Daily Thanthi |
- சின்னமனூர் நகரில் ரூ.12¼ கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டது
- மாநில நீச்சல் போட்டி சென்னை வீரர் புதிய சாதனை
- சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் வாசெலின் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழப்பு போலீசாருக்கான முதலுதவி பயிற்சி முகாமில் தகவல்
- முதல்–அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி
- கரூர் அருகே வெற்றிலை மண்டியில் திடீர் தீவிபத்து
- என்னை யாரும் சந்திக்கவும் இல்லை–நான் மறுக்கவும் இல்லை ‘‘நான், தோழியுடன் அமெரிக்காவில் இருக்கிறேன்’’ நடிகை ஹன்சிகா பேட்டி
- திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் தி.மு.க. மாநாட்டுக்கு இடம் தேர்வு கருணாநிதி அறிக்கை
- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் கலெக்டர் திறந்து வைத்தார்
| சின்னமனூர் நகரில் ரூ.12¼ கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு Posted: 04 Jan 2014 11:37 AM PST உத்தமபாளையம், தேனி மாவட்டம், சின்ன மனூர் நகரசபை பகுதியில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத் தின் கீழ் புதிய குடியிருப்புகள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் என ரூ.12 கோடியே 21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற் கொள்ள அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் முதற்கட்டமாக சின்னமனூர் நகரில் 14 குடிசைப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, 950 புதிய குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் தற்போது நடை பெற்று வருகின்றன. இதுதவிர பொன்னகரில் 2 இடங்களில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 இடங்களில் சிமெண்டு வண்ண கற்கள் சாலை அமைக்கும் பணியும் மற்றும் மழைநீர்வடிகால் அமைக்கும் பணியும், 2 சமு தாயக்கூடங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. மேலும் நகரில் உள்ள 950 வீடுகளுக்கு இல வசமாக பாதாள சாக்கடை இணைப்பு கால்வாய் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தேனி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது சின்னமனூர் நகரசபை ஆணையாளர் அப்துல்ரசீது, பொறியாளர் சரவணக்குமார், பணி மேற்பார்வையாளர் செல்லத் துரை ஆகியோர் உடன் இருந்தனர். image: category: |
| ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 155 ரன்னில் சுருண்டது Posted: 04 Jan 2014 11:30 AM PST சிட்னி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 155 ரன்களில் சுருண்டது. ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மைக்கேல் கார்பெர்ரியின் (0) விக்கெட்டை இழந்து 8 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து திண்டாட்டம் இந்த நிலையில் 2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் புயல்வேக பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. வேகத்துக்கு சாதகமாக நிலவிய சூழலை மிட்செல் ஜான்சன், ரையான் ஹாரிஸ், பீட்டர்சன் ஆகியோர் சரியாக பயன்படுத்தி இங்கிலாந்துக்கு குடைச்சல் கொடுத்தனர். 2–வது பந்திலேயே கேப்டன் அலஸ்டயர் குக் (7 ரன்) ஹாரிசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அதைத் தொடர்ந்து விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட ஆண்டர்சன் (7 ரன்), கெவின் பீட்டர்சன் (3 ரன்), இயான் பெல்(2 ரன்) ஆகியோரும் வரிசையாக காலியானார்கள். வெறும் 23 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி விழிபிதுங்கி நின்றது. டாப்–5 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கில் அவுட் ஆவது, இங்கிலாந்துக்கு இது 7–வது நிகழ்வாகும். கடைசியாக 2009–ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்து அணி இது போன்ற சோதனையை எதிர்கொண்டு இருந்தது. அது மட்டுமின்றி முதல் 5 விக்கெட்டுகளும் சமாளித்து வெறும் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்கள். சிட்னி மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் ஓர் அணி 5–வது விக்கெட்டை இழக்கும் போது எடுக்கும் மிகவும் குறைவான ஸ்கோர் இது தான். 155 ரன்னில் ஆல்–அவுட் இவ்வாறு மோசமான வரலாறுகளை சந்தித்து தகிடுதத்தம் போட்ட இங்கிலாந்து அணியை மீட்க போராடிய அறிமுக வீரர் கேரி பேலன்ஸ் (18 ரன்), விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (18 ரன்), ஆல்–ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (47 ரன்) ஆகியோராலும் தங்களது முயற்சியில் வெற்றி காண முடியவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 58.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு சுருண்டது. ஸ்டூவர்ட் பிராட் 30 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹாரிஸ், ஜான்சன், சிடில் தலா 3 விக்கெட்டுகளும், நாதன் லயன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து 171 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 30 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்த தொடரில் 4–வது முறையாக அரைசதம் விளாசிய கிறிஸ்ரோஜர்ஸ் 73 ரன்களுடனும், ஜார்ஜ் பெய்லி 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக டேவிட் வார்னர் 16 ரன்னிலும், ஷேன் வாட்சன் 9 ரன்னிலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 6 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 7 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 311 ரன் முன்னிலை கைவசம் 6 விக்கெட்டுகளை வைத்திருக்கும் ஆஸ்திரேலியா இதுவரை 311 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இங்கிலாந்தை 5–0 என்ற கணக்கில் 'ஒயிட்–வாஷ்' ஆக்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. image: category: |
| மாநில நீச்சல் போட்டி சென்னை வீரர் புதிய சாதனை Posted: 04 Jan 2014 11:01 AM PST சென்னை, 17–வது மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 'குரூப் 2' பிரிவில் (15 வயதுக்கு உட்பட்டோர்) 200 மீட்டர் பிரஸ்ட்ஸ்டிரோக் பந்தயத்தில் சென்னை வீரர் எஸ்.தனுஷ் பந்தய தூரத்தை 2:37.42 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்பு சர்வதேச நீச்சல் வீரர் ஜெ.அக்னீஷ்வர் 2004–ம் ஆண்டில் இந்த பிரிவில் 2:39.17 வினாடியில் கடந்ததே கடந்த 9 ஆண்டுகளாக சாதனையாக இருந்து வந்தது. அதனை தனுஷ் தகர்த்தார். சாதனை படைத்த தனுஷ் டி.எஸ்.பி.ஏ.கிளப்பில் பயிற்சியாளர் வீரபத்திரனிடம் பயிற்சி பெற்று வருகிறார். image: category: |
| சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் வாசெலின் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் Posted: 04 Jan 2014 10:49 AM PST சென்னை ஓபன் டென்னிசில் பிரான்ஸ் வீரர் ரோஜர் வாசெலின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சென்னை ஓபன் டென்னிஸ் தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஏர்செல் 19–வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் திருவிழா 'கிளைமாக்ஸ்' கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் 4 இந்தியர்களும், இரட்டையரில் 7 இந்தியர்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் அரைஇறுதிக்கு முன்பாக மூட்டை முடிச்சை கட்டி ஏமாற்றி விட்டனர். இந்த நிலையில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் முதலாவது அரைஇறுதியில் உலக தரவரிசையில் 52–வது இடம் வகிக்கும் பிரான்சின் ரோஜர் வாசெலினும், 38–ம் நிலை வீரர் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்சும் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் சர்வீஸ் போடுவதிலும், வலுவாக பந்தை திருப்பி அடிப்பதிலும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டியதால், ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது. ரசிகர்களும் பாரபட்சமின்றி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களை கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். முதல் செட்டை வாசெலின் கைப்பற்ற, 2–வது செட்டில் கிரானோலர்ஸ் பதிலடி கொடுத்தார். வாசெலின் வெற்றி இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3–வது செட்டில் அனல் பறந்தது. இதில் ரொம்ப ஆக்ரோஷமாக ஆடிய வாசெலினின் கை ஓங்கியது. 6–வது கேமில் கிரானோலர்சின் சர்வீசை வாசெலின் முறியடித்தது திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம் 4–2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வாசெலின், தொடர்ந்து தனது சர்வீசையும் வசப்படுத்திக் மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இதன் பின்னர் எதிராளியின் 8–வது கேமை கண்டுகொள்ளாமல் விட்ட அவர், 9–வது கேமில் தனது சர்வீசில் வெற்றியை உறுதிப்படுத்தினார். 2 மணி 2 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் வாசெலின் 6–2, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து சென்னை ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். பிரான்ஸ் வீரர் ஒருவர் சென்னை ஓபன் இறுதி சுற்றில் காலடி எடுத்து வைப்பது 14 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2000–ம் ஆண்டில் பிரான்சின் ஜெரோம் கோல்மார்ட் இங்கு இறுதிப்போட்டிக்கு வந்ததுடன், பட்டமும் வென்றது நினைவு கூரத்தக்கது. கனவு நிறைவேறுமா? 30 வயதான வாசெலின் இதுவரை எந்த ஒரு ஏ.டி.பி. ஒற்றையர் பட்டத்தையும் வென்றதில்லை. அவரது நீண்ட நாள் கனவு சென்னையில் நனவாகுமா? என்பது இன்றிரவு தெரிந்து விடும். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் அவர் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) அல்லது வாசெக் போஸ்பிசில் (கனடா) ஆகியோரில் ஒருவரை சந்திப்பார். image: category: |
| சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழப்பு போலீசாருக்கான முதலுதவி பயிற்சி முகாமில் தகவல் Posted: 04 Jan 2014 10:17 AM PST திண்டுக்கல், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 16,175 பேர் உயிரிழந்து உள்ளதாக திண்டுக்கல்லில் நடந்த போலீசாருக்கான முதலுதவி பயிற்சி முகாமில் கூறப்பட்டது. முதலுதவி சிகிச்சை பயிற்சி திண்டுக்கல்லில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முகாம், இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசாமி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் சங்க தலைவர் ராஜா, செயலாளர் சுகுனா மற்றும் ஏராளமான போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். அப்போது அரசு தலைமை மருத்துவமனையின் எலும்பு முறிவு டாக்டர் ஜேம்ஸ்சுந்தர்சிங், முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் பல்வேறு வீடியோ காட்சிகள் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமில் டாக்டர் ஜேம்ஸ்சுந்தர் சிங் பேசியதாவது:- 16,175 பேர் சாவு இந்தியாவில் கடந்த ஆண்டு 4 லட்சத்து 40,042 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 39,091 பேர் இறந்துள்ளனர். இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக விபத்துகளும், இறப்பும் நடந்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் நடந்த 67,757 விபத்துகளில் 16,175 பேர் இறந்துள்ளனர். பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 24,470 விபத்துகளில் 15,109 பேரும், ஆந்திராவில் 39,344 விபத்துகளில் 14,966 பேரும் இறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இதில் 50 சதவீத சாலை விபத்துகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் நடக்கின்றன. சாலை விபத்துகளால் காயம் அடைந்து உறுப்பினர்களை இழப்போர் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் இறப்பும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை 60 சதவீதம் நாம் காப்பாற்ற முடியும். மருந்து இல்லா முதலுதவி விபத்தில் சிக்கிக் கொள்ளும் நபர்களை காப்பாற்ற முதல் 1 மணி நேரம் முக்கியமானது. எந்தவித மருந்துகளும் இல்லாமல் அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சைகள் உயிரை காக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு 30 நிமிடமும் 3 மடங்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே, விபத்து குறித்து முதலில் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும், காயம் அடைந்தவர்களை உடனடியாக காற்றோட்டமான இடத்தில் அமர வைக்க வேண்டும். கை, கால்களில் முறிவு ஏற்பட்டால் உடனே கட்டு போட வேண்டும். இதனால் ரத்தம் வீணாவது தடுக்கப்படுவதோடு, வலியும் குறையும். விபத்தில் பலர் சிக்கிக்கொண்டால் அரசு மருத்துவ மனைக்கு தகவல் கொடுத்து மருத்துவக்குழுவை தயாராக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். உடல் உறுப்புகள் துண்டாகி ரத்தம் வீணாக நேர்ந்தால், அடிப்பட்ட இடத்தின் மேல் பகுதியில் கட்டு போட்டு தடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ஜேம்ஸ்சுந்தர்சிங் பேசினார். image: category: |
| முதல்–அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி Posted: 04 Jan 2014 10:01 AM PST கரூர், முதல்–அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கூடைப்பந்து விளை யாட்டு போட்டியை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி – ஆர். பி. உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கூடைப்பந்து போட்டி முதல்–அமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான கூடைப்பந்து விளையாட்டு போட்டி கரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடை பெற்றது. இதற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கி னார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப் பினர் செயலாளர் ஜெய் கொடி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் வி.செந்தில் பாலாஜி– ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் விளையாட்டு துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது :– தமிழக முதல்–அமைச்சர் விளையாட்டு துறைக்கு ரூ.150 கோடி நிதி வழங்கி சாதனை படைத்து உள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நகர் புறம் மட்டும் இன்றி கிராம பகுதிகளில் இளைஞர் களுக்கு விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களும் சிறந்த விளையாட்டு வீரர்களாக வருவதற்கு, கிராம ஊராட்சி அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்த முதல் –அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ரூ.1 லட்சம் பரிசு தற்போது முதல்–அமைச்சர் கோப்பைக்கான இந்த கூடைப்பந்து போட்டி 32 மாவட்டங்களில் நடத்தப் பட்டு, அதில் வெற்றி பெற்றவர் களை 5 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு அதற்குரிய போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் விரைவில் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி படைத்தவர்கள். இதில் வெற்றி பெற்று முதல் பரிசை பெறும் ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. அதே போன்று 2–ம் பரிசு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.75 ஆயிரம், 3–ம் பரிசு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் வழங்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பெருமை தேடி தரவேண்டும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பேசியதாவது:– முதல்–அமைச்சர் ஒவ்வொரு விளையாட் டிற்கும், அதற்கு தேவையான நிதியை வழங்கி உள்ளார். தற்போது நடைபெறும் இந்த போட்டியில் கரூர் மாவட்ட வீரர்–வீராங்கனைகள் முதல் பரிசு பெற்று கரூர் மாவட் டத்திற்கு பெருமை தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கோட் டாட்சியர் நெல்லைவேந்தன், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி, கரூர் தொகுதி செயலாளர் திருவிகா, மாவட்ட துணை செயலாளர் காளியப்பன், பொருளாளர் முரளி, நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மார்க் கண்டேயன், தாந்தோணி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட பாசறை செயலாளர் டி.ரமேஷ், பாசறை தலைவர் சுந்தர்ஜீ, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் வக்கீல் வி.சி.கே. பாலகிருஷ்ணன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆர். எம்.தியாகராஜன், நகர அவைத் தலைவர் தாரணி சரவணன், ஒன்றிய செய லாளர்கள் எம். ஆர். விஜய பாஸ்கர், பி.கே. முத்துசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் கடவூர் செல்வராஜ், நகர இளைஞர் அணி துணை செயலாளர் பழனிராஜ், கிருஷ்ணராயபுரம் தொகுதி கழக செயலாளர் வக்கீல் வி.எம்.நகுல்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். image: category:Tagging: |
| கரூர் அருகே வெற்றிலை மண்டியில் திடீர் தீவிபத்து Posted: 04 Jan 2014 09:56 AM PST நொய்யல், கரூர் அருகே பாலத்துறையில் வெற்றிலை மண்டி தீப்பிடித்து எரிந்தது. வெற்றிலை மண்டி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவருக்கு சொந்தமான இடம் கரூர்– நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையில் உள்ளது. அங்கு கடை கட்டியுள்ளார். அந்த கடையை வேலாயுதம் பாளையம் கண்டியானூரை சேர்ந்த சம்பத் வாடகைக்கு எடுத்து வெற்றிலை மண்டி வைத்து நடத்தி வருகிறார். தீப்பிடித்தது சுற்று வட்டார பகுதி வெற்றிலை விவசாயிகளிடம் இருந்து வெற்றிலைகளை வாங்கி சீர்செய்து பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வருகிறார். அதன் அருகில் பெரிய வெங்காயமும் வாங்கி மொத்த விற்பனை செய்து வருகிறார். இந் நிலையில் வெற்றிலை மண்டியின் முன்புறம் (தேசிய நெடுஞ்சாலை அருகில்) வெற்றிலை கடைகளுக்கு வைக்க பயன்படுத்தப்படும் வரகம் புல்களைபோட்டு வைத்திருந்தார். நேற்று மதியம் வரகம்புல்லில் திடீரென தீப் பிடித்தது. அந்த தீ வெற்றிலை மண்டியில் பற்றியது. தீயை அணைத்தனர் உடனடியாக வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமையில் ஒருவர் குழுவினரும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை தீயணைப்புதுறை பாதுகாப்பு அதிகாரி துரைராஜ் மற்றும் வீரர்கள் கொண்ட குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பக்கத்து வீடுகள், மற்றும் கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து நிறுத்தப் பட்டது. ரூ.2 லட்சம் மதிப்பிலான... வெற்றிலை மண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெற்றிலைகள், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வரகம்புல், மேற்கூரைகள் உள்பட சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாச மாயின. image: category: |
| Posted: 04 Jan 2014 09:55 AM PST சென்னை, ''நான், இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். என்னை யாரும் வந்து சந்திக்கவும் இல்லை. நான் அவர்களை சந்திக்க மறுக்கவும் இல்லை'' என்று நடிகை ஹன்சிகா கூறினார். பரபரப்பான காதல் நடிகை ஹன்சிகாவும், நடிகர் சிலம்பரசனும் 'வேட்டை மன்னன்,' 'வாலு' ஆகிய 2 படங்களில் ஜோடியாக நடிக்கிறார்கள். படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. ஆரம்பத்தில் இருவருமே தங்கள் காதலை மறைத்து வந்தார்கள். இந்த நிலையில், சிலம்பரசனை ஹன்சிகா காதலிக்கவில்லை என்று சில தகவல்கள் பரவின. அடுத்த நாளே, ''நானும், சிம்புவும் காதலிப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறோம்'' என்று ஹன்சிகா அறிவித்தார். அதை சிலம்பரசனும் ஒப்புக்கொண்டார். சிலம்பரசன்–ஹன்சிகா காதல் விவகாரம், தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கருத்துவேறுபாடு சிலம்பரசனும், ஹன்சிகாவும் உடனடியாக திருமணம் செய்து கொள்வதை ஹன்சிகா தரப்பில் விரும்பவில்லை. அதைத்தொடர்ந்து, ''நானும், சிலம்பரசனும் ஒருவரையொருவர் ஆழமாக காதலித்து வருகிறோம். ஆனால் எங்கள் திருமணம் உடனடியாக இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்வோம்'' என்று ஹன்சிகா கூறினார். இது, இரண்டு பேருக்கும் இடையே கருத்துவேறுபாட்டை ஏற்படுத்தியிருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில், பாண்டிராஜ் டைரக்ஷனில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தில், சிலம்பரசன் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். நயன்தாரா, சிலம்பரசனின் முன்னாள் காதலி என்பதும், இருவருக்கும் இடையே காதல் முறிந்து போனது என்பதும் பழைய தகவல். மறுப்பு சிலம்பரசனுடன் நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்ததை ஹன்சிகா விரும்பவில்லை என்றும், அதனால் இரண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதற்கிடையில் ஹன்சிகா அமெரிக்கா சென்றார். சிலம்பரசன் லண்டன் போய் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் ஹன்சிகாவை சிலம்பரசன் நேரில் போய் பார்க்க முயன்றதாகவும், அவரை சந்திக்க ஹன்சிகா மறுத்துவிட்டதாகவும் சில இணையதளங்களில் தகவல் வெளியானது. இதுபற்றி அமெரிக்காவில் இருக்கும் ஹன்சிகாவுடன், 'தினத்தந்தி' நிருபர் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது ஹன்சிகா கூறியதாவது:– ''நான், என் தோழியுடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கிறேன். விடுமுறையை கொண்டாடுவதற்காக இங்கு வந்திருக்கிறேன். என் தோழியுடன் பல இடங்களை சுற்றிப்பார்த்தபடி, சந்தோஷமாக விடுமுறையை கழித்து வருகிறேன். என்னை யாரும் இங்கு வந்து சந்திக்கவும் இல்லை. நான் யாரையும் சந்திக்க மறுக்கவும் இல்லை. 19–ந்தேதி வரை நான் அமெரிக்காவில்தான் இருப்பேன். 20–ந்தேதி சென்னை வந்து விடுவேன்.'' இவ்வாறு ஹன்சிகா கூறினார். image: category:Tagging:News Group Category: |
| திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் தி.மு.க. மாநாட்டுக்கு இடம் தேர்வு கருணாநிதி அறிக்கை Posted: 04 Jan 2014 09:48 AM PST சென்னை, திருச்சியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்ற தி.மு.க. 10–வது மாநில மாநாட்டு 250 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருச்சி மாநில மாநாடு பிப்ரவரியில் திருச்சியில் நடைபெறவுள்ள பத்தாவது மாநில மாநாட்டிற்கு, தலைமையேற்று கொடியேற்றுபவனாகவும், நம்முடைய பொதுச்செயலாளர், இனமான பேராசிரியர் திறப்பாளராகவும், கழகப்பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் பொருளாளராகவும், திருச்சி மாவட்ட கழக செயலாளர் கே.என்.நேரு, வரவேற்பு குழுவின் தலைவராகவும் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுக்கான விளக்கம் இந்த பத்தாவது மாநில மாநாட்டிற்குப்பிறகு, நாம் இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கவிருக்கிறோம். முதல் மாநில மாநாட்டிலேயே பொதுத்தேர்தலில் கலந்து கொள்வது என்றும்; பிறகு மதுரை பொதுக்குழுவில் நீண்ட நேரம் விவாதித்து, 1952–ல் நடைபெறும் பொதுத்தேர்தலில் தி.மு.க. தன் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்றும்; கம்யூனிஸ்டுகளையும், கழகத்தின் ஆதரவுகோரி தலைமை நிலையத்திற்கு வேட்பு மனுக்களை அனுப்பி, தி.மு.க. குறிப்பிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பொதுச்செயலாளரின் அங்கீகாரம் பெற்றவர்களை மட்டுமே ஆதரிப்பது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. 1951–ம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவை நான் வழிமொழிந்தேன். 1956–ம் ஆண்டு மே திங்கள் 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் இதே திருச்சி மாநகரில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், மாநாட்டு தலைவராக நாவலர் நெடுஞ்செழியனை வழிமொழிந்து அண்ணா பேசினார். ஆம்; வரலாற்றுப்புகழ் பெற்ற அந்த வார்த்தைகளை யார்தான் மறப்பார்கள்? ''தம்பீ, வா! தலைமை ஏற்க வா! உன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்! வா!''–இதுதான் அண்ணா, நாவலரை வழிமொழிந்து பேசிய வைர வரிகளாகும். ஆனால் அதற்குப்பிறகு, அந்த பேச்சுக்கான விளக்கத்தை மாநாட்டு இறுதி உரையில், அண்ணா தந்தார். கட்டுப்பாடு ''எனக்குத்தம்பியாக இருந்தாலும், நாமெல்லாம் பார்த்து ஒருவரை பொதுச்செயலாளராக ஆக்கிவிட்டு, பிறகு அவர் ஆணைக்கு கட்டுப்பட்டு நடப்பதும், அந்த தலைமையை மதிப்பதும்தான், கட்சி கட்டுப்பாட்டை வளர்க்கும். அப்படி தலைமைக்கு மதிப்பளித்து நடக்கும் பழக்கத்தை நான் என் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக மேற்கொண்டிருக்கிறேன்'' என்று அண்ணா ''கட்டுப்பாடு'' என்பதற்கு விளக்கமளித்து பேசினார். இப்படியெல்லாம் ''கட்டுப்பாடு'' பற்றி நமக்கு போதித்த பேரறிஞர் அண்ணா கலந்து கொண்டு நம்மை லட்சியப்பயணத்தில் வழி நடத்திய மாநாடுகள், பொதுக்குழுக்கள், செயற்குழுக்கள்தான் எத்தனை எத்தனை?. இன்றைக்கு அவர் இல்லை, ஆனால் அவர் உருவாக்கிய நமது உயிர் மூச்சான கழகம் இருக்கிறது. ஆல் போல் தழைத்து ஆகாயமளவுக்கு உயர்ந்து நிற்கின்றது. அந்த கழகத்தின் பத்தாவது மாநில மாநாடுதான் திருச்சியில் பாங்குற நடைபெறவுள்ளது. கே.என்.நேரு மாநாடு பற்றி செய்தி வெளிவந்துள்ளது. திண்டுக்கல் சாலையில் தீரன்நகர் பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும், ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மாநாட்டுப்பந்தல் அமைவதாகவும், மழை பெய்தாலும் மாநாடு தடைபடாத வகையில் தகரக்கூரைகளால் பந்தல் அமைக்கப்படுவதாகவும், இந்த மாத இறுதிக்குள் பந்தல் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும், மாநாட்டுப்பகுதியில் 20 இடங்களில் ''போர்வெல்'' அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும், சுவர் விளம்பரப்பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரவேற்பு குழுத்தலைவர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். கட்சியிலே இரண்டற கலந்து காலமெல்லாம் பணியாற்றும் உன்னைப்போன்ற உடன்பிறப்புகளில் ஒருசிலர்தான் இந்த பத்து மாநில மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்களாக இருப்பீர்கள். முதல் மாநில மாநாட்டிலும், இரண்டாவது மாநில மாநாட்டிலும் கலந்து கொண்டவர்கள் ஒருசிலர் தான் இருப்பீர்கள். பத்தாவது மாநில மாநாட்டை தவறவிடலாமா?. கருணாநிதியின் கவலை ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துச்சொல்வதற்காக, காரிலேயே புறப்பட்டு வந்த வரவேற்பு குழுத்தலைவர் தம்பி கே.என்.நேரு இரவு 8.30 மணியளவில் எனக்கு வாழ்த்துத்தெரிவித்துவிட்டு, அன்றிரவே காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டார். இந்த இரவிலா பயணம்? என்ற போது, காலையிலே வேலை இருக்கிற தண்ணா என்று பாசத்தோடு கெஞ்சி விட்டுச்சென்றார். அவர் சென்றுவிட்டார், ஆனால் அவர் பத்திரமாக ஊர் சென்று திரும்ப வேண்டுமே என்று நான் கவலைப்பட்டேன். உடன்பிறப்புகள் மீது இவ்வாறு நான் கொண்ட பாசம்தானே, இத்தனை வயதிலும் கழகம், கழகம், கழகம் என்று கவலைப்படவைக்கிறது. என்னுடைய கவலை இருக்கட்டும்; இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
image: category:News Group Category: |
| குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் கலெக்டர் திறந்து வைத்தார் Posted: 04 Jan 2014 09:36 AM PST பெரம்பலூரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தை கலெக்டர் திறந்து வைத் தார். குற்ற புலனாய்வு அலுவலகம் தமிழக முதல்வரின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகத்தை கலெக்டர் தரேஸ் அஹமது தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கலெக்டர் செய்தியாளர்களிடம் பேசிய தாவது: பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச் சியையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தொடங்கப் படும் என்று தமிழக முதலமைச் சர் அவர்கள் அறிவித்திருந் தார் அதன் அடிப்படையில் 5 முதல் நிலைகாவலர்களும், ஒரு உதவி ஆய்வாளர் ஆகி யோர் கொண்டு .இந்த அலு வலகம் செயல்படும். தடுப்பு காவல் சட்டம் மேலும் பெரம்பலூர் மாவட்ட அலுவலகம் மதுரை மண்டலத்தின் கீழ் இயங்கும், மதுரை மண்டலத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையி னரால் நடப்பு ஆண்டில் இதுவரை 4 ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.29 லட்சத்து 66 ஆயிரத்து 815.00 மதிப்புள்ள பொது வினியோகத் திட்ட அரிசி 5 ஆயிரத்து251 குவிண்டால், ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 250.00 மதிப்புள்ள பொது வினியோகத் திட்ட மண் எண்ணெய் 29 ஆயிரத்து 350 லிட்டர், ரூ.19 லட்சத்து 95 ஆயிரத்து 300 மதிப்புள்ள 2 ஆயிரத்து 217 அரசு மானிய விலை எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப் பட்டது. இவைகள் கைப்பற்றப் பட்டு மேற்படி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 850 நபர்கள் கைது செய்யப்பட்டும், 56 நபர்கள் கள்ளச்சந்தை தடுப்புச் சட் டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். மேலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.2 கோடியே 26 லட்சத்து 88 ஆயிரத்து 4 மதிப்புள்ள 397 வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு வாகனங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவல ரால் மொத்தம் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 57 வழக்குகள் பதியப்பட்டு 37 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர் களிடமிருந்து 73.5 குவிண்டால் அரிசியும், 60 லிட்டர் மண் எண்ணெயும் 21 சிலிண்டர் களும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட் டத்திற்கு தனி அலுவலகம் திறக்க பட்டதன் மூலம் குற்ற செயல்கள் மேலும் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் மதுரை மண்டலகாவல் கண் காணிப்பாளர் சாமிநாதன,¢ மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சோனல் சந்திரா, குற்றப்புலனாய்வுத் துறையின் திருச்சிராப்பள்ளி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பா ளர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். image: category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |