ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அபூர்வ கானங்கள்
- தக்காளி ..! இந்தியா டா ..
- விரகம் (கஜல் )
- கைக்கூ
- கைக்கூ
- கைக்கூ
- என் மகளின் காதணி விழா
- பருத்தி ஆடையும் தமிழ் மணமும்!
- பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே
- ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு...
- 4500 ஆண்டுகளுக்கு முன்பே வீரத் தமிழன் விளையாட்டு!
- கஜல் ஓர் அறிமுகம்.
- தைத் திருநாள் வாழ்த்துக்கள்
- இதை பாருங்களேன் - மதுமிதா
- தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு
- விலங்கு - ஒரு பக்க கதை
- ஹைக்கூ
- வேலன்:-குவிஸ் கேள்வி பதில்கள்
- நவீன சுவடி
- ஈழத் தமிழர் வாழ்வில் பொங்கல் இனி பொங்குவது பிள்ளைகளுக்காக…
- எதிர்ப்பார்ப்பு
- ஹைக்கூ கவிதைகள்
- ஹைக்கூ
- பொங்கலும் புதிரும்!
- சளி பிடித்தால்...(10 கட்டளைகள்)
| Posted: 15 Jan 2014 11:01 AM PST பழைய பாடல்களைக் கேட்பதென்றாலே தனி யின்பம். புதிய தலைமுறையினர் பழைய பாடல்களைக் கேட்பதற்கம், பழைய தலைமுறையினர் அதே பழைய பாடல்களைக் கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. புதிய தலைமுறையினர் பாடலின் இனிமை, மெட்டு, இசை போன்ற அம்சங்களால் பழைய பாடல்களில் ஈர்க்கப் பட்டு ரசிக்கின்றனர். பழைய தலைமுறையினரோ, இவையல்லாமல் அவை தங்கள் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து அதனுடன் தொடர்புடைய நினைவுகளை அசை போடுகின்றனர். அது எந்த விதமான உணர்வையும் பிரதிபலிக்கலாம். இங்கே நாம் பழைய பாடல்களை, முடிந்த வரை 1980ம் ஆண்டினைத் தாண்டாமல், ... |
| Posted: 15 Jan 2014 10:42 AM PST தக்காளி ..! இந்தியா டா .. 1.எவ்ளோ பெரிய ஊழலும் அம்பலமாகிடும்.ஆனா ,பத்து பைசா கூட ரெக்கவரி ஆகாது.. 2.கோயில்ல செருப்பு தொலைஞ்சு போகாம இருக்க, ஒரு செருப்ப அந்த பக்கமும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டுட்டு போவோம்.. 3.திரைல நடிக்கிற கூத்தாடிய தலைவன் ரேஞ்சுக்கு FEEL பன்னிக்குவோம். 4.அப்பன் செத்தாலும், ஆத்தா செத்தாலும் அத வச்சு அரசியல் பண்ணுவோம் 5.அம்பது லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் ரெண்டு ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கட்டித்தொங்க விட்டுத்தான் ஓட்டுவோம் 6.ஃபாரினுக்கு ... |
| Posted: 15 Jan 2014 06:30 AM PST விரகம் (கஜல் ) சொல்லத் தோன்றியும் சொல்ல முடியாத நிறையப் பசியிருந்தும் உண்ண முடியாத கலக்கம் இருந்தும் தூங்க முடியாத தவிப்பு . |
| Posted: 15 Jan 2014 06:30 AM PST மீண்டும் குழந்தையாகிறான் காதலில் தோற்றவன் நிர்வாணமாய் |
| Posted: 15 Jan 2014 06:28 AM PST தொட்டிலில் தூங்குகிறது எம் காதலும் நம் காமமும் குழந்தையாக ! |
| Posted: 15 Jan 2014 06:27 AM PST கைக்கூ சாரிக்கு விலை பேசுகிறாள் ஆடையணிய நேரமில்லா விபச்சாரி |
| Posted: 15 Jan 2014 04:20 AM PST |
| Posted: 15 Jan 2014 03:46 AM PST சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு கைத்தறி (கோ-ஆஃப்டெக்ஸ்) தில்லையாடி வள்ளியம்மை நிறுவனம் புதியதாக மணமகன், மணமகள் உருவம் பொறிக்கப்பட்ட முகூர்த்த பட்டுச் சேலையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விவரங்களை அறிய ஆவல் கொண்டு அந்நிறுவனத்தின் இயக்குநர் சகாயம் அவர்களைச் சந்தித்தோம். அவர் சொல்கிறார்... ""நான் கடந்த ஆண்டு இங்கு மாற்றலாகி வரும்பொழுதே விற்பனையைக் கூட்டுவதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருந்தது. கடந்த ஆண்டு 62 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு 100 கோடி என்று இலக்கு வைத்தோம். அதற்காக அலுவலர்கள் ... |
| பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே Posted: 15 Jan 2014 02:24 AM PST பெண்களுக்கான நாவல் - ஒப்பனைகள் கலைவதற்கே 2000 வது ஆண்டுவரைஅடிமைத்தளையிலிருந்து ஏதோ ஒரு வகையில் வெளியேற முடியாமல் உழன்ற பெண்கள் சமூகத்தை கருத்தில் கொண்டால் , தொழில் நுட்ப உலகமாகிவிட்ட கடந்த பத்து வருடங்களில் பெண் சமூகம் பெற்ற சுதந்திரம் கிட்ட அபரிமிதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. அப்படி அபரிமிதமாக கிடைத்த சுதந்திரத்தை பெண்கள் எந்த அளவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள், அப்படி பயன்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள், சாதக பாதகங்கள் என்னென்ன, அப்படி பயன்படுத்தியதில் நிகழ்ந்த பிறழ்வுகள் என்னென்ன, அவ்வகையான ... |
| ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு... Posted: 15 Jan 2014 02:16 AM PST ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு- பெண் செவிலியர் கட்டாயம் இருக்க வேண்டும் சமீபத்தில் தனியார் மருத்துவ மனைக்குச் சிகிச்சை பெறச் சென்ற ஒரு இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சென்னை டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாகவோ பரவலாகவோ நடைபெறுவதில்லை. ஆனால், ஒரு சில நபர்கள், டாக்டர் என்று மிகுந்த உரிமை எடுத்துக் கொண்டு எதிர்பாலினரிடம் வரம்பு மீற முற் பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், அவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென நோயாளிகள் ... |
| 4500 ஆண்டுகளுக்கு முன்பே வீரத் தமிழன் விளையாட்டு! Posted: 15 Jan 2014 02:13 AM PST தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டின் வரலாறு குறித்த ஓவியங்கள், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பகுதியிலுள்ள பாறைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு விளையாட்டு, 4500 ஆண்டுகளுக்கு முன்பே நடந்ததற்கான ஆதாரங்கள், நீலகிரி மாவட்டத்தில் கிடைத்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த சான்றுகள், பாறை ஓவியங்களின் மூலமாகவும், வரலாற்றுச் சின்னங்கள் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளன. ... |
| Posted: 15 Jan 2014 01:09 AM PST கஜல் ஓர் அறிமுகம். 'கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். 'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. 'கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். - அப்துல் ரகுமான். அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய ... |
| Posted: 15 Jan 2014 12:36 AM PST வணக்கம், தைப் பொங்கல் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தடைகள் நீங்கி, தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம். வளமும், நலமும் பெற்று, இயற்கைக்கு இயைந்து இனிமையுடன் வாழ்வோம். |
| Posted: 15 Jan 2014 12:36 AM PST ![]() |
| தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு Posted: 14 Jan 2014 11:34 PM PST சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி, சூரனை வதம் செய்ய முருகப் பெருமானுக்கு வெற்றிவேலினை வழங்கிய நாளை தைப்பூசம் என்று வேத விற்பன்னர்கள் அழைத்தனர். தை மாதத்தின் பவுர்ணமி நாளுக்கு அடுத்து நாளை இந்து மக்கள் 'தைப்பூச திருவிழா' என்ற பெயரில் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, தமிழ் கடவுளான முருகனை வணங்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் இந்த திருவிழாவை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். உலக தமிழர்களும் இவ்விழாவினை வளமை மாறாமல் கொண்டாடி மகிழ்கின்றனர். அவ்வகையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான ... |
| Posted: 14 Jan 2014 11:27 PM PST "சார்.. உங்க நண்பர் விஜயன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கொலை நடந்த அன்று நீங்க அவர் வீட்டுக்குப் போயிருக்கீங்க உண்மைதானே?' என்றார் இன்ஸ்பெக்டர் குமரன். - "சார், நான் அவரைப் பார்க்கப் போனது செவ்வாய் கிழமை. அன்று அவரும் வீட்டில் இல்லை. வராண்டாவில் கிடந்த நாற்காலியில் கொஞ்சநேரம் குமுதம் படிச்சிட்டு வந்துட்டேன்… சார். மறுநாள்தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். அன்று நான் ஊரில் இல்லை…' என்றா சதீஷ். - "குமுதம் அங்கேயே கிடந்ததா?' - "இல்ல சார்.. வர்ற வழியில் ஹன்சிகா சிம்பு காதலா?ன்னு குமுதம் ... |
| Posted: 14 Jan 2014 11:20 PM PST அறையெங்கும் வெளிச்சம் சுடரும் விளக்கின் அடியில் வெள்ளை இருட்டு . விஞ்ஞானம் உணர்த்திட முடியாத ரகசியம் மரணத்தின் மர்மம். யாரேனும் பார்க்கப் போகிறார்கள் நிர்வாணமாய் ஆற்றில் நீராடும் குருவி. எந்தப் பொறியாளரால் நவீனமாய் கட்டப்பட்டது? கரையான் புற்று. மொழியின் அழகில் அமைந்திருக்கிறது கவிதை உயிர். மனைவியின் புன்சிரிப்பில் தணிந்து அடங்கியது எவர்மீதோ இருந்த கோபம். |
| Posted: 14 Jan 2014 11:08 PM PST இதுவும் அறிவு மற்றும் படிப்பு சம்பந்தமான சாப்ட்வேர்.இதில் நமது பொது அறிவினை வளர்த்துக்கொள்ள ஒரு கேள்விக்கு நான்குவிதமான பதில்கள்கொடுத்துள்ளார்கள் சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்முடைய பெயரை தட்டச்சு செய்யவேண்டும். இதில் cricket.Films/Tv.General Knowledge.Geography.History.Literature.Pop Music.Rugby Union.Science.Soccer.Misc Sports என பதினொன்று தலைப்புகளில் ... |
| Posted: 14 Jan 2014 11:03 PM PST அம்மாவின் மேல் வெறுப்பு ஆறாதது ரணம் இகழ்வது உரிமை ஈக்களைக் கொல் உடையைக் குறை ஊக்க மருந்து உண் எளிமையை கைவிடு ஏமாற்றிப் பிழை ஐயம் கொள் ஓற்றுமைச் சீர்க்குலை ஓய்வை விரும்பு ஓளடதமே உணவு ஃ பயன்படாத அடுப்பு -பாட்டியும் பாட்டனும் இப்பேரனை மன்னிக்கட்டும். |
| ஈழத் தமிழர் வாழ்வில் பொங்கல் இனி பொங்குவது பிள்ளைகளுக்காக… Posted: 14 Jan 2014 10:55 PM PST பொங்கல் என்றாலே வாயில் இனிக்கிறது. ஆனால், அந்த இனிப்பை வாயில் போட்டுக்கொள்வதுதான் ரொம்பக் கடினம் பாரதிக்கு. போருக்குப் பிறகு, நான்கு ஆண்டுகளாகப் பொங்கலைத் தவிர்த்துவந்தாள். "எங்கள் வீட்டில் பொங்கல் கிடையாதா அம்மா?" என்று பிள்ளைகள் கேட்டபோது, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று தெரியவில்லை. பிள்ளைகளை வாரியணைத்துக்கொண்டு ஒரு கணம் விம்மினாள். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அக்கம்பக்கமெல்லாம் பொங்கலுக்காகக் களைகட்டும்போது, தங்கள் வீட்டில் மட்டும் பொங்கல் இல்லையென்றால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? ... |
| Posted: 14 Jan 2014 10:39 PM PST எதிர்ப்பார்ப்பு பழையன கழிதலும் புதியன புகுதலுமாய் புதிது புதியதாய் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி சேமித்துக் கொள்கிறது உள் மனக் கணினி. எதிர்ப்பார்ப்புகள் இல்லாதவர்கள் என்று எவருமில்லை யிந்த அவனியில், யார் யாரோ எப்பொழுதும் எதையோ எதிபார்த்துக் காத்திருப்பர் ஒவ்வொரு நொடிதோறும், எதிர்ப் பார்ப்பது எதிர்பாராமல் நடந்து விடும் சற்று காலதாமதமாகவேனும், எங்கும்,எந்நேரத்திலும் யாரேனும் ஒருவர் எதை எதையோ எதிர்பார்த்து எமாந்து விடுவது முண்டு. எதிர்ப்பார்த்தது எதிப்பார்த்தபடி நிகழ்ந்துவிடின் ... |
| Posted: 14 Jan 2014 10:08 PM PST முதன்மைக் கட்டுரை: தமிழ் ஹைக்கூ கவிதைகள் பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள் - நா.முத்துக்குமார் வெள்ளையடித்த சுவர் மேலும் அழகாய்க் குழந்தையின் கிறுக்கல்கள் - சீனு. தமிழ்மணி சோளக்கொல்லை பொம்மைக்கும் உடையுண்டு எங்களுக்கு! - சீனு. தமிழ்மணி |
| Posted: 14 Jan 2014 10:06 PM PST ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில் 7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக் கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சிலபிள் (syllable) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில் இதனை ஓன் (音, on)) அல்லது ஓஞ்சி (音字, onji) அழைக்கிறார்கள். இதன் பொருள் ஓர் ஒலித்துகள் (அல்லது அசை). ஆங்கில மொழியியல் துறைக் கலைச்சொல்லில் இதனை மொரே (morae) என்கின்றனர். ஜப்பானிய மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தமிழ் ... |
| Posted: 14 Jan 2014 08:48 PM PST சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து தமிழின அடையாளத்தை வலுப்படுத்தும் பண்பாட்டு அம்சங்களுள் பொங்கல் முதன்மை பெற்று, அதுவரை இல்லாத பொருள் பொதிவுடன், ஒரு குறியீட்டுத் தகுதியோடு வழங்கத் தொடங்கியது. அப்போது கொண்டையராஜு, கே. மாதவன் ஆகியோரின் வண்ணத்தூரிகைகள் வரைந்த வாழ்த்துமடல் ஓவியங்களும் எழுத்தோவியங்களும், பிறவும், பொங்கலுக்கு முகம் போன்று இருந்த பொருட்களையும் விஷயங்களையும் மட்டுமே மக்களின் மனதில் பதியவைத்தன. ஆனால், இந்தப் பண்பாட்டின் செறிவைக் காட்டும் மற்ற அம்சங்களை அவற்றில் காண முடியாது. அவற்றை ... |
| சளி பிடித்தால்...(10 கட்டளைகள்) Posted: 14 Jan 2014 08:37 PM PST -------------- - நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு ஆகிய இரண்டும் சளியைத் தடுக்க உதவுகின்றன. ஆரஞ்சு, தக்காளி, மற்றும் வைட்டமின் 'சி' அடங்கியுள்ள மற்ற பழங்களையும் சாப்பிடுவது நல்லது - 2) பரவலாக நம்பப்படுவதைப்போல், சளி குளிரில் அல்லது தண்ணீரில் நனைவதால் ஏற்படுவதில்லை. ஆனால் தண்ணீரில் நனைந்தால் சளி மோசமடையக் கூடும் - 3) சளியுள்ளவர் தும்மும்போது வைரஸ் கிருமிகள் காற்றில் கலந்து மற்றவர்களையும் தொற்றுகிறது - 4) தனக்கு ஏற்பட்ட சளி மற்றவர்களுக்கும் பரவாமல் இருக்க சளி கொண்டவர் தனியாகச் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
