ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாம் சிரிக்கும் நாளே திருநாள்!
- பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்!
- கலைஞருக்கு இது வேண்டுமா?
- வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.
- கதை ஒன்று வேண்டும் ..உதவுங்களேன்?
- காதல் அமுக்கம்
- மலிகைக் கடைகளாகும் மாளிகைகள்
- பசிப்பிணிக்காய்
- படித்ததில் பிடித்தது :) - ஜோடியைப் பிரித்த ஜோசியர்!
- மாதா, பிதா, குரு, தெய்வம் !
- தாங்க இயலாததை இறைவன் தருவதில்லை!
- சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் !
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -86)
- பேஸ்புக் காதலால் .......................
- அன்புத்தோழி உதயசுதாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
- வாழ்த்துக்கள் நண்பரே !
- காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :)
- ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே!
- டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –
- வேலன்:-எம்பி3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக மாற்ற
- பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி???
- இலவச புத்தகங்கள்(free tamil books)
- முதல் போராளி
- தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா?
- முப்பரிமாண நிழற்படங்கள் 3d IMAGES MY CREATION
- WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி?
- கவிதையில் யாப்பு
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைக
- எங்கள் சிவாஜி
- கற்காலத்தில் கரூர்!
- மொழிகளின் அழிவு!
| நாம் சிரிக்கும் நாளே திருநாள்! Posted: 29 Jan 2014 10:45 AM PST வெதும்பிப்போன மனதிற்கு வெள்ளையடித்துப் போவதுதான் பண்டிகைகளின் பணி! ஆனால்.... பணமெனும் நீர் உறிஞ்சியே பண்டிகைப் பயிர்கள் வளர்வதால் அதை நட்டுவைத்த பாவத்திற்காய் நடுத்தெருவில் நிற்கிறது நடுத்தர வர்க்கம்! ஆண்டவனுக்குப் படையல் வைக்க அடகுக்கடையில் வளையல் வைக்கும் அவல நிலையில் அவர்கள்! அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால் அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு அதிக மகிழ்ச்சி! விழாக்கால வேட்டுச் சத்தங்களின் விரிவான பின்னணியில் ஒன்று சீட்டுக்கடை இருக்கும்! அல்லது சேட்டுக்கடை ... |
| பாரம்பரிய மருத்துவம் மீது பார்வையைத் திருப்புங்கள்! Posted: 29 Jan 2014 10:27 AM PST பாரம்பரிய மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் ஆகியவற்றின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இம்மருத்துவ முறைகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது என்றபோதும், இவற்றுக்குரிய பொதுவான சிறப்புகள் பல: பக்கவிளைவுகள் அற்றவை; நோயின் விளைவுகளை மட்டும் குணப்படுத்தாமல் நோயை வேரோடு போக்கி முழுமையாகக் குணப்படுத்துபவை; அன்றாட உணவுகள், மூலிகைகள் மூலமாகவும் எளிய உடற்பயிற்சிகள் வழியாகவும் பிரச்சினைகளைத் தீர்ப்பவை; உடலை ... |
| Posted: 29 Jan 2014 10:24 AM PST கலைஞருக்கு இது வேண்டுமா? உளுந்தூர்பேட்டை: திமுக தலைவர் கருணாநிதி நடத்தும் குடும்ப நாடகத்தை நாங்கள் நம்பவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து திமுக காத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாரதிய ஜனதாவும் நம்பிக்கையோடு தங்களது அணிக்கு எப்படியும் தேமுதிக வந்துவிடும் என்று காத்திருக்கிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டுப் பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பார்வையிட்டார். அப்போது ... |
| வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். Posted: 29 Jan 2014 10:22 AM PST குழந்தைகள் விளையாட்டாகவும் இருக்கனும் அதே சமயம்அவர்கள் அறிவிற்கு புத்திசாலிதனத்திற்கு வேலைகொடுப்பதாகவும் இருக்கனும்.அவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுக்களை இங்கு காணலாம்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Colouring.Crossword.Dot Drawing.Jigsaws.Mazes. Rumble Jumble.Word Sorch.Fun Games என ஒன்பது விதமான தலைப்புக்கள் கொடுத்துள்ளார்கள்;. ஒவ்வொரு தலைப்பிலும் சுமார் பதினைந்துக்கும் ... |
| கதை ஒன்று வேண்டும் ..உதவுங்களேன்? Posted: 29 Jan 2014 10:04 AM PST யானையும் எறும்பும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்ளும் ..இது கதை வடிவில் வேண்டும் ..... |
| Posted: 29 Jan 2014 10:03 AM PST நாடியால் உதிரம் என் இதயம் தேடி வர மறுக்கிறது நீ என் நெஞ்சுக் குழியில் வாடி வீடமைத்திருப்பதால் . நாள நரம்புகள் பாலமின்றி மடையுடைத்துப் ரத்தம் பீய்ச்சுகிறது நீ என் இருதய வாசல்களை மூடி தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் . நான் துடிக்கிறேன் நீ வராத வரையில் நாடி துடிக்கிறது நீ வரும் வரையில் . |
| Posted: 29 Jan 2014 10:00 AM PST வெள்ளை மாளிகையும் அலரி மாளிகையும் இன்று மலிகைக் கடைகளாயின காசு கொடுத்தால் மட்டுமே சேவைகளும் பொருட்களும் வெள்ளையின் தூய்மை இல்லை வெள்ளை மாளிகையிடம் பூவின் மெதுமை இல்லை அலரி மாளிகையிடம் . வாயிட் காவலோனாய் வாயுள்ளவன் மட்டும் ஜனாதிபதியும் பிரதமருமாய் |
| Posted: 29 Jan 2014 09:43 AM PST நோபல் பரிசில்களுக்காய் கொடுக்கும் குரல்களை தூக்கிப் போட்டு விட்டு பசிக்கொடுமை தாங்காது தவிக்கும் ஜீவன்களுக்காய் குரலை வாக்களியுங்கள் . இனிமேல் நீங்கள் கொடுக்கும் குரல்கள் தான் குரல் வளையால் உணவு போவதா ? உயிர் போவதா ? என்பதைத் தீர்மானிக்கும் . |
| படித்ததில் பிடித்தது :) - ஜோடியைப் பிரித்த ஜோசியர்! Posted: 29 Jan 2014 09:35 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 29 Jan 2014 09:22 AM PST பத்தாம் வகுப்பு, 'அ' பிரிவு. முற்பகல் இரண்டாம் பாட வேளை. ஒழுக்கம் பற்றிய குறளை, சொல்லுக்குச் சொல் பிரித்து பொருளை விளக்கி சொன்னார் தமிழாசிரியர்.''புரிந்ததா... சந்தேகம் இருந்தா கேளுங்க,'' என்றார். எல்லாரும் மவுனமாக இருந்தனர். ''திரும்ப சொல்றேன்... உங்களில் யாரையாவது இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லச் சொல்வேன். அதனால, நல்லா கவனிங்க, " என்று கூறி, அதே குறளை மூன்றாவது முறையாக விளக்கினார்.சிறிது நேரம் இடைவெளிவிட்டு, ''செல்லத்துரை... இப்ப நான் சொன்னத திரும்ப சொல்லு,'' என்றார்.அவன் டெஸ்கில் முழங்கையை ... |
| தாங்க இயலாததை இறைவன் தருவதில்லை! Posted: 29 Jan 2014 09:14 AM PST ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளை இரண்டு கைகளிலும் வைத்து, மாறி மாறிப் பார்த்த தொந்தி டாக்டர், கொஞ்சம் யோசனையாய், நிமிர்ந்து பார்த்தார் ஷீலாவை.கறுப்பாய் இருந்தாலும், களையாய் இருந்த ஷீலாவிற்கு, 50 வயதிருக்கும். அருகில், கல்லூரியில் படிக்கும் அவளுடைய மகள் அமர்ந்திருந்தாள். ''சொல்லுங்க மேடம், உங்க ஒர்க்கிங் ஸ்டைல் எப்படிப்பட்டது?'' சாய்வாய் அமர்ந்தபடி கேட்டார் தொந்தி டாக்டர், சிவகடாட்சம். சொன்னாள். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில், ஷீலாவிற்கு பொறுப்பான பதவி. ஆரம்பத்தில் லெட்ஜரோடு போராடியவள், ... |
| சொக்லேட்டுக்குள் குடியேறிய குளவி! டென்ஷனான வாலிபர் ! Posted: 29 Jan 2014 08:18 AM PST இங்கிலாந்தில் சொக்லேட்டுக்குள் இறந்த போன குளவி இருந்ததை கண்ட வாலிபர் படு டென்ஷனாகி விட்டார். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை சேர்ந்தவர் ஜேக் கியேட்டிங்(வயது 20), அப்பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் "கேட்பரீஸ் டெய்ரி மில்க் சாக்லேட்" ஒன்றை கடந்த வாரம் வாங்கியுள்ளார். அதனை பிரித்து சாப்பிடும் போது, வழக்கத்துக்கு மாறாக ஒரு பகுதி மட்டும் புடைத்து காணப்பட்டிருந்தது. இதனை உடைத்து பார்த்த போது, அதிர்ச்சியில் உறைந்து போனார், உள்ளே இறந்து போன குளவி ஒன்று இருந்துள்ளது. உடனடியாக ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -86) Posted: 29 Jan 2014 08:17 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| பேஸ்புக் காதலால் ....................... Posted: 29 Jan 2014 08:01 AM PST அமெரிக்காவை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது மகள் வயதில் இருக்கும் 25 வயது இளைஞரை கரம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்தவர் அட்ரியானா பெரால்(வயது 41). அமெரிக்காவில் மிகவும் ஸ்டைலிஷாக வாழ்ந்து வந்தவர் பேஸ்புக்கின் மூலம், முகேஷ் குமார்(வயது 25) என்ற இளைஞர் நண்பராகி உள்ளார். பின் இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ளவே, நட்பு காதலாக மாறியது, உடனே அட்ரியானாவை தொடர்பு கொண்ட முகேஷ் தனது காதலை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அட்ரியானா கூறுகையில், முகேஷ் ... |
| அன்புத்தோழி உதயசுதாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.... Posted: 29 Jan 2014 08:00 AM PST இன்று பிறந்தநாள் காணும் உதயசுதாவை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் உதயசுதா[ |
| Posted: 29 Jan 2014 07:52 AM PST வாழ்த்துக்கள் நண்பரே ! பல்லாண்டு பல்லாண்டு மகிழ்ச்சியான இத்தினம் ஆண்டாண்டு உம்மை மகிழ்விக்க வாழ்த்துக்கள். ரமணியன் ( யார் இவர் , எதற்காக வாழ்த்துக்கள் என குழம்பும் உறவுகளுக்கு க்ளு தருகிறேன். இவர் , என் பெயரின் முன் பாகத்தை அவர் முன் பாகமாகவும் என் பெயரின் பின் பாகத்தை, அதன் வேறு பெயராகவும் கொண்டவர். அது சரி , இன்று என்ன விசேஷம். சேஷம் (மீதம் ) வைத்து அடுத்து கூறுகிறேன். ரமணியன் ) |
| காதலில் விழுந்த குரங்கும், கோழியும் :) Posted: 29 Jan 2014 07:42 AM PST காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சொந்தமானது என்பது உலகறிந்தது. ஆனால் விலங்கு, பறவை என 2 வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கும், கோழியும் தினந்தோறும் காதல் 'ரொமான்சில்' ஈடுபடுவதை பார்ப்போர் இப்படித்தான் கூறுகிறார்கள். இந்தோனேசியாவின் ஜாவா தீவை சேர்ந்த ஹக்கிம் என்பவர், அங்குள்ள பானுவாங்கி சந்தைக்கு தினமும் தனது குரங்கை சங்கிலியால் கட்டி அழைத்து வருகிறார். அப்போது அங்கே ஒரு கோழியும் வருகிறது. ... |
| ஜில்லா, வீரம்... இரண்டும் தேவை இல்லாத ஆணிகளே! Posted: 29 Jan 2014 07:15 AM PST ஜில்லா, வீரம் ஆகிய படங்களின் 'மாபெரும்' வெற்றிக்கு முக்கியமாக உழைத்தவர்கள் தல - தளபதியின் ரசிகர்கள். U - அனைவரும் பார்க்கலாம் U/A - பெரியவர்களுடன் பார்க்க வேண்டிய படம் A - கண்டிப்பாக பெரியவர்கள் மட்டும்... இதில் புதிதாக ஒரு சென்சார் சான்றிதழை, T - தல, தளபதி ரசிகர்களுக்கு மட்டும் என்று கொண்டு வரவேண்டும். ஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. என்ன... ஒன்று சுமார் மொக்கை, இன்னொன்று சூர மொக்கை. இரண்டு படங்களிலும் ஹை-லைட் காட்சி என்று கூற, ஒன்றுகூட இல்லை. வெறும் ... |
| டிசம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 29 Jan 2014 06:30 AM PST 17-12-2013-அவள் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/mlt8u12pxwal341/Aval+Vikatan+17-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 17-12-2013-அவள் விகடன் இணைப்பு இதழ் .. http://www.mediafire.com/download/fgw4ld4nn494c74/Aval+Vikatan+Suppli+17-12-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 11-12-2013-இந்தியா டுடே தமிழ் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7e219lzhb4i9in7/IndiaToday+Tamil+11-12-2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 16-12-2013-டாக்டர் ... |
| எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் – Posted: 29 Jan 2014 06:16 AM PST எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் – தலைப்பு வியப்பளிக்கிறதா.. நூறாண்டு தமிழ்த் திரையிசையுலக வரலாற்றைப் பொறுத்த வரையில் முதல் பொற்காலம் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இருவரின் இணைந்த இசையமைப்பின் காலமேயாகும். 1970களில் ஹிந்தித் திரைப்பாடல்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கவும், தமிழ்த் திரையுலக இசையில் சற்றே தொய்வடைந்த்து போல ஒரு தோற்றம் உண்டானது. ஓரிரு ஆண்டுகள் கூட இல்லை. இளைய ராஜா வருகையினால் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது தமிழ்த் திரையிசை. ... |
| வேலன்:-எம்பி3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக மாற்ற Posted: 29 Jan 2014 06:04 AM PST எம்.பி.3 பைல்களை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 200 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள பைலினை தேர்வு செய்யவும். மேலும் அதனை சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும். பிறகு அதனை எத்தனை துண்டுகளாக மாற்றவேண்டுமோ அதற்கான அளவினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். கடைசியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும. சிலவினாடிகளில் ... |
| பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி??? Posted: 29 Jan 2014 04:57 AM PST தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க.,வை புறந்தள்ளி விட்டு, பா.ஜ., அணியில் இடம் பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், தே.மு.தி.க., முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன. 10 தொகுதிகள்: பா.ஜ., அணியில், ம.தி.மு.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. விருதுநகர் உட்பட, 10 தொகுதிகளில் போட்டியிட, ... |
| இலவச புத்தகங்கள்(free tamil books) Posted: 29 Jan 2014 04:48 AM PST |
| Posted: 29 Jan 2014 04:48 AM PST எமன் அதிர்ந்துப் போனான் நிசிகேதா, நான் சொல்வதைக்கேள் என்னிடம் எதைவேண்டுமானாலும் கேள் மரணத்தைப் பற்றிய மர்மம் மட்டும் கேட்காதே மன்னிக்க வேண்டும் அய்யனே, மரணம் என்றால் என்னவென்று அறியாமல் இங்கிருந்து அகல மாட்டேன் என்று நிசிகேதன் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்தான் சத்தியாகிரகம் செய்தான் இந்த இளைஞன்தான் எமனிடம் உபதேசம் பெற்ற முதல்சீடன் வேத இலக்கியத்தில் உண்ணாவிரதமிருந்த முதல் போராளி. |
| தமிழில் படித்தால் வேலை கிடைக்காதா? Posted: 29 Jan 2014 04:46 AM PST 3 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?" Tri-lingual. "2 மொழி தெரிந்தவர்களை ஆங்கிலத்தில் என்ன சொல்வோம்?" Bi-lingual. " ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்களை என்ன சொல்வோம்?" American. முகம் தெரியாத மனிதர்களின் பாராட்டுகள் வந்து குவிந்தாலும், என் கல்வி சார்ந்த சுற்றத்தில் என் எழுத்துகள் அதிகம் படிக்கப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு. "தமிழ் படிச்சு என்ன ஆகப் போகிறது? வேலை கூட கிடைக்காது" என்று பலர் என்னிடமே சொல்லியிருக்கிறார்கள். ஆங்கில வழிக் கல்விதான் வேலைக்கு உத்தரவாதம், ஆங்கில ... |
| முப்பரிமாண நிழற்படங்கள் 3d IMAGES MY CREATION Posted: 29 Jan 2014 12:22 AM PST முப்பரிமாண நிழற்படங்கள் காண்பதற்கு அலாதியான அனுபவத்தைத் தரக் கூடியவை. குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் விரும்பக் கூடியவை. இவற்றை இதற்கென உள்ள கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டும். அவ்வாறான முப்பரிமாண நிழற்படங்களை உருவாக்கி தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். இவையாவும் அடியேனின் படைப்புகள் என்பதைப் பணிவுடன் கூற விழைகிறேன். தங்கள் வரவேற்பைத் தொடர்ந்து இவை இங்கு தொடர்ந்து இடம் பெறும். தொடக்கமாக நடிகர் திலகத்தின் நிழற்படத்துடன் கூடிய நாட்காட்டி. இதில் நடிகர் திலகத்தின் ... |
| WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி? Posted: 28 Jan 2014 10:39 PM PST நம்மில் சொந்தமாக வெப்சைட் நடத்தும் நண்பர்கள் பலரும் அவர்களின் வெப்சைட்டை நல்லபடியாக பராமரிக்க பயன்படுத்துவது WordPress ஸ்கிரிப்ட்தான். புதிதாக வெப்சைட் தொடங்கி WordPress இன்ஸ்டால் செய்த பிறகு நமது வெப்சைட்டினை முழுவதுமாக முடித்து வெளியிட சில நாட்கள் பிடிக்கும். ஆனால் அதுவரையிலும் நமது வெப்சைட்டிற்கு வருபவர்களுக்கு "வெப்சைட் வேலை நடைபெற்றுவருகிறது. இன்னும் சில தினங்களில் வெப்சைட் திறக்கப்படும்" என்பன போன்ற Page காமித்தால் நன்றாக இருக்கும் அல்லவா...? ஏனென்றால் நாம் டிசைன் வேலைகள் செய்யும்போது Plugins ... |
| Posted: 28 Jan 2014 09:34 PM PST யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 28 Jan 2014 08:54 PM PST *பார்த்தவர்களை பார்க்கவில்லை என்று பொய் சொல்கிறது கண்கள் *பெண்ணின் புன்னகைக்குள் புதைந்திருக்கிறது வேதனைப் புதையல். *குறுஞ் செய்தி தொடர்பில் காதலர்கள் வெட்கத்தில் எழுத்துக்கள். |
| Posted: 28 Jan 2014 08:02 PM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 28 Jan 2014 06:02 PM PST தமிழகத்தின் தொன்மை வாய்ந்த நகரங்களில் கரூர் முக்கியமானது. அதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உள்ளது. சங்க காலத்தில் சேரர் தலைநகரமாகவும், வணிக நகரமாகவும் கரூர் திகழ்ந்துள்ளது. மேற்குக் கடற்கரையில் இருந்து கிழக்கு கடற்கரைக்குச் செல்லும் பெருவழிப் பாதையாகவும் விளங்கியுள்ளது. இதனால் கரூர் பகுதியில் ரோமானியக் காசுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. கரூர் நகரின் தொன்மை, சிறப்பு, வரலாறு குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கரூரில் 1973-74, 1977, 1979, 1996 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுகளை ... |
| Posted: 28 Jan 2014 05:57 PM PST நாம் வாழும் காலத்தைத் தகவல் தொழில்நுட்பம் முதலான ஆக்கப் படைப்புகளும் மனித உரிமை முதலான ஆக்கச் சிந்தனைகளும் அடையாளப்படுத்தும். அதே சமயம், மொழிகளின் இழப்பு, சுற்றுச்சூழலின் சிதைவு முதலான அழிவுகளும் இந்தக் காலத்தை நினைவுபடுத்தும். ஆக்கத்துக்கும் அழிவுக்கும் இடையே சிக்கலான உறவு உண்டு. உலகில் ஏறக்குறைய ஏழாயிரம் மொழிகள் உள்ளன; அவை ஒரு தலைமுறைக்கு 20 % வேகத்தில் அழிந்துவருகின்றன என்பது மொழியியலாளர்கள், மானிடவியலாளர்களின் கவலை. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கும் அழியும் ஆபத்து இருக்கிறது. அழிவைப் பற்றிப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |