Daily Thanthi |
- தஞ்சை பெரிய கோவிலில் மெட்டல் டிடக்டர்
- கடம் வித்வான் விநாயக்ராம், டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் கமல்ஹாசன், வைரமுத்துக்கு பத்மபூஷண் 127 பேர் விருது பெறுகிறார்கள்
- இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்து சேர்ந்தனர்
- டெல்லியில் கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்
- குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை
| தஞ்சை பெரிய கோவிலில் மெட்டல் டிடக்டர் Posted: 25 Jan 2014 10:51 AM PST |
| Posted: 25 Jan 2014 10:48 AM PST புதுடெல்லி, பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என 3 பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு இந்த விருதுகளை அறிவிப்பது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டு பத்ம விருதுகளை பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதலுடன் இப்பட்டியல் வெளியிடப்பட்டது. 127 பேர் இதன்படி, பாரதரத்னாவுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது உயரிய 'சிவில்' விருதான 'பத்ம விபூஷண்' விருதுக்கு 2 பேரும், 'பத்ம பூஷண்' விருதுக்கு 24 பேரும், 'பத்மஸ்ரீ' விருதுக்கு 101 பேரும் என மொத்தம் 127 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 27 பேர் பெண்கள் ஆவர். 7 பேர், வெளிநாட்டினர் மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் ஆவர். 3 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்படுகிறது. பத்ம விபூஷண் 'பத்ம விபூஷண்' விருதுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ. ஆர்.) முன்னாள் தலைவர் டாக்டர் ரகுநாத் ஏ.மஷேல்கர், யோகா குரு பி.கே.எஸ்.அய்யங்கார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். பி.கே.எஸ்.அய்யங் கார், 1918-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி பிறந்தவர். 'அய்யங்கார் யோகா' என்ற அமைப்பை நிறுவியவர். உலகின் முன்னோடி யோகா ஆசிரியர் களில் ஒருவராக கருதப்படுபவர். கமல்ஹாசன் நாட்டின் 3-வது உயரிய 'சிவில்' விருதான பத்ம பூஷண் விருது, பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. பிரபல சினிமா பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ், பேட்மிண்டன் வீரர் கோபிசந்த், பிரபல 'கடம்' வித்துவான் விநாயக்ராம், கர்நாடக சங்கீத பாடகி பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் ஆகியோர் உள்பட 24 பேர், 'பத்ம பூஷண்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். பத்மபூஷண் விருதுபெறும் கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் மிகவும் மூத்த கலைஞராவார். இவர் தனது 12-வது வயதில் இருந்தே பெரிய பாடகர்களுக்கு கடம் வாசித்து வருகிறார். 66-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும்போது இவர் தான் கடம் வாசித்தார். கடம் வித்வான்களில் பத்ம விருது பெறும் முதல் கலைஞரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பத்மஸ்ரீ இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங், 'ஸ்குவாஷ்' வீராங்கனை தீபிகா பலிக்கல், இந்தி நடிகர் பரேஷ் ராவல், இந்தி நடிகை வித்யா பாலன், டைரக்டர் சந்தோஷ் சிவன் உள்ளிட்டோர் 'பத்மஸ்ரீ' விருது பெறுகின்றனர். மத்திய மந்திரி சரத்பவாரின் சகோதரரும், சாகல் செய்தித்தாள் குழும அதிபருமானபிரதாப் கோவிந்தராவ் பவார், தமிழக விஞ்ஞானி டாக்டர் அஜய் குமார் பரிடா, தமிழக தொழில் அதிபர் மல்லிகா சீனிவாசன், மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீராங்கனை சுனில் தபாஸ், மலை ஏற்ற வீரர்கள் லவ் ராஜ்சிங் தர்மசக்து, மம்தா சோதா, சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர் போனிபேஸ் பிரபு, பிரபல நரம்பியல் நிபுணர் சுனில் பிரதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர் தேனும்கல் பவுலோஸ் ஜேக்கப், தமிழக யுனானி மருத்துவர் ஹகீம் சையது கலீபதுல்லா, மருத்துவர் ராஜேஷ் குரோவர், நாடக கலைஞர் பன்சி கவுல் உள்பட 101 பேருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது. எப்போது வழங்கப்படும்? இந்த விருதுகளை, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம், ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. News Category:Hot Topic Icon : News Group Category: |
| இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 70 மீனவர்கள் காரைக்கால் வந்து சேர்ந்தனர் Posted: 25 Jan 2014 09:46 AM PST நாகை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து 12 விசைப்படகுகளில் 51 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபத்திலிருந்து 3 விசைப்படகுகளில் 19 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய–மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் காரணமாக 70 மீனவர்களும், 15 விசைப்படகுகளுடன் சில தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் காலை விடுதலையான அவர்கள் நேற்று காரைக்கால் மார்க் துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மீனவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். image: category:News Group Category: |
| டெல்லியில் கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார் Posted: 25 Jan 2014 09:15 AM PST புதுடெல்லி, தெற்கு டெல்லியின் கிடோர்னி பகுதியில் மது கடத்தல் கும்பலின் அட்டூழியங்கள் தொடர்ந்து வந்தன. எனவே இந்த பகுதியில் கலால் வரித்துறையினர் கடந்த மாதம் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகள் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் வினோத் குமார் என்ற போலீஸ்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத்தொகை வழங்கப்படும் என முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 1–ந்தேதி அறிவித்து இருந்தார். மேலும் அந்த குடும்பத்துக்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் என்றும் அவர் அறிவித்தார். இந்த நிலையில் குடியரசுத்தின விழாவை முன்னிட்டு நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், போலீஸ்காரர் வினோத் குமாரின் மனைவி சவிதா தேவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். image: category:News Group Category: |
| குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபரிடம் போலீஸ் விசாரணை Posted: 25 Jan 2014 08:49 AM PST சென்னை, சென்னையில் 6 இடங்களில் குண்டு வெடிக்கும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணியளவில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து பேசினார். அவர், 'குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் உட்பட 6 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அந்த வெடிகுண்டுகள் அனைத்தும் வெடிக்கும்' என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் அதிகாரிகளின் உத்தரவின்படி, வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை அண்ணாசாலையில் நேற்று காலை வெடிகுண்டு உள்ளதா? என்று சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை. வாலிபர் பிடிபட்டார் இதுபோல், அந்த மர்ம நபர் கூறிய 6 இடங்கள் உட்பட பல இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியும், எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் பயன்படுத்திய செல்போன் நம்பர், சைபர் கிரைம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நம்பர் யார் பெயரில் வாங்கப்பட்டுள்ளது? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அது திருப்பத்தூரில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த செல்போனை நங்கநல்லூரை சேர்ந்த பிரபு என்ற வாலிபர் ஒருவர் பயன்படுத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து நேற்று மாலையில், பிரபுவை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
