Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கியரை மாற்ற இனி கிளட்ச் மிதிக்க வேண்டாம்,,

Posted: 16 Jan 2014 10:08 AM PST

நான்கு சக்கர வாகனங்களில், ஒரு வேகத்திலிருந்து, "கியரை' மற்றொரு வேகத்திற்கு மாற்றும்போது, "கிளட்ச் பெடலை' மிதிப்பது அவசியம். தற்போது, "ஆட்டோமேட்டட் மானுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளதால், வாகனத்தின் வேகத்தை, கூட்டவோ, குறைக்கவோ நினைக்கும்போது, "கிளட்சை' அழுத்தி, "கியரை' மாற்ற தேவையில்லை. வண்டியிலும், "கிளட்ச் பெடல்' இருக்காது; "கியர்' மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்; அதை மாற்றினால் போதும். "பார்க்கிங், டிரைவிங், ரிவர்ஸ்' என, வண்டியின், "மோட் பட்டனை' மட்டும், மாற்றினால் ...

மினி ரெசிபி!- டேட்ஸ் கொப்பரை உருண்டை!

Posted: 16 Jan 2014 08:46 AM PST

- தேவையானவை: கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 200 கிராம், நீளவாக்கில் நறுக்கிய (அ) துருவிய உலர்ந்த கொப்பரை - அரை கப், வெனிலா எசன்ஸ் - சில துளி, நெய் - அரை தேக்கரண்டி. - செய்முறை: பேரீச்சம் பழத்தில் சரிபாதி எடுத்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும் நைசாக அரைக்கக் கூடாது). இத்துடன் மீதமுள்ள பேரீச்சை, கொப்பரை, வெனிலா எசன்ஸ் சேர்த்து பிசைந்து (ஒட்டாமல் இருக்க அரை தேக்கரண்டி நெய்யை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும்) உருண்டைகளாகப் பிடிக்கவும். கிராண்டான டேட்ஸ் - கொப்பரை உருண்டை ...

Macmillan Children's Dictionary Ebook (பயனுள்ள புத்தகம் பீடிஎப் வடிவில்)

Posted: 16 Jan 2014 08:39 AM PST

Macmillan Children's Dictionary Ebook (பயனுள்ள புத்தகம் பீடிஎப் வடிவில்) Macmillan Children's Dictionary PDF பயனுள்ள புத்தகத்தை மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . Macmillan Children's Dictionary by Carolyn Barraclough (15MB) The Macmillan Children's Dictionary is a beautifully-illustrated photographic picture dictionary for use alongside any children's course. Key Features: - Over 800 words and photographs - Clear, vibrant photographs which ...

வாழ்க்கை...

Posted: 16 Jan 2014 08:37 AM PST

-- மரணத்தின் முதல் அறிமுகம் எப்போது நேர்ந்தது? நினைவில் இல்லை! பிறந்தவர் யாவரும் ஒரு நாள் மடிவர்' என்பதை அறிந்ததும் திகைத்துப் போனேன்! - அப்படியானால்… அம்மா…நீயும்…? நினைத்துப் பார்க்கவும் நடுங்கிப்போனேன். அப்படி நேர்ந்தால்… உன்னை எரிக்கும் நெருப்பில் நானும் குதித்தே விடுவேன் என்றெல்லாம்… நடுங்கியபடியே நினைத்ததுண்டு சிறிய வயதில்! - இப்போதோ… நீ சென்ற பின்னும், இனி வரவே மாட்டாய்- என அறிந்த பின்னும்… …என்ன சொல்ல? - ———————- >கவிஞர் வ.விஜயலட்சுமி அம்மாவின் நினைவில் ...

கைக்கூ

Posted: 16 Jan 2014 08:33 AM PST





ஜன்னல் கூட்டினுள்
ஒரு அழகிய மின்னல்
அவளின் கண்கள்

வாழ்த்தொலி கேட்டவள் யார்?

Posted: 16 Jan 2014 07:58 AM PST

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்என் னேஎன்னே ஈதேஎம் தோழி பரிசேலோர் எம்பாவாய்'' என்பது திருவெம்பாவையின் முதற்பாடல். இப்பாடல் இரு பெண்களைப் பற்றிப் பேசுகிறதா? அன்றி ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகிறதா? என்னும் ஐயம் உரையாசிரியர்களிடையே நிலவுகிறது. வரதராஜபிள்ளை ...

கதவு...

Posted: 16 Jan 2014 07:56 AM PST

- கோடிப் பேரில் எத்தனை விழுக்காடு பேர் திருடராய் இருந்து விடப்போகிறிரார்கள் - திருடனுக்குப் பயந்து கதவு மாட்டியிருப்பதாய் சொல்லிக்கொண்டு திரிகிறோம் திருடுபவனுக்கு கதவும் பூட்டும் ஒரு பொருட்டே இல்லை - இயங்கும் சுவர் இசைக்கும் சுவர் கதவு - நிம்மதியாய் டி.வி.பார்க்க சோறு சாப்பிட திறந்தமேனிக்கு படுத்து உருள என் கதவு எனக்குக் காவல் காக்கிறது எனக்கான வேஷம் போடும்வரை வீதிக்குத் திரையாய் வாழ்கிறது! - என் சத்தங்கள் சச்சரவுகளுக்கு எல்லை வகுத்து நிற்கின்றது காதலி மனைவி குழந்தை எல்லோரோடும் நான் ...

கருப்பட்டி மருத்துவம்!

Posted: 16 Jan 2014 06:48 AM PST

கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (196)

Posted: 16 Jan 2014 06:33 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

வாடிவாசல் இன்பம் !

Posted: 16 Jan 2014 06:19 AM PST

வாடிவாசல்  இன்பம் !        14-1-2014 பொங்கல் அன்று மதுரை அவனியாபுரம் மஞ்சு விரட்டு நடந்தது ! இதனைத் தொலைக்காட்சியில் நான் கண்டேன் ! நடத்தியவர்களின் அறிவிப்புகள் மிகவும் சுவையாக இருந்தன ! மதுரை மண்ணுக்கே உரிய கறாரும் , தெளிவும் , பட்டுப் பட்டு என்று பேசும் தன்மையும் , செய்தியைச் சுற்றிவளைக்காமல் சொல்லும் நேர்த்தியும் என்னைக் கிறங்கடித்தன! கேளுங்களேன் ! :-   "வாடிவாசலை மறைக்காதே !" "வாடிவாசலை மறைக்காதே !" "வாசலை மறைத்தால் மாடு எப்படிய்யா வரும் ?" "கோச்சடை பொசலான் மாடு ! " "கோச்சடை பொசலான் ...

தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் - மதுமிதா

Posted: 16 Jan 2014 06:11 AM PST

தாயகட்டம், பல்லாங்குழி, ஐஞ்சாங்கல், நொண்டி, காயா பழமா, காக்காகம்பு, தொட்டுவிளையாட்ட ு போன்ற பெயர்களை தற்போதுள்ள தலைமுறையினர் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை. இந்த பெயர்கள் எல்லாம் தமிழர்களின் பழங்கால விளையாட்டுகள். பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, சூ விளையாட்டு, உப்புவிளையாட்டு, ஐந்துபந்து, கால்தாண் என 65 விளையாட்டுகள் இருந்தன. இதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை ...

முயன்றால் முடியும்!

Posted: 16 Jan 2014 05:00 AM PST

வாக்குவாக்' எனும் பெயருடைய தவளையும், "கொர்கொர்' எனும் பெயருடைய தவளையும் நண்பர்களாக இருந்தன. அவை இரண்டும் காட்டோரத்தில் வாழ்ந்து வந்தன. குவாக்குவாக் மிகவும் தன்னம்பிக்கை மிக்கது. எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். ஆனால், கொர்கொர் தவளையோ ஒரு சோம்பேறித் தவளை. எதைக் கண்டும் அஞ்சும். அற்ப விஷயத்திற்குக்கூட பெரிதாகக் கவலைப்படும். இரண்டும் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தன. அப்போது தொலைவில் ஒரு குடிசை தெரிந்தது. அந்தக் குடிசைக்குள் நுழைந்து பார்க்க விரும்பின தவளைகள். உள்ளே யார் இருக்கிறார்கள், ...

சாம்பிராணியா?…நினைவா?

Posted: 16 Jan 2014 04:32 AM PST

- அம்மா… நீ போனபிறகு… பங்கிடப்பட்ட பாத்திரங்கள், பண்டங்கள் இடையே… கேட்பாரற்றுக் கிடந்தது அந்த சாம்பிராணி ஜாடி! - சின்னஞ்சிறிய மண் குடுவை, மேலே துளைகளுடன் மூடி! சாம்பிராணி வத்தி வைத்தால் மணமணக்கும் புகையோடு! - இன்று… அது… என் பூஜை அறையில்! ஒவ்வொரு நாளும் வருவது வத்தியின் புகையா? உன் நினைவென்னும் புகையா? - ————————— >கவிஞர் வ.விஜயலட்சுமி அம்மாவின் நினைவில் – கவிதைகள் _________________

அதிகாலையிலே எழுவோம்!

Posted: 16 Jan 2014 04:07 AM PST

சூரிய உதயத்தின் போது, உறங்கிக் கொண்டிருப்போரை, 'சாணியில் தோன்றும் புழுவை விட மட்டமானவன்' என்று, சாஸ்திரம் திட்டுகிறது. நம் வழிபாட்டில், சூரியனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படக் காரணம், மற்ற தெய்வங்களை, புராணங்கள் சொல்லும் வடிவமைப்பை வைத்து, மனக்கண்ணால் தான் பார்க்க முடியும். ஆனால், சூரியன், நாம் நேரடியாக காணும் தெய்வம். சூரிய வழிபாட்டிற்கு, ஜாதி, மத வித்தியாசமில்லை. காரணம், சூரியன் இல்லாமல் உலகம் இல்லை. பயிர்கள் விளையவும், கிருமிகள் அழியவும் காரணமாக இருப்பவர் அவரே! ஒரு நாளில், 12:00 ...

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் அபூர்வ புகைப்படங்கள்.

Posted: 16 Jan 2014 03:37 AM PST

பழைய தமிழ் சினிமா நடிக நடிகையர் புகைப்படங்கள். (தொடர்) நம்மில் பலருக்கு அந்தக்கால நடிக நடிகையரின் புகைப்படங்களை காணும் போதோ, அல்லது தொலைக்காட்சிகளில் அவர்கள் நடித்த படங்களைக் காணும் போதோ மனதுக்குள் ஒரு இனம் புரியா சந்தோஷம் பரவுவதை உணர முடியும். நாம் டைம் மிஷினில் ஏறி அந்தக் காலத்திற்கு சென்று விட மாட்டோமா என்ற ஏக்கம் நமக்கு வருவதுண்டு. அதுவும் அரிய புகைப்படங்களைப் பார்க்கையில் ஏற்படும் பரவசமே தனிதான். அதற்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்தத் திரி. அன்பர்களும் தங்களிடம் உள்ள அரிய நட்சத்திரங்களின் ...

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்')

Posted: 16 Jan 2014 03:10 AM PST

'கண்கள்' தொடர் 7 ('சிவாஜி என்ற மாநடிகர்') தொடர்-7 ''கண்கள்' 'வெளி வந்த நாள்: 05.11.1953 கதை வசனம் – என்.வி.ராஜாமணி எம்.ஏ. பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி இசை – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன் நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி, எஸ்.வி.வெங்கட்ராமன் இயக்கம்  – கிருஷ்ணன், பஞ்சு நடிகர் நடிகையர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், ...

இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்!

Posted: 16 Jan 2014 02:27 AM PST

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும். திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர். தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் ...

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Posted: 16 Jan 2014 01:47 AM PST

பொங்கல் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் குளக்கரையில் சேவல் சண்டை போட்டி நடந்தது. - அப்போது போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்று துள்ளிக்குதித்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த.வ.உ.சி.நகரைச் சேர்ந்த சசிக்குமார் மீது விழுந்தது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி சசிக்குமாரின் தொடைப்பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. - இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சசிக்குமார் பரிதாபமாக ...

தைப்பூச திருவிழாவும், சிறப்புகளும்!

Posted: 16 Jan 2014 12:20 AM PST

- தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் ஸ்கந்தகு முருகப் பெருமானுக்கு கொண்டாடப் படும் விழாவாகும் - - .தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு (சுப்பிரமணியன் அல்லது கார்த்திகேயன்) எடுக்கப்படும் விழாவாகும். – - நட்சத்திர ...

எங்கிருந்தாலும் என்னையே…

Posted: 16 Jan 2014 12:11 AM PST


-
ஒரு நேரம்
முறைப்பது போல்,
ஒரு நேரம் சிரிப்பது போல்!
சில நேரம் கனிவாக
எங்கிருந்தாலும் என்னையே
பார்க்கின்றன, அம்மா!
உன் விழிகள் -
படத்திலிருந்து..!
-
———————-
>கவிஞர் வ.விஜயலட்சுமி
அம்மாவின் நினைவில் – கவிதைகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை

Posted: 16 Jan 2014 12:09 AM PST

M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ...

சினிமா செய்திகள் - (தொடர் பதிவு)

Posted: 15 Jan 2014 11:59 PM PST



--
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும்
பெயரிடப்படாத படத்தில், பாலிவுட் நடிகை
சோனாக்‌ஷி சின்கா ஒரு பாடலுக்கு குத்து டான்ஸ்
ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
----------------------

கத்தரில் குடியரசு தின ஓவியப்போட்டி: பதிவு துவக்கம்!

Posted: 15 Jan 2014 10:43 PM PST

தோஹா: - இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களின் பாகமாக, 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அமைப்பான "மலர்வாடி", மலபார் கோல்ட் & டயமன்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இரண்டாவது ஓவியப்போட்டி நடத்த உள்ளது. - கத்தரில் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அமைப்பான "மலர்வாடி" ஆண்டு தோறும் குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறது. வருகிற குடியரசு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி ஒன்று நடத்த உள்ளது. இதில், மழலையர் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்புவரை இந்தியப் பள்ளிகளில் படிக்கும் ...

ஏழுமலையான் – வெறுங்கை வேடன்

Posted: 15 Jan 2014 08:55 PM PST

- எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச் சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். ————— நன்றி: தினமணி

போச்சுபோச்சு--- போயே போச்சு

Posted: 15 Jan 2014 06:19 PM PST

ஒருவர் ----"போச்சு போச்சு ,புத்தம் புதிய செருப்பு , 699/-ரூபா. கோயில் வாசல்லே காணாம போய்டுத்து ---------"
அடுத்தவர் ----" யாரையாவது கேட்டீர்களா? டோக்கன் கொடுக்கும் இடத்தில் வைத்து இருக்கலாமே ----"
ஒருவர் ---" என்னோடது இல்லீங்க . மத்தவங்க எடுக்கிறதற்கு முன்னால், நான் எடுக்க நினைத்தேன். வேற ஒத்தன் முந்திட்டான் "
(எப்போதோ எங்கேயோ படித்தது )
ரமணியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™