Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் பணம் ரூ.350 கோடி: 'மாஜி' தளபதி உறவினர்கள் பெற்றதாக 'திடுக்' தகவல்

Posted:

புதுடில்லி: 'அகஸ்டா வெஸ்ட்லேண்ட்' ஹெலிகாப்டர் பேரத்தில், விமானப்படை முன்னாள் தளபதி, தியாகியின் உறவினர்கள், 350 கோடி ரூபாயை, லஞ்சமாக பெற்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அகஸ்டா வெஸ்ட்லேண்ட்:பிரதமர், ஜனாதிபதி போன்ற, வி.வி.ஐ.பி.,கள் சொகுசாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க, பிரிட்டனைச் சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் இருந்து, 12 ஹெலிகாப்டர்களை வாங்க, 3,600 கோடி ரூபாய் ஒப்பந்தம், 2012ல் மேற்கொள்ளப்பட்டது.அந்த ஒப்பந்தம் ஏற்படுத்த உதவியதாக கூறப்படும், நம் நாட்டைச் சேர்ந்த சிலருக்கு, பல நுாறு கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாக, ...

நடந்து வரும் ரயில்வே பணிகளுக்கு நிதி : மனசு வைப்பாங்களா நம்ம எம்.பி., க்கள்

Posted:

சென்னை:தமிழகத்தில், தற்போது நடந்து வரும் ரயில்வே திட்டப் பணிகளை விரைவில் முடிக்க, போதிய நிதி ஆதாரத்தை பெற்றுத் தந்து, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் தமிழக அரசு முன்வர வேண்டும் என, பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.அகல ரயில் பாதை பணிகள்: மதுரை போடி, 90 கி.மீ., மீட்டர்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்ற, மூன்றாண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதில், ஆரம்ப கட்ட பணி தவிர வேறு பணிகள் நடக்கவில்லை.திருவாரூர் காரைக்குடி இடையே, 147 கி.மீ., ரயில் பாதை, அகலப்பணிக்காக மூடப்பட்டுள்ளது. காரைக்குடி பட்டுக்கோட்டை இடையே, 72 கி.மீ., ...

தேவை, பற்றாக்குறை இடையே போட்டாபோட்டி: மார்ச் முதல் மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம்

Posted:

தமிழகத்தில், மார்ச் முதல், மின் தேவை, 14 ஆயிரம், 'மெகாவாட்'டாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதை, மின்சார வாரியம் பூர்த்தி செய்யுமா அல்லது வழக்கத்தை விட, கூடுதல் நேரம் மின்தடை செய்யப்படுமா என்பது, விரைவில் தெரியும்.12000 மெகாவாட்:தமிழகத்தில், தற்போதைய மின் தேவை, 12 ஆயிரம் மெகாவாட்; மின் உற்பத்தி, 8,000 - 9,000 மெகாவாட். மின் தேவை ஆண்டுதோறும், 10 சதவீதம் உயருகிறது.வரும் கோடை காலத்தில், மின் தேவை, 13,500 - 14,000 மெகாவாட்டாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக, அக்டோபரில் இருந்து, வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால், மின் நுகர்வு குறைவாக இருக்கும். ...

தை பிறந்த பின் கூட்டணி பேச்சு : விஜயகாந்த் 'அட்வைஸ்'

Posted:

லோக்சபா தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ள, தே.முதி.க., தலைவர் விஜயகாந்த், தை பிறந்த பின், அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தையை துவக்க, முடிவு செய்துள்ளார்.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,விற்கு மாற்று எனக் கூறி, தே.மு.தி.க.,வை துவக்கிய விஜயகாந்த், இரண்டு தேர்தல்களை தனித்து சந்தித்தார். அவற்றில், பெரிய அளவில் வெற்றிக்கொடி நாட்ட முடியவில்லை. அதனால், 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து, 40 இடங்களில் போட்டியிட்டு, 28 இடங்களை கைப்பற்றினார். அதன்பின், ஜெயலலிதாவுக்கும், அவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியில்இருந்து ...

கருணாநிதி - அழகிரி சந்திப்பு: நடந்தது என்ன?

Posted:

தி.மு.க.,வில் எழுந்துள்ள உட்கட்சி பிரச்னை குறித்து, கட்சித் தலைவர் கருணாநிதியை, அவரது மூத்த மகனும், தென்மண்டல அமைப்புச் செயலருமான அழகிரி நேற்று சந்தித்து, அரை மணி நேரம் பேசினார். அழகிரியின் பேட்டி, அவரது ஆதரவாளர்களின் செயல்பாடு குறித்து, கடும் கோபம் அடைந்திருந்த கருணாநிதி, அதை அழகிரியிடம் நேரிடையாக கொட்டி தீர்த்துள்ளார். கருணாநிதியின் கடும் கோபம் காரணமாகவும், அவரது உத்தரவை அடுத்தும், அமைதி காக்க, அழகிரி முடிவு செய்துள்ளார்.தி.மு.க.,வில், அழகிரி - ஸ்டாலின் மோதல், அடிக்கடி வெடிப்பது வழக்கம். அதுதொடர்பான விவகாரத்தில், அழகிரி ஆதரவாளர்கள் மீது நட ...

சென்னையில் பிரசாரம் துவக்குகிறார் ஜெ.,:வேகமாக தயாராகும் பயண திட்டம்

Posted:

லோக்சபா தேர்தல் தேதி, எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தமிழகத்தில், பெரும்பாலான கட்சிகளுக்கு, வரும் தேர்தல், வாழ்வா, சாவா பிரச்னையாக உள்ளது.இந்தச் சூழலில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க., கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் பணிகளை துவக்கி விட்டது. உள்ளாட்சி பதவிகளில், 80 சதவீதத்திற்கும் மேல், அ.தி.மு.க.,வினரே உள்ளனர். கூட்டுறவு சங்கங்களிலும், அ.தி.மு.க.,வினரே பதவி வகிக்கின்றனர். நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ஏதேனும் ஒரு பதவியில் ...

லோக்சபா தேர்தலில் கட்சிகளிடையே பலத்த போட்டி: 'ஆம் ஆத்மி'யும் களம் இறங்குவதால்

Posted:

புதுடில்லி:வரும் லோக்சபா தேர்தலில், இது வரை இல்லாத அளவில், கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய, பா.ஜ., காங்கிரஸ் போன்ற முக்கிய கட்சி களுடன், இந்த முறை, 'ஆம் ஆத்மி'யும் சேர்ந்துள்ளதால், லோக்சபா தேர்தல் களம், மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.

16வது லோக்சபா:நடப்பு, 15வது லோக்சபாவின் பதவி காலம், ஜூன், 3ம் தேதி நிறைவடைகிறது. 16வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்காக, ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறலாம் என, எதிர்பார்க்கப்படும் லோக்சபா தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில், பலத்த போட்டி இருக்கும் என்பது, இப்போதே ...

ஆசிரியர் தேர்வு வாரியம் தாராளம் : கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

Posted:

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று, அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும், மறு மதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, 88, 89 மதிப்பெண் பெற்று, தோல்வி அடைந்த தேர்வர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறு மதிப்பீடு காரணமாக, தோல்வி அடைந்த தேர்வர், 2,500 பேர் வரை, தேர்ச்சி பெற்றுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.லோக்சபா தேர்தல் நெருங்குவதால், 15 ஆயிரம் ...

டில்லி முதல்வரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சலசலப்பு : அரைகுறை ஏற்பாட்டால் நிகழ்ச்சி திடீர் ரத்து

Posted:

ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியதால், ஏற்பட்ட நெரிசலை அடுத்து, டில்லி முதல்வரின், மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சி, நேற்று, பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சரி வர செய்யாததற்காக, கூடியிருந்த மக்களிடம், முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், பகிரங்க மன்னிப்பு கேட்டார்.டில்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற, 'ஆம் ஆத்மி' கட்சி, ஆட்சி அமைந்ததும், முதல் வேலையாக, 'ஜனதா தர்பார்' என்ற பெயரில், தினமும், மக்கள் குறை கேட்கும் கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவாலும், அவர் அமைச்சரவை சகாக்களும், ஒவ்வொரு நாளும், டில்லி ...

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை

Posted:

சென்னை : இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவுள்ளதாக, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவது:இலங்கை சிறையில் வாடும், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசு, மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறது. இதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. அதன் பயனாக, "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் வாடும், 275 தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் விடுதலை செய்யப்படுவார்கள்; இலங்கை அரசு அதற்கான நடவடிக்கைகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™