Tamil News | Online Tamil News |
- மோடியால் பிரதமராக முடியாது: ஜெயந்தி நடராஜன்
- இளைஞர்களும், பெண்களும் காங்கிரஸில் சேர வேண்டும்:ராகுல் வேண்டுகோள்
- மக்களை சந்திக்கும் திட்டத்தை கைவிட்டார்: குழப்பம் ஏற்பட்டதால் கெஜ்ரிவால் பரபரப்பு
- சிறையில் இருந்து ஒரே நாளில் 163 மீனவர்கள் விடுவிப்பு: தன்னிச்சை முடிவால் இலங்கை வழிக்கு வருகிறதா?
- அரைத்த மாவையே அரைத்தார் பிரதமர்
- 'பண்ருட்டி'யை வளைக்க அ.தி.மு.க., முயற்சி?
- ஸ்டாலின், அழகிரி இடையே சமரசம்: கோபாலபுரத்தில் கருணாநிதி இன்று 'பஞ்சாயத்து'
- பா.ஜ.,வுடன் அணி சேர தே.மு.தி.க., தயார்: ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் சூசகம்
- மலை கிராமங்களில் 80 சதவீதம் குழந்தை திருமணங்கள்: ஆய்வில் அதிர்ச்சி
- 'பாக்., வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்': ராணுவ தளபதி பிக்ரம் சிங் அதிரடி அறிவிப்பு
- என்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி
| மோடியால் பிரதமராக முடியாது: ஜெயந்தி நடராஜன் Posted: புதுடில்லி : மோடியால் நாட்டின் நிலையை மாற்றி விட முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயந்தி இவ்வாறு கூறி உள்ளார்.கோவாவின் விஜய்சங்கல்ப் பகுதி பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, ஜெயந்திர நடராஜன் அமைச்சராக பதவியேற்றது முதல் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் ஜெயந்தி வரி என்ற பெயரில் பணம் அளிக்காமல் எந்த கோப்புக்களும் நகராது என கூறினார். இதற்கு ஜெயந்தி நடராஜன் பேட்டி ஒன்றில் ... |
| இளைஞர்களும், பெண்களும் காங்கிரஸில் சேர வேண்டும்:ராகுல் வேண்டுகோள் Posted: கொச்சி:இளைஞர்கள் மற்றும் பெண்களும் அதிகமாக வந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்து பணியாற்ற வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்திற்கு வந்த ராகுல், நூர் நாடுவில் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த யுவ கேரளா யாத்ரா பேரணியில் கலந்து கொண்டார். பின்னர் டில்லி திரும்புகையில் நெடும்பச்சேரி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் இவ்வாறு கூறினார்.காங்கிரஸில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரும் பங்கு |
| மக்களை சந்திக்கும் திட்டத்தை கைவிட்டார்: குழப்பம் ஏற்பட்டதால் கெஜ்ரிவால் பரபரப்பு Posted: புதுடில்லி: ஜனதா தர்பார்' என்ற பெயரில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் நடத்திய, மக்கள் குறை தீர்ப்பு முகாமில், ஏராளமானோர் திரண்டதால், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ''இனிமேல், ஜனதா தர்பார் நடத்தப்பட மாட்டாது. அதற்கு பதிலாக, வாரத்துக்கு ஒருமுறை, நானே, மக்களை சந்திப்பேன்,'' என, அவர் தெரிவித்துள்ளார்.டில்லி முதல்வராக, 'ஆம் ஆத்மி' கட்சியின், அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் பொறுப்பேற்றார். பதவியேற்றதும், அவர், 'வாரந்தோறும், ஒவ்வொரு சனிக்கிழமையும், என் அமைச்சர்களுடன் சேர்ந்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்பேன். ஜனதா தர்பார் என்ற பெயரில், ... |
| சிறையில் இருந்து ஒரே நாளில் 163 மீனவர்கள் விடுவிப்பு: தன்னிச்சை முடிவால் இலங்கை வழிக்கு வருகிறதா? Posted: சென்னை: இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த, தமிழக மீனவர்கள், 163 பேரை, அந்நாட்டு நீதிமன்றம், நேற்று விடுதலை செய்துள்ளது.சில நாட்களுக்கு முன், இலங்கை அரசு கைது செய்து அங்கு பல்வேறு சிறைகளில் வைத்திருந்த மீனவர்களை விடுதலை செய்ய, தாமதித்தது. அடிக்கடி அவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறைவாசம் தொடர்ந்தது. இந்த விஷயத்தில் தமிழக மீனவர்கள் மிகவும் அதிருப்தி அடைந்ததுடன், தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதி, இவர்கள் விடுதலையை வலியுறுத்தி வந்தார். மத்திய அரசும் இந்த விஷயத்தில் அக்கறை கொண்டிருப்பதை தெரிவித்ததுடன், இது குறித்து இலங்கை ... |
| அரைத்த மாவையே அரைத்தார் பிரதமர் Posted: புதுடில்லி: ''மதச்சார்பின்மைக்கு எதிரான அழிவு சக்திகளிடமிருந்து, நாட்டு மக்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்,'' என, பிரதமர், மன்மோகன் சிங் பேசினார். மாநில சிறுபான்மை கமிஷன் ஆணையர்களின் கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது.அதில், பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு, பாதுகாப்பு அளிப்பதில் அரசுக்கு பொறுப்பு உள்ளது. இந்தியாவின் பலமே வேற்றுமையில் ஒற்றுமையில் தான் உள்ளது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் அழிவு சக்திகளுக்கு எதிராக, மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியுள்ளது. பல மொழி பேசும் ... |
| 'பண்ருட்டி'யை வளைக்க அ.தி.மு.க., முயற்சி? Posted: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, 'அண்ணா விருது' வழங்கி, அரசு திடீர் கவுரவம் செய்திருப்பது, அவரை அ.தி.மு.க., பக்கம் வளைக்க, எடுக்கப்பட்ட முயற்சியாக கருதப்படுகிறது.கடந்த, 2005ல், தே.மு.தி.க., துவங்கியது முதல், அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். விஜயகாந்திற்கு அரசியல் ஆலோசனை வழங்கியது மட்டுமின்றி, அறிக்கைகள் தயாரித்தும் கொடுத்து வந்தார். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி ஏற்பட, முயற்சி எடுத்தார். தொகுதி பங்கீடு உள்ளிட்ட, தேர்தல் பணிகளை கவனித்தார். தேர்தலில், ஆலந்தூர் தொகுதியில் ... |
| ஸ்டாலின், அழகிரி இடையே சமரசம்: கோபாலபுரத்தில் கருணாநிதி இன்று 'பஞ்சாயத்து' Posted: தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பொங்கல் வாழ்த்து தெரிவிக்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், இன்று கோபாலபுரம் வீட்டில் சங்கமிக்க உள்ளனர். அப்போது, ஸ்டாலின், அழகிரி இடையே நிலவும், பனிப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, வீட்டில், 'பஞ்சாயத்து' நடைபெற உள்ளது என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிறந்த நாள் போஸ்டர்: தி.மு.க.,வில் ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி என, மூன்று கோஷ்டிகள் உள்ளன. மதுரையில், அழகிரி பிறந்தநாளை ஒட்டி, அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள், சர்ச்சையை ஏற்படுத்தியதால், மதுரை மாநகர, தி.மு.க., கலைக்கப்பட்டு, ... |
| பா.ஜ.,வுடன் அணி சேர தே.மு.தி.க., தயார்: ஊழல் எதிர்ப்பு வாசகம் மூலம் சூசகம் Posted: விஜயகாந்தின் தே.மு.தி.க., கட்சியின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பிப்., 2ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார்.மாநாட்டிற்கு, 'ஊழல் ஒழிப்பு மாநாடு' என, பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், 'ஒன்றுபடுவோம்; ஊழலை ஒழிப்போம்' என்ற வாசகமும், ஒற்றை விரல் லச்சினையும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.கருத்து கேட்பு: இதுதொடர்பாக, சென்னை கோயம்பேடு, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலர், ... |
| மலை கிராமங்களில் 80 சதவீதம் குழந்தை திருமணங்கள்: ஆய்வில் அதிர்ச்சி Posted: தமிழக மலை கிராமங்களில், 80 சதவீத திருமணம், குழந்தை திருமணங்களாக நடக்கும் அதிர்ச்சி தகவல், மலை கிராம குழந்தை தொழிலாளர் பள்ளி மாணவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. "வாழ்விடத்திலேயே, பிளஸ் 2 வரை படிக்க வழி இல்லாதது, போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தராதது போன்றவை, இதற்கு முக்கிய காரணம்' என, ஆய்வின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு உள்ளது.இளம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்ட, தேசிய அறிவியல் இயக்கம், மத்திய அரசின் உதவியோடு, 20 ஆண்டாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது. இதில், மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ... |
| 'பாக்., வாலாட்டினால் பதிலடி கொடுப்போம்': ராணுவ தளபதி பிக்ரம் சிங் அதிரடி அறிவிப்பு Posted: புதுடில்லி: ''எல்லை பகுதியில், பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறினால், அதை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருக்க மாட்டோம். நாங்களும், விதிமுறைகளை மீறி, அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்,'' என, இந்திய ராணுவ தளபதி, பிக்ரம் சிங் கூறியுள்ளார்.எல்லையில் கண்காணிப்பு: இந்தியா - பாக்., நாடுகளுக்கு இடையே, 2003ல், போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பாக்., ராணுவம், இந்த ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை. அவ்வப்போது, காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பதற்காக, எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள, இந்திய ... |
| என்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ.,க்கு அக்கறை: கருணாநிதி Posted: சென்னை: என்னை வசை பாடுவதில் தான், முதல்வர் ஜெ., அக்கறை காட்டுகிறார்; மக்கள் மீது அல்ல,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.சமூக நீதி பாதுகாப்பு சிறப்பு பொதுக்கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:அறிக்கையின் மூலமாகவும் காணொலி காட்சி மூலமாகவும் தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. என்னை வசை பாடுவதில் தான் முதல்வர் ஜெ., ஆர்வம் காட்டுகிறார். மக்கள் மீது எந்த ஒரு அக்கறையும் காட்டவில்லை. அடிக்கடி கருணாநிதி என்றும், தகாத வார்த்தைகளாலும் மேற்கோள் காட்டி என்னை விமர்சிக்கிறார். அவரது விமர்சனத்தை ஒரு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 14,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |