Daily Thanthi |
- குமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
- சாணக்கியன் சொல் (30-01-2014)
- கன்னித்தீவு (30-01-2014)
- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
- நாகர்கோவிலில், குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை பக்கத்து வீட்டில் மறைந்திருந்து தீவைத்துக் கொண்டார்
- இந்திய அணியின் தேர்வு முறையை விமர்சிக்கும் நியூசிலாந்து வீரர்
- மேஷம்
- 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: 233 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள் ஷேவாக், யுவராஜ்சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயம்
- இன்று நாள் எப்படி?
- வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி 730 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ ஜெயவர்த்தனே இரட்டை சதம் விளாசினார்
| குமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் Posted: 29 Jan 2014 01:15 PM PST நாகர்கோவில் பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சால்வேஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளி நாகர்கோவில் சால்வேஷன் ஆர்மி மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் சாண்டியாகோ தேவதாஸ் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயசிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி தலைமையாசரியை சுகுணா நன்றி கூறினார். பறக்கை அரசு பள்ளி பறக்கை அரசு பள்ளியில் குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பிரம்மநாயகம் பிள்ளை தலைமையில் விழா நடை பெற்றது. பஞ்சாயத்து தலை வர் சுந்தர் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரி யர் கழக தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரம் ஊராட்சி அலுவலகத்தில் தர்மபுரம் ஊராட்சி அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் ஆர்.கணேசன் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கீதா சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி கவுன்சிலர்கள் ராஜபாண்டியன், பகர்தீன், பத்மநாபன், சுயம்பு, ராமசுவாமி, லதாகோபால், ஜெகன், நாகரெத்தினம், குமரேசன், வனஜா, அருள்மேரி, ராஜேஸ்வரி, தங்க கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி செயலாளர் பாமா ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சிமன்ற அலுவலகம் பறக்கை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண் டாடப் பட்டது. தலைவர் சுந்தர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாகர்கோவில் கோட்டார், குமரி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண் டாடப் பட்டது. பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் தலைமையில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாகர்கோவில் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தங்கம் சோபனா தலைமையில் குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது. உதவி தலை மை ஆசிரியர் சந்திரன் வரவேற்று பேசினார். பெற் றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சகாதேவன் தேசிய கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் மணிவண்ணன் சிறப்பு ரையாற்றினார். இலக் கிய மன்ற செயலாளர் அய்யப்பன் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் மன்ற செயலாளர் ஜெட்ரூட் நிர்மலா நன்றி கூறினார். காந்திஜி சமூக தொண்டு நிறுவனம் காந்திஜி சமூக தொண்டு நிறுவனத்தில் குடியரசு தினவிழா கொண் டாடப் பட்டது. விழா குழு தலைவர் ரெத்தினசாமி தலைமை தாங்கினார். ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள் நலச்சங்க தலைவர் ராஜகோபால், ஊர் தலைவர் மனோகரன், தர்மபுரம் ஊராட்சி பகுதி நிறுவன தலைவர் தங்கராஜ்மணி, ஜெகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர்கள் படங்களுக்கு தர்மபுரம் ஊராட்சி உறுப்பினர் பத்மநாபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிறுவன கவுரவ ஆலோசகர் கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிறுவன இயக்குநர் தாஸ், நிறுவன தேசிய ஒற்றுமை மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசித்தார். தெற்குசூரங்குடி ஜவகர் கிராம அபிவிருத்தி சங்க பொருளாளர் பகருதின் இனிப்புகள் வழங்கினார். நிறுவன பொருளாளர் தங்க மணிகண்டன் நன்றி கூறினார். பொற்றையடி பள்ளி பொற்றையடி அரசு நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் டேவிட்சன் வரவேற்று பேசினார். கிராம கல்வி குழு தலைவர் ஆறுமுகம் பிள்ளை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொற்றையடி ஊர் தலைவர் கிருஷ்ணன், பள்ளியின் நிர்வாக குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம கல்வி குழு உறுப்பினர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அஞ்சுகிராமம் அஞ்சுகிராமம் வட்டார வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் குடியரசு தினவிழா நடந்தது. சங்க தலைவர் ஆர்.எஸ்.மாணிக்கம் தேசிய கொடி ஏற்றினார். செயலாளர் அக்பர் அலி, பொருளாளர் சிவகுமர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜோதிராமலிங்கம் சிறப்புரையாற்றினார். ராஜாமணி நன்றி கூறினார். கன்னியாகுமரி கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவி பிரபாவின்ஸ்டன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் செயல் அலுவலர் அம்புரோஸ், கவுன்சிலர்கள் வின்ஸ்டன், சகாயராஜ், பாஸ்கர், தாமஸ், கன்னியாகுமரி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனந்த், சுகாதார அதிகாரி முகைதீன்பிச்சை, சுகாதார மேற்பார்வையாளர் பாலன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் அழகப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நிலைய அதிகாரி பிரதீப்குமார் தேசியக்கொடியை ஏற்றினார். கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) ஜோசப் செல்வராஜ் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு அதிகாரி மீனாட்சிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர். விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு முதல்வர் ஆபிரகாம் லிங்கன் தலைமை தங்கினார். கன்னியாகுமரி கனராவங்கி மேலாளர் நாராயணன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். கேந்திர நிர்வாக செயலாளர் அனுமந்தராவ் உள்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவி சாந்தி இசக்கிமுத்து தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சசிகலா, கன்னியாகுமரி பஞ்சாயத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இசக்கிமுத்து, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மேரிஜாய்ஹெலினா, சத்துணவு விரிவாக்க அலுவலர் பத்மா, அலுவலக மேலாளர் நாகராஜன், சம்பூரணம் உள்பட பலர் பங்கேற்றனர். பஞ்சலிங்கபுரத்தில் உள்ள கன்னியாகுமரி பஞ்சாயத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் சங்க தலைவர் இசக்கி முத்து தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் நடராஜன், இயக்குனர்கள் காமராஜ், கணேசன், சீதாலெட்சுமி, ருக்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி அலுவலகம் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பூவன்பிள்ளை தேசியக்கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதில் செயல் அலுவலர் செண்பகப்பாண்டியன், துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அஞ்சுகிராமம் அஞ்சுகிராமம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் செ.ராஜலிங்கம் தேசியக்கொடியை ஏற்றினார். செயல் அலுவலர் பெர்சிரேணுகா, துணைத்தலைவர் எஸ்.கெவின்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலரும்பங்கேற்றனர். image: category: |
| Posted: 29 Jan 2014 01:14 PM PST Daily Thanthi Special Term:Daily Thanthi Image Special chanakkiyan: ![]() |
| Posted: 29 Jan 2014 01:12 PM PST Daily Thanthi Image Special: ![]() Daily Thanthi Special Term: |
| Posted: 29 Jan 2014 12:27 PM PST |
| Posted: 29 Jan 2014 11:57 AM PST நாகர்கோவிலில் குடும்பத் தகராறில் ஒரு பெண் பக்கத்து வீட்டில் மறைந்து தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அக்காள்- தங்கையை மணந்தவர் நாகர்கோவில் இருளப்பபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். ஆட்டோ டிரைவர். இவருக்கும், கமலம் (வயது 50) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவபிரகாஷ் என்ற மகனும், சிவஜோதி என்ற மகளும் உள்ளனர். சிவபிரகாஷ் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், சிவஜோதி பி.எட். கல்லூரியிலும் படித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவராமன், கமலத்தின் தங்கை சரோஜாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரோஜா தனது பிள்ளைகளுடன், சிவராமன் குடும்பத்துடன் வசித்து வந்த வீட்டுக்கு அருகிலேயே வசித்து வருகிறார். சிவராமன் இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி இரண்டு குடும்பங்களையும் கவனித்து வந்தார். குடும்பத்தகராறு இருப்பினும் கமலத்துக்கும், சிவராமனுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுபோல் நேற்று காலையிலும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பிள்ளைகள் 2 பேரும் கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். சிவராமன் ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்று விட்டார். கமலம் வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் நேற்றும் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சென்றதும் கமலம் அந்த வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் காலையில் நடந்த குடும்பத்தகராறை கூறி வருத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த பெண் அவரை சமாதானப்படுத்தி ஆறுதல் படுத்தியுள்ளார். பின்னர் அவர் நான் மீன் வாங்க இருளப்பபுரம் சந்தைக்கு செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே கமலம் நானும் வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி உள்ளார். இதையடுத்து அந்த பெண் வீட்டுக்குள் சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார். இந்த நேரத்தில் வீட்டுக்கு செல்வதாகக்கூறிய கமலம் வீட்டுக்குச் செல்லாமல் தான் பேசிக்கொண்டிருந்த வீட்டுக்கு பின்புறம் ஒரு ஷெட்டுக்குள் சென்று மறைந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பணம் எடுக்கச் சென்ற பெண் வெளியே வந்து பார்த்தபோது கமலத்தை காணவில்லை. அவர் வீட்டுக்கு சென்று விட்டார் என்று நினைத்த அந்த பெண் வீட்டுக்கதவையும், வீட்டின் முன்புறம் உள்ள கேட் கதவையும் பூட்டிவிட்டு சந்தைக்கு சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ஷெட்டுக்குள் மறைந்திருந்த கமலம் அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீ மளமளவென உடல் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியதும், தீக்கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம்போட்டு அலறியபடி அந்த ஷெட்டில் இருந்து வீட்டின் முன்பக்கம் வந்து பூட்டியிருந்த கேட்டை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை. அதற்குள் தீ உடல் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் கமலம் கரிக்கட்டையாகி அந்த இடத்திலேயே விழுந்து பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றவரா? இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து கமலத்தின் கணவர் மற்றும் தங்கையும், பிள்ளைகளும் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கமலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கமலம் ஏற்கனவே ஒருமுறை குடும்பத்தகராறினால் தற்கொலைக்கு முயன்றவர் என்பது தெரிய வந்துள்ளது. image: category: |
| இந்திய அணியின் தேர்வு முறையை விமர்சிக்கும் நியூசிலாந்து வீரர் Posted: 29 Jan 2014 11:50 AM PST வெலிங்டன், நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் தேர்வு முறை குறித்து நியூசிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவ்ல் கேள்வி எழுப்பியுள்ளார். 'நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பலவீனங்களை குறிப்பாக மிடில் ஓவர்களில் எப்படி ஆட வேண்டும் என்பதை கண்டறிந்து விட்டார்கள் என்பது முதல் இரு ஒருநாள் போட்டிக்கு பிறகு தெளிவாக தெரிந்தது. ஆனாலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது. அவர்கள் அற்புதமான வீரர்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு ஒரு முறை கூடவாய்ப்பு வழங்க முயற்சிக்காதது ஏன்? அவர் லெக் ஸ்பின்னர். இங்குள்ள பவுன்சர் ஆடுகளங்களை மற்றவர்களை விட அவர் நன்றாக பயன்படுத்தி இருக்க முடியும்?' என்று சைமன் தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 29 Jan 2014 11:30 AM PST செய்யும் தொழிலால் செல்வ வளம் குவியும் நாள். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வரவு திருப்திகரமாக இருக்கும். Zodiac sign:Astro Category: Daily |
| Posted: 29 Jan 2014 11:28 AM PST பெங்களூர், 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கா 10 நாடுகளை சேர்ந்த 233 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். இதில் ஷேவாக், யுவராஜ்சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் ஏழாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியையொட்டி, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 5 வீரர்களை மட்டும் தக்க வைத்துவிட்டு மற்றவர்களை விடுவிக்கும்படி ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 5 முன்னணி வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. சென்னை அணியில் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், வெய்ன் பிராவோ ஆகியோர் தொடருகிறார்கள். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 வீரர்களையும், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 2 வீரர்களையும் வைத்துக் கொண்டது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி மட்டும் ஷேவாக் உள்பட எந்த வீரரையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பாமல் அனைவரையும் கழற்றி விட்டது. ஏலப்பட்டியல் அறிவிப்பு அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள், ஐ.பி.எல். அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் புது வரவுகள் அனைவரும் ஏலம் விடப்படுகிறார்கள். பெங்களூரில் வருகிற 12 மற்றும் 13–ந்தேதிகளில் ஏலம் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 நாடுகளை சேர்ந்த 233 வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களுக்கு ரூ.30 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1½ கோடி, ரூ.2 கோடி வீதம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முந்தைய சீசன்களில் அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏலத்தொகை மதிப்பிடப்பட்டது. இந்த தடவை, முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பில் வீரர்கள் விற்கப்பட இருக்கிறார்கள். ஷேவாக், யுவராஜ் ரூ.2 கோடி தேசிய அணியில் இடம் பிடிக்க போராடி வரும் ஷேவாக், யுவராஜ்சிங், யூசுப் பதான், தினேஷ் கார்த்திக் உள்பட 11 இந்தியர்களுக்கு அதிகபட்ச அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தின் போது இவர்களை அணி உரிமையாளர்கள் ரூ.2 கோடியில் இருந்து படிப்படியாக உயர்த்தி ஏலம் கேட்பார்கள். இதே போல் ஆஷஸ் ஹீரோக்கள் மிட்செல் ஜான்சன், பிராட் ஹேடின், ஸ்டீவன் சுமித் மற்றும் மைக் ஹஸ்சி, இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன், 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹாலஸ் உள்ளிட்டோரும் உயர்ந்தபட்ச அடிப்படை விலையில் இடம் பிடித்துள்ளனர். இந்திய ஆல்–ரவுண்டர் இர்பான் பதானின் தொடக்க விலை ரூ.1½ கோடியாகும். தமிழக வீரர்களான முரளிவிஜயை ரூ.2 கோடியில் இருந்தும், பத்ரிநாத்தை ரூ.1 கோடியில் இருந்தும், பாலாஜியை ரூ.50 லட்சத்தில் இருந்தும் ஏலம் கேட்கலாம். கோரி ஆண்டர்சனுக்கு கிராக்கி ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்த நியூசிலாந்து ஆல்–ரவுண்டர் 23 வயதான கோரி ஆண்டர்சனின் மீது நிறைய அணிகள் 'கண்' வைத்துள்ளன. அவரது அடிப்படை தொகை ரூ.1 கோடி தான். ஆனாலும் அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்றும், இதனால் அவரது விலை தாறுமாறாக எகிறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஏலப்பட்டியலில் 43 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் (ஆஸ்திரேலியா) இடம் பெற்றுள்ளார். பட்டியலில் அங்கம் வகிக்கும் அதிக வயதுடைய வீரர் இவர் தான். கடந்த ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவரது அடிப்படை விலை ரூ.1½ கோடி. 40 வயதை தாண்டிய இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் இலங்கையின் முரளிதரனின் தொடக்க விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. விலகிய வீரர்கள் இலங்கையின் சங்கக்கரா, தினேஷ் சன்டிமால், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், மிட்செல் மார்ஷ், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீசின் கெமார் ரோச் உள்ளிட்டோர் குடும்ப சூழ்நிலை மற்றும் சர்வதேச போட்டிகளை கருத்தில் கொண்டு ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள். நியூசிலாந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனும் இந்த முறை ஐ.பி.எல்.–ல் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் ஒரு முறை புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் பிறந்து வேறு நாட்டில் குடியேறியுள்ள அசார் மக்மூத் (இங்கிலாந்து), பவாத் அகமது (ஆஸ்திரேலியா) ஆகியோர் ஏலத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதிகபட்ச தொகை யாருக்கு? ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:– தினேஷ் கார்த்திக், பிரவீன்குமார், அமித் மிஸ்ரா, நெஹரா, பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், ஷேவாக், யுவராஜ்சிங், மனோஜ் திவாரி, ராபின் உத்தப்பா, முரளிவிஜய் (ஆகியோர் இந்தியர்), ஜார்ஜ் பெய்லி, பிராட் ஹேடின், பிராட் ஹாட்ஜ், மைக் ஹஸ்சி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பேட்டின்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க் (ஆகியோர் ஆஸ்திரேலியர்), அலெக்ஸ் ஹாலஸ், சமித் பட்டேல், கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), பிரன்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர் (நியூசிலாந்து), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), தில்ஷன், மஹேலா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் (இலங்கை), சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்). ஏலத்தில் எத்தனை பேர்? இந்தியா–46 பேர் ஆஸ்திரேலியா–46 வங்காளதேசம்–7 இங்கிலாந்து–11 நெதர்லாந்து–1 நியூசிலாந்து–18 தென்ஆப்பிரிக்கா–28 இலங்கை–39 வெஸ்ட் இண்டீஸ்–29 ஜிம்பாப்வே–8 ஏலப்பட்டியலில் தவறான பெயர் ஏதாவது ஒரு சர்வதேச போட்டிகளில் விளையாடி இருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் விற்கப்படுவார்கள். ஆனால் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 46 இந்தியர்களில் ஒருவரான பினல் ஷா, சர்வதேச போட்டிகளில் ஆடியவர் கிடையாது. ஏன், இந்திய அணிக்காக ஒரு முறை கூட தேர்வு செய்யப்பட்டதில்லை. பரோடா விக்கெட் கீப்பரான இவர் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியதாக தவறாக குறிப்பிடப்பட்டு ரூ.30 லட்சம் அடிப்படை விலையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல். நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும், அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தெரிகிறது. 26 வயதான பினல் ஷா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2 ஆட்டங்களிலும் விளையாடி இருக்கிறார். image: category: |
| Posted: 29 Jan 2014 11:27 AM PST Endru Image: ![]() |
| Posted: 29 Jan 2014 11:20 AM PST மிர்புர், வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 730 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் இலங்கை – வங்காளதேச கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவின் மிர்புர் நகரில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 232 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2–வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த நிலையில் 3–வது நாளான நேற்று இலங்கை பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் கொடி கட்டி பறந்தது. ஜெயவர்த்தனே தனது 33–வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் மேத்யூஸ் 86 ரன்களில் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து ஜெயவர்த்தனேவுடன், கிதுருவான் விதநாயக்கே ஜோடி சேர்ந்து அணியை இமாலய ஸ்கோரை நோக்கி பயணிக்க உதவினார். அத்துடன் விதநாயக்கே தனது முதல் சதத்தையும் ருசித்தார். 730 ரன் குவிப்பு மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஜெயவர்த்தனே சிக்சர் அடித்து தனது இரட்டை பூர்த்தி செய்தார். இவர் 200 ரன்களை கடந்ததும் இலங்கை அணி இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 730 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வங்காளதேசத்திற்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜெயவர்த்தனே 203 ரன்களுடனும் (272 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்), விதநாயக்கே 103 ரன்களுடனும் (104 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். 498 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிசை தொடங்கிய வங்காளதேச அணி 3–வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. 4–வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. ஜெயவர்த்தனே சாதனை *35 வயதான மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு இது 33–வது சதமாகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் 7–வது இடத்தில் இருக்கும் சக நாட்டவர் சங்கக்கராவை சமன் செய்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் (51 சதம்), காலிஸ் (45), ரிக்கிபாண்டிங் (41), டிராவிட் (36), சுனில் கவாஸ்கர் (34), பிரையன் லாரா (34) ஆகியோர் அதிக சதத்தில் முதல் 6 இடங்களில் உள்ளனர். *தனது 142–வது டெஸ்டில் விளையாடும் ஜெயவர்த்தனேவுக்கு இது 7–வது இரட்டை சதமாகவும் அமைந்தது. அதிக இரட்டை சதம் விளாசியவர்களில் டான் பிராட்மேன் (12 இரட்டை சதம்), பிரையன் லாரா (9), சங்கக்கரா (8) ஆகியோருக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் வாலி ஹேமண்டுடன் இணைந்து 4–வது இடத்தை ஜெயவர்த்தனே பகிர்ந்து கொண்டுள்ளார். *டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி 700 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 5–வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை 700 ரன்களுக்கு மேல் எடுத்த அணி என்ற சிறப்பை இலங்கை பெற்றது. image: category:Tagging: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



