Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசு ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2014 01:16 PM PST

பொன்னமராவதியில் சிறப்பு காலமுறை மற்றும் தொகுப்பூதிய முறை ஒழிப்பை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஐஓபி கிராமியப் பயிற்சி நிலையத்தில் காகிதப் பொருள் தயாரிக்கப் பயிற்சி

Posted: 21 Jan 2014 01:15 PM PST

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் மற்றும்

பிளாஸ்டிக் தீமை குறித்து கலைக் குழுவினர் பிரசாரம்

Posted: 21 Jan 2014 01:14 PM PST

பிளாஸ்டிக் உபயோகத்தின் தீமைகள் குறித்து நகரின் பல்வேறு பகுதிகளில் கலைக் குழுவினரின் பிரசார இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணுவச் சீருடை ஊழல்: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கைது

Posted: 21 Jan 2014 01:14 PM PST

பிகாரில் ராணுவ போலீஸாருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 40 லட்சம் மதிப்பிலான சீருடை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ராம்சந்திர கான், பாட்னாவில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆட்டோவில் பயணக் கட்டண மீட்டர் விவகாரம்: தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தக் கோரிக்கை

Posted: 21 Jan 2014 01:14 PM PST

ஆட்டோவில் பயணக் கட்டணத்துக்காக மீட்டர் பொருத்தப்படுவது  தொடர்பாக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு

ஆர்.கே. சிங் மீது சட்ட நடவடிக்கை

Posted: 21 Jan 2014 01:14 PM PST

தில்லி போலீஸ் நியமனத்தில் தலையிடுவதாக தன் மீது குற்றம்சாட்டிய மத்திய உள்துறை முன்னாள் செயலாளர் ஆர். கே. சிங் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலைப் பாதுகாப்பு வார விழா நிறைவு

Posted: 21 Jan 2014 01:14 PM PST

புதுக்கோட்டையில் சாலைப் பாதுகாப்பு வார விழா காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினர் பங்கேற்ற விழிப்புணர்வுப்

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 21 Jan 2014 01:13 PM PST

பொன்னமராவதி பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்களுக்கான 2 நாள்

அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2014 01:12 PM PST

வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:12 PM PST

கும்பகோணம் உட்கோட்ட காவல் சரக பகுதியில் உள்ள வாடகை கார், வேன் மற்றும் ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை

சாலை பாதுகாப்பு வார விழா: ஹெல்மெட் அணிய அமைச்சர் அறிவுறுத்தல்

Posted: 21 Jan 2014 01:11 PM PST

இருசக்கர வாகன பயணங்களின்போது ஹெல்மெட் அணிந்தால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம் என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

தஞ்சையில் சாலைத் தடுப்புகள் திருட்டு

Posted: 21 Jan 2014 01:10 PM PST

தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரும்பால் செய்யப்பட்ட 13 சாலை தடுப்புகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாபுராஜபுரத்தில் இன்று மக்கள் நேர்காணல் முகாம்

Posted: 21 Jan 2014 01:09 PM PST

கும்பகோணம் வட்டம், பாபுராஜபுரத்தில் ஜன. 22-ம் தேதி  மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது.

நிறைவடையும் நிலையில் ஆட்சியரக புதிய கட்டட கட்டுமானப் பணி

Posted: 21 Jan 2014 01:09 PM PST

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியரக புதிய கட்டட கட்டுமானப் பணி நிறைவடையும்

பெண்ணிடம் சங்கிலி பறித்த நபரை பிடித்த பொதுமக்கள்

Posted: 21 Jan 2014 01:08 PM PST

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

விஜயீந்திர தீர்த்த சுவாமிகளின் 400-வது ஆண்டு விழா: நாள்காட்டி வெளியீடு

Posted: 21 Jan 2014 01:08 PM PST

ஸ்ரீவிஜயீந்திர தீர்த்த மகா சுவாமிகளின் 400-வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள 

உத்தரகண்டில் புதிய லோக்ஆயுக்த சட்டம்

Posted: 21 Jan 2014 01:08 PM PST

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் சட்டத்தைத் போன்ற புதிய லோக்ஆயுக்த சட்டம் உத்தரகண்ட் சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தர்னா: முடிவெடுக்கும் அதிகாரம் கேஜரிவாலுக்கு உண்டு

Posted: 21 Jan 2014 01:07 PM PST

தில்லி போலீஸாருக்கு எதிராக தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் என்ற முறையில் அனைத்து முடிவுகளையும் எடுக்க அதிகாரம் உள்ளது என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 21 Jan 2014 01:07 PM PST

கும்பகோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

கும்பகோணத்தில் மணிசங்கர் அய்யருக்கு கருப்புக் கொடி காட்ட முயற்சி: சிவசேனை நிர்வாகி கைது

Posted: 21 Jan 2014 01:07 PM PST

காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர் அய்யருக்கு திங்கள்கிழமை கருப்புக் கொடி காட்ட முயற்சி செய்ததாக சிவசேனை கட்சியின் மாநில செயல் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

பசுபதிகோவில் ஊராட்சியில் பொங்கல் விளையாட்டு விழா

Posted: 21 Jan 2014 01:06 PM PST

பசுபதிகோவில் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது

Posted: 21 Jan 2014 01:06 PM PST

கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை முருகன் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:05 PM PST

பட்டுக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாகை, திருவாரூரில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2014 01:05 PM PST

அரசுத் துறைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்

ஜன. 26-ல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:04 PM PST

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் ஜன. 26-ம் தேதி குடியரசு தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

உலக பொருளாதார மாநாடு தொடங்கியது

Posted: 21 Jan 2014 01:04 PM PST

சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள உலக பொருளாதார அமைப்பின் 44வது மாநாட்டில் இந்தியாவில் இருந்து 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

சவூதியில் இறந்தவரின் உடலை கொண்டுவர மனைவி மீண்டும் கோரிக்கை

Posted: 21 Jan 2014 01:04 PM PST

சவூதியில் இறந்த கணவரின் உடலை கொண்டுவரவும், இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய

ஷியா முஸ்லிம்களை குறிவைத்து குண்டுவெடிப்பு: 23 பேர் பலி

Posted: 21 Jan 2014 01:03 PM PST

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பெண்கள் உள்பட 23 பேர் பலியாகினர்.

சீர்காழி அடகுக்கடையில் 150 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

Posted: 21 Jan 2014 01:03 PM PST

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அடகுக்கடை லாக்கரை தூக்கிச் சென்று 150 பவுன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில்

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

Posted: 21 Jan 2014 01:03 PM PST

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

மீன்வள பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

Posted: 21 Jan 2014 01:03 PM PST

நாகை மீன்வளத் தொழில்நுட்ப நிலையம் சார்பில், அழியும் நிலையில் உள்ள மீன்வளத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வுக்

அரசு நிதி ரூ. 1.39 லட்சம் கையாடல்: இளநிலை எழுத்தர் கைது

Posted: 21 Jan 2014 01:02 PM PST

காரைக்காலில் அரசுப் பணம் ரூ. 1.39 லட்சத்தை கையாடல் செய்ததாக தொழிலாளர் துறை இளநிலை எழுத்தரை ஊழல் தடுப்பு மற்றும்

திருவாரூரில் ஜன. 30-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:02 PM PST

திருவாரூரில் ஜன. 30-ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீடாமங்கலத்தில் தீ விபத்து: 5 வீடுகள் நாசம்

Posted: 21 Jan 2014 01:01 PM PST

நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.

மன்னார்குடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:01 PM PST

மன்னார்குடி மின்கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது.

திருவாரூரில் நாளை சமையல் எரிவாயு குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:00 PM PST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜன. 23-ம் தேதி சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

நாகையில் ஜன. 31-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 01:00 PM PST

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜன. 31-ம் தேதி காலை 11 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியரக முதன்மைக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

சத்தியமூர்த்தி பவன் எதிரே போராட்டம்: பாஜக வருத்தம்

Posted: 21 Jan 2014 12:59 PM PST

நரேந்திர மோடி குறித்து தெரிவித்த கொச்சையான விமர்சனத்துக்கு மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாஜக கூட்டணியில் தேமுதிக

Posted: 21 Jan 2014 12:58 PM PST

பாஜக கூட்டணியில் தேமுதிக உறுதியாக இணையும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

Posted: 21 Jan 2014 12:57 PM PST

முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பிப்.18க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதிகள் நியமன விவகாரம்: தலைமை நீதிபதி முன்பு வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 21 Jan 2014 12:56 PM PST

சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரைப் பட்டியலை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மாநில தரவு மையத்தில் மேகக் கணினி வசதிக்கு ரூ.11.39 கோடி நிதி

Posted: 21 Jan 2014 12:53 PM PST

தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் (Data Centre) மேகக் கணினியம் (Cloud Computing) வசதியை ஏற்படுத்த ரூ.11.39 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நலிவடைந்த 1,000 பேருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கத் திட்டம்

Posted: 21 Jan 2014 12:53 PM PST

தென் மாவட்ட ரோட்டரி சங்கங்கள் சார்பில், நலிவடைந்த 1,000 பேருக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும் திட்டம், குமரி மாவட்டம் ஈத்தாமொழி சிவா

கொட்டாரத்தில் அதிமுக பொதுக் கூட்டம்

Posted: 21 Jan 2014 12:53 PM PST

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஜெபக்கூட்டம் நடத்துவதில் பிரச்னை: 12 பேர் மீது வழக்கு

Posted: 21 Jan 2014 12:53 PM PST

திருவட்டாறு அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் 12 பேர் மீது திருவட்டாறு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

குளத்துக்குள் கார் பாய்ந்து வடமாநில சுற்றுலாப் பயணி சாவு

Posted: 21 Jan 2014 12:53 PM PST

கன்னியாகுமரி அருகே கார் குளத்துக்குள் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் வட இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

"அணுசக்தி துறையில் பணியாற்ற இளம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும்'

Posted: 21 Jan 2014 12:53 PM PST

இந்திய அணுசக்தி துறையில் பணியாற்ற இளம் விஞ்ஞானிகள் முன்வர வேண்டும் என விஞ்ஞானி மல்கோத்ரா கேட்டுக் கொண்டார்.

நாகர்கோவில்: ஆக்கிரமிப்பு குடியிருப்புகள், கடைகள் இடிப்பு

Posted: 21 Jan 2014 12:53 PM PST

நாகர்கோவில் கோட்டாறு பூச்சாஸ்தான்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.

தடாவில் தொடங்கியது மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகள்

Posted: 21 Jan 2014 12:51 PM PST

ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள அல்ஸ்தாம் நிறுவனத்தில் சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிப்புப் பணிகள் தொடங்கின.

அரசு கல்லூரி பேராசிரியர்களின் தரநிர்ணய ஊதிய உயர்வு 2 ஆண்டுகளாக நிறுத்திவைப்பு

Posted: 21 Jan 2014 12:50 PM PST

அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தரநிர்ணய ஊதிய (கிரேட் பே) உயர்வு வழங்கப்படவில்லை என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பல்கலைக்கழகங்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 21 Jan 2014 12:49 PM PST

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

"டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதா? இல்லையா?'

Posted: 21 Jan 2014 12:47 PM PST

ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவதற்கு, ஆசிரியர் பட்டய படிப்பு படித்து முடித்தவர்கள் மற்றும் பி.எட். படித்தவர்கள் தேர்ச்சி பெறும்வரை எழுத அனுமதி தரப்படுகிறது, அதே போன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தற்போது உள்ள உச்ச வயது வரம்பை அதிகரித்து மாற்றி அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குச் செல்லும் பஸ் நிறுத்தம்: மாணவர்கள் அவதி

Posted: 21 Jan 2014 12:31 PM PST

பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியான மணலோடைக்கு அரசு பஸ் செல்லாததால், அப்பகுதி மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில கால்பந்தாட்டம்: தூத்தூர் பள்ளி அணி சாம்பியன்

Posted: 21 Jan 2014 12:31 PM PST

மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தூத்தூர் பள்ளி அணி மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றது.

பெண்மையின் பெருமையா, உரிமையா?

Posted: 21 Jan 2014 12:30 PM PST

உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. அதிலும் சரிபாதி பெண்கள். உலகத்தின் மற்ற நாடுகளிலும் சரி, இந்தியாவிலும் சரி, இந்தப் பெண்ணினம் குறித்த கருத்துகள், பார்வைகள் மற்றும் கொள்கைகள் ஒரு புதிய பரிணாமத்தை அடையத் துவங்கியுள்ளன என்று கூறலாம்.

கைகொட்டிச் சிரிப்பார்கள்!

Posted: 21 Jan 2014 12:29 PM PST

தில்லி மாநகரம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறது. ஒருவழியாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது போராட்டத்தை முடித்துக்கொண்டு விட்டார்.

தென்னிந்திய திருச்சபை பொருளாளருக்கு வரவேற்பு

Posted: 21 Jan 2014 12:28 PM PST

தென்னிந்திய திருச்சபை பொருளாளராக பொறுப்பேற்ற சி. ராபர்ட் புரூஸþக்கு நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொல்லங்கோடு அருகே பாதையை அகற்ற முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பு

Posted: 21 Jan 2014 12:28 PM PST

கொல்லங்கோடு அருகே பாதையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவிலில் 24-ஆவது தியாகராஜ ஆராதனை விழா

Posted: 21 Jan 2014 12:27 PM PST

நாகர்கோவிலில் ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 24-ஆவது ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா வேட்புமனு தாக்கல்

Posted: 21 Jan 2014 12:27 PM PST

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் திருச்சி சிவா தனது வேட்புமனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்தனர்.

அனைவருக்கும் காலமுறை ஊதியம்: அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2014 12:27 PM PST

அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, நாகர்கோவிலில் அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

என்.ஐ. பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப பயிற்சி முகாம் தொடக்கம்

Posted: 21 Jan 2014 12:27 PM PST

குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில், உயிரியியல் தொழில்நுட்ப மருத்துவத் துறையில், நானோ நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடுகள்

ஊராட்சி ஒன்றிய பைக்கா போட்டிகள் நாகர்கோவிலில் இன்று மேஜைபந்து

Posted: 21 Jan 2014 12:26 PM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகளில், மேஜைபந்து போட்டி புதன்கிழமை (ஜன. 22) நாகர்கோவிலில் நடைபெறுகிறது.

தமிழக பேரவை 30-இல் கூடுகிறது

Posted: 21 Jan 2014 12:25 PM PST

தமிழக சட்டப் பேரவையை வரும் 30 ஆம் தேதி கூட்டுவதற்கு ஆளுநர் கே.ரோசய்யா ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் பட்டா மாறுதல் முகாம்

Posted: 21 Jan 2014 12:25 PM PST

கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை பட்டா மாறுதல்

பத்திரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

Posted: 21 Jan 2014 12:25 PM PST

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

25 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை

Posted: 21 Jan 2014 12:24 PM PST

இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

30 பள்ளிகளுக்கு புத்தகங்கள் அளிப்பு

Posted: 21 Jan 2014 12:24 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 30 பள்ளிகளின் நூலகங்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்பட்டன.

சாத்தான்குளம் பகுதியில் அதிமுக கொடியேற்று விழா

Posted: 21 Jan 2014 12:24 PM PST

அதிமுக சார்பில், எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி சாத்தான்குளம் பகுதியில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

ராமேசுவரம் மீனவர்கள் 25 பேர் சிறைப்பிடிப்பு

Posted: 21 Jan 2014 12:23 PM PST

எல்லை தாண்டியதாக ராமேசுவரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இதையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும், படகுகள் மீது கல்வீசி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பஸ் மோதியதில் சிறுவன் சாவு

Posted: 21 Jan 2014 12:23 PM PST

ஸ்ரீவைகுண்டம் அருகே செவ்வாய்க்கிழமை தனியார் பஸ் மோதியதில் சிறுவன் இறந்தான்.

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 21 Jan 2014 12:22 PM PST

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

கோவில்பட்டியில் சிறுமியிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 21 Jan 2014 12:22 PM PST

கோவில்பட்டி செவ்வாய்க்கிழமை நடந்துச் சென்ற சிறுமியிடம் 2 பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 21 Jan 2014 12:22 PM PST

உதவித்தொகை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று பெண்ணிடம் மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த விடுதிக் காப்பாளரை குலசேகரன்பட்டினம் போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி

Posted: 21 Jan 2014 12:21 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்

Posted: 21 Jan 2014 12:20 PM PST

தூத்துக்குடி மாவட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளி முதல்வர் மீது தாக்குதல்: உறவினர் கைது

Posted: 21 Jan 2014 12:20 PM PST

நாசரேத்தில், தனியார் பள்ளி முதல்வரை தாக்கியதாக இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை  கைது செய்தனர்.

விவேகானந்தரின் போதனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்: மாநகராட்சி ஆணையர்

Posted: 21 Jan 2014 12:19 PM PST

சுவாமி விவேகானந்தரின் போதனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றார் மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி.

துணைநிலை ஆளுநருடன் கருத்து வேறுபாடு இல்லை

Posted: 21 Jan 2014 12:19 PM PST

மாநில துணைநிலை ஆளுநர் கட்டாரியாவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று புதுவை முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.

கொலை மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு

Posted: 21 Jan 2014 12:19 PM PST

சாத்தான்குளம் அருகே கோழிப் பண்ணை உரிமையாளரை மிரட்டியதாக, வள்ளியூர் தனியார் நிறுவன மேலாளர் உள்ளிட்ட

தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 21 Jan 2014 12:19 PM PST

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜன. 23) நடைபெறுகிறது.

கோவில்பட்டி

Posted: 21 Jan 2014 12:18 PM PST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

Posted: 21 Jan 2014 12:17 PM PST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தமிழக - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காலமானார் "கல்கி' ஜெகதீசன்

Posted: 21 Jan 2014 12:13 PM PST

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம் மணவூரைச் சேர்ந்த கல்கி ஜெகதீசன் (56) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி21) காலமானார்.

நடுக்கடலில் மீனவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

Posted: 21 Jan 2014 12:11 PM PST

தொண்டி அருகே நடுக்கடலில் ஜெகதாபட்டிணம், நம்புதாளை மீனவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு படகு சேதம் அடைந்தது.

கொசு ஒழிப்புக்கு ரூ.2 கோடி

Posted: 21 Jan 2014 12:11 PM PST

தமிழகத்தில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.2 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

Posted: 21 Jan 2014 12:10 PM PST

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, நிர்வாகம், தொழிற்சங்கம், தொழிலாளர் துறை ஆகியவை இடையே 18-வது முறையாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

கம்பன் கழகம் சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி

Posted: 21 Jan 2014 12:10 PM PST

கம்பன் கழகத்தின் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளன.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வைகோ, ராமதாஸ் வரவேற்பு

Posted: 21 Jan 2014 12:09 PM PST

உச்ச நீதிமன்றம் 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக சிதம்பரம், குர்ஷித் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் நியமனம்

Posted: 21 Jan 2014 12:03 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரசார வியூகத்தை பலப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த மத்திய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கு மூத்த செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல்: இரு ஆளுநர்களை சாட்சிகளாக சேர்க்க அனுமதி கோருகிறது சிபிஐ

Posted: 21 Jan 2014 12:01 PM PST

பாதுகாப்புத்துறைக்கு ரூ. 3,600 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன் மற்றும் கோவா ஆளுநர் பி.வி. வான்சூ ஆகியோரிடம் சாட்சிகளாக வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்குமாறு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் சிபிஐ கோரியுள்ளதாக தெரிகிறது.

பேருந்து சேவை நிறுத்தம்: பாகிஸ்தான் துணைத் தூதருக்கு சம்மன்

Posted: 21 Jan 2014 12:00 PM PST

ஸ்ரீநகர் - முசாஃபராபாத் மற்றும் ராவல்கோட் - பூஞ்ச் இடையேயான பேருந்து சேவையை நிறுத்தியது தொடர்பாக தில்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரை செவ்வாய்க்கிழமை நேரில் வரவழைத்து இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

2ஜி: கனிமொழி மனு மீது பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்

Posted: 21 Jan 2014 12:00 PM PST

2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகிவயை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பஸ் நிறுத்தம் அருகே உடைந்த நிலையில் கால்வாய்

Posted: 21 Jan 2014 11:50 AM PST

பஸ் நிறுத்தம் மற்றும் நூலகக் கட்டடம் அருகே சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் உடைந்து உள்ளதால் அவ்வழியே

கங்கை நாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

Posted: 21 Jan 2014 11:50 AM PST

திருவள்ளூர் அருகே உள்ள நீர்நிலை நாயகி பெண்ணில் நள்ளால் உடனுறை கங்கைநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற

தேமுதிகவுடனான கூட்டணி: மக்களை குழப்பும் திமுக

Posted: 21 Jan 2014 11:49 AM PST

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. உடனான கூட்டணி விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக பேசி மக்களை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் தொல்லை

Posted: 21 Jan 2014 11:49 AM PST

திருவள்ளூர் அருகே வனப்பகுதிக்கு அருகில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் சாவு: கண்களை தானம் செய்த பெற்றோர்

Posted: 21 Jan 2014 11:48 AM PST

திருவள்ளூர் அருகே பஸ் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்

Posted: 21 Jan 2014 11:48 AM PST

பொன்னேரியை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் 3 வீடுகளில் கொள்ளை

Posted: 21 Jan 2014 11:47 AM PST

கும்மிடிப்பூண்டியில் மூன்று வீடுகளில்  நகைகள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™