Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நோபல் பரிசுக்கு ஸ்னோடென் பெயர் பரிந்துரை

Posted:

ஆஸ்லோ: அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளிப்படுத்திய, ஸ்னோடென்னின் பெயர், நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை, கடந்த ஆண்டு, அம்பலப்படுத்தினார். இதையடுத்து, ஸ்னோடென் மீது, உளவு பார்த்தல், அரசு ஆவணங்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை, அமெரிக்கா, சுமத்தி உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவிலிருந்து தலைமறைவான ஸ்னோடென், தற்போது, ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். நார்வே நாட்டின், முன்னாள் அமைச்சரும், இடதுசாரி கட்சி ...

கஸ்தூரி ரங்கன் பரிந்துரை அமலில் இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பால் கொந்தளிப்பு

Posted:

திருவனந்தபுரம்: மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில், கஸ்தூரி ரங்கன் குழு அளித்த பரிந்துரைகள் அமலில் இருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மத்திய அரசு அறிவித்துள்ளதால், கேரளாவில், பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியான, இடது சாரி கட்சியினர், சட்டசபையில், இந்த பிரச்னையை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.கோவா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில், மேற்கு தொடர்ச்சி மலை, பரந்து விரிந்துள்ளது. இதன், வனப் பரப்பையும், உயிர்ச் சூழலையும் பாதுகாப்பதற்காக, 'யுனெஸ்கோ' ...

'அசோக் சவானுக்கு எதிராக ஆதாரமில்லை': ஆதரவு தெரிவிக்கிறார் மகாராஷ்டிர கவர்னர்

Posted:

புதுடில்லி: 'ஆதர்ஷ் ஊழலில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர், அசோக் சவான் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையிலான ஆவணங்களை, சி.பி.ஐ., தாக்கல் செய்யவில்லை' என, அம்மாநில கவர்னர், சங்கர நாராயணன், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.மும்பையில், ராணுவ வீரர்களின் குடும்பத்துக்காக, 'ஆதர்ஷ்' வீட்டு வசதி சங்கத்தின் கீழ், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டது. குற்றச்சாட்டு: இந்த வீடுகளை, விதிமுறைகளை மீறி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்கியதாகவும், இதில், பெரும் ஊழல் நடந்தாகவும், ...

பலாத்காரத்திற்கு பெண்களும் காரணம்: தேசியவாத காங்., பெண் தலைவர் பேச்சு

Posted:

மும்பை:''பெண்கள் மீதான, பாலியல் பலாத்காரத்திற்கு, பெண்கள் தான் காரணம்,'' என, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மகாராஷ்டிரா மாநில, மகளிர் ஆணைய உறுப்பினர், ஆஷா மிர்ஜே கருத்து தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர், சரத் பவாரின் மகளும், எம்.பி.,யுமான, சுப்ரியா சுலே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல விஷயங்கள் அலசப்பட்டன.இரவு 11:00 மணிக்கு:இதில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர், ...

கெஜ்ரிவாலை ஆதரித்தவர்கள் பின்வாங்குகின்றனர்

Posted:

டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலின் அணுகுமுறை பிடிக்காமல், அவருக்கு ஆதரவு அளித்து வந்த சில அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வசைபாடத் துவங்கியுள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது, அக்கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கும் என, கூறப்படுகிறது.ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன், டில்லியில் ஆட்சியை கைப்பற்றும் முன், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் பலரும், அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றினர். இதனால், அவர் பின்னே, நல்லவர்கள் பலரும் இருக்கின்றனர் என்ற எண்ணம், டில்லி மக்களுக்கு ஏற்பட்டது. அந்த ...

காங்., கூட்டணிக்கு பரூக் அப்துல்லா விரைவில் டாட்டா!

Posted:

திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., ஆகிய கட்சிகளின் வரிசையில், தேசிய மாநாட்டு கட்சியும், மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகவுள்ளது. இருப்பினும், ஜம்மு - காஷ்மீரில், முதல்வர், ஒமர் தலைமையிலான கூட்டணி ஆட்சி தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மத்தியில், இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த போது, ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளில், முக்கிய கட்சியாக இருந்தது, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ்.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு கொண்டு வரும் முடிவை, ...

'கெஜ்ரிவாலிடமிருந்து பதில் இல்லை': குற்றம் சுமத்துகிறது மத்திய அரசு

Posted:

புதுடில்லி : 'வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றது தொடர்பாக, ஆம் ஆத்மி தலைவர்களுக்கு, இரண்டு முறை கடிதம் எழுதப்பட்டும், அவர்கள் இதுவரை பதில் அளிக்கவில்லை' என, மத்திய அரசு தரப்பில், டில்லி ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:டில்லியில், ஆளும் கட்சியாக உள்ள, ஆம் ஆத்மி கட்சி, வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான நிதி பெற்றுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக, இந்த நிதியை, அந்த கட்சியின் தலைவரும், டில்லி முதல்வருமான, கெஜ்ரிவாலும், அந்த கட்சியின் மற்ற தலைவர்களும் பெற்றுள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் மீது ...

தொடர்கிறது வீதிக்கு வந்த தி.மு.க., குடும்ப சண்டை: ஊருக்கு ஊர் கண்டன போஸ்டர், உருவ பொம்மை எரிப்பு

Posted:

வீதிக்கு வந்த பிறகும், தி.மு.க.,வில், குடும்ப சண்டை ஓயவில்லை. அழகிரிக்கு எதிராக, ஸ்டாலின் ஆதரவாளர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது மற்றும் உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அழகிரி ஆதரவாளர்களும், ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில், போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதியின், மகன்களான, பொருளாளர் ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலர், அழகிரி இடையே, பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இருவருக்கும் தனித்தனியே ஆதரவாளர்கள் உருவாகினர். தென் மாவட்ட நிர்வாகிகள், அழகிரி பக்கமும், மற்ற பகுதி ...

சமரச பேச்சுவார்த்தைக்கு யாரும் வரவில்லை: அழகிரி பதில்

Posted:

மதுரை:எனக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமரசம் நடந்தால், ஏன் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்?'' என்று மதுரையில் அழகிரி, நிருபர்களிடம் கேள்வி எழுப்பினார்.மதுரையில் அவர், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:உங்களுக்கும், ஸ்டாலினுக்கும் சமரச பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறதே...தெரியவில்லை. எனக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமரசம் நடந்தால், ஏன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்?பிறந்த நாளில் அடுத்த கட்ட முடிவு எடுப்பதாகக் ...

தமிழக அரசின் அலட்சியத்தால் கர்நாடகம் செல்கிறது ரூ.70 கோடி

Posted:

விழுப்பரம் மாவட்டம், வழுதரெட்டி கிராமத்தில், கயிறு தொழில் பூங்கா அமைக்க, தமிழக அரசு ஒத்துழைக்காததால், அதற்கு ஒதுக்கப்பட்ட, 70 கோடி ரூபாயை, கர்நாடக மாநிலத்துக்கு ஒதுக்க, கயிறு வாரியம் முடிவு செய்துள்ளது.'இதற்கான ஒப்புதல், கொச்சியில் பிப்., 11ம் தேதி நடக்கும், கயிறு வாரியத்தின் துணை குழு கூட்டத்தில் அளிக்கப்படும்' என, வாரியத்தின் துணைத் தலைவர் ராயர் கூறியுள்ளார்.நடுத்தர தொழில்கள்: மத்திய அரசின், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ், மத்திய கயிறு வாரியம் இயங்குகிறது. 2013 - 14ல், நாட்டின் பல பகுதிகளில், கயிறு வாரியத்தின் கீழ், தொழில் ...

குளறுபடி தவிர்க்க புது வேட்பாளர் பட்டியல்: தயாரிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா

Posted:

ராஜ்யசபா வேட்பாளர் தேர்வில், நடந்த குளறுபடியை தொடர்ந்து, லோக்சபா தேர்தலுக்கு, புதிய வேட்பாளர் பட்டியல், தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால், அரசியல் கட்சிகள் அனைத்தும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, அ.தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கியது. கட்சி சார்பில், போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.தொகுதிக்கு ஒருவர்:தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளுக்கும், 3,000க்கும் மேற்பட்டோர் மனுச் செய்து, ...

பா.ஜ., கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Posted:

தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமையும், தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., - ம.தி.மு.க., - கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகள், இணைய உள்ளன. இந்த கட்சிகளுடன், முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.தே.மு.தி.க.,வின் முடிவுக்கு பின், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துக் கொள்ள பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிப்ரவரி, 2ம் தேதி நடக்கும் அக்கட்சி மாநாட்டுக்கு பின், முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.பா.ஜ., தலைவர்கள் அவரை சந்தித்தபோது, கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர உள்ளன, அவை எதிர்பார்க்கும் தொகுதிகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™