Daily Thanthi |
- கற்பை தொலைத்து விட்டேன் டி.வி. நடிகரை திருமணம் செய்து வையுங்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு அலையும் நடிகை
- இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை வெளியிட்டது, அமெரிக்கா
- பெங்களூர் அணியில் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் தொடருகிறார்கள் வெட்டோரி பயிற்சியாளராக நியமனம்
- திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட்டு அனுமதி
- தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு தமிழக அரசு அறிவிப்பு
- 11 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்ச்சி உள்நாட்டில் கார் விற்பனை 9.59 சதவீதம் குறைந்தது
- ஊழல் ஒழிப்பு தொலைபேசி திட்டத்துக்கு டெல்லியில் அமோக வரவேற்பு 3 மணி நேரத்தில் 3,200 அழைப்புகள் வந்தன
- சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ஜெயலலிதா அறிவிப்பு
- போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்புதரையில் படுத்து வக்கீல் மறியல்
- ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்
| கற்பை தொலைத்து விட்டேன் டி.வி. நடிகரை திருமணம் செய்து வையுங்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு அலையும் நடிகை Posted: 09 Jan 2014 12:12 PM PST சென்னை கற்பை கெடுத்து விட்டு, திருமணம் செய்ய மறுக்கும் டி.வி.நடிகரை திருமணம் செய்து வைக்கும்படி, புதுமுக நடிகை ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கால்கடுக்க அலைந்து கொண்டிருக்கிறார். ரேணுகா சென்னை மதுரவாயல் நெற்குன்றத்தை சேர்ந்தவர் ரேணுகா(வயது 26–பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுமுக நடிகையான அவர், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– நான் பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளேன். சினிமா படம் ஒன்றில் நடிக்கிறேன். உதவி இயக்குனராகவும் உள்ளேன். எனக்கும், டி.வி. நடிகர் ஒருவருக்கும் கடந்த 3 வருடங்களாக பழக்கம் இருந்தது. அந்த நடிகர் என்ஜினீயரிங் பட்டதாரி. ஆரம்பத்தில் இருவரும் பஸ்சில் வருவோம். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. கற்பை தொலைத்து விட்டேன் அவர் என்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்றிருந்தபோது, அவர் என்னோடு, படுக்கையை பகிர்ந்து கொண்டார். பலமுறை அவரிடம் நான் கற்பை தொலைத்து இருக்கிறேன். அவர்தான் எனது கணவர் என்று மனதளவில் முடிவு செய்துதான், அவரிடம் நெருங்கி பழகினேன். தற்போது, அவர் என்னை விட்டு, விலகி சென்று விட்டார். என்னோடு பேச மறுக்கிறார். பேஸ்புக்கில் வேறு ஒரு பெண்ணோடு தனது படத்தை வெளியிட்டு, அந்த பெண் தனது மனைவி என்றும் தகவல் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், அவரை சென்று பார்த்தேன். அவர் என்னை யார்? என்று கேட்கிறார். அவரது கேள்வியை கேட்டு, எனது இதயம் நொறுங்கிப்போனது. அவர் எனக்கு வேண்டும் அவர் எனக்கு வேண்டும். அவர் இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2 முறை அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளார். நேற்று 3–வது முறையாக வந்து புகார் கொடுத்தார். இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்ணீரோடு ரேணுகா வருத்தப்பட்டார். image: category:Tagging:News Group Category: |
| இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை வெளியிட்டது, அமெரிக்கா Posted: 09 Jan 2014 11:53 AM PST கொழும்பு இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. தமிழர்கள் கொலை இலங்கையில், கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட சண்டை நடந்தது. அப்போது, அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம்பேரை ராணுவம் குண்டு வீசி கொன்றதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா சார்பில் 2 தடவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அமெரிக்க தூதர் வருகை இந்நிலையில், அமெரிக்காவுக்கான சர்வதேச குற்றவியல் நீதித்துறை தூதர் ஸ்டீபன் ஜே.ராப், ஒரு வாரகால பயணமாக இலங்கை வந்துள்ளார். அதில் 2 நாட்கள் பயணமாக அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றார். தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களை அவர் பார்வையிட்டார். முள்வேலி முகாம்களையும் பார்வையிட்டார். அங்கு தன்னை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நிர்வாகிகளிடம், இலங்கை அரசுக்கு எதிராக மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் 3–வது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ளதாக ஸ்டீபன் ஜாப் தெரிவித்தார். படங்கள் வெளியீடு இந்நிலையில், இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொலை செய்யப்பட்ட இடங்களின் படங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. தனது 'டுவிட்டர்' பக்கத்தில், 'இலங்கை ராணுவ குண்டு வீச்சால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட செயின்ட் அந்தோணி மைதானம்' என்று அந்த படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இறுதிக்கட்ட போர் நடந்த இடங்களின் படங்களையும், 'நோ பயர் சோன்' எனப்படும் பாதுகாப்பு மண்டலங்களின் படங்களையும் அமெரிக்க தூதரகம் வெளியிட்டது. image: category:Tagging:News Group Category: |
| பெங்களூர் அணியில் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் தொடருகிறார்கள் வெட்டோரி பயிற்சியாளராக நியமனம் Posted: 09 Jan 2014 11:42 AM PST பெங்களூர், ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகிய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் நீடிக்கிறார்கள். பெங்களூரில் கோலி 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 12–ந்தேதி நடக்கிறது. இதில் அனைத்து வீரர்களும் புதிதாக ஏலம் விடப்படுகிறார்கள். அதே சமயம் ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சமாக தங்கள் அணியில் முந்தைய சீசனில் விளையாடிய 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 10–ந்தேதிக்குள் (இன்று) அணி நிர்வாகங்கள் வெளியிட வேண்டும். இந்த நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் விவரத்தை அறிவித்துள்ளது. அந்த அணி கேப்டன் விராட் கோலி, அதிரடி சூரர்கள் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அவர்களுக்கு முறையே ரூ.12.5 கோடி, ரூ.9.5 கோடி, ரூ.7.5 கோடி வீதம் சம்பளமாக கிடைக்கும். பெங்களூர் அணி மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்திருப்பதால், அந்த அணிக்கு ஒரு 'மேட்ச் கார்டு' வழங்கப்படும். இந்த சலுகையை பயன்படுத்தி தங்கள் அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரரை அந்த அணியால் ஏலத்தின் போது வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெட்டோரிக்கு புதிய பதவி பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு பந்து வீச்சு பயிற்சியாளராகவும், டிரென்ட் உட்ஹில் பேட்டிங் மற்றும் பீல்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள். விராட் கோலி கூறுகையில், 'பெங்களூர் அணி தொடர்ந்து என்னை தக்க வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெட்டோரி, டொனால்டுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்' என்று குறிப்பிட்டார். இதற்கிடையே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பதில் குழம்பி போய் உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மாவும், ஆல்–ரவுண்டர் கீரன் பொல்லார்ட்டும் நீடிப்பது உறுதியாகி உள்ளது. தக்க வைக்கும் வீரர்களில் 2–வது வெளிநாட்டு வீரர் இடத்திற்கு மிட்செல் ஜான்சன், மலிங்கா இடையே போட்டி நிலவுகிறது. ஹர்பஜன்சிங், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு ஆகியோரது பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னை அணியில் யார்–யார்? சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் தொடருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மற்றொரு இடத்திற்கு வெய்ன் பிராவோ, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரில் ஒருவர் இடம் பெற வாய்ப்புள்ளது. அவுட் ஆப் பார்மில் உள்ள ஷேவாக், டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்படலாம் என்று தெரிகிறது. எந்தெந்த அணிகளில் யார்–யார் நீடிப்பார்கள் என்பது இன்றுக்குள் முடிவாகி விடும். image: category: |
| திருவொற்றியூரில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு ஐகோர்ட்டு அனுமதி Posted: 09 Jan 2014 11:36 AM PST சென்னை திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர், திருவொற்றியூரில் உள்ள அன்னை சிவகாமி நகர் விளையாட்டு மைதானத்தில், வருகிற 10–ந்தேதி (இன்று) தி.மு.க. தேர்தல் நிதி அளிப்பு பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு எண்ணூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் கடந்த டிசம்பர் 25–ந்தேதி மனு கொடுத்தனர். ஆனால், இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கடந்த 5–ந்தேதி இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் ஆஜராகி, 'வழக்கமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்தும் விளையாட்டு மைதானத்தில்தான் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், போலீசார் உள்நோக்கத்துடன், பொதுக்கூட்டத்தை அனுமதி வழங்க மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்' என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தனபால், 'திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகர் விளையாட்டு மைதானத்தில் ஜனவரி 10–ந்தேதி (இன்று) தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும். இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்த போலீசாரின் உத்தரவை ரத்து செய்கிறேன்' என்று தீர்ப்பளித்துள்ளார்.
image: category:News Group Category: |
| தமிழகம் முழுவதும் 4 நாட்கள் மதுக்கடைகள், பார்கள் அடைப்பு தமிழக அரசு அறிவிப்பு Posted: 09 Jan 2014 11:12 AM PST சென்னை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– நபிகள் நாயகம் பிறந்த நாள் ஜனவரி 14–ந்தேதி (செவ்வாய்க்கிழமை), திருவள்ளுவர் தினம் ஜனவரி 15–ந்தேதி (புதன்கிழமை), வள்ளலார் நினைவுதினம் 17–ந்தேதி (வெள்ளிக்கிழமை). குடியரசு தினம் 26–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2, உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3, உரிமம் கொண்ட ஹோட்டல்களை சேர்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3 (ஏ), உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் ஏதும் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் டி.தனசேகரன் கூறும் போது, ''கடந்த காலங்களில் ஒரே மாதத்தில் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவில்லை இதுவே முதல் முறையாகும்'' என்றார்.
image: category:News Group Category: |
| 11 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்ச்சி உள்நாட்டில் கார் விற்பனை 9.59 சதவீதம் குறைந்தது Posted: 09 Jan 2014 11:06 AM PST புதுடெல்லி, இந்தியாவில், 2013–ஆம் ஆண்டில் கார் விற்பனை 9.59 சதவீதம் குறைந்து 19.99 லட்சத்திலிருந்து 18.07 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த 2002–ஆம் ஆண்டிற்கு பிறகு சென்ற ஆண்டில் தான் கார் விற்பனை வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக 11 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை குறைந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கி பாரத ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் முக்கிய கடனிற்கான வட்டியை பலமுறை உயர்த்தியது. இதனையடுத்து வீடு மற்றும் வாகன கடனிற்கான வட்டி அதிகமாக உள்ளது. நம்நாட்டில் விற்பனையாகும் கார்களில் 65 சதவீதம் கடன் வாயிலாகத்தான் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் அதிகமாக உள்ளது. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. எனவே பொதுமக்கள் கார்கள் வாங்க தயக்கம் காட்டியுள்ளனர். 14 மாதங்களில்... இதுபோன்ற காரணங்களால் கடந்த 17 மாதங்களில், 2012 அக்டோபர், 2013 ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்கள் நீங்கலாக 14 மாதங்களில் கார் விற்பனை சரிவடைந்துள்ளது. அதிக பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, வட்டிவிகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மோட்டார் வாகனத்துறை மந்தமாக உள்ளது என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இயக்குனர் (பொது) விஷ்ணு மாத்தூர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''இந்திய மோட்டார் வாகனத்துறை இன்னும் மந்தநிலையிலிருந்து மீளவில்லை. சுரங்கத்துறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் வர்த்தக வாகனங்கள் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் 2014–ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து விற்பனையில் முன்னேற்றம் ஏற்படும்'' என்று தெரிவித்தார். நிறுவனங்கள் கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய மாடல் கார்களை அதிக எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. மாருதி சுசுகி டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனை உள்நாட்டில் முறையே 6.4 சதவீதம் மற்றும் 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 42 சதவீதம் குறைந்துள்ளது. சென்ற மாதத்தில் உள்நாட்டில் கார் விற்பனை ஒட்டுமொத்தத்தில் 4.52 சதவீதம் குறைந்து 1.39 லட்சத்திலிருந்து 1.33 லட்சமாக சரிவடைந்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றதால் கிராமங்களில் தனிநபர் செலவிடும் வருவாய் அதிகரித்துள்ளது. இதனையடுத்து டிசம்பரில் இருசக்கர வாகனங்கள் விற்பனை 2.32 சதவீதம் அதிகரித்து 11,37,081–லிருந்து 11,63,465–ஆக உயர்ந்துள்ளது. எட்டு துறைகள் மின்சாரம், சிமெண்டு, உரம் உள்ளிட்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி அக்டோபர் மாதத்தில் 0.6 சதவீதம் சரிவடைந்தது. அம்மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 1.8 சதவீதம் குறைந்தது. இந்த துறைகளின் உற்பத்தி தொடர்ந்து மந்தமாக உள்ளது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில் டிசம்பர் மாதத்தில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 25.53 சதவீதம் குறைந்து 62,786–லிருந்து 46,757 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 1.21 சதவீதம் குறைந்து 14.49 லட்சத்திலிருந்து 14.32 லட்சமாக குறைந்துள்ளது. மாபெரும் எழுச்சி கடந்த 2010–11–ஆம் நிதி ஆண்டிற்கு முன் கார் விற்பனை ஆண்டுக்கு சராசரியாக 20–30 சதவீதம் அதிகரித்து வந்ததால் மோட்டார் வாகனத்துறையில் மாபெரும் எழுச்சி ஏற்பட்டு இருந்தது. இதனையடுத்து ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு, நிஸான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் நம்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டன. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் கார் விற்பனை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.7 சதவீதம் சரிவடைந்தது. நடப்பு நிதி ஆண்டின் இறுதியில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு துரிதமாக அனுமதி வழங்கி வருகிறது. எனவே எதிர்வரும் 2014–15–ஆம் நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார். image: category: |
| ஊழல் ஒழிப்பு தொலைபேசி திட்டத்துக்கு டெல்லியில் அமோக வரவேற்பு 3 மணி நேரத்தில் 3,200 அழைப்புகள் வந்தன Posted: 09 Jan 2014 11:02 AM PST புதுடெல்லி டெல்லியில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பிடிக்க தொலைபேசி மூலம் புகார் செய்யும் வசதியை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். இதன் மூலம் நேற்று சேவை தொடங்கிய 3 மணி நேரத்தில் 3,200 அழைப்புகள் வந்தன. லஞ்சம் கேட்டால் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதன்படி, டெல்லி மக்கள் தங்கள் வேலைகளுக்கு அரசு அலுவலர்களை நாடும்போது, அவர்கள் லஞ்சம் கேட்டால் தொலைபேசி மூலம் புகார் செய்யும் வசதியை (ஹெல்ப்லைன்) முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் லஞ்சம் கேட்டவர் பற்றி ஆதாரங்களுடன் சமர்ப்பித்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர்களுக்கு மாநில அரசு முடிந்த அளவுக்கு பாதுகாப்பு வழங்கும். மக்களின் புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏராளமான புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வசதியாக டெல்லி போலீசாரும் தயார் நிலையில் இருப்பார்கள். போலீசாரும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கைது செய்ய நமக்கு உதவியாக இருப்பார்கள் என்று முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். 3 மணி நேரத்தில் 3,200 நேற்று காலை 8 மணிக்கு இந்த சேவை தொடங்கப்பட்டது. இதற்காக 011–27357169 என்ற தொலைபேசி எண்ணும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணை அழைத்தால், அதில் புகார்தாரர்கள் லஞ்ச அதிகாரிகளை பிடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறுவார்கள். இந்த சேவை தொடங்கிய காலை 8 மணியில் இருந்து 11 மணி வரையிலான 3 மணி நேரத்தில் மட்டும் 3,200 அழைப்புகள் வந்தன. மக்களிடம் இதற்கு ஏகோபித்த வரவேற்பு இருப்பதால் விரைவில் எளிதாக நினைவில் வைத்திருக்கும் வகையில் 4 இலக்க நிரந்தர தொலைபேசி எண் வழங்கப்படும் என்று முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆரம்பத்தில் 12 தொலைபேசி நிறுவனங்கள் மட்டுமே இதில் இயங்கி வந்தன. மக்களின் ஆதரவை பார்த்து இப்போது 30 தொலைபேசி நிறுவனங்கள் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளன.
image: category:Tagging:News Group Category: |
| சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் ஜெயலலிதா அறிவிப்பு Posted: 09 Jan 2014 10:24 AM PST சென்னை சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மதுரை, விழுப்புரம் விபத்து இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– கடந்த டிசம்பர் 9–ந்தேதியன்று மதுரை மாவட்டம், அ.கோவில்பட்டி உட்கடை, வைகாசிப்பட்டி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தத்தனேரி கிராமத்தைச்சேர்ந்த பாஷாவின் மகன் ஷேக் இப்ராகிம்; விழுப்புரம் மாவட்டம் பாண்டூர் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் வீரன்; டிசம்பர் 15–ந்தேதியன்று திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதி, சிறுகமணி மேற்கு கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த பெட்டவாய்த்தலை கிராமத்தைச் சேர்ந்த சின்னுவின் மகன் சரவணன் மற்றும் சரவணனின் மகன் சிறுவன் சந்தோஷ்; டிசம்பர் 16–ந்தேதியன்று திருச்சி மாவட்டம் சனமங்கலம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே நின்றுக்கொண்டிருந்த கருப்பாயி; திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகன் ராஜபாண்டி;சேலம் மாவட்டம், வலசையூர் கிராமம், சேலம்–அரூர் சாலை அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சுக்கம்பட்டி பகுதியைச்சேர்ந்த பொன்னுசாமியின் மகன் பெரியசாமி ஆகியோர் அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி கிராமம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த டிசம்பர் 13–ந்தேதியன்று கரூர்–கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பஸ் நிலை தடுமாறி எதிரே இருந்த கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த திருச்சி சந்துக்கடை பகுதியைச்சேர்ந்த திருமலையின் மகன் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரு லட்சம் நிவாரண நிதி இந்த சாலை விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
image: category:News Group Category: |
| போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்புதரையில் படுத்து வக்கீல் மறியல் Posted: 09 Jan 2014 10:22 AM PST சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் நேற்று இரவு 11 மணியளவில் ஐகோர்ட்டு வக்கீல் கணேஷ்ராஜா (வயது 40) என்பவர் தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட, தரையில் படுத்து திடீரென்று மறியல் போராட்டம் நடத்தினார். அவர் கூறுகையில், தான் திருவான்மியூரில் வசிப்பதாகவும், மடிப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த போது சிலர் மடக்கி பாட்டிலால் தாக்கியதாகவும், உயிர் பிழைத்து ஓடி பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்துக்கு சென்றதாகவும், அவர்கள் தான் கொடுத்த புகாரை வாங்க மறுத்து விட்டதாகவும் கூறினார். தன்னை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்றும், இதனால் நான் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். image: category:News Group Category: |
| ஆந்திர சட்டசபையில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் Posted: 09 Jan 2014 10:13 AM PST ஐதராபாத் ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான மாநில மறு சீரமைப்பு வரைவு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாநில பிரிவினைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களும், மேல்சபையைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அனைவரும் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஒய்.எஸ்.விஜயலட்சுமி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அவையின் வாசலுக்கு வந்ததும், அங்கு ஏராளமான கட்சித்தொண்டர்கள் குவிந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் தொடர்ந்து தெலுங்கானா எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதனையடுத்து நேற்று எந்த அலுவல்களும் நடைபெறாமல் இருஅவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |