Tamil News | Online Tamil News |
- இத்தாலி வீரர்கள் பிரச்னைக்கு தீர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- மத்திய மந்திரி அலுவலகம் முன் டில்லி முதல்வர்: அடாவடி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- 1,000 டீக்கடைக்காரர்களை சந்திக்கிறார் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
- 'தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டதால் சுனந்தா இறந்தார்': பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்
- முதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால்
- விஜயகாந்தை இழுக்க கருணாநிதி அடுத்த அஸ்திரம்: சமாதானம் பேசும்படி அழகிரிக்கு 'அட்வைஸ்'
- சிலருக்கு நாக்கு தான் முதல் விரோதி: கருணாநிதி
- பேரியக்கத்தை கழற்றி விட்டார் ராமதாஸ்
- பெங்களூரு தெற்கில் அனந்தகுமாரை எதிர்த்து காங்., சார்பில் நந்தன் நிலேகனியை நிறுத்த முடிவு
- லோக்சபா 'சீட்'டுக்காக வேறு கட்சிகளில் துண்டு போட காங்., - எம்.பி.,க்கள் காத்திருப்பு
- வாசனுக்கு ஆதரவு கேட்க திட்டமிட்ட காங்.,க்கு கருணாநிதி 'செக்'
- தமிழகத்தில் கூட்டணி குறித்து பா.ஜ., பேச்சு இன்று ஆரம்பம்: பா.ம.க., - தே.மு.தி.க.,வுடன் உறவு ஏற்படுமா?
| இத்தாலி வீரர்கள் பிரச்னைக்கு தீர்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: புதுடில்லி: 'இத்தாலி கடற்படையினர் பிரச்னைக்கு, சரியான முறையில் தீர்வு காண வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2012ல், கேரளாவில், இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய, இத்தாலி கடற்படையினர், இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை, இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், கடற்கொள்ளையர்கள் என கருதி, மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, இத்தாலி கடற்படையினர் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விவகாரங்களை கையாளும்படி, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ... |
| மத்திய மந்திரி அலுவலகம் முன் டில்லி முதல்வர்: அடாவடி போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: அடாவடித்தனமாகச் செயல்பட்ட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, டில்லி போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினார். "என் கோரிக்கை, நிறைவேறும் வரை, தர்ணா போராட்டத்தை, கைவிடும் பேச்சுக்கே, இடம் இல்லை," என, அவர் உறுதியாக அறிவித்தார். டில்லி முதல்வர் கெஜ்ரி வால், பார்லிமென்ட் வளாக சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்த, சிறு பூங்கா பகுதியில், தர்ணா போராட்டத்தில் அமர்ந்தார். அவருடன், அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா உள்ளிட்ட அமைச்சர்களும், அமர்ந்தனர். இதை, போலீசார் சற்றும் ... |
| 1,000 டீக்கடைக்காரர்களை சந்திக்கிறார் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி Posted: ஆமதாபாத்:பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, நாடு முழுவதும், 300 நகரங்களில், 1,000 டீக்கடைக்காரர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.'டீக்கடை நடத்தியவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது' என, சமாஜ்வாதி கட்சியின், முன்னணி தலைவர்களில் ஒருவரான, நரேஷ் அகர்வால், சில வாரங்களுக்கு முன் பேசினார்.அது போல், கடந்த வாரம், டில்லியில் நடந்த, காங்., தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த, எம்.பி., மணிசங்கர் அய்யர், 'மோடியால் பிரதமராக முடியாது; காங்கிரஸ் கூட்டங்களில், அவர், டீ விற்கத் தான் முடியும்' என, பேசினார்.இதனால் ... |
| 'தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிட்டதால் சுனந்தா இறந்தார்': பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல் Posted: புதுடில்லி: மன அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்தையும், தூக்க மாத்திரைகளையும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் தான், சுனந்தா புஷ்கர் இறந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, சசி தரூரின், மூன்றாவது மனைவி, சுனந்தா புஷ்கர், 52, சமீபத்தில், டில்லியில் உள்ள, ஐந்து நட்சத்திர ஓட்டலில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.சசி தரூருக்கும், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தராருக்கும் இடையே, கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளதாக, சுனந்தா, சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.இந்த தகவல் வெளியான, அடுத்த சில ... |
| முதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால் Posted: டில்லி மாநில முதல்வராக பதவியில் இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவால், வீதியில் இறங்கி, மத்திய அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது, கெஜ்ரிவால் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.சித்துதோஷ் முகர்ஜி தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம், 1992ல், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, இடைக்கால தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை, மத்திய அரசின், 'கெஜட்'டில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டது.பல முறை கோரிக்கை வைத்தும், இடைக்கால தீர்ப்பை வெளியிடாமல், அப்போதைய பிரதமர், நரசிம்ம ராவ் தலைமையிலான ... |
| விஜயகாந்தை இழுக்க கருணாநிதி அடுத்த அஸ்திரம்: சமாதானம் பேசும்படி அழகிரிக்கு 'அட்வைஸ்' Posted: அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தும், அசராத விஜயகாந்தை, கூட்டணிக்கு இழுக்க, அடுத்த அஸ்திரத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளார், தி.மு.க., தலைவர் கருணாநிதி. அதன்படி, விஜயகாந்தின் கோபத்தை தணிக்க, அவரை சந்தித்துப் பேசும்படி, மூத்த மகன் அழகிரிக்கு ஆலோசனை கூறியுள்ளார். அவரின் யோசனைப்படி, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள, விஜயகாந்தும், அழகிரியும் சந்தித்துப் பேசலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.நாகரிகம் தெரியாது:லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை எப்படியும் சேர்த்து விட வேண்டும் என்பதில், கருணாநிதி உட்பட, அந்தக் கட்சியின் ... |
| சிலருக்கு நாக்கு தான் முதல் விரோதி: கருணாநிதி Posted: 'சில பேருக்கு, நாக்கு தான் முதல் விரோதி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க,வினரைத் தாக்குவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது அபாண்டமான, அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. டாக்டர் ராமதாசுக்கு அண்மைக் காலத்தில், இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்ற ஒரு கெட்ட பழக்கம் வந்து விட்டது போலும். ராமதாசின் நடவடிக்கைகள் பற்றி தி.மு.க.,வினர் எதுவும் சொல்வதில்லை.தி.மு.க.,விற்கு வேறோருவரைத் தூண்டி விட்டு, தாக்குதல் ... |
| பேரியக்கத்தை கழற்றி விட்டார் ராமதாஸ் Posted: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அல்லாத, இதர ஜாதி அமைப்புகளை ஒன்றிணைத்து, 'சமுதாய பேரியக்கம்' என்ற அமைப்பை, இரு ஆண்டுகளுக்கு முன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், ராமதாஸ் துவக்கினார். இந்த அமைப்பின் சார்பில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும், ஜாதிய அமைப்புகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.காதல் திருமணம்:இந்தக் கூட்டங்களில், 'வன்கொடுமை சட்டத்தை திருத்த வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், காதல் திருமணம் செய்ய, பெற்றோர் அனுமதியைப் பெற வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இந்த ... |
| பெங்களூரு தெற்கில் அனந்தகுமாரை எதிர்த்து காங்., சார்பில் நந்தன் நிலேகனியை நிறுத்த முடிவு Posted: பெங்களூரு: கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகின்றனரோ, இல்லையோ, பெங்களூரு தெற்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் அனந்தகுமாரை எதிர்த்து, 'இன்போசிஸ்' நிறுவனர்களில் ஒருவரான, நந்தன் நிலேகனி, காங்., வேட்பாளராக களம் இறக்கப்பட உள்ளார்.பிரபலமானவர்கள்: 'ஆம் ஆத்மி' பாணியில், மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள், புதுமுகங்களை நிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு தொகுதியிலிருந்து, தொடர்ந்து ஐந்து முறை, எம்.பி.,யாக உள்ள பா.ஜ.,வை சேர்ந்த, அனந்தகுமாரை எதிர்த்து, 'இன்போசிஸ்' நந்தன் ... |
| லோக்சபா 'சீட்'டுக்காக வேறு கட்சிகளில் துண்டு போட காங்., - எம்.பி.,க்கள் காத்திருப்பு Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தலில், வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு, காங்., தள்ளப்பட்டுள்ளது. தற்போதுள்ள, எம்.பி.,க்களுக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இடம் பிடிக்க தயார்:இதனால், ராஜஸ்தான், உ.பி., ம.பி., பஞ்சாப், அரியானா, டில்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த, காங்., - எம்.பி.,க்கள், வேறு கட்சிகளில், 'சீட்' கிடைக்குமா என, இப்போதே இடம் பிடிக்க தயாராகி விட்டனர். இதில்,'ஆம் ஆத்மி' கட்சி பக்கம் தாவுவதற்கு தான், பலரும் முயற்சிக்கின்றனர்.வரும் லோக்சபா தேர்தலில், காங்., கட்சி ... |
| வாசனுக்கு ஆதரவு கேட்க திட்டமிட்ட காங்.,க்கு கருணாநிதி 'செக்' Posted: வாசனுக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் தூது விடப்போவது தெரிந்ததும், உஷாரான தி.மு.க., தலைமை, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளரை, அவசரமாக அறிவித்துள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.தமிழகத்திலிருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, தி.மு.க.,வைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரசைச் சேர்ந்த ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பாலகங்கா, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல், 2ம் தேதி நிறைவு பெறுகிறது.பரிசீலனை:அதனால், புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, அடுத்த மாதம், 7ம் ... |
| Posted: தமிழகத்தில், கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ., இன்று துவங்குகிறது. இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன், பா.ஜ., மூவர் குழுவினர் பேச்சு நடத்துகின்றனர்.தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் ம.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர், முரளீதர் ராவை, சென்னை வருமாறு, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். அனேகமாக அவர், 23ம் தேதி சென்னை வருவார் என, அக்கட்சி வட்டாரம் தெரிவித்தது.சிறிய கட்சிகளுடன்: தமிழகத்தில், பா.ஜ., தலைமையில், தேசிய ஜன நாயக கூட்டணியை ஏற்படுத்துவதற்கான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 21,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |