Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தே.மு.தி.க.,வுடன் பேரம் படியாததால் கருணாநிதி விரக்தி: பேச்சுவார்த்தை இன்னும் நடத்தவில்லை என்கிறார்

Posted:

சென்னை: தி.மு.க., தே.மு.தி.க., இடையே, திரைமறைவில் நடந்த, லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில், தொகுதி எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என, அடையாளம் காண்பதில் உடன்பாடு ஏற்படாமல், முட்டுக்கட்டை உருவாகி உள்ளது. இதனால், கடும் விரக்தி அடைந்துள்ள தி.மு.க., தலைவர், கருணாநிதி, ''தே.மு.தி.க.,விடம் கூட்டணி தொடர்பாக, எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை,'' என, நேற்று, தடாலடியாக பேட்டி அளித்தார். இது, இரு கட்சித் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.'தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்' என, தி.மு.க., தலைவர், கருணாநிதியும், ...

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ., கோபம்

Posted:

புதுடில்லி: 'ஆம் ஆத்மி' கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, 39, நேற்று அளித்த பேட்டியில், ''கெஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி. காங்., - எம்.பி.,யும், காங்கிரஸ் முன்னாள் முதல்வர், ஷீலா தீட்சித்தின் மகனுமான, சந்தீப் தீட்சித்தும், கெஜ்ரிவாலும் நெருங்கிய நண்பர்கள். அதனால், டில்லி அரசின் முடிவுகளில், காங்., ஆதிக்கம் செலுத்துகிறது,'' என, வெளிப்படையாகத் தாக்கி, கொந்தளித்துள்ளார்.'பொய்யர்': ஆம் ஆத்மி கட்சியின், லட்சுமி நகர் தொகுதி, எம்.எல்.ஏ., வினோத் குமார் பின்னி, தனக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்பதால், தற்போது கெஜ்ரிவாலை எதிர்த்து ...

சசி தரூர் - பாக்., பெண் நிருபர் கள்ளக்காதல்? மூன்றாவது மனைவி தகவலால் பரபரப்பு

Posted:

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய அமைச்சர், சசி தரூர், 57, பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் ஒருவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக, அவர் மனைவி, சுனந்தா புஷ்கர், 'ட்விட்டர்' இணையதளத்தில், புகார் தெரிவித்துள்ளார். இதை மறுத்துள்ள சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹாக்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்துள்ளார்.மத்திய அமைச்சர்: ஐக்கிய நாடுகள் சபையில், உயர் பதவியில் பணியாற்றி ஓய்வுபெற்ற சசி தரூர், கடந்த சில ஆண்டுகளாக, அரசியலில் ஈடுபட்டு, காங்கிரஸ் வேட்பாளராக, திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் ...

'கட்சி தேர்தலை முறைப்படி எதிர்கொள்ளுங்கள்': ஆதரவாளர்களுக்கு அழகிரி 'அட்வைஸ்'

Posted:

மதுரை: "கட்சித் தலைமை அறிவித்துள்ள நிர்வாகிகள் தேர்தலை முறைப்படி எதிர்கொள்ள தயாராகுங்கள்; என்னை நம்பி வந்தவர்களை எப்போதும் கை விடமாட்டேன்," என, மதுரையில் நேற்று நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில், அழகிரி தெரிவித்தார்.மதுரையில், தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை எழுந்தது. அதிருப்தியான கட்சித் தலைமை, போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கியது. பின், மதுரை நகர் தி.மு.க.,வையும் கூண்டோடு கலைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அழகிரி ஆதரவாளர்கள், தலைமைக்கு பதில் அளிக்கும் வகையில் மேலும் சில ...

இந்தியா-இலங்கை மீனவர் விடுதலை: இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம்

Posted:

கடத்தல் மற்றும் போதை பொருட்களை ஏற்றி வந்தவர்களை தவிர, எல்லை தாண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, இலங்கை சிறைகளில் இருக்கும், 200 தமிழக, ஆந்திர மீனவர்கள், விரைவில் விடுதலை செய்யப்படுவர். இந்திய கடற்படை, எல்லையோர காவல்படையினால் சிறைபிடிக்கப்பட்ட, இலங்கை மீனவர்களும், தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என, இந்திய இலங்கை அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த, தமிழக மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை பிடித்துச் செல்வது சில ஆண்டுகளாக, தொடர் கதையாக ...

பிரதமர் வேட்பாளராக ராகுல் இல்லை: பிரசாரத்தை வழிநடத்துவார் என அறிவிப்பு

Posted:

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக ராகுல் நியமிக்கப்படவில்லை. மாறாக, அவர் பிரசாரத்தை வழிநடத்துவார் என, காங்., உயர்மட்ட ஆலோசனைக் குழுவில், நேற்று முடிவெடுக்கப்பட்டது.டில்லியில், இன்று காங்கிரஸ் கட்சியின், செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. அதில், பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப, நேற்று முன்தினம் ராகுல் அளித்த பேட்டியில், 'எந்த பதவி கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என, தெரிவித்திருந்தார். இந்நிலையில், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, ...

'டாஸ்மாக்' கடைகளில் அலைமோதிய 'குடி'மகன்கள்: ஒரே நாளில் ரூ.110 கோடிக்கு 'சரக்கு' விற்பனை

Posted:

தொடர் விடுமுறைகளுக்கு இடையில், காணும் பொங்கல் தினமான நேற்று, 'டாஸ்மாக்' கடைகளில், நேற்று ஒரு நாள் மட்டும், 110 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், 6,838 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகின்றன.தொடர் விடுமுறை: கடந்த 14, 15ம் தேதிகளில், மிலாடி நபி, திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டது. இன்று, வள்ளலார் நினைவு தினத்தை ஒட்டி விடுமுறை ...

40 தொகுதிகளிலும் வெற்றிக்கனி: தொண்டர்களை உசுப்பும் ஜெ.,

Posted:

"தமிழகம், அனைத்துத் துறைகளிலும் முன்னேறி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், நாம் சொல்வதை கேட்கக் கூடிய மத்திய அரசு அமைய வேண்டும். அதற்கு எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தேர்தல் பணியைத் துவங்குங்கள்," என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை: இந்தியாவிலேயே, தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும். தமிழர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். தமிழகத்திற்கு, உரிய நிதியும், நீதியும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், நான் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன். ...

கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜயகாந்த் வெளிநாடு பயணம்

Posted:

சென்னை: லோக்சபா தேர்தலில், கூட்டணி தொடர்பாக, முக்கிய முடிவு எடுக்க, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இன்று வெளிநாடுக்கு புறப்பட்டு செல்கிறார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க., அல்லது பா.ஜ., அணியில் கூட்டணி சேருவது குறித்து, இன்னும் முடிவெடுக்க முடியாமல், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தவித்து வருகிறார். அடுத்த மாதம், 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள, 'ஊழல் ஒழிப்பு' மாநாட்டில், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். ராஜ்யசபா தேர்தல் அடுத்தமாதம், 7ம்தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம், 31ம் தேதி இறுதிநாள் என்பதால், ...

அமெரிக்கா மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிப்பு

Posted:

புதுடில்லி: தூதர் தேவயானி விவகாரத்தை அடுத்து, அமெரிக்கா மீதான தூதரக கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் மனைவியர், இந்திய பள்ளிகளில் பெறும் சம்பளம் பற்றிய விவரங்கள், அந்நாட்டிடம் கோரப்பட்டுள்ளது.நம் நாட்டைச் சேர்ந்த தேவயானி, அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில், துணை தூதர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார். அவர், 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டார் என தெரிவித்து, கைது செய்த, அமெரிக்க போலீஸ், அநாகரிகமாக அவரை நடத்தியது. அதற்கு பதில் நடவடிக்கையாக, மத்திய அரசும், பல கெடுபிடிகளை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™