட் வியூ என பார்வையிடலாம். புகைப்படங்களை ஸ்லைட்ஷோவாக பார்வையிடலாம். புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு திருப்பிகொள்ளலாம். ...

புதிய விடியல்

Posted: 04 Jan 2014 03:57 PM PST

- ஓ மானிடனே… இந்நாள் வரை… பூமிப்பந்தின் வயிற்றுக்குள் நச்சுக் காற்றை புகுத்தி நதித் தாயின் உடலில் சாயக் கழிவுகள் பூசி அழகு மரங்களை கொள்ளை அடித்து பச்சை வயல் பரப்பினில் மிச்சமின்றி கட்டடம் எழுப்பி இயற்கையின் ஈரத்தை மலடாக்கி செயற்கையில் அக மகிழ்ந்தோம்! பள்ளி செல்லும் பிள்ளைகள் துள்ளி மகிழும் காலம் பறித்து முதியோர் புரிதல் புறந்தள்ளி அவசர கதியில் வாழ்வு நகர்த்தி பரவச கணங்களைப் பறி கொடுத்தோம்! துரித உணவில் நாட்டம் கொண்டு அரிய உடல் நலம் நட்டம் அடைந்து லஞ்சம் ஈந்து நெஞ்சம் ...

அமுத மொழிகள் ஆயிரம் - தொடர் பதிவு

Posted: 04 Jan 2014 03:52 PM PST

- நம்பிக்கைதான் எதிர்காலத்தை உருவாக்குகிறது - பார்க் - - ----------------------------------- - நம்பிக்கை ஒரு நீண்ட சாலை, அதில் திருப்பங்கள் இல்லை - >ஜான் டூயி - ---------------------------------------- - ரோஜா மலரும்பொழுதே அழகாகத்தானிருக்கும். அதே போல் அச்சம் அகலுகையில் துளிர்விடும் நம்பிக்கையே உற்சாகம் கொடுக்கும் - >ரஸ்கின் - --------------------------------------- - நம்பிக்கைக்கு மதிப்பு தந்தால் ஆராய்ச்சிக்கு அங்கு வேலையே இல்லை - >சுரதா - ----------------------------------------- - திவிர ...

கணவன் மனைவி

Posted: 04 Jan 2014 03:47 PM PST

- காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்... உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு.. உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில், உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று.. அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட.. நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில், ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்... - ---------------------------------- >ஜெயுமான் நன்றி: கூடல்.காம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™