Tamil News | Online Tamil News |
- 'குற்ற பத்திரிகையில் பெயர் இல்லை என்றாலும் ஆதாரம் கிடைத்தால் யாரையும் விசாரிக்கலாம்'
- மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
- 2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு
- கனிமொழி மகிழ்ச்சி: ஸ்டாலின் அதிர்ச்சி: சோனியா தூதரை கருணாநிதி சந்தித்தது ஏன்?
- அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு
- கருணாநிதி - ஆசாத் பேசியது என்ன? கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல்
- அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு
- சோனியா மருமகன் சென்ற காரை முந்தி சென்றவருக்கு அபராதம்
- விரைவில் காங்., வேட்பாளர் பட்டியல்: ராகுல் உறுதி
- அணி மாறினார் கிரண் பேடி: மோடிக்கு தான் ஓட்டு என அறிவிப்பு
- தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 5.37 கோடி
| 'குற்ற பத்திரிகையில் பெயர் இல்லை என்றாலும் ஆதாரம் கிடைத்தால் யாரையும் விசாரிக்கலாம்' Posted: புதுடில்லி: 'முதல் தகவல் அறிக்கை அல்லது குற்றப் பத்திரிகையில், ஒருவர் பெயர் இடம் பெறவில்லை என்றாலும், நீதிமன்ற விசாரணையின் போது, அந்த நபர் மீதான குற்றங்களுக்கு, ஆதாரங்கள் கிடைத்தால், அவரிடம் விசாரணை நடத்தலாம்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 'டிவிஷன் பெஞ்ச்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, ஐந்து நீதிபதிகளை கொண்ட, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில், நீதிபதிகள், நேற்று பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளின் போது, அந்த வழக்கின், முதல் தகவல் ... |
| மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்த மத்திய அரசு பரிசீலனை Posted: புதுடில்லி: ''மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்த, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது,'' என, பெட்ரோலியத்துறை அமைச்சர், வீரப்ப மொய்லி கூறினார். ஒருமித்த கருத்து: டில்லி சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்த பின், மக்களை பாதித்த விஷயங்கள் என்ன என, இப்போது தான் பின்னோக்கி பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில், மிகவும் முக்கியமானதான, சமையல் காஸ் மானிய சிலிண்டர் விஷயத்தில், காங்கிரஸ் தரப்பில் ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. மானிய விலையில் வழங்கப்படும், சிலிண்டர் எண்ணிக்கையை, ... |
| 2,342 வி.ஏ.ஓ., பணிக்கு ஜூன் 15ல் தேர்வு Posted: சென்னை : நடப்பு ஆண்டிற்கான போட்டி தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ), நேற்று வெளியிட்டது. 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்கள் உட்பட, 3,700 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வு, ஜூன், 15ல் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், என்னென்ன போட்டித் தேர்வுகள் நடக்கும்; எந்த தேதியில் நடக்கும்; எத்தனை பணியிடங்களுக்கு என்ற விபரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணையை, தேர்வாணையம் வெளியிடுவது வழக்கம். நடப்பாண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியிட நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டியும், உடனடியாக அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும், 'தினமலர்' நாளிதழில், செய்தி ... |
| கனிமொழி மகிழ்ச்சி: ஸ்டாலின் அதிர்ச்சி: சோனியா தூதரை கருணாநிதி சந்தித்தது ஏன்? Posted: கட்சி பொதுக்குழுவைக் கூட்டி, காங்கிரசுடன் இருந்த ஒன்பது ஆண்டு கால உறவை, வெட்டிக் கொண்டதாக அறிவித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென்று, சோனியாவின் தூதர், குலாம் நபி ஆசாத்தை, சந்திக்க என்ன காரணம்? இந்த கேள்விக்கு பின்னணியில், கனிமொழி இருப்பதும், அவருக்காக, கட்சி எடுத்த முடிவை மீறி, ஆசாத்தை கருணாநிதி சந்திக்க முன்வந்ததும், ஸ்டாலினை கடும் கோபம் அடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.விவாதிக்கவில்லை:அந்த கோபம் காரண மாகவே, ஆசாத் வருவது தெரிந்தும், அவர், சி.ஐ.டி., காலனிக்கு செல்ல மறுத்து விட்டார் என்றும், தன் வீட்டிலேயே இருந்து விட்டார் என்றும், ... |
| அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் 'ரெடி' : ஜெ., சென்னை திரும்பியதும் வெளியீடு Posted: லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல், கிட்டத்தட்ட தயாராகி விட்டது. கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர், சென்னை திரும்பியதும், பட்டியல் வெளியிடப்படுகிறது.லோக்சபா தேர்தலில், தமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், போட்டியிட விரும்புவோரிடம்இருந்து, அந்தக் கட்சி தலைமை, விருப்ப மனுக்களை வாங்கியது.தலா மூன்று பேர்: கட்சி நிர்வாகிகளும், போட்டி போட்டு மனு அளித்தனர். இது தவிர, மாவட்டச் செயலர்களிடமிருந்து, தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள, தலா மூன்று பேரின் பெயர்கள், தொகுதி வாரியாக கேட்டு பெறப்பட்டன.பின், ... |
| கருணாநிதி - ஆசாத் பேசியது என்ன? கட்சி வட்டாரங்கள் பரபரப்பு தகவல் Posted: தி.மு.க., தலைவர், கருணாநிதியை, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான, குலாம்நபி ஆசாத், நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள, இந்தச் சந்திப்பு குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:கருணாநிதியிடம் ஆசாத்தெரிவித்தது:*ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., தொடர வேண்டும். மாநில கட்சிகளுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்புகிறது.*தமிழகத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, சோனியா விரும்புகிறார். உங்களின் ஆலோசனையுடன் மீண்டும், ஐ.மு., கூட்டணி ஆட்சி அமைய ... |
| அமெரிக்க தூதரை திருப்பி அழைக்க மத்திய அரசு உத்தரவு Posted: புதுடில்லி : அமெரிக்காவிலிருந்து, நம், பெண் துணை தூதர், தேவயானியை, அமெரிக்கா, திருப்பி அனுப்பி வைத்ததற்கு பதிலடியாக, அவர் அந்தஸ்தில் உள்ள, அமெரிக்க அதிகாரியை, திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு, அமெரிக்காவுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.'விசா' முறைகேடு:இந்தியாவிற்கான அமெரிக்க துணை தூதராக, நியூயார்க்கில் பணியாற்றியவர், தேவயானி கோப்ராகடே. இவர் வீட்டு பணிப்பெண் சங்கீதாவுக்கு, ஒப்பந்த அடிப்படையில், உரிய சம்பளம் தராமல் இருந்ததாகவும், அவரை பணியமர்த்துவதற்காக தேவயானி, 'விசா' முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இந்த குற்றச்சாட்டு ... |
| சோனியா மருமகன் சென்ற காரை முந்தி சென்றவருக்கு அபராதம் Posted: |
| விரைவில் காங்., வேட்பாளர் பட்டியல்: ராகுல் உறுதி Posted: புதுடில்லி : ''வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல், விரைவில் வெளியிடப்படும். காங்கிரசாரின் விருப்பத்திற்கு ஏற்ப, புதிய முறையில், வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றுள்ளது,'' என, அக்கட்சியின் துணைத் தலைவர், ராகுல் நேற்ற கூறினார்.லோக்சபா தேர்தலில், மாநிலங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுக் கமிட்டிக்கு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுடன், கட்சியின் முன்னணித் தலைவர்கள் சந்திக்கும் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு பின், நிருபர்களை சந்தித்த, ராகுல் ... |
| அணி மாறினார் கிரண் பேடி: மோடிக்கு தான் ஓட்டு என அறிவிப்பு Posted: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உடன், ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, நாட்டின் முதல், பெண், ஐ.பி.எஸ்., அதிகாரியான, கிரண் பேடி, "நரேந்திர மோடியால் தான், நாட்டுக்கு நல்லாட்சி தர முடியும். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டுமானால், காங்கிரசுக்கு ஓட்டளிக்கக் கூடாது. நான் நரேந்திர மோடிக்கு தான் ஓட்டளிப்பேன்,'' என, தெரிவித்துள்ளார்.மேலும், ஊழல் தொடர்பாக, முன்னாள் டில்லி முதல்வர், ஷீலா தீட்சித் மீதான அறிக்கையை, விவாதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் கிரண் பேடி:சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயுடன், ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில், முக்கிய பங்கு ... |
| தமிழக வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 5.37 கோடி Posted: சென்னை:தமிழகம் முழுவதும், நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் பட்டியலில், 5.37 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட, கூடுதலாக, 23.49 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இம்மாதம் முதல் தேதியை, தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல், சிறப்பு திருத்தப் பணி, கடந்த அக்டோபரில் நடந்தது. அக்டோபர், முதல் தேதி வெளியிடப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில், 2.58 கோடி ஆண்கள்; 2.56 கோடி பெண்கள்; இதர பிரிவினர், 2,421 என, மொத்தம் 5.14 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.வாக்காளர் பட்டியல், திருத்த காலத்தின்போது, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 11,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |