Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புழல் சிறை கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்

Posted: 15 Jan 2014 01:35 PM PST

சென்னை புழல் சிறையில் கடந்த 2 நாள்களாக 5 கைதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் புதன்கிழமை திரும்பப்பெறப்பட்டது.

நாளைய மின்தடை

Posted: 15 Jan 2014 01:35 PM PST

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய ஆய்வுக்கூடம்: மத்திய அரசு ரூ.5 கோடி நிதியுதவி

Posted: 15 Jan 2014 01:35 PM PST

சென்னை மருத்துவக் கல்லூரியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிய ஆய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

Posted: 15 Jan 2014 01:34 PM PST

அரசு பஸ்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

அதிமுக இளைஞர்-இளம்பெண்கள் பாசறை: மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள்

Posted: 15 Jan 2014 01:33 PM PST

அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா புதன்கிழமை அறிவித்தார்.

நேர்காணல்... மொழியைக் கடத்தும் எழுத்தாளன்!

Posted: 15 Jan 2014 01:19 PM PST

சங்கப் பாடல்கள் தற்கால வாழ்க்கைச் சூழலுக்கு பொருந்தக் கூடியதா?

தாக்கம் தந்த புத்தகம்

Posted: 15 Jan 2014 01:17 PM PST

சிற்பம் செதுக்குபவர் எப்போதும் பெரும் பணியே ஆற்றுகிறார். அந்த வகையான பணியையே குடவாயில் பாலசுப்பிரமணியன் தொடர்ந்து செய்து வருகிறார்.

வாழ்நாளில் படித்தே ஆக வேண்டிய 10

Posted: 15 Jan 2014 01:16 PM PST

1. திருக்குறள் 2. பாரதியார் கவிதை நூல் 3. பெரியார் சமூக நீதி - பெரியார் கட்டுரைகள், (விடுதலை) 4. என் சரித்திரம் - உ.வே.சா (ஆனந்த விகடன்) 5. க்ரியா அகராதி - க்ரியா பதிப்பகம்

வாசகர் சந்தேகம் உறைக்குள் உறங்குவது கிழிசலோ?

Posted: 15 Jan 2014 01:13 PM PST

பிளாஸ்டிக் உறையிட்டு புத்தகங்களை வைப்பது ஒரு பார்வையில் நல்ல நோக்கம்தான்.

சென்னை புத்தகக் கண்காட்சி: வெள்ளையானையும் வெல்லிங்டனும்

Posted: 15 Jan 2014 01:10 PM PST

பிரிட்டிஷ் ஆட்சியின் இருண்ட பக்கங்களை விவரிக்கும் வகையில் இந்த ஆண்டு 2 நாவல்கள் புதிதாக வெளிவந்துள்ளன.

தனி மனிதனால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது

Posted: 15 Jan 2014 12:56 PM PST

தனி ஒரு மனிதனால் நாட்டில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது என்று மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.

கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்

Posted: 15 Jan 2014 12:55 PM PST

மீன்பிடிக்கும்போது கடலில் மூழ்கி உயிரிழந்த 3 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா புதன்கிழமை உத்தரவிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் "ஆம் ஆத்மி' காணாமல் போய்விடும்: சுப்பிரமணியன் சுவாமி

Posted: 15 Jan 2014 12:55 PM PST

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி காணாமல் போய்விடும் என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொங்கல் கொண்டாட்டம்

Posted: 15 Jan 2014 12:53 PM PST

சாயத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே 20 கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி பொங்கல் கொண்டாடினர்.

நாகை மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை

Posted: 15 Jan 2014 12:51 PM PST

நாகை மாவட்டம், கோடியக்கரையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டு புதன்கிழமை கரை திரும்பினர்.

சேவலின் விஷ கத்தியால் தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

Posted: 15 Jan 2014 12:51 PM PST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சேவல்கட்டு போட்டியின் போது சேவலின் காலில் இருந்த கத்தி குத்தியதில், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

35 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.19 கோடி நிதி

Posted: 15 Jan 2014 12:50 PM PST

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 35 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.19 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆறுமுகனேரியில் திமுக செயலாளர் படுகொலை

Posted: 15 Jan 2014 12:47 PM PST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி நகர திமுக செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஆறுமுகனேரியில் திமுக செயலாளர் படுகொலை

Posted: 15 Jan 2014 12:46 PM PST

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி நகர திமுக செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தம்பதி உள்பட 4 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் சாவு

Posted: 15 Jan 2014 12:26 PM PST

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்த கார் நிலைத்தடுமாறி மரத்தில் மோதி பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 பேர் இறந்தனர்.

ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் ஜெகஜீவன்ராம்: ஜி.கே.வாசன் புகழாரம்

Posted: 15 Jan 2014 12:26 PM PST

ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன்ராம் என கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டினார்.

ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருப்பு

Posted: 15 Jan 2014 12:23 PM PST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் புதன்கிழமை 15 மணிநேரம் காத்திருந்தனர்.

19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் தனித்தனி இணையதளம்

Posted: 15 Jan 2014 12:22 PM PST

தமிழ்நாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கென தனித்தனியாக இணையதளம் தொடங்கப்படவுள்ளது.

நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்ளாதவனுக்கு தன்னுடைய வரலாறும் புரியாது

Posted: 15 Jan 2014 12:22 PM PST

நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல் இருப்பவன், தன்னுடைய வரலாற்றை என்றைக்குமே புரிந்துகொள்ளாதவனாகி விடுகிறான் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

மார்ச்சுக்குள் 1662 ரயில் பெட்டிகள்

Posted: 15 Jan 2014 12:21 PM PST

நடப்பு நிதியாண்டில் (மார்ச் மாதத்துக்குள்) 1662 ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்க உள்ளது பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். இணைப்பு பெட்டி தொழிற்சாலை.

சிவாஜியை அறிமுகம் செய்த பெருமாள் முதலியார் வீட்டுக்கு சீர்கொண்டு வந்த நடிகர் பிரபு

Posted: 15 Jan 2014 12:20 PM PST

நடிகர் சிவாஜி கணேசனை "பராசக்தி' திரைப்படம் மூலம் அறிமுகம் செய்த வேலூர் நேஷனல் திரையரங்கு உரிமையாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை வருகை தந்து சீர்வரிசை பொருள்கள் அளித்து ஆசி பெற்றுச் சென்றனர்.

ஜனவரி 20 முதல் சென்னையில் தென்னிந்திய அறிவியல் பெருவிழா

Posted: 15 Jan 2014 12:18 PM PST

தென்னிந்திய அறிவியல் பெருவிழா சென்னையில் ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசு அருங்காட்சியகத்தில் தோல்பாவை கண்காட்சி

Posted: 15 Jan 2014 12:18 PM PST

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ஜன.13-ஆம் தேதி தொடங்கிய தோல்பாவை கண்காட்சி ஜனவரி 26-ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"திண்டுக்கல்-விருதுநகர் மின்பாதையில் விரைவில் ரயில் இயக்கப்படும்'

Posted: 15 Jan 2014 12:14 PM PST

திண்டுக்கல்-விருதுநகர் மின்பாதையில் விரைவில் ரயில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மதுரை: பொங்கல் விழாவில் வேஷ்டி, சேலையுடன் வெளிநாட்டவர்

Posted: 15 Jan 2014 12:13 PM PST

மதுரை அலங்காநல்லூர் ஏ.புதுப்பட்டியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டவர் பலர் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலையில் வந்திருந்தனர். ஆட்டுக்கிடாய் சண்டையை ரசித்த அவர்கள், கலைஞர்களுடன் சேர்ந்து ஆட்டம், பாட்டம் என புதன்கிழமை அசத்தினர்.

சென்னை ரயிலில் ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பிகார் இளைஞர் கைது

Posted: 15 Jan 2014 12:13 PM PST

ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பொங்கல்: அரசு பஸ்களில் ஆன்-லைன் மூலம் ரூ. 3.28 கோடி வசூல்

Posted: 15 Jan 2014 12:12 PM PST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆன்-லைன் மூலம் ரூ. 3.28 கோடி டிக்கெட் கட்டணம் வசூல் ஆகியுள்ளது.

கூகுள் அல்ல குருகுலம்தான் உலகில் தலைசிறந்தது

Posted: 15 Jan 2014 12:11 PM PST

கூகுளை விட குருகுலம்தான் உலகிலேயே தலைசிறந்த கல்வி முறை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறினார்.

போலி பாஸ்போர்ட்டில் வந்த பிலால் மாலிக் அண்ணன் கைது

Posted: 15 Jan 2014 12:10 PM PST

திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை போலி பாஸ்போர்ட்டில் வந்த பிலால் மாலிக் அண்ணன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மெரீனாவில் பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார்

Posted: 15 Jan 2014 12:10 PM PST

பொங்கல் விடுமுறையைக் கொண்டாட 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் புதன்கிழமை மெரீனா கடற்கரைக்கு வந்தனர். காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமையன்று மெரீனாவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலங்கானா மசோதா: ஆந்திர சட்டப்பேரவைக்கு மேலும் 10 நாள் அவகாசம்?

Posted: 15 Jan 2014 12:04 PM PST

தெலங்கானா மசோதா குறித்து விவாதித்து முடிவெடுக்க ஆந்திர சட்டப்பேரவைக்கு மேலும் 10 நாள்கள் அவகாசம் அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்துக்களுக்கு தேவையான பாதுகாப்பு: வங்கதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Posted: 15 Jan 2014 12:02 PM PST

வங்கதேசத்தில் உள்ள ஹிந்து சிறுபான்மை சமூகத்தினருக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரும்படி, அந்நாட்டு அரசுக்கு டாக்கா உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி ஊழல்: இந்திய நிறுவனம் குறித்த தகவல்களை மலேசிய அரசிடம் கோருகிறது சிபிஐ

Posted: 15 Jan 2014 12:01 PM PST

நிலக்கரிச் சுரங்க ஊழலில் தொடர்புடைய இந்திய நிறுவனம் குறித்த தகவல்களை தரும்படி விரைவில் மலேசிய அரசிடம் கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

தேர்தல் பிரசாரம்: காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஆலோசனை

Posted: 15 Jan 2014 12:01 PM PST

மக்களவைத் தேர்தலுக்கான பிரசார வியூகத்தை வகுப்பதற்காக காங்கிரஸ் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கடற்படை வீரர்கள் மீதான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு மனு

Posted: 15 Jan 2014 12:00 PM PST

இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு புதன்கிழமை மனு தாக்கல் செய்தது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

Posted: 15 Jan 2014 11:59 AM PST

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

ராஜஸ்தானில் இரு பிரிவினரிடையே மோதல்; 3 பேர் பலி

Posted: 15 Jan 2014 11:58 AM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்

Posted: 15 Jan 2014 11:50 AM PST

மரங்கள் மனித சமுதாயத்துக்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்கள் மற்றும் மரங்கள் அடர்ந்த காடுகள் மனிதன் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசி, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப்பொருள்களை மரத்தின் இலைகள் வடிகட்டி விடுகின்றன.

கல்கியின் கல்விச் சிந்தனைகள்

Posted: 15 Jan 2014 11:49 AM PST

இன்றைய கல்வி முறையானது முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. அறம் சார்ந்த கல்வி என்பது இன்று இல்லை. இன்றைய உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு முன் உள்ள மூன்று சுமைகள் பின்வருமாறு:

காலவரம்பு தேவைதானா?

Posted: 15 Jan 2014 11:48 AM PST

பணியிடத்தில் பாலியல்தொல்லை தொடர்பான புகாருக்கு ஆளான தருண் தேஜ்பால், நீதியரசர் ஏ.கே. கங்குலி ஆகியோர் மீதான நடவடிக்கைகளிலும், தற்போது இதே புகாருக்கு ஆளாகியுள்ள நீதியரசர் ஸ்வதேந்தர் குமார் மீதான நடவடிக்கையிலும் மூன்றுவிதமான அணுகுமுறையை பார்க்க முடிகிறது.

திருவள்ளுவரின் கருத்தை பிரதிபலித்த கன்ஃபூசியஸ்

Posted: 15 Jan 2014 11:45 AM PST

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரும் சீன அறிஞர் கன்ஃபூசியஸýம் ஒத்த கருத்துகளைக் கொண்டிருந்ததாக தமிழக அரசின் திருவள்ளுவர் விருது பெற்ற தைவான் நாட்டுக் கவிஞர் யூசி பெருமிதத்துடன் பேசினார்.

மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை: இந்திய-இலங்கை பேச்சில் உடன்பாடு

Posted: 15 Jan 2014 11:44 AM PST

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க வந்ததாகத் தொடரப்பட்ட வழக்குகளில் கைதாகி இந்திய, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் பரஸ்பரம் உடனே விடுதலை செய்ய இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

தமிழக அரசு விருதுகள் 26-இல் வழங்கப்படும்

Posted: 15 Jan 2014 11:38 AM PST

தமிழக அரசின் விருதுகளில் திருவள்ளுவர் விருதைத் தவிர, மற்ற எட்டு விருதுகளை தலைமைச் செயலகத்தில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார்.

மோடி அல்லது ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: சோ

Posted: 15 Jan 2014 11:37 AM PST

நரேந்திர மோடி பிரதமராக முடியாத சூழல் உருவானால் ஜெயலலிதா பிரதமராக பாஜக ஆதரவளிக்க வேண்டும் என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி விருப்பம் தெரிவித்தார்.

பொற்கோவில் ராணுவ நடவடிக்கையில் தாட்சர் அரசு உதவி?

Posted: 15 Jan 2014 11:26 AM PST

"ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' விவகாரத்தில், பிரிட்டன் பிரதமராக இருந்த தாட்சரின் அறிவுரைப்படி இந்திரா காந்தி நடந்து கொண்டாரா? என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசை பாஜக, அகாலிதளம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலை விவகாரம்: புதிய ஆய்வுக் குழு அமைக்கப்படாது

Posted: 15 Jan 2014 11:22 AM PST

மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த விவகாரத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு குழு எதையும் நியமிக்காது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் எம். வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

தில்லிக்கு சுற்றுலா வந்த டென்மார்க் பெண் பலாத்காரம்

Posted: 15 Jan 2014 11:20 AM PST

தலைநகர் தில்லியில் டென்மார்க் சுற்றுலாப் பெண் பயணி, போதைக்கு அடிமையாகிய கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் 12 பேருக்கு பிடிவாரண்டு

Posted: 15 Jan 2014 11:19 AM PST

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலும் 12 பேருக்கு எதிராக புதன்கிழமை ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆதர்ஷ்: அசோக் சவாண் பெயரை நீக்க சிபிஐ மனு

Posted: 15 Jan 2014 11:18 AM PST

ஆதர்ஷ் ஊழல் வழக்கில் அசோக் சவாண் பெயரை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் சாவு

Posted: 15 Jan 2014 11:17 AM PST

பிகாரில் மகர சங்கராந்தி (பொங்கல்) விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

கேஜரிவால் ஒரு "பொய்யர்': ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ புகார்

Posted: 15 Jan 2014 11:15 AM PST

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து "ஆம் ஆத்மி' தலைமையிலான தில்லி அரசு விலகிச் செல்கிறது. முதல்வர் கேஜரிவால் ஒரு பொய்யர் என அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வினோத் குமார் பின்னி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆம்ஆத்மி அமைச்சர் பதவி விலக வேண்டும்: பாஜக ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jan 2014 11:11 AM PST

ஊழல் வழக்கில் சாட்சியங்களைக் கலைக்க முயன்ற புகாரில், தில்லி பிரதேச சட்ட அமைச்சர் பதவியில் இருந்து சோம்நாத் பார்தி விலக வேண்டுமென வலியுறுத்தி பிரதேச பாஜகவினர் காவல் துறை தலைமையகம் முன்பாக புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிணமூல் கட்சி எம்.பி. ராஜிநாமா: காங்கிரஸில் சேர முடிவு

Posted: 15 Jan 2014 11:07 AM PST

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளரும் எம்.பி.யுமான சோமன் மித்ரா புதன்கிழமை தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்தார்.

வழக்கை ரத்து செய்ய அமெரிக்க நீதிமன்றத்தில் தேவயானி முறையீடு

Posted: 15 Jan 2014 11:05 AM PST

தன் மீதான விசா முறைகேடு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே முறையிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சராக நீடிக்க ஷிண்டேவுக்கு தகுதி இல்லை: ஆர்.கே. சிங் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 15 Jan 2014 11:04 AM PST

மத்திய உள்துறை அமைச்சராக நீடிக்க சுஷில் குமார் ஷிண்டேவுக்கு தகுதி கிடையாது என்று கூறிய அந்த அமைச்சகத்தின் முன்னாள் செயலர் ஆர்.கே. சிங்குக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.கே. சிங் அண்மையில் பாஜகவில் சேர்ந்த பின்பு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறை அதிகாரிகளால் உயிருக்கு ஆபத்து: யாசின் பட்கல்

Posted: 15 Jan 2014 11:01 AM PST

சிறை அதிகாரிகளால் தங்களது உயிருக்கு ஆபத்து உள்ளதாக திகார் சிறையில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலும், அவரது கூட்டாளியும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த ஷிண்டே முயற்சி: பிரதமருக்கு மோடி கடிதம்

Posted: 15 Jan 2014 11:01 AM PST

சிறுபான்மையின இளைஞர்கள் மீதான வழக்குகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ள கருத்து சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் முயற்சி என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறை கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிட தயார்: ராகுல் சூசகம்

Posted: 15 Jan 2014 10:59 AM PST

காங்கிரஸ் கட்சி விரும்பினால் எந்தப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இதன்மூலம் அந்தக் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக போட்டியிடத் தயார் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

ஹாக்கி: வெளியறியது இந்தியா

Posted: 15 Jan 2014 10:50 AM PST

இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி உலக லீக் ஃபைனல் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து வெற்றி

Posted: 15 Jan 2014 10:49 AM PST

மலேசிய சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா, பி.வி.சிந்து வெற்றி பெற்றனர்.

இருபது ஓவர் தொடர்: நியூஸிலாந்து வெற்றி

Posted: 15 Jan 2014 10:48 AM PST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ஒருநாள் தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிப்பு

Posted: 15 Jan 2014 10:47 AM PST

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.

அஞ்சு ஜார்ஜுக்கு தங்கம்: அஸ்வினி நாச்சப்பா பாராட்டு

Posted: 15 Jan 2014 10:47 AM PST

மொனாக்கோவில் 2005-ல் நடைபெற்ற உலக தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

விளையாட்டு மோசடிகளை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்குகிறது சிபிஐ

Posted: 15 Jan 2014 10:46 AM PST

விளையாட்டுத் துறையில் புற்றீசல் போல பெருகி விட்ட சூதாட்டம், மோசடி மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனிப் பிரிவு தொடங்கப்படும் என சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய ஓபன்: கொளுத்தும் வெயிலில் சாதித்த ஜோகோவிச், செரீனா

Posted: 15 Jan 2014 10:41 AM PST

கொளுத்தும் வெயிலில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் வெற்றி பெற்றனர்.

திருச்செந்தூர் கோயிலில் நாளை தைப்பூசத் திருவிழா

Posted: 15 Jan 2014 10:11 AM PST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நடைபெறுகிறது.

குமரியில் திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை

Posted: 15 Jan 2014 10:09 AM PST

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் தமிழறிஞர்கள் புதன்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை சேத்துப்பட்டு ஏரியை புனரமைக்க ரூ. 42 கோடி நிதி

Posted: 15 Jan 2014 10:07 AM PST

சென்னையில் உள்ள சேத்துப்பட்டு ஏரியை புனரமைக்க ரூ.42 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலமேடு ஜல்லிகட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 41 பேர் காயம்

Posted: 15 Jan 2014 10:05 AM PST

மதுரைமாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சீறிப்பாய்ந்த மாடுகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தினர்.

"முஸ்லிம் நாடுகளுடன் சீனாவை இணைக்கும் பாலம் பாகிஸ்தான்'

Posted: 15 Jan 2014 09:59 AM PST

முஸ்லிம் நாடுகளுடன் சீனா உறவைப் பேணுவதற்கு பாகிஸ்தான் பாலமாகச் செயல்படுவதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது: அமெரிக்க எம்.பி.க்கள்

Posted: 15 Jan 2014 09:58 AM PST

கிழக்கு சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு உரிமை கோருவதற்காக சீனா மேற்கொண்டு வரும் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்தலை ஒத்திவைக்க தாய்லாந்து பிரதமர் மறுப்பு

Posted: 15 Jan 2014 09:58 AM PST

தாய்லாந்தில் அடுத்த மாதம் 2ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று அந்நாட்டுப் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பள்ளியில் மாணவன் சுட்டு இருவர் படுகாயம்

Posted: 15 Jan 2014 09:55 AM PST

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 12 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் உடன் பயிலும் இருவர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான்: சாலை விபத்தில் 17 சிறார்கள் பலி

Posted: 15 Jan 2014 09:55 AM PST

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பள்ளி வேன் ஒன்றின் மீது டிராக்டர் ஒன்று புதன்கிழமை மோதியதில் 17 சிறுவர்கள் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

பிரேசிலில் வெள்ளம்: 12 பேர் சாவு, 10 பேர் மாயம்

Posted: 15 Jan 2014 09:54 AM PST

பிரேசிலில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

முஷாரஃப் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் தீ

Posted: 15 Jan 2014 09:52 AM PST

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சிகிச்சை பெற்று வரும் ராணுவ இதய நோய் மருத்துவமனையில் புதன்கிழமை தீப் பிடித்தது.

சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்

Posted: 15 Jan 2014 09:51 AM PST

நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் சூழலில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அதிக மகசூல் பெறலாம். தோட்டக்கலைத் துறை அளிக்கும் 100 சதவீத மானியத்தைப் பெற்று சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தி செடிகள் வாடிக் காய்வதை தடுக்கும் முறைகள்

Posted: 15 Jan 2014 09:49 AM PST

பருத்தி செடிகள் தண்டு கூன் வண்டின் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்கும் பருவத்தில் உள்ளது. இதனை கட்டுபடுத்தும் முறையை பின்பற்றி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: முன்னாள் முதல்வர் எடியூரப்பா

Posted: 15 Jan 2014 04:47 AM PST

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், திப்டூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எதிர்வரும் மக்களவை தேர்தலில் இம்முறை, ஷிமோகா, தும்கூர் மட்டுமல்ல கர்நாடகத்தின் எந்த

காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க பாஜக சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு

Posted: 15 Jan 2014 04:44 AM PST

காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்.23-ஆம் தேதி சித்ரதுர்காவில் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

காணும் பொங்கல்: பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் குவிந்த மக்கள்

Posted: 15 Jan 2014 04:26 AM PST

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளி்ல் குளித்தும், பாபநாசம் அணையில் படகு சவாரி செய்தும் மக்கள் காணும் பொங்கலை புதன்கிழமை ஆனந்தமாக

சிதம்பரம் அருகே கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக கொண்டாடிய கிராம மக்கள்

Posted: 15 Jan 2014 04:01 AM PST

தனியார் தொழிற்சாலையான சைமா தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் அருகே சுமார் 20 கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கருப்பு பொங்கலாக

ஸ்ரீவைகுண்டத்தில் 632 மதுபாட்டில்கள் பறிமுதல்

Posted: 15 Jan 2014 04:00 AM PST

ஸ்ரீவைகுண்டத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 632 மதுபாட்டில்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்

அமேதியில் குமார் விஸ்வாஸ் மீது அழுகிய முட்டை வீச்சு

Posted: 15 Jan 2014 03:56 AM PST

ராகுல் மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு அங்குள்ள காங்கிரஸ்

எம்பி தேர்தலில் எம்எல்ஏக்கள் போட்டியிடமாட்டார்கள் என கெஜ்ரிவால் விளக்கம்: பொய்யர் என பென்னி தாக்கு

Posted: 15 Jan 2014 03:15 AM PST

அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யர் என்று மக்களவை தேர்தலில் சீட்கேட்டு பிரச்னை செய்து வரும் அக்கட்சி எம்எல்ஏ வினோத் குமார் பென்னி கூறியுள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின்

தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை துவங்கியது

Posted: 15 Jan 2014 02:44 AM PST

இந்தியா இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்னை குறித்து  இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்திய, இலங்கை அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அமைச்சர் ரஜிதா செனரத்னேவுடன், மத்திய அமைச்சர் சரத் பவார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

திரிணாமுல்.காங்.கில் இருந்து சோமன்மித்ரா விலகல்

Posted: 15 Jan 2014 02:41 AM PST

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து சோமன் மித்ரா விலகியுள்ளார்.அவர் காங்கிரசில் சேர முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

தஞ்சாவூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

Posted: 15 Jan 2014 02:36 AM PST

தஞ்சாவூர் அருகேயுள்ள வடகால் சக்கரசாமந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரனின் மகன் சுப்புராஜ் (21). இவர் செவ்வாய்க்கிழமை மாலை கடத்தப்பட்டு, பள்ளியக்ரஹாரம் அருகேயுள்ள

ஒரே மோட்டார் சைக்கிளில் 6 பேர் பயணம்: விபத்தில் 4 பேர் காயம்

Posted: 15 Jan 2014 02:35 AM PST

ஒரே மோட்டார் சைக்கிளில் 6 பயணம் மேற்கொண்ட போது எதிரே வந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.

அம்மிகல்லை போட்டு  மனைவியை கொலை செய்த கணவர் கைது

Posted: 15 Jan 2014 02:32 AM PST

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரில் புதன்கிழமை மனைவி தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர்

சைக்கிளிலிருந்து கீழே விழுந்தவர் வாய்க்கால் நீரில் முழ்கி சாவு.

Posted: 15 Jan 2014 02:26 AM PST

மன்னார்குடியில் திங்கள்கிழமை சைக்கிளிலில் சென்றவர் தவறி கீழே விழுந்ததில் வாய்க்கால் நீரில் மூழ்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்திருப்பது செவ்வாய்க்கிழமை

ஷிண்டேவிற்கு எதிராக மோடி கடிதம்

Posted: 15 Jan 2014 02:21 AM PST

சிறுபான்மையினர் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமபோது மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே

சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.71 லட்சம் கையாடல்: மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை விசாரணை

Posted: 15 Jan 2014 02:12 AM PST

விருதுநகர்: அனுமதியின்றி மதுப்பாட்டில் விற்றதாக 32 பேர் கைது

Posted: 15 Jan 2014 02:09 AM PST

விருதுநகர் மாவட்ட பகுதியில் அனுமதியின்றி மதுப்பாட்டில்கள் விற்றதாக 32 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு 343 மதுபாட்டில்களை  பறிமுதல்

செப்டிக்டேங்கை சுத்தம் செய்த 3 பேர் சாவு

Posted: 15 Jan 2014 02:06 AM PST

கோவா மாநிலம் பானாஜியில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இன்று  நான்கு தொழிலாளர்கள் செப்டிக்டேங்கை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக  விஷவாயு தாக்கியதில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™