Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


120 நாய்களை கொண்டு தனது மாமாவை ஆடையின்றி கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்......

Posted: 04 Jan 2014 01:53 PM PST

வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ...

ஆன்டிவைரஸ் தேவை உதவுங்கள்

Posted: 04 Jan 2014 10:42 AM PST

நண்பர்களே லைப்டைம் அவாஸ்ட் ஆன்டிவைரஸ் பயன்படுத்தி வந்தேன்.சிஸ்டம் ஹெங் ஆனதால்
அன்இன்ஸ்டால் செய்துவிட்டு திரும்ப இன்ஸ்டால் செய்தால் ஆகவில்லை, வேறு நல்ல ஆன்டிவைரஸ்
(அவாஸ்ட், அவிரா, நோடு32 )இருந்தால் லிங்க் கொடுங்கள் நண்பர்களே.
நன்றி

கல்வராயன் மலையில் வெள்ளை நிற காகம் ! - போடோவுடன் !

Posted: 04 Jan 2014 10:33 AM PST

கச்சிராயபாளையம்: சேராப்பட்டு மலைவாழ் மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள, வெள்ளை நிற காகத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, கல்வராயன் மலை, சேராப்பட்டு கிராமத்தில், கிறிஸ்துவ தேவாலயம் உள்ளது. இந்த வளாகத்தில், மாணவ, மாணவியர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மரங்களில், காகங்கள் கூடு கட்டி வாழ்கின்றன; ஒரு கூட்டில் இருந்த, காக்கை குஞ்சு வெள்ளை நிறத்தில் இருந்ததால், மற்ற காகங்கள், அதை விரட்டின. இதனால், வெள்ளை நிற காகம், அங்குள்ள ...

தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

Posted: 04 Jan 2014 10:20 AM PST

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னம் பள்ளி அரசு மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஆறுமுகம் (வயது 37). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளன. இவருடைய மனைவி வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆறுமுகம் தான் வேலை செய்யும் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருவரை மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக ...

ரன்ஹசனுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன

Posted: 04 Jan 2014 10:18 AM PST

ரன்ஹசனுக்கு குழந்தைகள் பிறந்துள்ளன வணக்கம் உறவுகளே நேற்று நண்பகல் 12.30 மணிக்கு ரன்ஹசனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். என் சகோதரன் ரன்ஹசனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் ரன்ஹசன்          

குணமடைந்து வருகிறார் சிறுமி ரூனா !

Posted: 04 Jan 2014 08:54 AM PST

புதுடில்லி: பெரிய தலையுடன், அவதிப்பட்டு வந்த, திரிபுரா மாநிலத்தை சேர்ந்த, 3 வயது சிறுமி, ரூனா பேகத்தின், 94 செ.மீ., தலை சுற்றளவு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, 57 செ.மீ.,யாக குறைந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு பதவியில் உள்ளது. இங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த, ஏழை தம்பதி, அப்துல் ரகுமான் - பாத்திமாவுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தை பிறந்தது. பிறந்ததில் இருந்து, அந்தக் குழந்தையின் ...

கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுச் சமணர் படுக்கைகள்

Posted: 04 Jan 2014 06:02 AM PST

1-1-2014 ஆங்கிலப் புத்தாண்டன்று நான் சில நண்பர்களுடன் மதுரையை அடுத்த ஒத்தக்கடையிலுள்ள ஆனைமலைக்குப் போனேன் ! அங்கு மெய்ச்சிலிர்ப்பு ஏற்படுத்தும் சமணர் படுக்கை , குகை, பாகுபலி , மகாவீரர் ,பார்சுவநாதர் ,இயக்கி சிற்பங்களைக் கண்டேன் ! தமிழ் , கிரந்தம் , வட்டெழுத்து ஆகிய எழுத்துகளையும் கண்ணுற்றேன் ! மலை அடிவாரத்தில் அரிய சில மூலிகைகளையும் படமெடுத்தேன் !இந்தப் புத்தாண்டு நல்ல புத்தாண்டு ! படங்களிற் சில ! :-   -- முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., ...

பொம்மைகள்

Posted: 04 Jan 2014 03:24 AM PST

பொம்மை பொம்மை பொம்மைகள் அழகு மிளிரும் பொம்மைகள் சின்னஞ்சிறிய குழந்தைகள் விரும்பும் வண்ண பொம்மைகள் மண், கல் பொம்மைகள் வாங்கலாம் மரப்பாச்சி பொம்மைகள் வாங்கலாம் ரப்பர் பொம்மைகள் வாங்கலாம் பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கலாம் குறைந்த விலையில் கிடைக்கலாம் அதிக விலையிலும் கிடைக்கலாம் தகுதிக் கேற்ற பொம்மைகள் தேவைக் கேற்ப வாங்கினோம் கொஞ்சம் நாட்கள் குழந்தைகள் விளையாடி ஆடி மகிழ்ந்தனர் இன்றோ கவனிப்பின்றியே எங்கோ கிடக்கும் பொம்மைகள்.

மனம் மயக்கும் இந்திய ஏரிகள்!

Posted: 04 Jan 2014 03:10 AM PST

பாங்காங் ஏரி பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது. 2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் இந்த ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கி காட்டப்பட்டுள்ளன. இத்திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரி சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக தொடங்கியது.

தொடத் தொடத் தொல்காப்பியம் (191)

Posted: 04 Jan 2014 02:50 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சன்டிவியில் வேலைவாய்ப்பு...

Posted: 04 Jan 2014 02:45 AM PST

New Openings at Sun TV. Send your resumes to careers@sunnetwork.in with Subject as the Position.. - 1. Front Office Receptionist In Sun Tv Network Ltd Multiple Openings Must have pleasing personality and must posses Good communication skill. Work Location – Chennai Qualification – Any Graduate - 2. Supervisor (For Camera Dept.) Job type: Full-Time Candidates with 2+ years of experience Should have supervisory experience to handle a big team of employees. Should be a graduate/ Diploma ...

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 04 Jan 2014 01:51 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

ஊர் சுற்றிப் புராணம்...

Posted: 04 Jan 2014 01:05 AM PST

கர்நாடக மாநிலம் கூர்க் அழகு அழகு அழகோ அழகு. இந்த ஊரில் நண்பர்கள் கிடைக்கப்பெற்றது அதனினும் அழகு. காவிரி நீர் இங்கு கிடைப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. ஆனால் ஒரு கிராமம் முழுக்க கேரள மக்களும் இன்னொரு கிராமம் முழுக்க இஸ்லாமியர்களும் இருப்பது கண்டு இன்னுமோர் ஆச்சர்யம். நிஜமாகவே கூர்க் குறிப்பிடத்தக்க அம்சங்கள் கொண்டதுதான். ஞாயிறு வரை இந்த மண்ணில்தான் ஜாகை. அதன்பின் பெங்களூருவில். ஒரே ஊர் சுற்றிப் புராணம்தான் போங்க. நன்றி.

கவிதையில் யாப்பு

Posted: 03 Jan 2014 11:28 PM PST

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

உதவுங்கள் உறவுகளே................

Posted: 03 Jan 2014 10:58 PM PST

தொழில்நுட்ப பட்டயம் (diploma) முடித்து அதன்மூலம் வெளிநாடு குறிப்பாக சிங்கப்பூர் செல்வதற்கான நேரடி கிளையண்ட் (client) நேர்காணல் (interview) நடத்தும் சென்னை நிறுவனங்களின்(consultancy) முகவரி தேவை.....
இண்டெர்நெட் லிங்க் கிடைதாலும் உதவியாக இருக்கும்....

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள்

Posted: 03 Jan 2014 10:03 PM PST

புத்தக கண் காட்சியில் - எமது நூல்கள் அனைவருக்கும் வணக்கம். 10-01-2014 முதல் 22-01-2014 வரை, சென்னை நந்தனம் Y.M.C.A.மைதானத்தில், சுமார் 400 பதிப்பகங்கள் கலந்து கொள்ளும் புத்தக கண் காட்சி நடைபெற உள்ளது. அங்கு ஸ்டால் எண் . . . . இல் (ஸ்டால் எண் பின்பு தருகின்றோம்), யாம் தொகுத்து உருவாக்கிய கீழ்க்கண்ட நூல்கள் கிடைக்கும். 1.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 1 2.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 2 3.மருதகாசி திரையிசைப் பாடல்கள் தொகுதி - 3 4.தஞ்சை ராமையாதாஸ் திரையிசைப் ...

பாவனைகள்

Posted: 03 Jan 2014 09:58 PM PST

தெரிந்ததைத் தெரியாது என்றும் தெரியாததைத் தெரியும் என்றும் பாவனைகள் செய்து யார் எவரிடமும் பேசிப்பகிர்ந்துச் சாமர்த்தியமாய் காரியம் சாதிக்கும் சுயநலமிகள் சமுதாயத்தின் நச்சுக்கிருமிகள் பார்க்கும்போதெல்லாம் நீண்ட ஆயுளோடு வாழ்வதைப் பற்றி நினைவூட்டுகிறது அந்த ஆயிரங்காலத்து அடையாறு ஆலமரம் தருமனுக்கு எல்லாமே நல்லதெனத் தெரியுமாம் துரியோதனுக்கு எல்லாமே கெட்டதெனத் தெரியுமாம் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு இதில் உன் குணம் எது?

மனம்.

Posted: 03 Jan 2014 09:20 PM PST

மனமாற வாழ்த்தியது
வேப்ப மரமநிழல்
நின்றிருந்த என்னை
பூக்கள் உதிர்த்து...

இன்பம் கண்டு மகிழும்
துன்பம் கண்டு துவளும்
நிலையான மனம்.

காற்று, மழை, பெரும் சத்தம்
கண்ணைப் பறிக்கும் மின்னல், எங்கோ
விழுந்திருக்கணும் இடி.

உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.

தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.

பேசாத மரம்.

Posted: 03 Jan 2014 08:55 PM PST

ஹைக்கூ
பூக்களின் புன்னகை ரகசியம்
பூரணமாய் உணர்ந்தவித்தகன்
அரூபக் காற்று.

இனம் அறிய தெரியவில்லை
அழகாய் மலரும் எத்தனையோ?
பூக்களின் பெயர்கள்.

மாயையோ வியப்போ இல்லை
நிஜம், கணத்தில் கரைந்து
மறைந்தது நீரில் உப்பு.

அருகிவிட்டார்கள் வீடுகளில்
அருமையாய் இரவுகளில்
கதைச் சொல்லும் பாட்டிகள்.

வேரின் மடியில் அமர்ந்து
பேசிட அனுமதித்தது என்னை
யாரிடமும் பேசாத மரம்.

சிறுவர் பாடல்

Posted: 03 Jan 2014 08:13 PM PST

சுக்குகாப்பிக் குடித்தால்
நன்றாய்ச் சீரணமாகும்
வெண்ணெய் நீக்கிய
மோர்க் குடித்தால்
உடலோ குளிர்ச்சியாகும்
தென்னை இளநீரைக் குடித்தால்
வெப்ப நோய்கள் நீங்கும்
எலுமிச்சம் பழ நீரைக் குடித்தால்
உடல் நஞ்சுகள் நீங்கும்
காய்ச்சி வடிகட்டிய நீர் குடித்தால்
தொற்றுநோய்க்குத் தடுப்பாகும்
செயற்கையானக் குளிர் பானங்கள்
உயிரைக் கொல்லும் நஞ்சாகும்
இயற்கையான பானங்கள் - நம்
உயிரைக் காக்கும் மருந்தாகும்.

வேலன்:-flv வீடியோக்களை பார்க்க

Posted: 03 Jan 2014 07:45 PM PST

இணையத்தில் நாம் யூடியூபில் அதிகபடங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்போம்.அவ்வாறான படங்கள் நமக்கு .flv பார்மெட்டில் கிடைக்கும் அவ்வாறு பார்மெட் பைல்களை ப்ளே செய்து பார்வையிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கிழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் பைல் என்பதனை கிளிக் செய்து நம்மிடம் உள்ள .flv(எப்எல்வி) வீடியோ படத்தினை தேர்வு செய்யவும். உங்களுக்கான புகைப்படம் தேர்வாகி உங்களுக்கான ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™