Tamil News | Online Tamil News |
- பாத்திரம் கழுவிய ஏழை தாயின் மகனை பிரதமராக ஏற்க "தயக்கம்!: காங்., விமர்சனத்துக்கு மோடி பதிலடி
- சின்ன விஷயத்திற்கு முதல்வரே போராட்டத்தில் குதிப்பது சரிதானா? பா.ஜ., கிண்டல்
- தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணம் லஞ்சம் ஆகாது என்கிறார் முதல்வர் வீர்பத்ரர்
- சுனந்தா மரண விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர சசி உறுதி
- 'என்னை நம்பியவர்கள் கதி என்ன?' கருணாநிதியிடம் ஸ்டாலின் கொந்தளிப்பு
- கனிமொழி 'பிளான்': இறுதி வெற்றி கிடைக்குமா?
- முரண்டோ முரண்டு பிடிக்கும் 'முரசு': 'மாம்பழ'த்துக்கு ஆசைப்படும் 'சூரியன்'
- முடிவெடுக்கும் இடத்தில் பிரேமலதா: மகளிரணியிடம் கருத்து கேட்க திட்டம்
- தமிழர் பகுதியில் ராணுவம் குறைப்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே விளக்கம்
- வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் : கெஜ்ரிவாலை மிரட்டும் எம்.எல்.ஏ.,வினோத் பின்னி
| பாத்திரம் கழுவிய ஏழை தாயின் மகனை பிரதமராக ஏற்க "தயக்கம்!: காங்., விமர்சனத்துக்கு மோடி பதிலடி Posted: புதுடில்லி: உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் பெற 5 டி களுக்கு நாம் முக்கியத்துவம் தர வேண்டும்; டேலன்ட் ( திறமை), டிரேடிஷன் (பாரம்பரியம்), டூரிசம் (சுற்றுலா), டெக்னாலஜி ( தொழில்நுட்பம்), டிரேட் ( வர்த்தகம்) ஆகிய இந்த 5 டி களே நாட்டின் வளர்ச்சிக்குத் தேவை என்று பா.ஜ.,வின பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி திட்டவட்டமாக அறிவித்தார். சமீபத்தில், டில்லியில் நடந்த, காங்., பொதுக் குழு கூட்டத்தில், அந்த கட்சியின் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நேரத்தில், ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதை, காங்., ... |
| சின்ன விஷயத்திற்கு முதல்வரே போராட்டத்தில் குதிப்பது சரிதானா? பா.ஜ., கிண்டல் Posted: புதுடில்லி:டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. டில்லியில், போலீஸ் துறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தான், போலீசார் இயங்குகின்றனர். தங்கள் உத்தரவை மதித்து நடக்காத, நான்கு போலீஸ் அதிகாரிகளை, தற்காலிக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வீடு முன், இன்று, போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள, 'ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலை, பா.ஜ., கிண்டல் செய்துள்ளது. 'ஆட்சி நடத்த லாயக்கில்லை' என, அக்கட்சியை, ... |
| தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணம் லஞ்சம் ஆகாது என்கிறார் முதல்வர் வீர்பத்ரர் Posted: புதுடில்லி: தனியார் மின் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று, அந்நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக, எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ள புகாரை, இமாச்சல பிரதேச, காங்., முதல்வர், வீர்பத்ர சிங் மீண்டும் மறுத்துள்ளார். ''நான் பணம் பெற்றது உண்மை; ஆனால் அதை அந்நிறுவனத்திடமிருந்து கடனாக, காசோலை மூலம் பெற்றேன்'' எனக் கூறியுள்ளார்.தனியார் மின் நிறுவனம்:இமாச்சலப் பிரதேசத்தில், முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான காங்., ஆட்சி உள்ளது. தனியார் மின் நிறுவனத்திடமிருந்து, முதல்வர் வீர்பத்ர சிங், லஞ்சம் பெற்று, முறைகேடான வகையில் அந்நிறுவனத்திற்கு சாதகமான ... |
| சுனந்தா மரண விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர சசி உறுதி Posted: புதுடில்லி : ''என் மனைவி, சுனந்தா மரணம் குறித்து விசாரணை நடத்த, முழு ஒத்துழைப்பு அளிப்பேன்,'' என, சுனந்தாவின் கணவரும், மத்திய அமைச்சருமான, சசி தரூர் நேற்று, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.மத்திய அமைச்சர், சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டில்லி ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில், மர்மமான முறையில், கடந்த ெவள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்கான காரணம், இன்னும் புலப்படவில்லை. சுனந்தா மரணம் குறித்து, விசாரணை நடத்தி வரும் போலீசார், நேற்று அமைச்சர் சசி தரூரிடம் விசாரணை நடத்தினர். டில்லி, துணை கலெக்டர் ... |
| 'என்னை நம்பியவர்கள் கதி என்ன?' கருணாநிதியிடம் ஸ்டாலின் கொந்தளிப்பு Posted: தி.மு.க.,வில் அழகிரி - ஸ்டாலின் மோதல், ஒரு பக்கத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், ராஜ்யசபா வேட்பாளராக, கனிமொழி ஆதரவாளரான திருச்சி சிவா அறிவிக்கப்பட்டுஉள்ளதை அடுத்து, ஸ்டாலின் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துஉள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த ஸ்டாலின், இது குறித்த தன் கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.தி.மு.க., ஆதரவு:தே.மு.தி.க.,வுடன் கூட்டணி சேரும் திட்டத்தின் ஒரு கட்டமாக, ராஜ்யசபா தேர்தலில், அக்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என, கூறப்பட்டது. இரு தரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் இது இடம்பெற்றது. ... |
| கனிமொழி 'பிளான்': இறுதி வெற்றி கிடைக்குமா? Posted: ராஜ்யசபா தேர்தலில், தன் ஆதரவாளரை வேட்பாளராக நிறுத்தியுள்ளதன் மூலம், காங்கிரஸ் கூட்டணியில் சேர்வதற்கான முயற்சிக்கு, மீண்டும் கனிமொழி புத்துயிர் கொடுத்துள்ளதாக, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.காங்கிரசுடன் இருந்த உறவை முறித்துள்ள தி.மு.க., ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டது. காங்கிரசுடன் கூட்டு சேர்வதற்கு ஸ்டாலின் காட்டிய எதிர்ப்பு காரணமாக, இம்முடிவை தி.மு.க., பொதுக்குழு எடுத்தது.ஆனால், இந்த முடிவு, கனிமொழிக்கு பிடிக்கவில்லை. அவர் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில், தி.மு.க., சேர வேண்டும் என, விரும்புகிறார். அதற்காக, சமீபத்தில், ... |
| முரண்டோ முரண்டு பிடிக்கும் 'முரசு': 'மாம்பழ'த்துக்கு ஆசைப்படும் 'சூரியன்' Posted: கூட்டணிக்குள் வர, தே.மு.தி.க., முரண்டு பிடிப்பதால், அதற்கு மாற்றாக, பா.ம.க.,வை கூட்டணிக்குள் இழுக்க, தி.மு.க., தலைமை காய் நகர்த்த துவங்கி உள்ளது. இது, தி.மு.க., கூட்டணிக்குள் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு, எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வைதங்கள் கூட்டணியில் இணைக்க வேண்டும் என, தி.மு.க., தலைமை விரும்புகிறது. இதற்காக, துாதர்கள் சந்திப்பு, திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், கடைசி வரையில், விஜயகாந்த் பிடி கொடுக்க மறுத்து வருகிறார்.ரகசிய பேச்சுவார்த்தை:'உளுந்துார்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கும் ... |
| முடிவெடுக்கும் இடத்தில் பிரேமலதா: மகளிரணியிடம் கருத்து கேட்க திட்டம் Posted: கூட்டணி தொடர்பாக கருத்து கேட்க, தே.மு.தி.க., மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தை கூட்ட, அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.தே.மு.தி.க., மகளிர் அணியை, பிரேமலதா வழிநடத்தி வருகிறார். அவ்வப்போது, மகளிர் அணியினர் கூட்டத்தை கூட்டி, கட்சியை பலப்படுத்தும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.காயங்கள் ஆறவில்லை...:சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில், தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடந்தன. இதில், பிரேமலதா, 'கடந்த தி.மு.க., ஆட்சியில் ஏற்பட்ட காயங்கள் ஆறவில்லை' என, பரபரப்பாக பேசினார். அதுவரை, 'தி.மு.க., ... |
| தமிழர் பகுதியில் ராணுவம் குறைப்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே விளக்கம் Posted: கொழும்பு: இலங்கையின் வடக்கு பகுதியில், ராணுவத்தினரின் எண்ணிக்கை, 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது, என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில், 2009ல், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், ராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதாவது: விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட பின், வடக்கு பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். சர்வதேச அளவில் சிலர் ... |
| Posted: ஷீர்டி: டில்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, 26ம் தேதிக்குள் மாநில அரசு நிறைவேற்றாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., வினோத் பின்னி தெரிவித்துள்ளார்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி காங்., ஆதரவுடன் ஆட்சி செய்கிறது. "முதல்வர் கெஜ்ரிவால், பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்' என, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., வினோத் பின்னி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 20,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |