Tamil News | Online Tamil News |
- கிரண்குமார் ரெட்டியிடம் கேட்க கூடாத 3 கேள்விகள்!
- முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்: வழிக்கு வந்தது மத்திய அரசு
- தூக்கு தண்டனையில் இருந்து 15 கைதிகள் தப்பினர் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
- ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி?
- காங்., இல்லாமல் வெற்றி பெற கருணாநிதி வியூகம் : ராஜ்யசபா தேர்தலில் சாதிக்க ஐவர் குழு
- தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம்: கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு!
- மோடி - விஜயகாந்த் படம்: தி.மு.க., 'அப்செட்'
- தாக்கரே மகன்களுக்குள் சொத்து பிரச்னை அம்பலம்: அபகரித்து விட்டதாக உத்தவ் மீது மற்றொரு மகன் வழக்கு
- 'சுனந்தா கொலை செய்யப்பட்டாரா?'மாஜிஸ்திரேட் கேள்வி
- மீனவர்கள் 25 பேர் மீண்டும் சிறைபிடிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- மானிய சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆகிறது மத்திய அமைச்சரவை ஒப்புதல்?
- சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம்
| கிரண்குமார் ரெட்டியிடம் கேட்க கூடாத 3 கேள்விகள்! Posted: ஐதராபாத்: ஆந்திர முதல்வர், கிரண்குமார் ரெட்டி, தன் அமைச்சரவை சகாக்கள், சீமந்தராவைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து வரும் மூன்று கேள்விகளுக்கு, பதில் அளிக்க முடியாமல் தவிர்த்து வருகிறார்.ஆந்திர சட்டசபையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது குறித்த, மசோதா மீது, விவாதம் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று, முதல்வர் கிரண்குமார் ரெட்டி எப்போது பேசுவார், மசோதா மீதான விவாதத்திற்கான கடைசி தேதி தள்ளி வைக்கப்படுமா, கிரண் குமார் ரெட்டி புது கட்சி துவங்குவாரா என்ற மூன்று கேள்விகள், அவர் முன் வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளை கேட்பதை தவிர்க்கும்படி, தன் ... |
| முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்: வழிக்கு வந்தது மத்திய அரசு Posted: டில்லியை இரண்டு நாட்களாக ஸ்தம்பிக்க வைத்த, முதல்வர் கெஜ்ரிவால் நடத்திய முற்றுகை போராட்டத்தால், மத்திய அரசு வழிக்கு வந்தது. குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ்காரர்களை விடுப்பில் அனுப்பியதை அடுத்து, கெஜ்ரி வாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, கெஜ்ரிவால், நேற்றிரவு அறிவித்தார்.போதைப் பொருள் மற்றும் விபசார கும்பல் மீது, நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, டில்லியில், முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, இரண்டாவது நாளாக, தர்ணா போராட்டத்தை தொடர்ந்தார்.நேற்று ... |
| தூக்கு தண்டனையில் இருந்து 15 கைதிகள் தப்பினர் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு Posted: புதுடில்லி : கருணை மனு மீது முடிவெடுப்பதில், கால தாமதம் ஏற்பட்ட காரணத்தை அடிப்படையாக வைத்து, சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் உட்பட, 15 பேரின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து, சுப்ரீம் கோர்ட் நேற்று உத்தரவிட்டு உள்ளது.கடந்த, 1993ல், கர்நாடகா தமிழகம் எல்லை பகுதியில், பாலாறு என்ற இடத்தில், போலீசார் மீது, சந்தன கடத்தல் வீரப்பனும், அவன் கூட்டாளிகளும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 22 போலீசார் கொல்லப்பட்டனர்.ஜனாதிபதியிடம்...:இந்த வழக்கில், வீரப்பனின் கூட்டாளிகள், பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானப் பிரகாசம், சைமன் ... |
| ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் தோனி? Posted: ராஞ்சி:இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், மகேந்திர சிங் தோனியை, ராஜ்சபா, எம்.பி., ஆக ஆக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்காக, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான, லோக்ஜன சக்தி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி ஆதரவை கோரியுள்ளனர்.கிரிக்கெட் ஜாம்பவான்:இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், உலக கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவானா கவும் விளங்கிய, சச்சின் டெண்டுல்கர், சமீபத்தில், காங்., கட்சியின் சார்பில், ராஜ்யசபா, எம்பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சச்சினின் சாதனைகளை பாராட்டும் வகையில், அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக, காங்., தரப்பில் ... |
| காங்., இல்லாமல் வெற்றி பெற கருணாநிதி வியூகம் : ராஜ்யசபா தேர்தலில் சாதிக்க ஐவர் குழு Posted: தமிழகத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு, ஆறு பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம், 7ம் தேதி நடக்கிறது. இதற்கு வசதியாக, தமிழக சட்டசபையின், இந்த ஆண்டின் முதற்கூட்டம், வரும், 30ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. ஒரு வாரம் நடக்கும் இந்த கூட்டத்தின், இறுதி நாளில், ராஜ்யசபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.தமிழக சட்டசபையில், அதிக பலம் கொண்ட, அ.தி.மு.க., இன்னும் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. ஆனாலும், ஐந்து பேரை எளிதாக வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு, அதிக எண்ணிக்கையில், எம்.எல்.ஏ.,க்களை, கையில் வைத்துள்ளது.அதேநேரத்தில், வெற்றி பெற, பிற கட்சிகளின் ஆதரவு ... |
| தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம்: கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு! Posted: கோவை: கொங்கு மண்டல தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்கு செல்ல உள்ளன. தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டு சூழல் தான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்கு தொழில்கள் இடம் பெயர வாய்ப்பு உள்ளது.1,400 ஏக்கரில்...:தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20ம் தேதி 'சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு' ... |
| மோடி - விஜயகாந்த் படம்: தி.மு.க., 'அப்செட்' Posted: பிரபல சமூக வலைதளத்தில் உள்ள, தே.மு.தி.க.,வின் வலைப்பக்கத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியும், விஜயகாந்தும் சந்தித்துப் பேசிய படம் வெளியிடப்பட்டிருப்பது, தி.மு.க.,வினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.விஜயகாந்தின் தே.மு.தி.க.,வை, தங்கள் கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தூதுவர்களை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட, பல விதமான தந்திரங்களையும் கையாண்டு வருகிறார். ஆனால், விஜயகாந்தோ, எதற்கும் பிடிகொடுக்காமல், இதோ... அதோ... என, இழுத்தடித்து வருகிறார். அதேநேரத்தில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., தலைவர்களும், பேச்சுவார்த்தை நடத்தி ... |
| தாக்கரே மகன்களுக்குள் சொத்து பிரச்னை அம்பலம்: அபகரித்து விட்டதாக உத்தவ் மீது மற்றொரு மகன் வழக்கு Posted: மும்பை: சிவசேனா நிறுவனர், பால் தாக்கரேயின் மறைவுக்குப் பின், அவரது வாரிசுகளுக்கிடையே, சொத்துத் தகராறு ஏற்பட்டுள்ளது. தாக்கரே மறைந்து, ஒராண்டிற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், அவரது மகன்கள், உத்தவ் தாக்கரே மற்றும் ஜெய்தேவ் இடையேயான சொத்துப் பிரச்னை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.'மண்ணின் மைந்தர்கள்': மராட்டிய அரசியலில், 'மண்ணின் மைந்தர்கள்' கொள்கையை முன்னிறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர், பால் தாக்கரே. சிவசேனா கட்சி நிறுவனரான இவர், வயது முதிர்வு காரணமாக, 2012ல் இறந்தார். பால் தாக்கரேயின் மூன்றாவது ... |
| 'சுனந்தா கொலை செய்யப்பட்டாரா?'மாஜிஸ்திரேட் கேள்வி Posted: புதுடில்லி :'மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி, சுனந்தா, கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும்' என, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சசி தரூரின் மனைவி சுனந்தா, 52, சமீபத்தில், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இவரின் மரணம் குறித்து, டில்லி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட், அலோக் சர்மா விசாரித்து வருகிறார். சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, நேற்று, இவரிடம் தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில், டில்லி ... |
| மீனவர்கள் 25 பேர் மீண்டும் சிறைபிடிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: சென்னை:நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்கள், 25 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான, மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து, நேற்று முன்தினம், ஆறு விசைப்படகுகளில், மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த, இலங்கை கடற்படையினர், மீனவர்கள், 25 பேரையும் கைது செய்து, ஆறு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ... |
| மானிய சிலிண்டர் எண்ணிக்கை 12 ஆகிறது மத்திய அமைச்சரவை ஒப்புதல்? Posted: புதுடில்லி : ''மானிய விலை காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை, ஒன்பதிலிருந்து, 12 ஆக அதிகரிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை, இரண்டொரு நாளில் முடிவு செய்யும்,'' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார்.பெட்ரோல் பங்க்களில், ஐந்து கிலோ சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை, நேற்று டில்லியில் வீரப்ப மொய்லி துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:மானிய விலையில் வழங்கப்படும், ஒன்பது சமையல் காஸ் சிலிண்டர்கள் போதாது என, துணைத் தலைவர், ராகுல் கூறிவிட்டார். இதை, 12 ஆக அதிகரிக்கும்படி, சமீபத்தில் நடந்த காங்., கமிட்டி கூட்டத்தில் ... |
| சத்தமில்லாமல் உயர்ந்தது பி.எஸ்.என்.எல்., கட்டணம் Posted: பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.இலவச அழைப்புகள்:பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.இந்த நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப்பட்டது. 'பி.எஸ்.என்.எல்., போன்களுக்கு போன் செய்தால் மட்டுமே, இலவச அழைப்பு சலுகை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 22,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |