Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை
- மதுரை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: 4 இளைஞர்கள் சாவு
- அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்.எல்.ஏ. புகார்
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி
- இடஒதுக்கீடு விவகாரம்: திமுக சார்பில் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம்
- தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு
- பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த கோரிக்கை
- வளமையான பாரதத்தை உருவாக்க அதிமுகவை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும்
- அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்
- நிர்வாகவியல் கல்லூரிகளுக்கான ஊர்ஜித் நிகழ்ச்சி
- நகைக் கடை அதிபர் மீது ரூ.12 லட்சம் மோசடி புகார்
- திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்!
- மாடியில் இருந்து விழுந்து மாணவர் சாவு
- சூலூர் குளத்தில் ஆண் சடலம் மீட்பு
- பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இருவர் சாவு
- சாலை விபத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பலி
- பொள்ளாச்சியில் 9,286 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
- "மக்கள் சரியாக வாக்களித்தால் நாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கும்'
- மாநிலங்களவைத் தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
- குருடம்பாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா
- கோவை: 98 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- சாலை விபத்துகளில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
- இன்று "எப்ஸன் என்விஷன்' தொழில்நுட்ப கண்காட்சி
- தயானந்த சரஸ்வதி சுவாமி விரைவில் குணமடைய இன்று பிரார்த்தனை
- நாகூர் தர்கா யானை ரத்த சோகையால் பாதிப்பு
- நெல்லையில் தலித் கிறிஸ்தவர் நல இயக்க பேரணி, மாநாடு
- வால்பாறை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
- கப்பச்சி பகுதியில் புலி நடமாடியதால் மீண்டும் பீதி!
- ரத்த தான முகாம்
- ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சென்னை இளைஞர்கள் 3 பேர் கைது
- ஜிவிஜி கல்லூரியில் பொங்கல் விழா
- பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள்
- பல்லடத்தில் ரத்த தான முகாம்
- குழந்தைகள் வாசகர் வட்டம் துவக்கம்
- மாநில அளவிலான செஸ் போட்டி: திருப்பூர் மாணவருக்கு சுழற்கோப்பை
- ஜனவரி 21 மின் தடை
- ஓரிரு நாளில் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
- எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா:திருமுருகன்பூண்டியில் வாகனப் பேரணி
- ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் சாலை அமைப்பதில் வனத்துறை குறுக்கீடு
- பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி
- வடமாநில இளைஞர் அடித்துக் கொலை
- லிஃப்டுக்குள் 2 மணி நேரம் மாட்டிக் கொண்ட ரயில் பயணிகள்
- ரெட்டிபாளையம் ஊராட்சியைகண்டித்து ஆர்ப்பாட்டம்
- நீதிமன்றகாலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- விவசாய வங்கிக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
- "தமிழக முதல்வரை பிரதமராக்க வேண்டும்'
- 22 இல் தி.மு.க.செயலாளர்கள் கூட்டம்
- 2.24 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- "நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சுயநல அரசியல்வாதிகளே'
- கன்டெய்னர்}லாரி மோதல்: கிளீனர் சாவு
- பேர்ணாம்பட்டில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- "மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுத்தவர் முதல்வர்'
- இடுகாட்டுப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சடலத்துடன் சாலைமறியல்
- 8-ம் திருமுறை திருவாசகம் முற்றோதல் பெருவிழா
- ஆற்காட்டில் அதிமுக பொதுக்கூட்டம்
- தோல் தொழிற்சாலை கழிவுநீர் பிரச்னை வேலை இழந்த நாள்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை
- அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வர வேண்டும்
- "போக்குவரத்து நெரிசலுக்கு 2 வாரத்தில் தீர்வு
- ஜனவரி 21 மின் தடை
- மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை
- 3.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- அபராதம் செலுத்தாவிட்டால் மாட்டு வண்டிகள் ஏலம்
- மாநகராட்சிப் பகுதியில் 4 நாள் குடிநீர் விநியோகம் தடை
- தேமுதிக மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணி
- பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
- வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தீ விபத்து 12 காய்கறி கடைகள் எரிந்து நாசம்
- விஜயகாந்த் - தமிமுன் அன்சாரி மலேசியாவில் சந்திப்பு
- அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து புதிய மாற்றம்: யெச்சூரி
- அருந்ததியருக்கு 6 சத இடஒதுக்கீடு:உத்தரவாதம் அளித்தால் ஆதரவு
- 2.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
- கார்-வேன் மோதல்: ஒருவர் சாவு
- வாக்குகள் விற்பனைக்கு அல்ல என வீடுகளில் எழுதுங்கள்: ராமதாஸ்
- எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் குளறுபடி
- பணம் தராததால் கட்டையால் தாக்கி தந்தையைக் கொன்ற மகன் கைது
- ஆசிரியையிடம் நகை பறிப்பு
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்
- வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு
- தலைமறைவான ஆயுள் தண்டனைக் கைதி மேலூர் அருகே பிடிபட்டார்
- பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- பழுதான நிலையில் செயற்கை சுவாசவாயு சிலிண்டர்கள்
- ஜனவரி 21 மின் தடை
- மதுரை: ஜல்லிக்கட்டுக் காளையை துன்புறுத்தியவர் மீது வழக்குப் பதிவு
- மதுரை வேளாண்மைக் கல்லூரியில் விதைப் பண்ணை பயிற்சி முகாம்
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- மதுரை
- வேலூர்
- பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
- பவானியில் ஜீவா நினைவு நாள் கொடியேற்றம்
- 2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து
- சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்
- விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
- ஆசனூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல்
- தமிழக கபடி அணியில் கோபி பி.கே.ஆர். கல்லூரி மாணவி
- பவானியில் போலியோ மருந்து முகாம்
- உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
- குன்னூரில் சீசனுக்கு முன் புதிய தரைப்பாலத்தை திறக்க கோரிக்கை
- கூட்டுப் பிரார்த்தனை
| அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரிக்கை Posted: 19 Jan 2014 01:24 PM PST அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. |
| மதுரை அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்: 4 இளைஞர்கள் சாவு Posted: 19 Jan 2014 01:23 PM PST மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை லாரியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர். |
| அரசு விழாவில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்.எல்.ஏ. புகார் Posted: 19 Jan 2014 01:22 PM PST தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தான் புறக்கணிக்கப்படுவதாக ஆத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மாதேஷ்வரன் குற்றஞ்சாட்டினார். அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அவர் இந்தப் புகாரைக் கூறியதால், விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. |
| சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி Posted: 19 Jan 2014 01:19 PM PST சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருள்களை தயார் செய்யும் பயிற்சி ஜனவரி 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. |
| இடஒதுக்கீடு விவகாரம்: திமுக சார்பில் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் Posted: 19 Jan 2014 01:19 PM PST இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக செயல்படும் அதிமுக அரசைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) திமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். |
| தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு Posted: 19 Jan 2014 01:18 PM PST திங்கள்கிழமை (ஜனவரி 20) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி இருப்பதாக தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக பால் முகவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. |
| பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த கோரிக்கை Posted: 19 Jan 2014 01:18 PM PST பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| வளமையான பாரதத்தை உருவாக்க அதிமுகவை இளைஞர்கள் ஆதரிக்க வேண்டும் Posted: 19 Jan 2014 01:17 PM PST வளமையான பாரதத்தை உருவாக்க வேண்டுமானால் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இளைஞர்கள் ஆதரவு தரவேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயகுமார் பேசினார். |
| அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் Posted: 19 Jan 2014 01:17 PM PST அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தினார். |
| நிர்வாகவியல் கல்லூரிகளுக்கான ஊர்ஜித் நிகழ்ச்சி Posted: 19 Jan 2014 01:16 PM PST பீளமேட்டில் உள்ள ஜிஆர்ஜி நிர்வாகவியல் கல்லூரியில், நிர்வாகவியல் கல்லூரிகளுக்கான ஊர்ஜித் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| நகைக் கடை அதிபர் மீது ரூ.12 லட்சம் மோசடி புகார் Posted: 19 Jan 2014 01:16 PM PST கோவை நகைக் கடை அதிபர் மீது ரூ.12 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| திருப்பூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்! Posted: 19 Jan 2014 01:16 PM PST திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள க.சுப்பிரமணிய செட்டியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரம் நடுவதற்காக குழி தோண்டிய போது மூன்று முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. |
| மாடியில் இருந்து விழுந்து மாணவர் சாவு Posted: 19 Jan 2014 01:16 PM PST கோவை அருகே மாடியில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழந்தார். கோவை வடவள்ளி கல்வீரம்பாளையத்தில் சாதிக் உசேன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அபுதாகீர் |
| சூலூர் குளத்தில் ஆண் சடலம் மீட்பு Posted: 19 Jan 2014 01:15 PM PST சூலூர் பெரிய குளத்தில் மிதந்த ஆண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சூலூரில் பெரிய குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக, சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றினர். |
| பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இருவர் சாவு Posted: 19 Jan 2014 01:15 PM PST பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் கூறியது: பொள்ளாச்சியை அடுத்த சமுத்தூர் ராம் நகரை சேர்ந்தவர்கள் மயில்சாமி |
| சாலை விபத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் பலி Posted: 19 Jan 2014 01:15 PM PST அன்னூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் உயிரிழந்தார். அன்னூர் கரியாம்பாளையம் முன்னாள் ஊராட்சித் தலைவர் கணேசன் (61). இவர், தனது மனைவி |
| பொள்ளாச்சியில் 9,286 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து Posted: 19 Jan 2014 01:15 PM PST பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் 9, 286 குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. |
| "மக்கள் சரியாக வாக்களித்தால் நாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கும்' Posted: 19 Jan 2014 01:14 PM PST மக்கள் சரியாக வாக்களித்தால் நாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு தமிழகத்துக்கு கிடைக்கும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். |
| மாநிலங்களவைத் தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம் Posted: 19 Jan 2014 01:14 PM PST தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) தொடங்குகிறது. |
| குருடம்பாளையத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா Posted: 19 Jan 2014 01:13 PM PST எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, துடியலூர் அருகிலுள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| கோவை: 98 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 19 Jan 2014 01:13 PM PST கோவை மாவட்டத்தில் 98.24 சதவீத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1,581 மையங்கள் மூலம் போலியோ தடுப்பு சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை |
| சாலை விபத்துகளில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் Posted: 19 Jan 2014 01:13 PM PST சாலை விபத்துகளில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| இன்று "எப்ஸன் என்விஷன்' தொழில்நுட்ப கண்காட்சி Posted: 19 Jan 2014 01:13 PM PST கோவையில் எப்ஸன் இந்தியா நிறுவனம் சார்பில் "எப்ஸன் என்விஷன்' தொழில்நுட்ப கண்காட்சி திங்கள்கிழமை (ஜன.20) நடைபெறவுள்ளது. |
| தயானந்த சரஸ்வதி சுவாமி விரைவில் குணமடைய இன்று பிரார்த்தனை Posted: 19 Jan 2014 01:12 PM PST ஆர்ஷ வித்யா குருகுல நிறுவனர் தயானந்த சரஸ்வதி சுவாமி விரைவாக குணம் பெற வேண்டி திங்கள்கிழமை பிரார்த்தனை நடத்தப்படுகிறது. |
| நாகூர் தர்கா யானை ரத்த சோகையால் பாதிப்பு Posted: 19 Jan 2014 01:12 PM PST மேட்டுப்பாளையம் யானைகள் நல வாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள நாகூர் தர்காவை சேர்ந்த பாத்திமா பீவி என்ற யானை ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். |
| நெல்லையில் தலித் கிறிஸ்தவர் நல இயக்க பேரணி, மாநாடு Posted: 19 Jan 2014 01:12 PM PST இந்திய தலித் கிறிஸ்தவர் நல இயக்கம் சார்பில் 6-ஆவது மாநில மாநாடு, பேரணி பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| வால்பாறை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் Posted: 19 Jan 2014 01:11 PM PST வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு கூடுதல் பேருந்து இயக்கப்பட்டும், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. |
| கப்பச்சி பகுதியில் புலி நடமாடியதால் மீண்டும் பீதி! Posted: 19 Jan 2014 01:11 PM PST நீலகிரி மாவட்டம், குந்தசப்பை பகுதியில் நடமாடிவந்த புலி, திடீரென கப்பச்சி பகுதியில் தென்பட்டதால் தொதநாடு பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் உச்சகட்ட பீதியில் உள்ளனர். |
| Posted: 19 Jan 2014 01:11 PM PST ஜீவா நினைவுநாளை முன்னிட்டு, சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது . |
| ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சென்னை இளைஞர்கள் 3 பேர் கைது Posted: 19 Jan 2014 01:10 PM PST ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையைச் சேர்ந்த 3 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஜிவிஜி கல்லூரியில் பொங்கல் விழா Posted: 19 Jan 2014 01:10 PM PST உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. திறந்த வெளியில் புது அடுப்பு மூட்டப்பட்டு மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது . பின்னர் |
| பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் Posted: 19 Jan 2014 01:10 PM PST காங்கயத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலை, இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. |
| Posted: 19 Jan 2014 01:09 PM PST பல்லடம் ராயர்பாளையம்புதூர் பொதுமக்கள் நற்பணி மன்ற அறக்கட்டளை, திருப்பூர் முயற்சி மக்கள் அமைப்பு, கே.ஆர்.பி.அறக்கட்டளை, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் ராயர்பாளையம் விநாயகர் திருமண மண்டபத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குழந்தைகள் வாசகர் வட்டம் துவக்கம் Posted: 19 Jan 2014 01:09 PM PST உடுமலை கிளை நூலகம் எண்-1-ல் குழந்தைகள் வாசகர் வட்டம் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை துவக்கப்பட்டது. |
| மாநில அளவிலான செஸ் போட்டி: திருப்பூர் மாணவருக்கு சுழற்கோப்பை Posted: 19 Jan 2014 01:09 PM PST திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ராம் எஸ்.கிருஷ்ணன் சதாசிவம் நினைவு சுழற்கோப்பையையும், மாணவர்களுக்கான போட்டியில் திருப்பூர் மாணவர் வைஷ்ணவ் ஃப்ரண்ட்லைன் சுழற்கோப்பையையும் வென்றனர். |
| Posted: 19 Jan 2014 01:08 PM PST உடுமலை பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரா மரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜன.21) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. |
| ஓரிரு நாளில் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் Posted: 19 Jan 2014 01:08 PM PST கோயம்பேடு - அசோக் நகர் இடையிலான மெட்ரோ ரயில் உயர்மட்டப் பாதையில் ஓரிரு நாள்களில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். |
| எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா:திருமுருகன்பூண்டியில் வாகனப் பேரணி Posted: 19 Jan 2014 01:08 PM PST எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, திருமுருகன்பூண்டியில் இருசக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் சாலை அமைப்பதில் வனத்துறை குறுக்கீடு Posted: 19 Jan 2014 01:08 PM PST கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம்-நல்லாம்பாக்கம் இடையே சாலை அமைப்பதில் வனத்துறை குறுக்கீடு காரணமாக ஏற்பட்ட சிக்கல் மீது நடவடிக்கைக்கோரி கிராம முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. |
| பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி Posted: 19 Jan 2014 01:08 PM PST தனது நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன், கால் இடறி பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை இறந்தான். |
| Posted: 19 Jan 2014 01:07 PM PST நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வடமாநில இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். |
| லிஃப்டுக்குள் 2 மணி நேரம் மாட்டிக் கொண்ட ரயில் பயணிகள் Posted: 19 Jan 2014 01:07 PM PST கோட்டூரில் ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் இருந்து தரைத் தளத்துக்கு வருவதற்காக 6 பயணிகள் லிஃப்டில் ஏறியுள்ளனர். |
| ரெட்டிபாளையம் ஊராட்சியைகண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 19 Jan 2014 01:07 PM PST உடுமலை ஒன்றியம் ரெட்டிபாளையம் ஊராட்சியைக் கண்டித்து, அந்த அலுவலகம் முன் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். |
| நீதிமன்றகாலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 19 Jan 2014 01:07 PM PST திருப்பூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். |
| விவசாய வங்கிக் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 19 Jan 2014 01:06 PM PST விவசாயிகள் வாங்கிய விவசாயம் சார்ந்த அனைத்து வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| "தமிழக முதல்வரை பிரதமராக்க வேண்டும்' Posted: 19 Jan 2014 01:06 PM PST தமிழக முதல்வரை பிரதமராக்க வேண்டும் என வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார். திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் |
| 22 இல் தி.மு.க.செயலாளர்கள் கூட்டம் Posted: 19 Jan 2014 01:06 PM PST திருப்பூர் மாவட்ட தி.மு.க., செயலாளர்கள் கூட்டம் புதன்கிழமை(ஜன. 22) மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
| 2.24 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 19 Jan 2014 01:05 PM PST திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் 2.24 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. |
| சென்னை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 19 Jan 2014 01:03 PM PST சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெற்றது. |
| "நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது சுயநல அரசியல்வாதிகளே' Posted: 19 Jan 2014 01:01 PM PST நாட்டின் முன்னேற்றத் தடைக்கு சுயநல அரசியல்வாதிகளே காரணமாக இருக்கின்றனர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். |
| கன்டெய்னர்}லாரி மோதல்: கிளீனர் சாவு Posted: 19 Jan 2014 01:00 PM PST காவேரிப்பாக்கத்தை அடுத்த சங்கரம்பாடி சத்திரம் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு கன்டெய்னர் லாரி பழுதடைந்து நின்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்ற மினி லாரி, பழுதடைந்து நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது |
| பேர்ணாம்பட்டில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 19 Jan 2014 12:59 PM PST பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி மேட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| "மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுத்தவர் முதல்வர்' Posted: 19 Jan 2014 12:58 PM PST தமிழக மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி வகுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார். |
| இடுகாட்டுப் பாதையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சடலத்துடன் சாலைமறியல் Posted: 19 Jan 2014 12:58 PM PST அரக்கோணத்தை அடுத்த காவனூரில் இடுகாட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அக்கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| 8-ம் திருமுறை திருவாசகம் முற்றோதல் பெருவிழா Posted: 19 Jan 2014 12:58 PM PST ஆம்பூர் திருவாசகம் முற்றோதல் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 8-ம் திருமுறை திருவாசகம் முற்றோதல் பெருவிழா ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆற்காட்டில் அதிமுக பொதுக்கூட்டம் Posted: 19 Jan 2014 12:58 PM PST ஆற்காடு நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| தோல் தொழிற்சாலை கழிவுநீர் பிரச்னை வேலை இழந்த நாள்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை Posted: 19 Jan 2014 12:57 PM PST மூடப்பட்டுள்ள தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு வேலை இழந்த நாள்களுக்கு அரசு ஊதியம் வழங்க வலியுறுத்தி தோல் பதனிடும் மற்றும் தோல் பொருள் ஏஐடியுசி தொழிலாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வர வேண்டும் Posted: 19 Jan 2014 12:57 PM PST ஆம்பூர் நகருக்கு வரும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் சென்று வர வேண்டுமென ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போக்குவரத்துக் காவல்துறை, பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகளின் |
| "போக்குவரத்து நெரிசலுக்கு 2 வாரத்தில் தீர்வு Posted: 19 Jan 2014 12:57 PM PST வேலூர் மாநகரில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு இன்னும் இரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் தெரிவித்தார். |
| Posted: 19 Jan 2014 12:56 PM PST வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வாலாஜா, திமிரி மற்றும் ஒழுகூர், சின்னவரிகம் துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்சாரம் இராது. வேலூர் |
| மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை Posted: 19 Jan 2014 12:56 PM PST மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷன் திட்டவட்டமாக தெரிவித்தார். |
| 3.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 19 Jan 2014 12:56 PM PST வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 19-வது ஆண்டு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்குள்பட்ட 3 லட்சத்து 73 ஆயிரத்து 971 குழந்தைகளுக்கு போடப்பட்டன. |
| அபராதம் செலுத்தாவிட்டால் மாட்டு வண்டிகள் ஏலம் Posted: 19 Jan 2014 12:56 PM PST மணல் கடத்தியபோது பிடிபட்ட மாட்டு வண்டிகளுக்கான அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாட்டு வண்டிகள் ஏலம் விடப்படுமென திருப்பத்தூர் சார்-ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். |
| மாநகராட்சிப் பகுதியில் 4 நாள் குடிநீர் விநியோகம் தடை Posted: 19 Jan 2014 12:55 PM PST பொன்னை தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வேலூர் மற்றும் சத்துவாச்சாரிக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் உடைந்துள்ளதை அடுத்து 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் மாநகராட்சி பகுதியில் பாதிக்கும் என்று ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவ |
| தேமுதிக மாநாட்டுக்கு பந்தல் அமைக்கும் பணி Posted: 19 Jan 2014 12:55 PM PST விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, பிப்ரவரி 2-ல் நடைபெறவுள்ள தேமுதிக 9ஆவது மாநில மாநாட்டுக்கானப் பந்தல் அமைக்கும் பணியை, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலர் எல்.கே.சுதீஷ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் தீ விபத்து Posted: 19 Jan 2014 12:55 PM PST வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. |
| வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தீ விபத்து 12 காய்கறி கடைகள் எரிந்து நாசம் Posted: 19 Jan 2014 12:55 PM PST வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 12-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் தீயில் கருகின. இவ்விபத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக |
| விஜயகாந்த் - தமிமுன் அன்சாரி மலேசியாவில் சந்திப்பு Posted: 19 Jan 2014 12:55 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்துப் பேசியுள்ளார். |
| அதிமுக போன்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து புதிய மாற்றம்: யெச்சூரி Posted: 19 Jan 2014 12:54 PM PST மக்களவை தேர்தலில் அ.தி.மு.க. உள்ளிட்ட வலுவான மாநிலக் கட்சிகளை சேர்த்து புதிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். |
| அருந்ததியருக்கு 6 சத இடஒதுக்கீடு:உத்தரவாதம் அளித்தால் ஆதரவு Posted: 19 Jan 2014 12:54 PM PST அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக அதிகரிக்க உத்தரவாதம் அளிக்கும் அணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக, அருந்தமிழர் விடுதலை இயக்கம் முடிவு செய்துள்ளது. |
| 2.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து Posted: 19 Jan 2014 12:54 PM PST மதுரை மாவட்டத்தில் 2.95 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. மேலும், விடுபட்ட 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) |
| Posted: 19 Jan 2014 12:53 PM PST பெருங்குடி அருகே பரம்புபட்டி சுற்றுச் சாலையில், ஞாயிற்றுக்கிழமை கார்-வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். |
| வாக்குகள் விற்பனைக்கு அல்ல என வீடுகளில் எழுதுங்கள்: ராமதாஸ் Posted: 19 Jan 2014 12:53 PM PST "வாக்குகள் விற்பனைக்கு அல்ல' என வீடுகளில் எழுதி வைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கேட்டுக்கொண்டார். |
| எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தொடரும் குளறுபடி Posted: 19 Jan 2014 12:53 PM PST மதுரையில் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதில் முறைப்படியான வழி பின்பற்றப்படாததால், தொடர்ந்து குளறுபடி ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. |
| பணம் தராததால் கட்டையால் தாக்கி தந்தையைக் கொன்ற மகன் கைது Posted: 19 Jan 2014 12:53 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலம் பாண்டியன் நகரில், செலவுக்குப் பணம் தராத தந்தையிடம் தகராறு செய்து, அவரைக் கட்டையால் தாக்கிக் கொன்ற மகனை, போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 19 Jan 2014 12:53 PM PST மதுரை புதூரில் ஆசிரியையிடமிருந்து, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நகையைப் பறித்துச் சென்றுள்ளனர். |
| திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் Posted: 19 Jan 2014 12:52 PM PST திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தி உள்ளார். |
| வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு Posted: 19 Jan 2014 12:52 PM PST மதுரை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வைகை ஆற்றுப் பகுதியில், ஜனவரி 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது. |
| தலைமறைவான ஆயுள் தண்டனைக் கைதி மேலூர் அருகே பிடிபட்டார் Posted: 19 Jan 2014 12:52 PM PST பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனைக் கைதியை, கீழவளவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 19 Jan 2014 12:52 PM PST மதுரை எல்லீஸ் நகர் பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் விமலா (54). இவர், கரிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் |
| பழுதான நிலையில் செயற்கை சுவாசவாயு சிலிண்டர்கள் Posted: 19 Jan 2014 12:52 PM PST மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை 223ஆவது வார்டில் பழுதாகியுள்ள செயற்கை சுவாசவாயு சிலிண்டர்களை சீரமைக்கவும் மற்றும் எக்ஸ்ரே, மருந்துப் பற்றாக்குறையைப் போக்கவும், நோயாளிகள் வலியுறுத்துகின்றனர். |
| Posted: 19 Jan 2014 12:52 PM PST ஆனையூர் (இருப்பு) கூடல்நகர் உப மின்நிலையத்தில், ஜனவரி 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. |
| மதுரை: ஜல்லிக்கட்டுக் காளையை துன்புறுத்தியவர் மீது வழக்குப் பதிவு Posted: 19 Jan 2014 12:51 PM PST வீரர்களிடம் பிடிபட்ட கோபத்தில் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தியதாக, அதன் உரிமையாளர் மீது, மதுரை ஊரகப் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| மதுரை வேளாண்மைக் கல்லூரியில் விதைப் பண்ணை பயிற்சி முகாம் Posted: 19 Jan 2014 12:50 PM PST மதுரை வேளாண்மைக் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், விதைப் பண்ணை தொழில்நுட்பப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற உள்ளதாக, கல்லூரி முதல்வர் சி. சின்னுசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 19 Jan 2014 12:50 PM PST மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஒன்றியத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. |
| பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 19 Jan 2014 12:50 PM PST மதுரை நெடுங்குளம் நாகசிவா பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல் துறை மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. |
| திருமங்கலத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 19 Jan 2014 12:49 PM PST திருமங்கலம் மின்கோட்டத்தைச் சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஜனவரி 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை |
| Posted: 19 Jan 2014 12:48 PM PST |
| Posted: 19 Jan 2014 12:47 PM PST |
| Posted: 19 Jan 2014 12:47 PM PST காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரைக் கண்டித்து, ஈரோட்டில் பா.ஜ.க.வினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பவானியில் ஜீவா நினைவு நாள் கொடியேற்றம் Posted: 19 Jan 2014 12:47 PM PST ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில், ஜீவாவின் 51-ஆம் ஆண்டு நினைவு நாள் கொடியேற்று நிகழ்ச்சி பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து Posted: 19 Jan 2014 12:47 PM PST ஈரோடு மாவட்டத்தில் 2.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி. வெங்கடாசலம் கூறினார். |
| சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 19 Jan 2014 12:31 PM PST 25-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா கடந்த 11-ஆம் தேதி முதல் வரும் 20-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. ஐந்தாம் நாள் விழாவாக விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் சனிக்கிழமை மாலையில் சாலைப் பாதுகாப்பு பற்றிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. |
| விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா Posted: 19 Jan 2014 12:31 PM PST மொடக்குறிச்சி அருகே சாவடிப்பாளையம்புதூரில், எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை இரவு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| ஆசனூர் அருகே எஸ்.ஐ. மீது தாக்குதல் Posted: 19 Jan 2014 12:31 PM PST ஆசனூர் அருகே விசாரணைக்குச் சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மண்டையை உடைத்ததாக, ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர். |
| தமிழக கபடி அணியில் கோபி பி.கே.ஆர். கல்லூரி மாணவி Posted: 19 Jan 2014 12:31 PM PST கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரி மாணவி தமிழக கபடி அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| பவானியில் போலியோ மருந்து முகாம் Posted: 19 Jan 2014 12:30 PM PST பவானி நகராட்சிப் பகுதியில் 14 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம் Posted: 19 Jan 2014 12:30 PM PST நீலகிரி மாவட்டத்தில் உதகையிலுள்ள நகராட்சி மருந்தகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| குன்னூரில் சீசனுக்கு முன் புதிய தரைப்பாலத்தை திறக்க கோரிக்கை Posted: 19 Jan 2014 12:30 PM PST குன்னூர் நகர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தரைப் பாலத்தை வரும் சீசனுக்கு முன்பு திறக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 19 Jan 2014 12:29 PM PST ஸ்ரீநாராயண சேவா அமைப்பு சார்பில், கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூடலூர் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு அமைப்பின் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |