Tamil News | Online Tamil News |
- கூட்டணி இல்லை - லோக்சபா தேர்தலுக்கு புது "ரூட்' போடுகிறார் மாயாவதி
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் : வெளிநாட்டு நிறுவனத்திடம் விசாரணை
- டில்லியில் ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் பதவிக்கு நெருக்கடி: எம்.எல்.ஏ., போர்க்கொடி
- சிறுபான்மையினர் நலனை மட்டும் யோசிப்பதா? நரேந்திர மோடி பாய்ச்சல்
- ராகுல் பெயர் அறிவிக்கப்படுமா? கடைசி நேரத்தில் நிலவும் இழுபறி
- ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு நான்கு "சீட்' உறுதி: கூட்டணி சேர்க்க தி.மு.க., பேரம்
- 'கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்': கருணாநிதி
- ஜெ., பிரதமர் கனவு என்னானது? மோடியை ஆதரிக்கிறார் சோ
- ராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்?
- சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு உதவியது யார்?
- மக்களை "வீட்டுச் சிறையில்' அடைத்த புலி எங்கே?: 10 நாளாகியும் பிடிபடாத மர்மம்
| கூட்டணி இல்லை - லோக்சபா தேர்தலுக்கு புது "ரூட்' போடுகிறார் மாயாவதி Posted: லக்னோ: ""லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ., உட்பட, எந்தக் கட்சியுடனும், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்காது. தேர்தலில், தனித்தே போட்டியிடும். சிறையில் இருக்க நேரிட்டாலும், தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறமாட்டேன்,'' என, அந்தக் கட்சியின் தலைவர், மாயாவதி கூறினார்.பிரமாண்ட பொதுக்கூட்டம் : பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதிக்கு, நேற்று, 58வது பிறந்த நாள். இதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், மாயாவதி பேசியதாவது: லோக்சபா தேர்தலை, பகுஜன் சமாஜ் கட்சி, நாடு முழுவதும், ... |
| நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் : வெளிநாட்டு நிறுவனத்திடம் விசாரணை Posted: புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில், மலேசிய நிறுவனத்திடம் சி.பி.ஐ., விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டைப் பெற, பொய்யான சொத்து மதிப்பு அறிக்கை சமர்ப்பித்துஉள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்நிறுவனம், ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, மலேசிய நிறுவனத்தின் சொத்து மதிப்பை ... |
| டில்லியில் ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் பதவிக்கு நெருக்கடி: எம்.எல்.ஏ., போர்க்கொடி Posted: புதுடில்லி : டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவிக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. மந்திரி பதவி கிடைக்காத, எம்.எல்.ஏ., ஒருவர், அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ''தேர்தலுக்கு முன், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதிலிருந்து, 'ஆம் ஆத்மி' கட்சி விலகிச் செல்கிறது,'' என, அந்த எம்.எல்.ஏ., குற்றம் சாட்டிஉள்ளார்.டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில், அமைச்சர் பதவி கிடைக்காமல், அதிருப்தி அடைந்தவர், எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி. அப்போதே தன் அதிருப்தியை ... |
| சிறுபான்மையினர் நலனை மட்டும் யோசிப்பதா? நரேந்திர மோடி பாய்ச்சல் Posted: காந்திநகர் : 'மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, சிறுபான்மையினர் நலத்தை மட்டுமே யோசிக்கிறார். நாட்டில் உள்ள மற்ற பிரிவினர்களின் நலனையும் கவனிக்கும்படி, அவரை அறிவுறுத்துங்கள்' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதம்:மத்திய உள்துறை அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சுஷில் குமார் ஷிண்டே, கடந்த வாரம், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நாடு முழுவதும் உள்ள சிறை களில், ... |
| ராகுல் பெயர் அறிவிக்கப்படுமா? கடைசி நேரத்தில் நிலவும் இழுபறி Posted: டில்லியில் நடக்கவுள்ள, காங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல் அறிவிக்கப்படுவது குறித்து, காங்கிரசுக்குள், கருத்து வேறுபாடு, எழுந்துள்ளது.நேற்று முன்தினம், வட மாநில பத்திரிகைக்கு, பேட்டியளித்த ராகுல், 'காங்கிரஸ் கட்சி, எத்தகைய பொறுப்பை அளித்தாலும், அதை ஏற்று செயல்படுவதற்கு, தயராகவே உள்ளேன்' என கூறியிருந்தார்.நாளை டில்லியில், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்ப்பு நிலவி வந்தது.ஆனால், 'பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை, இப்போது செய்ய வேண்டாம்' என, சோனியா ... |
| ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு நான்கு "சீட்' உறுதி: கூட்டணி சேர்க்க தி.மு.க., பேரம் Posted: சட்டசபையில், தற்போது கட்சிகளுக்கு உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, நான்கு, "சீட்'களும், மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், தலா ஒரு சீட்டும் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அந்தக் கட்சிக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, விட்டுக் கொடுக்க, தி.மு.க., தரப்பு தயாராக உள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது, ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ள, ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த மாதம், 7ம் தேதி, புதிய எம்.பி.,க்களை தேர்வு ... |
| 'கனிமொழியை பார்த்து பொறாமைப்படுகிறேன்': கருணாநிதி Posted: தென் சென்னை மாவட்ட, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவுபேரவை சார்பில், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று முன்தினமும், நேற்றும், இன்றும், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நடந்த துவக்க விழாவில், கனிமொழி பேசியதாவது:எந்த ஒரு நாட்டில், சரித்திரத்தை மனிதன் மறந்து விடுகிறானோ, அவன், வாழ்க்கையை மறந்து விடுகிறான். தமிழர்கள் ஒன்று திரண்டு, வீழ்ந்த சமுதாயத்தை மீட்டெடுக்க பாடுபட வேண்டும்.எந்த மதம், ஜாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்கள் என்றால், கொண்டாட வேண்டிய முக்கிய விழா, பொங்கல் திருநாள். இங்கு நடத்தப்படுகிற, கலை ... |
| ஜெ., பிரதமர் கனவு என்னானது? மோடியை ஆதரிக்கிறார் சோ Posted: ''பா.ஜ.,வை வெற்றி பெறச்செய்து, மோடியை பிரதமராக்குவது முதல் குறிக்கோள். ஒருவேளை, இதற்கு வாய்ப்பில்லை எனில், ஜெயலலிதா பிரதமராக, பா.ஜ., ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, 'துக்ளக்' வார இதழின் ஆசிரியர், சோ ராமசாமி கூறினார்.'துக்ளக்' வார இதழின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நடந்தது. இதில், சோ பேசியதாவது:'ஊழல் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல' என, அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அதை ஏற்றுக் கொண்டாலும், ஊழலில், பா.ஜ., முதல் வகுப்பு மாணவனாக உள்ளது. காங்கிரஸ் - தி.மு.க., உட்பட, பல கட்சிகள், ஊழலில், பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளன.எந்த பயனுமில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலின், ... |
| ராஜ்யசபா - எம்.பி.,யாகிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்? Posted: சமீபத்தில், விஜயகாந்தின் தே.மு.தி.க.,விலிருந்து விலகிய, பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, அண்ணா விருது அறிவித்து, தமிழக அரசு கவுரவித்துள்ளது. அடுத்த கட்டமாக அவர், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., ஆக்கப்படுவார் என, செய்திகள் கசிந்துள்ளன.விஜயகாந்த் கட்சியில், தனக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதிய, பண்ருட்டி ராமச்சந்திரன், முதலில், தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தை புறக்கணித்தார். அப்போது, விஜய காந்த் நேரடியாக தலையிட்டு, சமாதானம் செய்ததால், தாமதமாக கூட்டத்துக்கு வந்தார்.ஆளும் கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டசபைக்கு ஒரு முறை, தே.மு.தி.க., - ... |
| சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு உதவியது யார்? Posted: சண்டிகர் : முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில், பஞ்சாபில் நடந்த, சீக்கியர் மீதான தாக்குதலுக்கு, அப்போதைய பிரிட்டன் பிரதமர், மார்கரெட் தாட்சர் உதவியதாக, வெளியான செய்தி, பஞ்சாபிலும், பிரிட்டனில் வசிக்கும், சீக்கியர்கள் மத்தியிலும், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்: காங்., கட்சியைச் சேர்ந்த, இந்திரா பிரதமராக இருந்தபோது, 1984ம் ஆண்டு, பஞ்சாபில், சீக்கியர் கலவரம் உருவானது. இதை ஒடுக்கவும், அமிர்தசரஸ் பொற் கோவிலில் புகுந்திருந்த தீவிரவாதிகளை வெளியேற்றவும், இந்திய ராணுவம், 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' என்ற பெயரில், களம் இறங்கியது. ... |
| மக்களை "வீட்டுச் சிறையில்' அடைத்த புலி எங்கே?: 10 நாளாகியும் பிடிபடாத மர்மம் Posted: ஊட்டி: ஊட்டியில், இரு பெண்கள் உள்பட மூவரை கொன்றுவிட்டு, கடந்த 10 நாட்களாக, வனத்துறையின் வலையில் பிடிபடாமல் பதுங்கியிருக்கும் புலி மீதான அச்சத்தால், தோட்ட வேலைக்குச் செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர் தொழிலாளர்கள். பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புலி எப்போது பிடிபடும், சகஜ நிலை திரும்புவது எப்போது, என்ற ஏக்கத்திலுள்ளனர் ஊட்டி மக்கள்.நீலகிரி மாவட்டம், ஊட்டி தொட்டபெட்டா பகுதியில், அடுத்தடுத்து மூவரை கொன்ற புலியை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பொருத்தியும், கூண்டுகளை வைத்தும், பல நாட்களாக காத்திருக்கிறது வனத்துறை. இந்நிலையில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 16,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |