Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நடமாடும் தெய்வங்கள்

Posted: 03 Jan 2014 12:45 PM PST

தெய்வம் நமக்கு மூன்று தெரிந்துகொண்டு வாழு! – நம் கண்கள் முன்னே உலவும் கடவுள் இந்த மூவரே! - வயிற்றில் நம்மைச் சுமந்து வளர்த்த அன்பு அன்னை – தன் உயிராய் நம்மைக் காப்பாள் உயர்ந்த தெய்வம் அவளே! - தோளில் தூக்கி கொஞ்சி பள்ளி போக வைத்து – நல் ஆளாய் ஆக்கும் தந்தை ஆவர் இரண்டாம் தெய்வமே! - 'எண்ணும் எழுத்தும் கண்ணாம்' என்று சொல்லும் குறளே! – இதை அறிந்திடச்செய்யும் குருவே! ஆவர் மூன்றாம் தெய்வமே! - இந்த மூன்று தெய்வங்கள் இருளை விரட்டும் தீபங்கள் எந்தப் பதவி பெற்றாலும் – நாம் இவரை மதித்து ...

'வீரபாண்டியக் கட்டபொம்மன்' சிவாஜி (கட்டபொம்மன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு)

Posted: 03 Jan 2014 12:38 PM PST

வீரபாண்டியக் கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு கட்டபொம்மனாக நம் நெஞ்சில் வாழ்ந்து காட்டியவர்.

இந்த வார ராசி பலன் :சிரிக்க மட்டுமே...

Posted: 03 Jan 2014 12:26 PM PST

மேஷ ராசி ரசிகர்களே… ! ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர் ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா, கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு. பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ ...

சுஜாதாவின் அம்மன் பதக்கம் சிறுகதை மின்னூல் வடிவில்.

Posted: 03 Jan 2014 09:00 AM PST

சுஜாதாவின் அம்மன் பதக்கம் சிறுகதை மின்னூல் வடிவில். http://www.mediafire.com/download/55zwiwmb12mekm8/amman_pathakkam_sujatha_k3%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

டோனல்டு டக் காமிக்ஸ் தமிழில் இலவசமாக ..

Posted: 03 Jan 2014 08:56 AM PST

டோனல்டு டக் காமிக்ஸ் தமிழில் இலவசமாக .. http://www.mediafire.com/download/1y2e0otrrzer6yo/DONALD+DUCK+TAMIL%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf http://www71.zippyshare.com/v/53022132/file.html

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Posted: 03 Jan 2014 08:48 AM PST

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு ...

மாடி வீட்டு விவசாயி!

Posted: 03 Jan 2014 08:23 AM PST

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழியை நிஜமாக்கி காட்டியுள்ளார், சீனாவைச் சேர்ந்த, பெங் குயிகென் என்ற தொழில் அதிபர். செஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் இவர், தன், நான்கு மாடி வீட்டின், மொட்டை மாடியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். மொட்டை மாடியின் தரை முழுவதும், மணல் பரப்பி, நெல் மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறார். அவர் கூறுகையில்,'எத்தனையோ தொழில் செய்தாலும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாக இருந்தது. அதை, என் வீட்டிலேயே செய்து பார்த்தேன். ...

பிரார்த்தனை - பாதிரியாரும்.. பஸ் டிரைவரும்..!!

Posted: 03 Jan 2014 08:06 AM PST

ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர். "நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்" என்று பாதிரியார் கூறினார். "நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசை" என்றான் பஸ் டிரைவர். 'சரி' என்ற எமதர்மர், "நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று பாதிரியாரிடம் சொல்லிவிட்டு, பஸ் டிரைவரிடம், "நீங்கள் இப்போதே சொர்க்கத்துக்கு போகலாம்" என்று கூறினார். அதிர்ந்த ...

நொடி

Posted: 03 Jan 2014 08:00 AM PST

வாழ்க்கையின்
விதியை
எப்படி மாற்றி
அமைத்து விடுகிறது?
இந்த
அற்புதமான
ஒரே
ஒரு நொடி!

வாழ்வே
வீணாய்ப் போனதென
வருத்தப்படுவதில்
அற்தமில்லை
வசந்த காலம்
எந்த ஆண்டும் பிறக்காமல்
இருப்பதில்லை
தினம் தினம்
தவறாமல் பூக்கிறது
செடியில் ஒரு பூ!

பொய்கள் சூழ் வாழ்வு

Posted: 03 Jan 2014 07:57 AM PST

நான்
நீ
அவன்
இவன்
அது
இது
எல்லாம்
பொய்.

எங்கும்
எதிலும்
எப்போதும்
பொய்களின் ஆதிக்கம்.

அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்து
கிடக்கிறது
பொய்களோ காற்றைப்போல.

ஆழி சூழ் உலகு
பொய்கள் சூழ் வாழ்வு

பிறிதொரு பொழுதில் - என் கவிதைத் தொகுதியின் முகப்பு அட்டை

Posted: 03 Jan 2014 07:52 AM PST

பிறிதொரு பொழுதில் - என் கவிதைத் தொகுதியின் முகப்பு அட்டை

ஜனவரி வெளியீடு

இந்தியர்களைத் தாக்கும் கே.ஒய்.ஆர். கும்பல்: நீதிமன்ற விசாரணையில் அம்பலம்..........

Posted: 03 Jan 2014 06:46 AM PST

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களையும், அவர்களைப் போன்று தோற்றமளிப் பவர்களையும் தாக்கும் செயலில் 'கே.ஒய்.ஆர்.' என்ற பெயரிலான கும்பல் செயல்படுவது இப்போது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் மன்ராஜ்வீந்தர் சிங் என்ற இந்தியர், மெல்போர்னின் பிரின்சஸ் பிரிட்ஜ் அருகே பிர்ராரங் மார் பகுதியில் ரயிலுக்காக காத்திருந்தபோது ஆப்பிரிக் கர்களைப் போன்று தோற்றமளித்த கும்பலால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், ...

ரமணியின் கவிதைகள்

Posted: 03 Jan 2014 06:14 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பொறுமையும் பெருமையும் - நாகசுந்தரம்

Posted: 03 Jan 2014 06:11 AM PST

பொறுமையும் பெருமையும் (ஒரு விகற்ப நேரிசை வெண்பாவில் ஒரு சிலேடை) காலூண்டு காலில்லை கல்வி குணமுண்டு மேலுண்டு கீழமுத்தும் கேள்வியால் - மாலவனின் காலால் கிடந்திட்டான் காசினியில் குற்றமிலா நூலால் பொறுமை பெரிது விளக்கம் 1. பொறுமை கால் உண்டு, பெருமைக்கு கால் இல்லை 2. குணத்தால் பொறுமை வரும்,கல்வியால் பெருமை வரும் 3. பொறுமை மேலே உயர்த்தும், படித்தவன் என்ற அகங்காரம் கீழ் தள்ளும் 4. திருமால் பொறுமையால் மேல் நின்றான், கால் கீழ் பலிசக்ரவர்த்தி சென்று பெருமை பெற்றான் 5. இந்த உலகில் குற்றமில்லாத ...

அஸ்தியின் நிறம் என்ன?

Posted: 03 Jan 2014 05:50 AM PST

ரயில், ஒரு பெருமூச்சுடன், அந்த கிராமத்தில் நின்றது. நான் கைப்பெட்டி மற்றும் ஒரு அட்டைபெட்டியுடன் கீழே இறங்கினேன். என்னைத் தவிர, வேறு யாரும் இறங்கியதாக தெரியவில்லை. வெளியே வந்தேன். அங்கே, ஒரு ஆட்டோ மட்டுமே நின்றிருந்தது. ஆட்டோக் காரரிடம் முகவரியை தெரிவித்து, ஏறி அமர்ந்தேன். ஆட்டோ ஓடத் துவங்கியது. ரோட்டின், இருபுறமும் பச்சை பசேல் என, வயல்வெளிகள். அறுவடைக்கு தயாராக, தலை குனிந்து நிற்கும் நெற்கதிர்கள். அவசர வேலை இருப்பது போல, 'சில்' காற்று, என்னைத் தழுவி, வேகமாக கடந்து சென்றது; பறவைகள் கூட்டம், ...

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!

Posted: 03 Jan 2014 04:46 AM PST

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து ! ************************************* ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான். ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை ...

இன்று வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்!

Posted: 03 Jan 2014 03:36 AM PST

கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். ஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் ...

ஆறுதல்

Posted: 03 Jan 2014 03:26 AM PST

. பூக்களால் இன்பமா துன்பமா? மழையால் இன்பமா துன்பமா? குழந்தைகளால்இன்பமா துன்பமா? இயற்கையின் நெறியில் இயங்கும் வினோத மன இயல்பில் இன்பமும் துன்பமும் தோன்றித் தோன்றி மறையும் மின்னலாய்… பூக்களின் துக்கத்தை விசாரிக்க யாரிருக்கிறார்கள் யாருமற்ற பூந்தோட்டத்தில் ஆறுதல் சொல்லித் தேற்றறுகின்றன வண்ணத்துப்பூச்சிகள் இரக்கத்தோடு… பூவும் இனிப்பும் புன் சிரிப்பை உதிர்க்கும் உறவை இணைக்கும் வாதம், விவாதம் உறவை முறிக்கும்!

குழந்தை

Posted: 03 Jan 2014 02:59 AM PST

ஒழுக ஒழுக
சட்டை ஈரமாக்கிச்
சாக்லெட் சப்பும் குழந்தை

புதிய இடம்
புதிய உறவு; பழக
வெட்கப்படும் குழந்தை

கம்பி மத்தாப்பூ
கண்கள் மூடி
பயந்து பிடிக்கும் குழந்தை


கனவு
கருகிப் போனது
கருவிலே இறந்த குழந்தை

அப்பாவின் தோளில் அமர்ந்து
அம்மன் திருவிழா
வேடிக்கைப் பார்க்கும் குழந்தை

தரிசனம்

Posted: 03 Jan 2014 02:59 AM PST

உள்ளே சூன்ய தரிசனம்
தில்லை வெளியில் பாதுகாப்பாய்
பொன் வேய்ந்த கூரை.

தண்டவாளம் இல்லாத பாதையில்
வேகமாய் ஒடுகின்றன...
இரயில் பூச்சிகள்.

புசித்திடப் பழங்கள்
இலவசமாய் கிடைக்கிறது தினமும்
வனத்தில் விலங்குகளுக்கு.

கசப்பானாலும் இனித்தது
அவள் உபசரித்துக் கொடுத்த
காப்பி...

காடுகள் எரிந்து எங்கும் புகை
பாதுகாப்பாய் வெளியேறின
விலங்குகள்

யார் இவர்கள்? - விளையாட்டு

Posted: 03 Jan 2014 02:28 AM PST

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. 

ராட்சஷப் பாம்பு!

Posted: 03 Jan 2014 12:37 AM PST

சின்னமனூர் என்ற ஊரில், ஒரு தாத்தாவும், பேரனும் வாழ்ந்து வந்தனர். தாத்தா மிகவும் புத்திசாலி. பேரன் சஞ்சித் ஒரு அடி முட்டாள். எதையும் தானாக செய்வது அவனது வாழ்க்கையில் கிடையாது. எதைச் செய்வதென்றாலும் பிறரைக் கேட்டுத்தான் செய்வான். தாத்தாவுக்கு தனது பேரன் ஒரு முட்டாளாக இருக்கிறானே என்று மிகவும் கவலை. ஆனால், அவன்மேல் உயிரையே வைத்திருந்தார். தந்தை, தாய் எவரும் இல்லாத அச்சிறுவனை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். ஒருநாள் சஞ்சித்தை தனியாக அழைத்தார் அவனது தாத்தா. ""சஞ்சித், நீ எப்போதும் சிறுவனாக இருக்கப் ...

தெரிஞ்சுக்கோங்க! - ஆக்ஸிஜன் !

Posted: 03 Jan 2014 12:33 AM PST

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

யார் இவர்?

Posted: 03 Jan 2014 12:28 AM PST

அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ...

கருப்பட்டி மருத்துவம்!

Posted: 03 Jan 2014 12:10 AM PST

கிராமங்களில் இன்றும் 'கருப்பட்டி' காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம் அதிகம் இருக்கிறது. அதிலும் இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்த வில்லை. இந்த கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். பனங்கருப்பட்டி யில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து ...

மார்கழி மாத ராசி பலன்கள் !

Posted: 02 Jan 2014 11:04 PM PST

மேஷம்: சுபயோக சுப மாதம். யோக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் எண்ணங்கள், ஏக்கங்கள் நிறைவேறும். ராசிநாதன், சூரியன் பலமாக பார்வை செய்வதால் மனதிற்கினிய சம்பவங்கள் கூடி வரும். குழந்தை பாக்யத்துக்கு ஏங்கி தவித்தவர்களுக்கு, ராசியில் ஆட்சி பெற்ற சூரியனால் இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் தகுதியான வேலை அமையும். மாமியார், நாத்தனார் மூலம் மகிழ்ச்சியும், பரிசுகளும் கிடைக்கும். சமையலறைக்கு தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதர உறவுகளால் அலைச்சல், டென்ஷன், ...

முத்தம் muththam tamil kathal kavithai

Posted: 02 Jan 2014 10:56 PM PST

~(முத்தம்)~ "உன் உதடு ஏதோ கேட்கிறது என்னிடம் உன் கன்னம் ஏங்கிறது எதற்கு என்று கேட்டு சொல் உன் கண் இரண்டும் "கேட்கிறது மௌனமாய் முத்தம்!! ~(muththam)~ "Un udhau edho kekkiradhu ennidam un kannam eengiradhu edharku enru kettu sol un kan irandum ketkiradhu movnamay muththam!! ================ இது மக்களிடம் சென்றடைய குருக்கு வழி! காதல் கவிதை காதல் வலி லவ் காதல் கவிதை காதல் வலி லவ் kathal kadhal kadal katal love love love love kavithai kavithai kavithai kavithai kavithai ...

ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Posted: 02 Jan 2014 10:56 PM PST

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுங்கள். குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ...

இஸ்ரோ எதிர்நோக்கும் ஜி.எஸ்.எல்.வி. சவால்!

Posted: 02 Jan 2014 10:45 PM PST

இந்திய விண்வெளித் துறையின் கவனம் எல்லாம் இப்போது ஜனவரி 5-ல்தான் குவிந்து கிடக்கிறது. அன்றுதான் ஜி. எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது. சுமார் இரண்டு டன் எடை கொண்ட ஜிசாட் -14 என்னும் செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரே செலுத்தும் திறன்கொண்ட இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டுமே என நம்முடைய விண்வெளித் துறையினர் கவலைகொண்டிருந்தால் அதில் வியப்பில்லை. ஏனெனில், இதுவரை இந்த வகை ராக்கெட்டை ஏழு தடவை உயரே செலுத்தியதில் மூன்று தடவைதான் வெற்றி கிடைத்திருக்கிறது. ...

பரிசாக கிடைத்த விடுமுறை

Posted: 02 Jan 2014 10:39 PM PST

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன* வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான். முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன். அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ...

நவகிரக ஸ்லோகங்கள் தமிழில் :)

Posted: 02 Jan 2014 09:44 PM PST

சூரியன் (சாம்ராஜிய வாழ்வு பெற) சீலமாய் வாழ சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி சூரியா போற்றி சுதந்திரா போற்றி வீரியா போற்றி வினைகள் களைவாய் சந்திரன் (விரும்புவதை பெற) எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி திருவருள் தருவாய் சந்திரா போற்றி சற்குரு போற்றி சங்கடந்தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் (அரசியலில் புகழ் பெற) சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்கலச் செவ்வாய் மலரடி போற்றி அங்கா ரகனே அவதிகள் நீக்கு புதன் ...

காயத்ரி மந்திரங்கள் - வருண காயத்ரி

Posted: 02 Jan 2014 09:28 PM PST

ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத். காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். 1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத். 2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா சேநாய தீமஹி தந்நோ சண்முக: ப்ரசோதயாத் 3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தந்நோ ருத்ர: ப்ரசோதயாத் 4. ஸ்ரீ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™