Tamil News | Online Tamil News |
- தி.மு.க.,வில் பலப்பரீட்சைக்கு அழகிரி தயார்: ஆதரவாளர்களை 30ம் தேதி கூட்டுகிறார்
- லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் புதிய முறை
- கெஜ்ரிவால் அமைச்சரவையில் விழ போகுது முதல் விக்கெட் : கிளம்புகிறது கடும் எதிர்ப்பு
- 'போராட்டத்தில் முதல்வர்கள் ஈடுபடுவது தவறில்லை':அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி
- ஊழல் புகாரில் சிக்கிய அ.தி.மு.க., வேட்பாளர் நீக்கம்: ராஜ்யசபாவுக்கு புது வேட்பாளர் 'மாஜி' மந்திரி செல்வராஜ்
- உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம்
- 'என் சகோதரி மரணத்துக்கு சசி தரூர் காரணமில்லை'
- கடவுளிடம் குறிகேட்க ஆன்மிக பயணம் : விஜயகாந்த் மவுனத்தால் கட்சிகள் திக்... திக்...
- சென்னையில் எடுபடாத சமையல் காஸ் புது திட்டம்: தமிழகம் முழுவதும் சாத்தியமா?
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நெல்லை முதலிடம்
| தி.மு.க.,வில் பலப்பரீட்சைக்கு அழகிரி தயார்: ஆதரவாளர்களை 30ம் தேதி கூட்டுகிறார் Posted: 'நியாயம் கேட்கச் சென்ற என்னை, கட்சியை விட்டு நீக்கி விட்டனர்' என, கூறி வரும் அழகிரி, மாவட்ட வாரியாக உள்ள, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன், தொலைபேசியில் பேசி, ஆதரவு திரட்டி வருகிறார். தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்லி, இக்கட்டான இந்த நேரத்தில் தன்னை ஆதரிக்க வேண்டும் என, கேட்டு வருகிறார். மதுரையில், 30ம் தேதி நடக்கவுள்ள, தன் பிறந்த நாள் விழாவில், எல்லா மாவட்ட தி.மு.க.,விலும், தனக்கு ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்பதை காட்டவும், அவர் திட்டமிட்டுள்ளார். ஆசைப்படவில்லை: அதற்காக, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, ஈரோடு, கோவை, சென்னையில் உள்ள கட்சி ... |
| லோக்சபா தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் புதிய முறை Posted: புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தல், முன்னெப்போதும் நடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல், வித்தியாசமான தேர்தலாக அமையும் என்பது, அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.கட்சி துவக்கி, ஓராண்டிற்குள், டில்லியில் ஆட்சியைப் பிடித்துள்ள, அரவிந்த் கெஜ்ரிவாலின், 'ஆம் ஆத்மி' கட்சியின் அணுகுமுறை மற்றும் வியூகத்தை பின்பற்ற, காங்கிரஸ் - பா.ஜ., ஆகிய முக்கிய கட்சிகள் முடிவு செய்து உள்ளன.சிபாரிசு: சட்டசபை, லோக்சபா என, எந்த தேர்தலாக இருந்தாலும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, டில்லியில் உள்ள கட்சி மேலிடம் தான் ... |
| கெஜ்ரிவால் அமைச்சரவையில் விழ போகுது முதல் விக்கெட் : கிளம்புகிறது கடும் எதிர்ப்பு Posted: புதுடில்லி: டில்லி மாநில சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான, சோம்நாத் பார்தி, அடுத்தடுத்து, சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நரேந்திர மோடியிடம் பணம் வாங்கியதாக, ஊடகங்கள் மீது, அவர் குற்றம் சாட்டியதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால், அவரின் அமைச்சர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியை சேர்ந்த, சோம்நாத் பார்தி, சட்ட அமைச்சராக பதவி வகிக்கிறார்.குற்றச்சாட்டு:சமீபத்தில், போதை பொருள் கடத்துவதாக கூறி, கிழக்கு ஆப்ரிக்க நாடான, ... |
| 'போராட்டத்தில் முதல்வர்கள் ஈடுபடுவது தவறில்லை':அரவிந்த் கெஜ்ரிவால் தடாலடி Posted: புதுடில்லி: ''முதல்வராக பதவி வகிப்பவர், போராட்டம் நடத்தக் கூடாதென, அரசியல் சட்டத்தில் கூறப்படவில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.போக்குவரத்து பாதிப்பு:போலீசார், தங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக கூறி, கெஜ்ரிவால், சமீபத்தில், டில்லியில், பொது இடத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து ... |
| Posted: ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான, அ.தி.மு.க., ராஜ்யசபா வேட்பாளர், சின்னதுரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்.பி.,யாகும் வாய்ப்பு கிடைத்த, இரண்டு நாளில், அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது.அவருக்கு பதிலாக, கட்சி அமைப்பு செயலரும், 'மாஜி' அமைச்சருமான செல்வராஜ், புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் நடவடிக்கை, கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் தேதி, தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 21ம் தேதி துவங்கியது. வரும், 28ம் ... |
| உற்பத்தி துறையும் பொருளாதார தேக்கமும் : சீர்திருத்தம் செய்யாமல் கோட்டை விட்டோம் Posted: எந்த ஒரு நாட்டிலும், வலுவான உற்பத்தி துறையே, பெரிய நடுத்தர வர்க்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளம். நம் நாட்டில், ஐ.டி., போன்ற சேவை துறை தொழில்கள் மட்டுமே, பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கி உள்ளன.இதனால், செலவு செய்து, ஆங்கில திறனுடன் தொழில்நுட்ப பட்டங்களை பெற்றவர்களுக்கே, நடுத்தர வர்க்கத்தில் புக வாய்ப்பு உருவாகிறது. இதுவே, உற்பத்தி துறை செழித்தால், பள்ளி கல்வி முடித்தவர்களும், பட்டய படிப்பு படித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தில் புகும் சூழல் உருவாகும். நடுத்தர வர்க்கம் விரிவடைவதோடு, சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும், சம வாய்ப்பு ... |
| 'என் சகோதரி மரணத்துக்கு சசி தரூர் காரணமில்லை' Posted: புதுடில்லி: ''சுனந்தாவின் உடலில் உள்ள காயங்களுக்கு, சசிதரூர் காரணமாக இருக்கலாம் என்பதை, எந்த வகையிலும் நம்ப முடியாது. சுனந்தாவின் மரணத்துக்கு சசி தரூர் காரணமில்லை,'' என, சுனந்தாவின் சகோதரர், ராஜேஷ் கூறியுள்ளார்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூரின் மூன்றாவது மனைவி, சுனந்தா புஷ்கர். சமீபத்தில் டில்லியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுனந்தாவின் சகோதரரும், ராணுவ அதிகாரியுமான, கர்னல் ராஜேஷ், இதுகுறித்து கூறியுள்ளதாவது: சுனந்தா - தரூர் தம்பதி, சந்தோஷமாக வாழ்ந்ததை, நான் அருகில் இருந்து ... |
| கடவுளிடம் குறிகேட்க ஆன்மிக பயணம் : விஜயகாந்த் மவுனத்தால் கட்சிகள் திக்... திக்... Posted: லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பதா அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்வதா என்பதில், முடிவு எடுக்க முடியாமல், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் இருமனதாக உள்ளார்.அத்துடன், தி.மு.க., தரப்பிலிருந்தும், கூட்டணிக்கு, அழைப்பு மேல், அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, வரும், 7ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், ஒரு எம்.பி., பதவியை விட்டுக் கொடுக்கவும், தி.மு.க., முன்வந்து, அதுதொடர்பாக விஜயகாந்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அதேநேரத்தில், தே.மு.தி.க., உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பா.ஜ., தரப்பிலிருந்தும், காங்கிரஸ் தரப்பில் இருந்தும், ... |
| சென்னையில் எடுபடாத சமையல் காஸ் புது திட்டம்: தமிழகம் முழுவதும் சாத்தியமா? Posted: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர், தாங்கள் விரும்பும் நிறுவனத்திற்கு மாறும் திட்டத்தை, சென்னையில், 100 பேர் கூட பயன்படுத்தவில்லை. இச்சூழலில், இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், திட்டம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன.இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.54 கோடி வாடிக்கையாளர் உள்ளனர். வினியோகஸ்தர்கள் மூலம், ... |
| பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நெல்லை முதலிடம் Posted: பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவில், நெல்லை மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்கு பதிவுகள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டம் என்ற, உள்ளூர் சட்டத்தின் கீழ், வழக்குகள் பதியப்படுகின்றன.இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், கற்பழிப்பு, மானபங்கம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தமிழகம் முழுவதும், கடந்த, ஒன்பது மாதங்களில், 6,377 வழக்குகள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 26,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |