Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அந்தமானில் காஞ்சிபுரம் சுற்றுலா பயணிகள்... நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து

Posted:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு குழுவாக, அந்தமானுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு, நேற்றைய குடியரசு தினம், மிகப்பெரிய சோக தினமாக மாறி விட்டது. அந்தமான் அருகே, நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், ஆறு குழந்தைகள் உட்பட, 32 பேர் இறந்தனர்.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தை சேர்ந்தவர், குருசாமி செல்வராஜ், 64; 'பூஜா டிராவல்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்; அவ்வப்போது, சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வார்.இம்மாதம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, சுற்றுலா ஏற்பாடு செய்தார். காஞ்சிபுரம், பி.எஸ்.கே., தெரு, கவரை தெரு, எண்ணெய்காரத் தெரு, குமார் தெரு, மின் நகர் ...

உருவாகுது தென் மாவட்ட "அதிருப்தி தி.மு.க.,' : அழகிரி "சிக்னல்'

Posted:

மதுரை: மதுரை உட்பட, தென் மாவட்ட தி.மு.க.,வில், மாவட்டச் செயலர்கள் மீது அதிருப்தியில் உள்ள, தி.மு.க., நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் அதிரடி முயற்சியில், அழகிரியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இதற்கு, அழகிரியிடமிருந்து, 'கிரீன் சிக்னல்' கிடைத்து விட்டதால், அதிருப்தி தி.மு.க., உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.போஸ்டரால் பிரச்னை: லோக்சபா கூட்டணி தொடர்பாக அழகிரி தெரிவித்த கருத்து, பிறந்த நாள் போஸ்டர்கள் ஏற்படுத்திய சர்ச்சை போன்றவற்றால், மதுரையில் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்பட்டதுடன், தொடர்ச்சியாக அழகிரியும் நீக்கப்பட்டார். இதன் பின், ...

அழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்றால்...: கருணாநிதி கடும் எச்சரிக்கை

Posted:

"அழகிரி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கக் கூடாது' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கும், இதர நிர்வாகிகளுக்கும், கட்சி மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது. தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் ஒட்டிய, சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் காரணமாக, மதுரை மாநக தி.மு.க., கலைக்கப்பட்டதோடு, அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்காக நியாயம் கேட்க, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற அழகிரி, அங்கு, கருணாநிதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, கட்சியிலிருந்து தற்காலிகமாக ...

அ.தி.மு.க.,வுக்கு தேர்தல் பிரசாரம்? : பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

Posted:

""அ.தி.மு.க., கூட்டணிக்கு, நம்மால் முடிந்த ஆதரவு உண்டு,'' என, சமீபத்தில் அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்த, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். அதனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஆதரவாக, அவர் பிரசாரம் செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ம் ஆண்டிற்கான தமிழக அரசின், அண்ணா விருதை, சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியிலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கினார்.

அரசியலாக்கக் கூடாது: மேலும், பாரதியார் விருது, அம்பேத்கர் விருது, ...

பிரிட்டன் குடியுரிமை பெற போலி திருமணம் செய்யும் இந்தியர்கள்

Posted:

புதுடில்லி: பிரிட்டனில் குடியுரிமை பெறுவதற்காக, இந்தியர்கள் பலர், போலியான திருமணங்கள் செய்வது அதிகரித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர், பிரிட்டனில் குடியேறும் பொருட்டு, பல்வேறு முரண்பட்ட வழிகளை கையாண்டு வருகின்றனர். சுற்றுலா விசா மூலம் சென்று வேலை பார்ப்பதாக கூறி, அங்கேயே முறைகேடாக தங்கி விடுவது; அங்குள்ள பெண்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் குடியேற்ற உரிமை கிடைக்கும் என்பதால், போலி திருமணம் செய்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.இந்த தில்லுமுல்லுகளை எல்லாம் அறிந்த பிரிட்டன் குடியேற்றத் துறை அதிகாரிகள், தொடர்ந்து சோதனை நடத்தி, ...

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: சர்வதேச தொழிலாளர் அமைப்பு தகவல்

Posted:

புதுடில்லி: இந்தியாவில், வேலையின்மை அதிகரித்து வருவதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார மந்த நிலையும், அதனால், புதிய தொழில்கள் தொடங்கப்படாததும் தான், இந்த நிலைக்கு காரணம் என, கூறப்பட்டுள்ளது. கடந்த, 10 - 15 ஆண்டுகளுக்கு முன் வரை, நாட்டில், வேலையின்மை பிரச்னை, மிகவும் அதிகமாக இருந்தது. படித்து, பட்டம் பெற்றவர்களும், தொழில் திறமை பெற்றவர்களும், தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்காமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.தகவல் தொழில்நுட்பம் : அத்தகையவர்களுக்கு, கிடைத்த ...

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அலை

Posted:

புதுடில்லி: தனியார், "டிவி' மற்றும் பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில், "இப்போது லோக்சபா தேர்தல் நடந்தால், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றும்' என, தெரிய வந்துள்ளது . லோக்சபா தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாகவே, அரசியல் கட்சிகள், கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலைகளில், மும்முரமாக இறங்கி விட்டன. தேர்தல் வேலைகளும், முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரபல பத்திரிகைகள், "டிவி' சேனல்கள், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், "லோக்சபாவுக்கு, இப்போது தேர்தல் ...

வீணாக கிடக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி : லோக்சபா எம்.பி.,க்கள் அலட்சியம் அம்பலம்

Posted:

புதுடில்லி: நடப்பு லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைவதற்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எந்த, எம்.பி.,யுமே, தங்களின் தொகுதி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, முழுமையாக பயன்படுத்தவில்லை என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.5 கோடி : எம்.பி.,க்களாக பதவி வகிப்போருக்கு, அவர்களின் தொகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய அரசு சார்பில், ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.ஆனாலும், "பெரும்பாலான எம்.பி.,க்கள், இந்த தொகுதி மேம்பாட்டு நிதியை, முறையாக பயன்படுத்துவது இல்லை' என்ற குற்றச்சாட்டு உள்ளது. நடப்பு, ...

இந்தியாவுடன் நெருக்கம் : ஜப்பான் விருப்பம்

Posted:

புதுடில்லி: நாட்டின், 65வது குடியரசு தின கொண்டாட்டங்களின் சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பங்கேற்றார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக, ஜப்பான் பிரதமர் பங்கேற்றது, இது தான், முதல் முறை. நம் அண்டை நாடான, சீனாவுக்கும், ஜப்பான் நாட்டிற்கும் இடையே, கிழக்கு சீன கடலில் உள்ள ஒரு தீவை சொந்தம் கொண்டாடுவதில், உரசல் உள்ளது. அது போல், நம் நாட்டிற்கும், சீனாவுக்கும் இடையே, நீண்ட காலமாக, எல்லைப் பிரச்னை நிலவுகிறது. இதனால், இந்தியாவுடன், ஜப்பான், சமீப காலமாக நெருக்கம் காண்பிக்கிறது. ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே அழைப்பை ஏற்று, கடந்த ஆண்டு, ஜப்பான் ...

மாநாடு இடத்தை பார்த்த விஜயகாந்த் : கோட்டை விட்ட உளவு பிரிவு போலீசார்

Posted:

உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடக்கும் இடத்தை உளவு பிரிவு போலீசாருக்குத் தெரியாமல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பார்த்துச் சென்றுள்ளார். ஊழல் நிறைந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என கட்சியைத் துவங்கிய விஜயகாந்த் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். மக்கள் மத்தியில் இது பற்றிய விமர்சனங்கள் எழுந்தது. சேலம் மாநில மாநாட்டில் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததாக கூறி தப்பித்துக் கொண்டார். வரும் லோக்சபா தேர்தலை ஒட்டி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மாநில ...

ஊழலை எதிர்க்கும் விஜயகாந்த் பா.ஜ., கூட்டணிக்கே வருவார்: தமிழருவி மணியன் தகவல்

Posted:

திண்டுக்கல்: ஊழலுக்கு எதிராக போராடும் விஜயகாந்த், நிச்சயமாக பா.ஜ., கூட்டணிக்குத்தான் வருவார் என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:பா.ஜ., ம.தி.மு.க., கூட்டணி முடிவாகி விட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையில் நானும் பங்கேற்றேன். வைகோ கேட்ட தொகுதிகள் விரைவில் தரப்பட உள்ளது. சென்னையில் பிப்.8ல் மோடி அலை வீச உள்ளது. ம.தி.மு.க.,தொண்டர்களும், பா.ஜ.,வினரும் லட்சக்கணக்கில் பங்கேற்பார்கள். தே.மு.தி.க.,வும், பா.ம.க.,வும் விரைவில் பா.ஜ., கூட்டணிக்கு வரும். உளுந்தூர் பேட்டையில் ஊழலுக்கு எதிராக, முஷ்டியை தூக்கி யுத்தத்தை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™