Tamil News | Online Tamil News |
- பெண்களை அடித்து உதைத்த உ.பி., மாநில போலீசார்
- தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம்: அரசியல் கட்சிகள் புதுயுக்தி
- காங்., பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ராகுல் நப்பாசை
- பார்லியின் குளிர்கால கூட்டம் கூட்ட அரசு மும்முரம்
- 543 எம்.பி.,க்களிடமும் தலா ரூ.2 லட்சம் வசூல்? அரசு முடிவு
- காங்., இல்லாத மத்திய அரசு : கிரண் பேடி வெளிப்படை
- நுகர்வோர் தலையில் மிளகாய் அரைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
- டில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
- தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா?
- அதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்!
- மின்நுகர்வு 10,910 மெகாவாட் ஆக சரிவு: தமிழக தெர்மல் மின் உற்பத்தி குறைப்பு
| பெண்களை அடித்து உதைத்த உ.பி., மாநில போலீசார் Posted: லக்னோ: உத்தர பிரதேசத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு, காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு, தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. செப்டம்பர் மாதம், முசாபர்நகர் மாவட்டத்தின், பல கிராமங்களில், மத கலவரம் நடந்தது. அதில், 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன் சோகம் இன்னும் மறையாத நிலையில், தன் சொந்த ஊரான, சைபையில், திருவிழா நடத்தி, பாலிவுட் சினிமா நட்சத்திரங்களை அழைத்து வந்து, ஆட்டம், பாட்டம், ... |
| தமிழகத்திலும் குஜராத்தை போல பிரசாரம் செய்ய திட்டம்: அரசியல் கட்சிகள் புதுயுக்தி Posted: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ஓட்டளிக்க உள்ள, வாக்காளர்களின் இறுதிப் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில், மொத்த வாக்காளர்கள், 5.37 கோடி. இவர்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளோர், 23.49 லட்சம் பேர். மொத்த வாக்காளர்களில், 30லிருந்து 39 வயதிற்கு உட்பட்டோர், 21.71 சதவீதம்.வாக்காளர் பட்டியலில், புதிதாக இடம் பெற்றுள்ள வர்களில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள். நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள். அதனால், எஸ்.எம்.எஸ்., - எம்.எம்.எஸ்., இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமான, பிரசாரங்களை மேற்கொண்டால், இவர்களை ... |
| காங்., பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்க ராகுல் நப்பாசை Posted: புதுடில்லி:''நான், காங்கிரஸ் கட்சியின் விசுவாசமுள்ள சிப்பாய். கட்சி மேலிடம், "எந்த பதவி' கொடுத்தாலும், அதை ஏற்க தயார். பொறுப்புகளை தட்டிக் கழிக்க மாட்டேன்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், இந்தி மொழி பத்திரிகைக்கு பேட்டி அளித்து, தனக்குள்ள நப்பாசையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தலைமையில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், நான்கு மாநிலங்களில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், பிரதமர் பதவியை குறிவைத்து, ராகுல் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது. பா.ஜ., சார்பில், நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக ... |
| பார்லியின் குளிர்கால கூட்டம் கூட்ட அரசு மும்முரம் Posted: பார்லிமென்ட் கூட்டத் தொடரை, கூட்டுவதற்குண்டான நடவடிக்கைகள், ஆரம்பமாகியுள்ளன. இருப்பினும், தெலுங்கானா குறித்து, ஆந்திர மாநில சட்டசபையில், எடுக்கப் போகும் முடிவை பொறுத்து தான், பார்லிமென்ட்டை, எந்த தேதியில் கூட்டுவது என்பது குறித்து, இறுதி முடிவெடுக்கப்படும் என, தெரிகிறது. பார்லிமென்டின் குளிர் கால கூட்டத்தொடர், தேதி குறிப்பிடப்படாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் அந்த கூட்டத்தொடரின், தொடர்ச்சி எப்போது கூடும் என்ற எதிர்பார்ப்பு, இருந்து வந்தது. இந்நிலையில், நேற்றிலிருந்து, பார்லிமென்ட்டை, மீண்டும் கூட்டுவதற்கான, ... |
| 543 எம்.பி.,க்களிடமும் தலா ரூ.2 லட்சம் வசூல்? அரசு முடிவு Posted: ஒவ்வொரு எம்.பி.,க்கும், மத்திய அரசு வழங்கியுள்ள, ரூ.2 லட்சம் பெறுமானமுள்ள, "லேப் டாப்' மற்றும், "ஐ பேட்' கருவிகளுக்கும், எம்.பி.,யிடமிருந்தே பணம் வசூலிக்க, அரசு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மீராகுமாரின் முடிவை வைத்து, 543 எம்.பி.,க்களும், பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா, எம்.பி.,க்கள் ஒவ்வொருவருக்கும், தலா, 2 லட்சம் ரூபாய் செலவில், தமது தொகுதி பணிகளுக்காக, லேப் டாப் மற்றும் ஐபேட் கருவிகள், பார்லிமென்ட் செயலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும், லோக்சபா செயலகமே, இந்த கருவிகளை வழங்கி வந்த நிலையில், இம்முறை, ... |
| காங்., இல்லாத மத்திய அரசு : கிரண் பேடி வெளிப்படை Posted: புதுடில்லி: "காங்கிரஸ் இல்லாத மத்திய அரசு வேண்டும்,'' என, நாட்டின் முதல், பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியான, கிரண் பேடி தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர், அன்னா ஹசாரேயின், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வந்த, கிரண் பேடி, அந்த அணியிலிருந்து விலகி, டில்லி முதல்வராகியுள்ள, "ஆம் ஆத்மி' கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம், அவர், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, கூறியதாவது: மத்தியில், பா.ஜ., அல்லது காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்க வேண்டும். தொங்கு பார்லிமென்ட் அமைய ... |
| நுகர்வோர் தலையில் மிளகாய் அரைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் Posted: கோவை: எண்ணெய் நிறுவனங்களின் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவதற்காக, அடிக்கடி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், சமீபத்தில் தங்களது நிறுவனங்களின் எல்.பி.ஜி., மற்றும் பெட்ரோல் பங்க் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்தியுள்ளன. இதில், விநோதம் என்னவென்றால், உயர்த்தப்பட்ட இந்த கமிஷன் தொகை, நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன என்பதுதான். சில ஆண்டுகளாகவே, சத்தமின்றி இந்த ... |
| டில்லி மாநில சட்ட அமைச்சர் மீது எதிர்க்கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு Posted: புதுடில்லி: டில்லி மாநில சட்ட அமைச்சரும், "ஆம் ஆத்மி' கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி மீது, முக்கிய வழக்கு ஒன்றில், சாட்சியங்களை சீர்குலைத்ததாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி அரசு, ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபலமான வழக்கறிஞரும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகியுமான, சோம்நாத் பார்தி, சட்ட அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில், பா.ஜ., மற்றும் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், சோம்நாத் பார்தி மீது, பரபரப்பான ... |
| தாவூத் இப்ராகிம் கூட்டாளியை ஷிண்டே விடுவித்தாரா? Posted: புதுடில்லி : 'பாகிஸ்தானில் மறைந்து வாழும், மும்பை தாதா, தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான, டில்லி தொழிலதிபரிடம் விசாரணை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, பலமுறை தடைவிதித்தார்' என, மத்திய உள்துறை, முன்னாள் செயலர், ஆர்.கே.சிங் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷிண்டே, கடந்த வாரம், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது, "பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தாதா தாவூத் இப்ராகிமை பிடிக்க, அமெரிக்க உளவு அமைப்புடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.இது குறித்து, ... |
| அதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்! Posted: கோவை: நகருக்கு வெளியே புதிய தொழிற்பகுதிகளை அரசு உருவாக்காத காரணத்தால், குடியிருப்புப் பகுதிகளில் பெருகி வரும் தொழிற்கூடங்கள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.கோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. தொழில் வளம் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில், தொழிற் கூடங்களுக்கென சிறப்புப் பகுதிகள் உருவாக்கப்படாத காரணத்தால், 70 சதவீதத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே இயங்கி வருகின்றன. பகல், இரவு எல்லா நேரங்களிலும் இயங்கும் இந்த ... |
| மின்நுகர்வு 10,910 மெகாவாட் ஆக சரிவு: தமிழக தெர்மல் மின் உற்பத்தி குறைப்பு Posted: மேட்டூர்: பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக, தமிழகத்தின் மின்நுகர்வு, நேற்று காலை, 10,910 மெகாவாட் ஆக சரிந்தது.கடந்த, 2008ம் ஆண்டு, 8,500 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை கடந்த ஆண்டு, 12,000 மெகாவாட் ஆக அதிகரித்தது. நடப்பாண்டு கோடையில் மின்தேவை, 13,000 மெகாவாட்டை தாண்டும் நிலை உள்ளது. தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை கடந்த, 7ம் தேதி, 12,635 மெகாவாட் ஆக அதிகரித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால், நேற்று முன்தினம், 11,000 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் உச்சபட்ச மின்தேவை, நேற்று, 10,900 மெகாவாட் ஆக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 15,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |