Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


Gmail ல் - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ?

Posted: 10 Jan 2014 01:56 PM PST

Gmail - அனுப்பிய மெயிலை UNDO செய்வது எப்படி ? 5:00 பிற்பகல்  கூடல் பாலா சில வேளைகளில் நாம் மின்னஞ்சல் அனுப்பியவுடன் அதை தவறுதலான முகவரிக்கு அனுப்பிவிட்டதாகவோ அல்லது அதை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை எனவோ  அனுப்பியபின்னர் உணரக்கூடும். இது போன்ற சூழ்நிலைகளில் அனுப்பிய மெயிலை ரத்து (UNDO ) செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் . முதலில் உங்கள் Gmail அக்கவுண்டை திறந்துகொள்ளுங்கள். பின்னர் படத்தில் காட்டியுள்ளவாறு Settings பகுதிக்கு செல்லுங்கள் . இப்போது வரும் பக்கத்தில் LABS எனும் Tab ...

யப்பானிய கால்பந்து வீரரின் சாதனையை பாருங்கள்

Posted: 10 Jan 2014 01:44 PM PST

வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் !

Posted: 10 Jan 2014 01:14 PM PST

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். -- திருப்பாவை 5 பரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் ! தேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் ...

உன் உல்லத்தில்

Posted: 10 Jan 2014 11:33 AM PST

(உன் உல்லத்தில்)

"என் இதயம் என்னை விட்டு பிரிந்தாலும்
உன் உல்லத்தில் நிலையாய் நின்பேன் நினைவாய்.....!!!

(un ullaththil)

"en idhayam ennai vittu pirinthaalum
un ullaththil nilaiyaai nirtpen ninaivaai.....!!!

by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை

ஆதார் எண்ணை வச்சு உங்க நண்பருக்கு பணம் போட்டு விடலாம்... தெரியுமோ? .........

Posted: 10 Jan 2014 10:57 AM PST

டெல்லி: ஆதார் எண்ணை வைத்திருந்தால்தான் கேஸ் சிலிண்டருக்கான மானியத் தொகையைப் பெற முடியும் என்பது வரை மட்டுமே மக்களுக்கு அதைப் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால் ஆதார் எண்ணை வைத்து பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இது எதற்காக என்றால், சாமானிய மக்களால் அதிக விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாது என்பதாலும், அனைவருக்கும் சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்பதாலும், அரசு கணிசமான தொகையை மானியமாக வழங்குகிறது. மேலும் பாதுகாப்பான, துரிதமான ...

‘நான் சாதாரண மனிதன்’ என்ற ஆம் ஆத்மியின் முழக்கம் ஏற்பு: 3 மணி நேரத்தில் 47500 பேர் கட்சியில் இணைந்தனர்..........

Posted: 10 Jan 2014 10:56 AM PST

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடிய ஆம் ஆத்மி கட்சியில், பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய நபர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 1 கோடி உறுப்பினர்களை உடனடியாக சேர்கக முடிவெடுத்த அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கான முயற்சியாக இன்று "நான் சாதாரண மனிதன்" என்ற முழக்கத்தை முன் வைத்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இதை முழக்கத்தை ஏற்றுக்கொண்டு மூன்றே மணி நேரத்தில் இணையதளம் மூலம் மட்டும் 47,500 பேர் அக்கட்சியில் ...

வீரம் - விமர்சனம்

Posted: 10 Jan 2014 10:29 AM PST

நடிகர் : அஜீத் குமார் நடிகை : தமன்னா இயக்குனர் : சிவா இசை : தேவிஸ்ரீபிரசாத் ஓளிப்பதிவு : வெற்றி மதுரையில் காய்கறி கடை வைத்திருக்கிறார் அஜீத். இவருக்கு நான்கு தம்பிகள். குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும் தனது தம்பிகளுக்காகவும் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். இவருடைய குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜீத்தின் வீட்டில் வேலையாளாக வருகிறார் அப்புக்குட்டி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் வில்லன் பிரதாப் ...

உதவுங்கள் உறவுகளே................

Posted: 10 Jan 2014 07:42 AM PST

தொழில்நுட்ப பட்டயம் (diploma) முடித்து அதன்மூலம் வெளிநாடு குறிப்பாக சிங்கப்பூர் செல்வதற்கான நேரடி கிளையண்ட் (client) நேர்காணல் (interview) நடத்தும் சென்னை நிறுவனங்களின்(consultancy) முகவரி தேவை.....
இண்டெர்நெட் லிங்க் கிடைதாலும் உதவியாக இருக்கும்....

விடுகதைக்கு விடை சொல்லுங்கள் - தொடர்பதிவு

Posted: 10 Jan 2014 07:35 AM PST

-
1 நாற்பதுக்கு மேல் நம்மில் பலருக்கும் வந்த 'கை' -அது என்ன?
-
2) நரைத்த கிழவி குதித்து ஓடுகிறாள் - அது என்ன
-
3) தொட்டாற்சுருங்கிக்கு தொன்னூறு கால்கள் - அது என்ன?
-
4) தெரிந்து காய் காய்க்கும், தெரியாமல் பூ பூக்கும் - அது என்ன?
-
5) தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது - அது என்ன?
-
--------------------------

எப்படிச் சொல்ல?

Posted: 10 Jan 2014 07:31 AM PST

முன்போல் இல்லை இப்பொழுது ஒருவாரம் பத்துநாள் இருக்கும்போதே எதிர்படும் முகங்கள் எல்லாம் பேச்சாலும் பார்வையாலும் பரிமாறிக்கொள்ளும் என்ன வேலை நடந்தது என்ன வேலை நடக்குது என்று பிள்ளைகளும் பெரியவர்களுமாய் மண் பூச ஒட்டடை துடைக்க வெள்ளை பூச பூசி மெழுக கோலம் போட ... அறுத்த நெல் அவிக்க அவித்த நெல் உலர்த்த அரைக்க இடிக்க பூசனியும் மொச்சையும் அவரையும் பரிக்க அறுக்க வீட்டுக்கும் நிலத்துக்கும் நடையாய் மாறிமாறி நடக்க ஓட ஓடிவர தொற்றிக்கொள்ளும் பரபரப்பு அடங்கி நாளாச்சி எல்லாம் பிழைப்புதேடி ...

வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் விலை குறையும் !

Posted: 10 Jan 2014 07:26 AM PST

வெங்காயம் சாப்பிடுவதை நிறுத்துங்கள் விலை குறையும்; மனு தாரருக்கு சுப்ரீம் கோர்ட் பதில் ! புதுடெல்லி, நாட்டில் வெங்காய விலையை கட்டுபடுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுமீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சவுகான் "வெங்காயம் சாப்பிடுவதை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தினால், அதனுடைய விலை பின்னர் குறையும்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். dinamani

கடும் குளிரால் உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி - படங்கள் !

Posted: 10 Jan 2014 07:13 AM PST

அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் கடும் குளிர் காரணமாக உலகப் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியே உறைந்து போயுள்ளது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான பனிக்காற்றையும், ஆர்க்டிக் பிரதேசத்தில் வீசி வரும் பனிப் புயலால் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிர் காற்றும் அமெரிக்க மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்து போயிருப்பது அனைவரையும் ...

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Posted: 10 Jan 2014 06:51 AM PST

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான 'தங்கச்சுரங்கம்' (1969) மீண்டும் வெள்ளித் திரையில் வெற்றி நடை போட வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. புத்தம் புதிய காப்பியாக பாலியஸ்டர் பிரிண்ட்டில் வெளிவரும் இப்படம் சிவாஜி ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. 'கர்ணன்' DTS படத்தை தயாரித்த 'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் இப்போது எம்ஜியார் அவர்கள் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை DTS செய்து சென்னை சத்யம்  திரையரங்கு வளாகத்தில் இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடத்தியுள்ள ...

ஜில்லா - விமர்சனம்

Posted: 10 Jan 2014 06:48 AM PST

நடிகர் : விஜய், மோகன்லால் நடிகை : காஜல் அகர்வால் இயக்குனர் : ஆர்.டி. நேசன் இசை : டி. இமான் ஓளிப்பதிவு : ஆர். கணேஷ் ராஜவேலு மதுரையில் மிகப்பெரிய தாதாவான மோகன்லாலிடம் அடியாளாக இருக்கிறார் விஜய்-யின் அப்பா. ஒருநாள் மோகன்லாலின் மனைவியை பிரசவத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர்களால் விஜய்-யின் அப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார். அன்றிலிருந்து விஜய்-க்கு போலீஸ் என்றாலே பிடிக்காமல் போய்விடுகிறது. தனது அப்பாவை இழந்த விஜய், மோகன்லால் வீட்டில் அவரது மகனாகவே வளர்கிறார். வளர்ந்து பெரியவனானதும் ...

லோகோ வடிவமைப்பது எப்படி?

Posted: 10 Jan 2014 06:18 AM PST

வணக்கம் நண்பர்களே, நான் இந்த வீடியோவில் மிகவும் எளிமையான வழியில் லோகோ உருவாக்குவது எப்படி என்பதை விளக்கியுள்ளேன். உங்கள் நிறுவனம் அல்லது வெப்சைட்டிற்கான ஒரு அழகான லோகோவினை நீங்களே வெறும் ஐந்து நிமிடங்களில் உருவாக்க முடியும். இந்த வீடியோவில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் COMMENTS மூலம் தெரிவிக்கலாம்.

இளைஞர் புராணம்

Posted: 10 Jan 2014 05:34 AM PST

அன்புடையீர்!

இன்றைய இளைஞர்கள் நம் புராண இதிகாசக் கதைகளை வெறும் கற்பனையென ஒதுக்கி
அவற்றில் உறையும் தத்துவங்களை அறியாது இருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் மாற
ஒரு சிறு முயற்சியாக வாரியார் சுவாமிகள் விளக்கிய 'விநாயக மூர்த்தி கனி பெற்ற' கதையைக்
கவிதையில் தரலாம் என்று தோன்றியதில் எழுந்ததே இந்தப் படைப்பு. இதுபற்றிய அன்பர்களின்
நிறை-குறை கருத்துகளை வரவேற்கிறேன்.

அன்புடன்,
ரமணி

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 10 Jan 2014 03:39 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

அற்புத மருந்துகளின் வித்தகர்!................

Posted: 10 Jan 2014 02:59 AM PST

"அநேகமாக, நீங்கள் எல்லப்பிரகத சுப்பாராவ் என்ற பெயரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இருப்பினும், அவர் வாழ்ந்தார் என்பதாலேயே நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழக்கூடும்." டாரென் ஆன்ட்ரிம் 1950-ல் ஆர்கோசி வார இதழில் இவ்வாறு குறிப்பிட்டார். ஏறக்குறைய 65 ஆண்டுகள் கழித்து இன்றும் மேற்கூறிய வாசகங்கள் உண்மையாகவே விளங்குகின்றன. எக்ஸ்-ரே கதிர்கள், பெனிசிலின் போன்ற ஒற்றை முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகளின் பெயர்களை நம் நாட்டில் சிறு குழந்தை கூட சொல்லும். ஆனால், கோடானகோடி மக்களை கொடிய நோய்களிலிருந்து ...

என்னுடைய ஓராயிரம் சென்ரியூ (சென்ரியூ) நூலின் ஆய்வுரை

Posted: 10 Jan 2014 02:52 AM PST

கவிதை புத்தகங்களை வாங்க http://www.kaviaruviramesh.com/ http://www.ebay.in/sch/rameshmkm/m.html?_nkw=&_armrs=1&_ipg=&_from= நகைப்பிற்குரிய மென்மையான கோபம்... ஜப்பானிய ஹைக்கூ வகைமைகளில் சென்ரியூவும் ஒரு வடிவமாகும். எது ஹைக்கூ எது சென்ரியூ என வகை பிரித்து வாசிப்பது வாசகனுக்குச் சிரமமாகத் தோன்றும். அந்த அளவுக்கு ஹைக்கூவும் சென்ரியூவும் மயக்கமுற்றுக் காணப்படும். ஆனாலும், ஹைக்கூ, சென்ரியூவின் கரு வேறாகும். இதனை, ஹைக்கூவில் இயற்கை உள்ளது. அது ஒரு நிகழ்வு ஆயினும் அதன் பின்னணியில் இயற்கை ...

மிசோவுக்காக ஏங்கும் உலகு........

Posted: 10 Jan 2014 02:46 AM PST

போஸ்னியாவின் தலைநகரம் சரயேவோவைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய நகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த அங்கிள் மிசோவின் மறைவால் ஆறாத் துயரம் அடைந்துள்ளனர். அவருடைய நினைவாக அவர் இருந்த நகர வீதியில் அவருடைய உருவப் படத்துக்கு மாலையிட்டு, வீதியெங்கும் மெழுகுவத்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி செலுத்துகின்றனர். அங்கிள் மிசோ யார்? யார் இந்த அங்கிள் மிசோ? எழுத்தாளரா, பாடகரா, இலக்கிய வாதியா, கவிஞரா, நாடாளுமன்ற உறுப்பினரா, மக்கள் சேவகரா? இவர்களில் எவரும் இல்லை. காலணிகளுக்கு பாலீஷ் போடும் ஒரு சாமானியர். சரி, ...

பொங்கல் பொங்கி வழியட்டும்

Posted: 10 Jan 2014 02:42 AM PST

மார்கழிக் கோலம் மறந்தாச்சு மாதங்கள் அனைத்தும் ஒன்றாச்சு தையின் சிறப்பு தெரியாமல் தரணியில் பலரும் புரியாமல் முகந்தெரியா மனிதருடன் மூன்று மணிநேரம் கதைக்கின்றோம் லைக்கும் ஷேரும் செய்து செய்து லைப் பூரா தொலைக்கின்றோம் கண்ணில் தெரியும் மனிதருடன் கதைபேசிய காலம் கழிஞ்சாச்சு விண்ணில் இருக்கும் ஒருவருக்கும் விடையளிக்க நேரம் வந்தாச்சு முகநக நட்பது நட்பன்று முகநூல் நட்பே உயர்வின்று கணவனும் மனைவியும் கைகோர்க்க கைபேசி அப்ஸ் தான் உதவுதாம் ஆலம் நிழலில் பேசியது போய் ஆன்டிராய்ட் ...

ஆதாரம் இருந்தால் குற்றம்சாட்டப்படாதவர்களை விசாரிக்கலாம் : உச்ச நீதிமன்றம்

Posted: 10 Jan 2014 02:41 AM PST

புதுடெல்லி: ஆதாரம் இருந்தால் குற்றம்சாட்டப்படாதவர்களை கூட நீதிமன்றம் விசாரிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகையில் இடம்பெறாதவர்களையும் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட பலர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் ...

யார் இவர்? - மேடம் கியூரி

Posted: 10 Jan 2014 02:16 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்!

Posted: 10 Jan 2014 12:21 AM PST

செளதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டு வரக் கோரி 3 மாதமாக ஆட்சியரகத்துக்கு அலையும் ஏழைப் பெண்! செளதி அரேபியாவில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கணவர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கடந்த மூன்றரை மாதமாக ஆட்சியரகத்துக்கு அலைகிறார் அவரது மனைவி. காரைக்கால் மஸ்தான்பள்ளி வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (33). இவரது மனைவி சுமதி. தம்பதிக்கு 10-ம் வகுப்பு, 3-ம் வகுப்பில் பயிலும் இரு மகன்கள் உள்ளனர். பழனிச்சாமி கட்டடம் கட்டுமானத் தொழிலாளியாக ...

வேலன்:-பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்ற

Posted: 09 Jan 2014 11:48 PM PST

நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை இமேஜ் பைல்களாக மாற்றஇந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.  இதில் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தனியாகவோ மொத்த போல்டராகவோ தேர்வு செய்துகொள்ளலாம். பின்னர் நமக்கு தேவையான அவுட்புட் பார்மெட்டினைதேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.என்னற்ற பார்மெட்டுக்கள் கொடுத்து்ள்ளார்கள்.  தேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். மேலும் ...

தொல்லை கொடுக்கும் ஹிட்லர்!

Posted: 09 Jan 2014 11:40 PM PST

போர் வெறியரான அதிபர் ஹிட்லர் ஒரு சமயம் திரைப்படக் கொட்டகையில் மாறுவேடத்தில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஹிட்லரின் உருவம் காட்டப்பட்டது. அப்போது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அனைவரும் எழுந்து நின்றனர். ஹிட்லர் போட்டிருந்த ஆணைப்படி அந்தப் படத்திற்கு வணக்கம் செலுத்தினர். ஆனால், மாறுவேடத்தில் இருந்த ஹிட்லர் மட்டும் உட்கார்ந்துகொண்டிருந்தார். உடனே பக்கத்தில் இருந்தவர் இந்தக் கொடுங்கோலன் ஹிட்லருக்கு எழுந்து நின்று வணக்கம் செய்ய யாருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் உட்கார்ந்து ...

தெரிஞ்சுக்கோங்க!..............தொடர் பதிவு ! - டோர்னியர் ஆமைகள் !

Posted: 09 Jan 2014 11:13 PM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

அஞ்சலி - ஒரு பக்க கதை

Posted: 09 Jan 2014 08:37 PM PST

"வனஜா நேத்து ராத்திரி உன்கிட்ட கொடுத்த முன்னூறு ரூபாயைக் கொடு. இறந்துபோன நம்ம ராமசாமி உடலுக்கு மாலை போடணும்' என்றார் ஆறுமுகம். "எல்லாம் நூறு ரூபாய்க்கு மாலை போதும். மாலையை வாங்கிட்டு தெருமுனைக்கு வந்ததும் மிஸ்டுகால் கொடுங்க... நானும் வர்றேன்..' என்ற மனைவியை மனசுக்குள் கடிந்தவாறே நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு மாலை வாங்கச் சென்றார். மாலை வாங்கிவிட்டு வரும்போது வனஜாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். கையில் இரண்டு பெரிய தூக்கு வாளிகளைச் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தாள் வனஜா. ஆறுமுகம், "என்னது இது?' ...

ஜிசாட்-14 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

Posted: 09 Jan 2014 06:51 PM PST

டி.டி.எச். சேவை மற்றும் தகவல் தொடர்புக்கு உதவும் ஜிசாட்-14 செயற்கைக்கோள் புவிச்சுற்றுவட்ட பாதையில் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் இந்தச் செயற்கைக்கோள் பூமியைச் சுற்றி வருகிறது. இந்தச் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டெனாக்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆயிரத்து 982 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோளில் தகவல் தொடர்புக்கு உதவும் 6 விரிவாக்கப்பட்ட சி-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், 6 கேயு-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™