Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தன் சிலை அமைக்க பா.ஜ., உதவியை நாடிய ஹசாரே

Posted:

குர்கான்: தன் உருவச் சிலை அமைப்பதற்கு உதவும் படி, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கிடம், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை, பா.ஜ., தலைவர், ராஜ்நாத் சிங்கை, குர்கானைச் சேர்ந்த, அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது, அரியானா மாநில தலைவர் உமேஷ் அகர்வால், அன்னா ஹசாரே சிலை அமைப்பதை தடுப்பதாக, அவர்கள் புகார் கூறினர். இந்நிலையில், கடந்த டிசம்பர், 29ல், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹசாரே கூறியிருப்பதாவது: உருவச் சிலை அமைப்பதை நான் எதிர்க்கிறேன்; ஆனால், என் ஆதரவாளர்கள் ...

மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு வினியோகம் அதிகரிப்பு

Posted:

என்.எல்.சி., உள்ளிட்ட மத்திய மின் நிலையங்களில், பராமரிப்பு பணி நிறைவு பெற்றதை அடுத்து, தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சார வினியோகம் சீராகியுள்ளது. இதனால், தமிழகத்தில், மின் தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு, மத்திய மின் தொகுப்புகளான ஆந்திராவின், ராமகுண்டம் மற்றும் சிம்மாதிரி அனல்மின் நிலையம், 909; ஒடிசா மாநிலம், தால்சர் அனல்மின் நிலையம், 503; கர்நாடகா மாநிலம், கைகா அணுமின் நிலையம், 227; என்.எல்.சி., 1,145; கல்பாக்கம் அணுமின் நிலையம், 250; வல்லூர், 750 என, மொத்தம், 3,865 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.என்.எல்.சி., மற்றும் கல்பாக்கம் மின் ...

நீர் பங்கீட்டு பிரச்னைகள் தீராததால் வீணாகும் மழைநீர்

Posted:

அண்டை மாநிலங்களுடனான, நீர் பங்கீட்டு பிரச்னைகள், பல ஆண்டு களாகியும், தீர்க்கப்படாததால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, பல டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. இதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் உள்ள, 34 ஆற்றுவடி நிலங்கள், 17 பெரிய வடிநிலங்களாகவும், 127 உப வடிநிலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.சராசரி மழையளவு, 912 மி.மீ., தமிழகத்தில் உள்ள, 58 பெரிய அணைகள், நான்கு சிறிய அணைகள், இவற்றின் மொத்த கொள்ளளவு, 239 டி.எம்.சி., தமிழகத்தில், 13,699 ஏரிகள் உள்ளன.நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள, மொத்த நீர்நிலைகளின், ...

அனுமதி பெறாமல் சினிமா திரையிட்டால் நடவடிக்கை: அமெரிக்க தூதரகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Posted:

புதுடில்லி: 'அரசின் அனுமதியின்றி, இனி, அமெரிக்க தூதரகத்தில், சினிமா படங்கள் திரையிடக் கூடாது. அப்படி மீறி திரையிட்டால், படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்படும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.அமெரிக்காவில் அவமரியாதை:அமெரிக்காவின், நியூயார்க்கில், இந்திய துணை தூதரகத்தில் பணியாற்றிய, தேவயானி என்ற பெண் அதிகாரியை, 'விசா' மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரின் உடைகளை களைந்து, சோதனையிட்டும், அவமதித்தனர். இதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ...

புது கோஷங்களுடன் களம் இறங்கும் கட்சிகள்: வாசகங்களை தேடும் தலைவர்கள்

Posted:

இதுவரை நடந்த, லோக்சபா தேர்தல்களில், தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக திகழும், அ.தி.மு.க., - தி.மு.க.,வும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் இணைந்து, தேர்தல் களத்தை சந்தித்தன. அப்போது, பிரதமர் வேட்பாளராக, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., யாரை அறிவிக்கிறதோ, அவர்களுக்காக, இந்த திராவிட கட்சிகள், ஓட்டுக் கேட்கும். மக்களும், 'மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்' என, விரும்புகின்றனரோ, அந்த கட்சி கூட்டணிக்கு, ஓட்டு போட்டு வந்தனர்.ஆனால், இம்முறை, முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க.,வுக்கு, மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும், ஆசை எழுந்துள்ளது. அதனால், தமிழகம் ...

மக்கள் என் பக்கம்: குன்னூரில் ஜெ., நம்பிக்கை

Posted:

ஊட்டி:''தமிழகத்தில், நிலுவையிலுள்ள திட்டப்பணிகள் நிறைவேற, மத்தியில் மாற்றம் தேவை,'' என, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.நீலகிரி மாவட்டம், குன்னூரில், அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ''தமிழக மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள், கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், இந்திய அளவில் மாற்றம் நிகழ வேண்டும். உங்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது,'' என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில், ''அமெரிக்க ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கன் இருந்த போது, ஒரு ...

மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் ஏன்

Posted:

மதுரை:மதுரையில் தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரியின் பிறந்த நாளுக்கு, 25 நாட்கள் இருக்கும் நிலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் விவகாரம் எதிரொலியாக, அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நகர் அமைப்பையே கலைத்து புதிய பொறுப்புக்குழுவை தலைமை நியமித்துள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று(ஜனவரி 5) பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் பல நகரங்களில் தி.மு.க.,வின் இலக்கியமே, இலக்கணமே, எங்கள் தலைவியே, ஜான்சி ராணியே என போஸ்டர்களை அச்சிட்டு ஒட்டினர். இதனால் அதிர்ச்சியுற்ற அழகிரி ஆதரவாளர்கள், ...

லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற ஆம் ஆத்மி அடுத்த இலக்கு

Posted:

புதுடில்லி : கட்சி துவக்கி, ஓராண்டுக்குள், டில்லி சட்டசபையை கைப்பற்றியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சியின் அடுத்த இலக்கு, லோக்சபா தேர்தல் தான். இன்னும், மூன்று, நான்கு மாதங்களில் வரவுள்ள லோக்சபா தேர்த லில், பெருவாரியான இடங் களில் வெற்றி பெற்று, மத்தியிலும் ஆட்சியை அமைப்பதே, நோக்கம் என, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துஉள்ளனர்.தொடர்ந்து, மூன்று முறை வெற்றி பெற்று, டில்லி முதல்வராக இருந்த, காங்கிரசைச் சேர்ந்த, ஷீலா தீட்ஷித்தை வீழ்த்தி, டில்லி சட்டசபையை கைப்பற்றியுள்ள, ஆம் ஆத்மி கட்சித் தலைவர், அரவிந்த் ...

ஏப்ரல் 16 முதல் மே 13 வரை லோக்சபா தேர்தல் ஐந்து கட்டம்?

Posted:

லோக்சபா தேர்தலை, வரும், ஏப்ரல், 16லிருந்து, மே மாதம், 13ம் தேதி வரை, ஐந்து கட்டங்களாக நடத்தவும், ஓட்டு எண்ணிக்கையை, மே மாதம், 16ம் தேதி நடத்தவும், தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும், ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பின், இறுதியான அறிவிப்பு குறித்த பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஜூன் 2ல் புதிய அரசு:தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம், வரும், ஜூன், 1ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிதாக தேர்வு செய்யப்படும் லோக்சபா, ஜூன், 2ம் தேதிக்குள் பதவியேற்க ...

அழகிரி ஆதரவாளர்களுக்கு தி.மு.க.,வில் 'கல்தா': மதுரை நிர்வாகிகள் மாற்றம்

Posted:

சென்னை : சர்ச்சை போஸ்டர் விவகாரத்தில், தி.மு.க.,வில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு, கட்சியில் இருந்து, 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் நிர்வாகிகள், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.ஜனவரி, 30ம் தேதி, அழகிரிக்கு, 63வது பிறந்த நாள். அதையொட்டி, இப்போதே, அவரது ஆதரவாளர்கள், மதுரை முழுவதும், போஸ்டர் ஒட்டத் துவங்கி விட்டனர். அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில், தி.மு.க.,வின் உண்மையான பொதுக்குழுவே, 30ம் தேதி தான் கூடப்போவது போல், சித்தரித்து, ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.'இனியொரு விதி செய்வோம்' என்ற ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™