Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சீக்கிய அமைப்பு தொடர்ந்த வழக்கு: தள்ளுபடி செய்ய சோனியா மனு

Posted:

நியூயார்க்: டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக நடந்த, கலவரத்தில் ஈடுபட்ட தலைவர்களை பாதுகாப்பதாக கூறி, தன் மீது தொடரப்பட்ட வழக்கை, டிஸ்மிஸ் செய்யும் படி, நியூயார்க் நீதிமன்றத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, மனு செய்துள்ளார்.டில்லியில், 84ல், முன்னாள் பிரதமர், இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. இதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நீதி கிடைக்க வழி செய்யும் ...

கனிமொழிக்கு மட்டும் கனிவா? மதுரை கொந்தளிப்பு; தி.மு.க.,வில் எதிரொலிப்பு

Posted:

மதுரை போஸ்டர் விவகாரம், தி.மு.க.,வில் திடீர் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், கட்சித் தலைமையின் கண்டனக் கணைகள், அழகிரி மீது மட்டுமே பாய்ந்துள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். 'கனிமொழியை வாழ்த்தி, ஊர் ஊராய் ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு எந்த கண்டிப்பும் கிடையாதா? அழகிரிக்கு மட்டும் எச்சரிக்கை; கனிமொழிக்கு கனிவா?' என, போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.தி.மு.க., தலைமையின் வாரிசுகளான, கனிமொழிக்கு, நாளை, 46வது பிறந்த நாள்; அழகிரிக்கு, வரும், 30ம் தேதி, 63வது பிறந்த நாள். தேர்தல் நேரம் என்பதால், இருவரது ஆதரவாளர்களும், பிறந்த நாளை விமரிசையாக ...

இலவச மிக்சி, கிரைண்டர் நிறுவனங்களுக்கு அரசு பாக்கி ரூ.450 கோடி : இந்த ஆண்டு இலவசமாக கிடைப்பது சந்தேகம்?

Posted:

சென்னை: இலவச மிக்சி, கிரைண்டர்,மின் விசிறி சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், பாக்கி தொகையான, 450 கோடி ரூபாயை வழங்காமல்,இழுத்தடித்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள், பொருட்கள் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டு இலவச பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், பொதுமக்களுக்கு இலவசமாக, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மின் அடுப்பை வழங்கி வருகிறது. இவற்றை கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் ...

'தேவையற்றதை பேசுறாங்களே...': தலைமை நீதிபதி வருத்தம்

Posted:

புதுடில்லி : ஓரினச் சேர்க்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மத்திய, மாநில அமைச்சர்கள் விமர்சித்ததற்கு, தலைமை நீதிபதி, சதாசிவம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், அவர்கள் மீது எந்த நடவடிக்கைக்கும், அவர் உத்தரவிடவில்லை.'ஓரினச் சேர்க்கை தவறில்லை' என, 2009ல், டில்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு, டிசம்பர், 11ம் தேதி, 'ஓரினச் சேர்க்கை தவறு' என, பரபரப்பு தீர்ப்பை, அந்த நீதிமன்றம் வழங்கியது.இந்த உத்தரவை, ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவானவர்கள், கடுமையாக எதிர்த்தனர். அது போல், மத்திய ...

பிரதமர் பதவியிலிருந்து விலக மன்மோகன் மறுப்பு: அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையாம்

Posted:

''மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட, எனக்கு விருப்பமில்லை. அந்த பதவியை, வேறு ஒருவர் ஏற்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த ஒருவரே, அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்,'' என, பிரதமர், மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார்.இதன் மூலம், காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக, அக்கட்சியின் துணைத் தலைவர், ராகுல், இப்போதைக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.கடந்த, 10 ஆண்டுகளாக, பிரதமர் பொறுப்பில், மன்மோகன் சிங் இருந்து வந்த போதிலும், பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்துவதை, தவிர்த்து வந்தார்.3 ஆண்டுக்கு பின் 80 ...

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு

Posted:

புதுடில்லி : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 97 காசுகளும், டீசல் விலை, லிட்டருக்கு, 61 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. இது, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தி செலவு அதிகாரிப்பு போன்ற காரணங்களால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.சர்வதேச சந்தை நிலவரத்திற்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையும், வழக்கம் போல் மாதத்திற்கு ஒரு முறை, டீசல் விலை லிட்டருக்கு, 50 காசுகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், ...

'ஆம் ஆத்மி' கட்சியில் சேர பலரும் விருப்பம்: நாடு முழுவதும் 322 அலுவலகங்கள் திறப்பு

Posted:

புதுடில்லி : இந்திய அரசியல் வரலாற்றில், புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ள, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இக்கட்சியில், சேருவதற்கு பலரும் ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர்.அமோக வரவேற்பு:இதையடுத்து, நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட அலுவலகங்களை 'ஆம் ஆத்மி' கட்சி திறந்துள்ளது. டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், கடந்த மாதம், 8ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, 'ஆம் ஆத்மி' கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.தேர்தல் முடிவு வருவதற்கு முன் வரை, உறுப்பினர்கள் எண்ணிக்கை, ஐந்து லட்சமாக இருந்தது; ...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: முதல்வர் ஜெயலலிதா கண்டனம்

Posted:

சென்னை : நேற்று நள்ளிரவு முதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ளதாவது:பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இதன் மூலம், ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மேலும் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சுதந்திர இந்தியாவில் ...

தி.மு.க.,வா... பா.ஜ.,வா? யாருடன் கூட்டணி? தே.மு.தி.க., பொதுக்குழுவில் நாளை முடிவு

Posted:

யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய, தே.மு.தி.க., பொதுக்குழு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில், சென்னையில் நாளை கூடுகிறது. தி.மு.க., பா.ஜ., கட்சிகள் கூட்டணிக்கு தூது விடுத்து, வலை விரித்து காத்திருப்பதால், தே.மு.தி.க.,வின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.தமிழகத்தில், தி.மு.க., தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில், சிறிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அணியை வலுவாக்க, தே.மு.தி.க., வருகை அவசியம் என்ற நிலையில், தி.மு.க., திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தே.மு.தி.க.,வை இழுக்க, எல்லா வழிகளிலும் முயற்சித்து வருகிறது.அதற்காக ...

'அவருக்கு கொடுக்கிறதை எனக்கும் கொடுங்க!'

Posted:

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, பா.ம.க., பலத்த தோல்வியை சந்தித்தது. அதனால், 'பா.ம.க., இடம்பெறும் கூட்டணி, வெற்றி கூட்டணி' என்ற பேச்சு பொய்யானது.இந்தத் தேர்தல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத, பா.ம.க., தலைமை, 'இனி, எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை; அ.தி.மு.க., தி.மு.க.,விடமிருந்து, தமிழகத்தை காப்பாற்றுவதே, எங்களின் குறிக்கோள். தேர்தலில் தனித்து போட்டியிட்டு, 2016ல், தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம்' என, அறிவித்தது.அதன்பின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஜாதி அமைப்பு களை ஒன்றிணைத்து, 'சமூக ஜனநாயக கூட்டணி' என்ற, புது கூட்டணியை ஏற்படுத்தினார். லோக்சபா ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™