Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 காசு அதிகரிப்பு டீசல் விலையும் 61 காசு உயர்ந்தது

Posted: 03 Jan 2014 10:29 AM PST

புதுடெல்லி

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகளும் உயர்ந்தது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதேபோல டீசல் விலையை மாதம் ஒரு முறை குறைந்த அளவாக 50 காசுகள் வரை மட்டுமே உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையும், மாதம் ஒரு முறை டீசல் விலையும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் விலை 97 காசு உயர்வு

நேற்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலையை 50 காசுகளும் உயர்த்தி அறிவித்தன. இந்த விலை உயர்வு அந்தந்த மாநில அரசின் வரிகளுக்கு அப்பாற்பட்டது எனவும், நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.75.68 ஆனது. டீசல் விலை லிட்டருக்கு 61 காசுகள் அதிகரித்து, லிட்டர் ரூ.57.93 ஆனது.

மும்பையில்

டெல்லியில் பெட்ரோல் விலை 92 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.72.43 ஆகவும், டீசல் விலை 56 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.54.34 ஆகவும் உயர்ந்தது. மும்பையில் பெட்ரோல் விலை 96 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.79.52 ஆகவும், டீசல் விலை 62 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.61.42 ஆகவும் உயர்ந்தது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 95 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.79.55 ஆகவும், டீசல் விலை 58 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.58.76 ஆகவும் உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சிறிது உயர்ந்ததாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சற்று சரிந்திருப்பதாலும் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வுக்கு பின்னரும் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.9.24 இழப்பு ஏற்படுவதாகவும் கூறியுள்ளன

category:

News Group Category:

கால் இறுதியில் பெடேனை பந்தாடினார், வாவ்ரிங்கா யுகி பாம்ப்ரி வெளியேற்றம்

Posted: 03 Jan 2014 10:14 AM PST

சென்னை ஓபன் டென்னிசில் கால்இறுதியில் பெடேனை ஊதித்தள்ளிய வாவ்ரிங்கா அரைஇறுதிக்குள் நுழைந்துள்ளார்.

வாவ்ரிங்கா அபாரம்

தமிழக அரசின் ஆதரவுடன் ஏர்செல் 19–வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது.

முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனை எதிர்கொண்டார்.

முன்னாள் சாம்பியனான வாவ்ரிங்கா தொடக்கத்தில் இருந்தே வலுவான ஆதிக்கம் செலுத்தியதால், ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்து விட்டது. சூப்பரான ஷாட்டுகளை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய வாவ்ரிங்கா 6–2, 6–1 என்ற நேர் செட்டில் பெடேனை பந்தாடினார். அரைஇறுதி சுற்றை உறுதி செய்ய வாவ்ரிங்காவுக்கு 66 நிமிடங்களே தேவைப்பட்டது.

மற்றொரு கால்இறுதியில் பிரான்சின் ரோஜர் வாசெலின் 2 மணி 6 நிமிடங்கள் கடுமையாக போராடி 7–5, 6–7 (6), 6–0 என்ற செட் கணக்கில் இஸ்ரேலின் துடி செலாவை வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இரட்டையரில் அதிர்ச்சி

இரட்டையர் பிரிவின் கால்இறுதியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்–ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 3–6, 3–6 என்ற நேர் செட்டில் குரோஷியாவின் மரின் டிரகன்ஜா–மேட் பவிச் இணையிடம் வீழ்ந்தது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு போட்டித்தரநிலையில் முதலிடம் பெற்ற இந்தியாவின் ரோகன் போபண்ணா–பாகிஸ்தானின் குரேஷி கூட்டணி, 'வைல்டுகார்டு' சலுகை மூலம் உள்ளே வந்த ரஷியாவின் கரன் கச்சனோவ்– இந்தியாவின் சகெத் மைனெனி இணையுடன் மோதியது. 1 மணி 24 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் கச்சனோவ்–மைனெனி ஜோடி 7–5, 2–6, 12–10 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டியது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்த்த போபண்ணா–குரேஷி ஜோடிக்கு முதல் தொடரே பெருத்த ஏமாற்றமாகி விட்டது.

கணிப்புகள் பொய்த்தன

அது மட்டுமின்றி இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட போபண்ணா–குரேஷி, நடப்பு சாம்பியன் பெனாய்ட் பேர் (பிரான்ஸ்)–வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), லியாண்டர் பெயஸ் (இந்தியா)– போக்னினி (இத்தாலி) மூன்று ஜோடிகளும் வெளியேறி போனது இன்னொரு ஆச்சரியமான விஷயமாகும். இதில் லியாண்டர் பெயஸ் தனது ஜோடி வீரர் காயத்தால் விலகியதால் விளையாட முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை 5 மணி முதல் அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

வாவ்ரிங்கா 300–வது வெற்றி

சென்னை ஓபனில் கால்இறுதியில் கிடைத்த வெற்றி வாவ்ரிங்காவின் 300–வது (ஏ.டி.பி. போட்டிகளில்) சர்வதேச வெற்றியாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 4–வது சுவிட்சர்லாந்து வீரர் என்ற பெருமையை வாவ்ரிங்கா பெற்றுள்ளார். ரோஜர் பெடரர் (923 வெற்றி), மார்க் ரோசெட் (433), ஜாகோப் ஹிலாசெக் (432) ஆகியோர் வாவ்ரிங்காவை விட அதிக வெற்றிகண்ட சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் ஆவர்.

உலக தரவரிசையில் 8–வது இடத்தில் உள்ள 28 வயதான வாவ்ரிங்கா மொத்தம் 198 ஆட்டங்களில் தோல்வியையும் சந்தித்து இருக்கிறார். சென்னை ஓபனை பொறுத்தவரை வாவ்ரிங்கா இங்கு இதுவரை 23 ஆட்டங்களில் விளையாடி அதில் 19–ல் வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

category:

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி

Posted: 03 Jan 2014 09:25 AM PST

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையட்டி விற்பனைக்காக ஈரோடு, பி.பி.அக்ரகாரம் அருகே சமயசங்கிலியில் உள்ள ஒரு தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி நடந்த போது எடுத்த படம்.
 

6

அலுவலர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் காட்சி.

Posted: 03 Jan 2014 09:14 AM PST

104 மருத்துவ உதவி மையத்தில் அலுவலர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கும் காட்சி.
 

 

8

தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது

Posted: 03 Jan 2014 09:10 AM PST

தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலையான பா.ம.க.வினருக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கியபோது எடுத்த படம்.

10

தானே ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்தது 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

Posted: 03 Jan 2014 08:21 AM PST

தானே,

தானே ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் 30 நிமிடம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரெயில் பெட்டியில் தீ

மும்பை சி.எஸ்.டி.யில் இருந்து  இன்று மாலை 3.45 மணிக்கு மின்சார ரெயில் ஒன்று தானே ரெயில் நிலையத்திற்கு சென்றது. தானே ரெயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கியதும் அந்த ரெயில் சர்வீசுக்காக தானே– முல்லுண்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் மோட்டார்மேன் நிறுத்தினார்.அப்போது மின்சார ரெயிலின் ஒரு பெட்டியில் உள்ள மின்சாதன அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் மளமளவென ரெயில்பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோட்டார்மேன் உடனே தானே ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.

ரெயில் பெட்டி சேதம்

அவர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரெயில் பெட்டி பகுதியாக சேதம் அடைந்தது.இதற்கிடையே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தின் அருகில் ஸ்லோ ரெயில்கள் இயங்கும் தண்டவாளம் வழியாக வந்த மின்சார ரெயில்கள் அனைத்தும் தானே– முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன.

பயணிகள் அவதி

இதன் காரணமாக ஸ்லோ மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் சுமார் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இயக்கத்தில் இருக்கும் போது ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்படவில்லை.அவ்வாறு ஏற்பட்டிருந்தால் பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

News Group Category:

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 03 Jan 2014 08:10 AM PST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குடியேற உள்ள 5 படுக்கையறை கொண்ட வீட்டை படத்தில் காணலாம்.

7

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராம்ஜெத்மலானி, உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

Posted: 03 Jan 2014 08:06 AM PST

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, முன்னாள் எம்.பி.யும், மூத்த சுப்ரீம் கோர்ட்டு வக்கீலுமான ராம்ஜெத்மலானி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் பேசினார். போலீஸ் சீரமைப்பு கமிட்டியில் நான் இடம் பெற்றுள்ளேன். அதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பேசினேன், என்று கூறிவிட்டு அவர் காரில் ஏறி போய்விட்டார். கூடுதல் கமிஷனர் ரவிக்குமார், மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார்.
 

category:

News Group Category:

மர்லின் மன்றோ வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்வு

Posted: 03 Jan 2014 08:04 AM PST

அமெரிக்காவின் செக்ஸ் ஐகானாக வளம் வந்தவர்   நடிகை மர்லின் மன்றோ,அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்த  மர்லின் மன்றோ. குழந்தை பருவத்தில் இவரை வேறு ஒருவருக்கு இவரது பெற்றோர் தத்து கொடுத்து விட்டனர். வறுமையில் வளர்ந்த மர்லின், பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டார்.

அதன்பின், பாடகியாக, நடிகையாக பல துறைகளில் சிரந்து விளங்கினார்.. அதன்பின் உலகின் மிக பெரிய ஸ்டார் அந்தஸ்து பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட முழு உலகையும் அழகால் வசப்படுத்திய  ஹாலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் மவுசு குறைந்ததாக தெரியவில்லை.. ஏதாவது செய்தி அவரைபற்றி வந்துகொண்டே தான் இருக்கிறது.

தற்போது அவர் அணிந்து இருந்த வெள்ளை நிற கவுன் சிறந்த சினிமா அலங்கார உடையாக தேர்ந்து எடுக்கபட்டு உள்ளது.இந்த உடையை  வில்லியம் டிராவில்லா என்ற பேஷன் கலைஞர் 1955 ஆம் ஆண்டு தயாரித்துள்ளார்.  இந்த கவுன் காற்றில் பறப்பது போன்றும் அதை மன்றோ பிடிப்பது போன்ற புகைப்படம்  மிகவும் பிரபலம். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் மூலம் எடுக்கபட்ட  ஆய்வில் இத்தகவல் கிடைத்து உள்ளது.

category:

News Group Category:

சவால்களுக்கு மத்தியில், 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தில் சராசரியாக 7.7 சதவீத வளர்ச்சி மன்மோகன் சிங் தகவல்

Posted: 03 Jan 2014 07:57 AM PST

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு கால (2004–05 முதல் 2013–14 வரை) ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தில் சராசரியாக 7.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி 6.2 சதவீதமாக இருந்தது.

அறிக்கை

அரசின் 10 ஆண்டு கால சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை மன்மோகன் சிங் நேற்று வெளியிட்டார். அதில், உலக அளவில் இரண்டு முறை பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–

கடந்த 9 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலை அடிப்படையில் சுமார் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.32.42 லட்சம் கோடியிலிருந்து ரூ.100.28 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.24,143–லிருந்து ரூ.68,747–ஆக அதிகரித்துள்ளது. ஒன்பது ஆண்டுகளில் இந்த வருமானம் ஆண்டுக்கு சராசரியாக 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, சில்லறை விலை பணவீக்க உயர்வைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

வேளாண் உற்பத்தி

கடந்த ஆண்டில் கிராமங்களில் தனிநபர் வருமானம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஊரகப்பகுதிகளில் பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது. கடந்த 10 மற்றும் 11–வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் வேளாண் உற்பத்தியில் சராசரியாக 2.5 சதவீதம் மற்றும் 3.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நடப்பு 12–வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வளர்ச்சி 4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடங்கி கிடக்கும் திட்டங்களை முடுக்கி விடுவதற்காக மத்திய அரசு முதலீட்டிற்கான மத்திய அமைச்சரவை குழு மற்றும் திட்ட கண்காணிப்பு குழு ஆகியவற்றை அமைத்தது. சென்ற 2013–ஆம் ஆண்டில் ரூ.5.70 லட்சம் கோடி மதிப்பிலான 293 முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறு தொழில்கள்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உந்துசக்தியாக திகழ்கின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் ஏழு மடங்கு அதிகரித்து ரூ.83,498 கோடியிலிருந்து ரூ.5.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கிச் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கடந்த 2004–ஆம் ஆண்டில் 43.97 கோடியாக இருந்த வங்கி கணக்குகள் சென்ற 2013–ஆம் ஆண்டில் 77.32 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் மத்தியஅரசு சென்ற ஆண்டில் தொலைத் தொடர்பு, பாதுகாப்பு, பங்குச் சந்தைகள் உள்ளிட்ட 12 துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தியது. இந்த முதலீட்டை அதிக அளவில் பெறும் வகையில் இணக்கமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என மன்மோகன்சிங் மேலும் தெரிவித்தார்.

பணவீக்கம்

நவம்பர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 11.24 சதவீதமாகவும், மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு 7.52 சதவீதமாகவும் உயர்ந்தது. பணவீக்கம் மிகவும் அதிகரித்துள்ளதற்கு உணவு பொருள்கள் விலை உயர்வே முக்கிய காரணம் என்றும், எனவே, உணவு தானியங்கள் அளிப்பை அதிகரிக்கும் வகையிலும், சரக்கு போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

கடந்த 2008–ஆம் ஆண்டில் அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால் உலக பொருளாதாரம் உருக்குலைந்தது. பல்வேறு சலுகை திட்டங்களால் மந்தநிலையிலிருந்து சர்வதேச பொருளாதாரம் மீண்டு வளர்ச்சி பாதைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கின. இதுபோன்ற சவால்களுக்கு மத்தியிலும் கடந்த 10 ஆண்டுகளில் சராசரி பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என மன்மோகன் சிங் தெரிவித்தார்.

நம்பிக்கை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நாட்டின் பொருளாதாரத்தில் முதல் முறையாக 9 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டு இருந்தது. ஆனால், உலக பொருளாதார மந்தநிலையால் கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. இனிவரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் என மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேளாண் துறை கடன் ஏழு மடங்கு அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன் ஏழு மடங்காக அதிகரித்து ரூ.1,04,500 கோடியிலிருந்து ரூ.7,00,000 கோடியாக உயர்ந்துள்ளது என மன்மோகன் சிங் வெளியிட்ட சாதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004–05 வேளாண் பருவத்தில் (ஜூலை–ஜூன்) 19.80 கோடி டன்னாக இருந்த உணவு தானியங்கள் உற்பத்தி 2012–13 பருவத்தில் 25.50 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய உணவு மானியம் மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

category:



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™