Tamil News | Online Tamil News |
- ஸ்டாலின் உயிருக்கு 3 மாதத்தில் ஆபத்து: அழகிரி மிரட்டியதாக கருணாநிதி பரபரப்பு
- அபாண்ட குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது: கருணாநிதிக்கு அழகிரி கண்ணீர் பதில்
- வெற்றுப் பேச்சு: அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை; ஆட்சியில் 'ஆம் ஆத்மி' ஒரு மாதம் நிறைவு
- பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி? தொழிலதிபர் வீட்டில் நடந்த பேச்சில் சுமுக உடன்பாடு
- மார்ச் 10 வரை எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது: மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவு
- முதலீடு வெளியேறுவதற்கு முதல்வரின் பதில் என்ன: கேட்கிறார் கருணாநிதி
- 'ஆம் ஆத்மி' அரசுக்கு 'கவுன்ட்-டவுன்'
- பாம்பன் பாலம் என் வாழ்வின் அங்கம்: அப்துல்கலாம் உருக்கம்
- ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை மாற்ற மறுப்பு: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
| ஸ்டாலின் உயிருக்கு 3 மாதத்தில் ஆபத்து: அழகிரி மிரட்டியதாக கருணாநிதி பரபரப்பு Posted: தி.மு.க.,வில், முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சி தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமாகிய அழகிரியால் ஏற்பட்டுள்ள பிரச்னை, நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.சென்னை அறிவாலயத்தில், நிருபர்களை சந்தித்த கருணாநிதி, 'ஸ்டாலின் உயிருக்கு, மூன்று மாதத்தில் ஆபத்து உள்ளது என, உரத்த குரலில் என்னை, அழகிரி மிரட்டினார்' என்ற, 'பகீர்' தகவலை, வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். கருணாநிதியின் இரண்டாவது மனைவியின் மூத்த மகன் அழகிரி. தி.மு.க.,வில் தென் மண்டல அமைப்பு செயலர் என்ற பதவியில் இருந்தார். தற்போது மதுரை எம்.பி.,யாகவும் உள்ளார். இரண்டாவது மகன் ஸ்டாலின். இவர் ... |
| அபாண்ட குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிக்கிறது: கருணாநிதிக்கு அழகிரி கண்ணீர் பதில் Posted: மதுரை: ''என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அபாண்டமானவை; கனவிலும் நான் இதை நினைத்துப் பார்க்கவில்லை; அதிர்ச்சி அளிக்கிறது,'' என, கருணாநிதிக்கு, அழகிரி கண்ணீர் மல்க, மதுரையில் நேற்று பதிலளித்தார்.கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், மதுரையில், அழகிரி அளித்த பேட்டி: கருணாநிதியின் பேட்டியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். என் மீது இப்படிப்பட்ட அபாண்டத்தை சுமத்துவார் என, கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அவர் கூறும் குற்றச்சாட்டை, என் பிறந்த நாள் வாழ்த்தாக ஏற்றுக் கொள்கிறேன். கடந்த 24ம் தேதி, கருணாநிதியை சந்தித்து, சில ... |
| வெற்றுப் பேச்சு: அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை; ஆட்சியில் 'ஆம் ஆத்மி' ஒரு மாதம் நிறைவு Posted: புதுடில்லி: டில்லியில், மக்களின் ஏகோபித்த வரவேற்புக்கு இடையே, கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' அரசு பதவியேற்று, நேற்றுடன், ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அந்த கட்சி சார்பில், மக்களுக்கு அளிக்கப்பட்ட, எந்த வாக்குறுதியுமே நிறைவேற்றப்படவில்லை. கெஜ்ரி வாலின் அறிவிப்புகள் எல்லாம், வெற்றுப் பேச்சாகி விட்டதால், டில்லி மக்கள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.டில்லியில், காங்., ஆதரவுடன், கடந்த மாதம், 28ம் தேதி, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அரவிந்த் கெஜ்ரி வால், முதல்வராகவும், அவரின் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், அமைச்சர்களாவும், பதவியேற்றனர். ... |
| பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி? தொழிலதிபர் வீட்டில் நடந்த பேச்சில் சுமுக உடன்பாடு Posted: 'தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க.,வை புறந்தள்ளி விட்டு, பா.ஜ., அணியில் இடம் பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், தே.மு.தி.க., முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.10 தொகுதிகள்: பா.ஜ., அணியில், ம.தி.மு.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. விருதுநகர் உட்பட, 10 தொகுதிகளில் போட்டியிட, அக்கட்சித் தலைவர், வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். ஏழு தொகுதிகள் ... |
| மார்ச் 10 வரை எல்லை தாண்டி மீன் பிடிக்கக்கூடாது: மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவு Posted: சென்னை: 'சுமுக முடிவுகள் ஏற்பட வசதியாக, மார்ச், 10 வரை, பாக் நீரிணை பகுதியில், எல்லை தாண்டி, தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது' என, நேற்று முன்தினம் நடந்த இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.சுமுகமான முடிவு: தமிழக, இலங்கை மீனவர்கள், இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்ற பேச்சு வார்த்தை, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. 'சுமுகமான முடிவு எடுத்துள்ளோம். இரு நாட்டு அரசுகளின் ஒப்புதலுக்குப்பின் நடைமுறைக்கு வரும்' என, மீனவ பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர். இந்த நிலையில், பேச்சு வார்த்தையில், ... |
| முதலீடு வெளியேறுவதற்கு முதல்வரின் பதில் என்ன: கேட்கிறார் கருணாநிதி Posted: சென்னை: தமிழகத்தின் முதலீடு, வெளிமாநிலங்களுக்கு செல்வது குறித்து, முதல்வரின் பதில் என்ன?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகத்தில் அமையும் தொழில்பேட்டைக்கு, தொழில் முதலீட்டை திரட்ட, அம்மாநில முதல்வர் சீதாராமையா, கோவையில், முதலீட்டாளர்களை இழுக்கும் மாநாட்டை நடத்தியுள்ளார். இம்மநாட்டின் மூலம், தமிழகத்தின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்க, கர்நாடகம் ஒப்புதல் பெற்றுள்ளது. தமிழக முதலீடு, வெளிமாநிலங்களுக்கு வெளியேற பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில், மின்வெட்டு, அரசின் ... |
| 'ஆம் ஆத்மி' அரசுக்கு 'கவுன்ட்-டவுன்' Posted: டில்லியில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், 28 இடங்களைப் பிடித்த, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியில், தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. 'முதல்வர், கெஜ்ரிவால் சர்வாதிகாரி போல செயல்படுகிறார்' என, அந்த கட்சி எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி குறை கூறி வருகிறார். அத்துடன், தேர்த லின் போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நேற்று முன்தினம் உண்ணாவிரதமும் இருந்தார்.அதேநேரத்தில், ஆம் ஆத்மிக்கும், அந்த கட்சி அரசு அமைக்க ஆதரவு அளித்த காங்கிரசுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்துள்ளது. மக்களுக்கு செய்ய ... |
| பாம்பன் பாலம் என் வாழ்வின் அங்கம்: அப்துல்கலாம் உருக்கம் Posted: ராமேஸ்வரம்: ''நூறு ஆண்டுகளாக, மனித மனங்களை இணைக்கும் பாம்பன் பாலம், என் வாழ்வின் ஒரு அங்கமாக விளங்குகிறது,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார். பாம்பனில், ரயில் பாலம் நூற்றாண்டு விழா, நேற்று நடந்தது. மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சிறப்பு ரயிலில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வந்தார். பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில், 5 நிமிடம் ரயில் நின்றவுடன் பாலத்தையும், கடலையும் பார்த்து ரசித்தார்.பின், பாம்பன் விழாவில், அவர் பேசியதாவது: ராமேஸ்வரம் நான் பிறந்த ஊர் என்றாலும், பாம்பன் எனக்கு பிடித்த ஊர். கடல் மீது அமைத்த பாலத்தை, நூறு ஆண்டுகளாக புயல், ... |
| ஓரினச்சேர்க்கைக்கு எதிரான தீர்ப்பை மாற்ற மறுப்பு: சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் Posted: புதுடில்லி: 'ஓரினச்சேர்க்கை குற்றமே என, ஏற்கனவே அளித்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்ய முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.ஓரினச்சேர்க்கை தொடர்பாக, டில்லி ஐகோர்ட், 2009ல், பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், கூறப்பட்டதாவது:செல்லாது: ஓரினச்சேர்க்கை குற்றமாகாது. 18 வயதுக்கு மேற்பட்ட இருவர், மனம் இசைந்து, உறவில் ஈடுபடுவதை, குற்றமாக கருத முடியாது. அப்படி குற்றமாக கருதினால், அது, அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல். ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவு, செல்லாது. இவ்வாறு, அந்த ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 29,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |