Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Posted: 20 Jan 2014 09:54 AM PST

சென்னை,

இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்கீல் புகார்

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனு விவரம் வருமாறு:–

பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இணையதளத்தில் ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்து, இசை ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடல்களில் உள்ள வரிகள், பெண்களையும், குறிப்பாக தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளன.

தடை செய்ய வேண்டும்

உடனடியாக, அந்த பாடல்களை தடை செய்து, சைபர் கிரைம் போலீசார் மூலம், அனிருத் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறேன்.இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொலை வெறி பாடல் மூலம் அனிருத் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

category:

News Group Category:

காவல் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியாது ஷிண்டே

Posted: 20 Jan 2014 09:40 AM PST

Flash News Text: 
காவல் துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியாது ஷிண்டே

பாகிஸ்தானில் விபரீத சம்பவம்: திருட்டு பட்டம் கட்டியதால் 6–வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் காயத்துடன் உயிர் தப்பினான்

Posted: 20 Jan 2014 09:25 AM PST

கராச்சி,

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பவர் டாக்டர் மின்ஹால். இவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹரிஷ்குமார் (12) என்ற இந்து சிறுவனை அழைத்து வந்து வீட்டுவேலைக்கு வைத்திருந்தார். இந்நிலையில் பணத்தை திருடி விட்டதாக கூறி சிறுவன் ஹரிஷ்குமாரை பிடித்து வைத்து, வீட்டு உரிமையாளரும், அவருடைய மனைவியும் விசாரித்தனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க சிறுவன் 6–வது மாடியில் இருந்து குதித்தான்.

என்றாலும் அவன் பலத்த காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறான். இச்சம்பவத்தையொட்டி மின்ஹாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுவன் ஹரிஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், 'வீட்டில் இருந்து பணம் எதையும் திருடவில்லை' என்று கூறினான். இதுபற்றி அவனுடைய நண்பன் கூறுகையில், 'அவனை வீட்டுக்காரர் அடித்து உதைப்பது வழக்கம்' என்கிறார். இது தொடர்பாக பிடிபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்பினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

category:

News Group Category:

பாக். மீண்டும் குண்டு வெடிப்பு;தலீபான் தாக்குதலில் 13 பேர் பலி

Posted: 20 Jan 2014 09:19 AM PST

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கைபர் பகுதியிலுள்ள பன்னு அருகே நேற்று தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 22 ராணுவ வீரர்களை கொன்றனர். இந்நிலையில் நேற்று ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகம் அருகில் மார்க்கெட்டில் தலீபான் இயக்க தற்கொலைப்படை தீவிரவாதி குண்டை வெடிக்க செய்தான். சைக்கிளில் வந்து இந்த தாக்குதலை நடத்தினான்.

இந்த குண்டு வெடிப்பில் ராணுவ வீரர்கள் 6 பேர் உள்பட மொத்தம் 13 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களில் ஒருவர் 18 வயது கல்லூரி மாணவர் ஆவார். இவர் கல்லூரிக்கு செல்லும் வழியில் குண்டு வெடிப்பில் சிக்கி இறந்து விட்டார். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிக்கு 18 முதல் 20 வயதிருக்கும். சுமார் 10 கிலோ எடையுள்ள வெடிமருந்தை எடுத்து வந்திருக்கிறான் என்று போலீசார் கூறினர்.

category:

News Group Category:

அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் சுனந்தா புஷ்கர் மரணம் பிரதே பரிசோதனை அறிக்கை தகவல்

Posted: 20 Jan 2014 09:00 AM PST

புதுடெல்லி

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர்  கடந்த 17-ந் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசிதரூருக்கும் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சுனந்தாவின் திடீர் மரணம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மரணம் அடைந்த சுனந்தாவின் பிரேத பரிசோதனையை  3 டாக்டர்கள் கொண்ட மருத்துவக்குழு  நடத்தியது.

சுனந்தாவின்  பிரேதபரிசோதனை அறிக்கை இன்று சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் அலோக் சர்மாவிடம் ஒப்படைக்கபட்டது.

பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்களை வெளியிட மறுத்த அவர்  தரூர்,சுனந்தாவின் சகோதரர் மற்றும் பல்வேறு நபர்களிடம் நடத்தபட்ட விசாரணை அறிக்கைகளையும் ஆராய வேண்டி உள்ளது .அதன் அடைப்படையில் மரணத்திற்கு என்ன காரணம் என்ன என்ற முடிவுக்கு வரப்படும். மேலும் போலீசார் மேலும் விசாரணை  நடத்த வேண்டுமா  அல்லது வேண்டாமா என்பது குறித்து போலீசார் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்மா கூறினார்.

பிரேத பரிசோதனை கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது எய்ம் ஸ் மருத்துவமனையின்  டாக்டர்  சுதிர் கே குப்தா தலைமையிலான  3 டாக்டர்கள் குழு  நடத்தியது.

அறிக்கையில், சுனந்தா புஷ்கர் அதிகளவு மருந்தை உட்கொண்டதால் தான் மரணமடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. முகம் மற்றும் கைகள் உள்பட அவரது உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. சுனந்தாவின் சடலம் மீட்கப்பட்ட ஓட்டல் அறையில்  துணை கலெக்டர் மற்றும் போலீசார், சோதனை செய்த போது மன அழுத்தத்திற்கான தூக்க மாத்திரை  அட்டைகள் மீடகபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 30 க்கும் அதிகமான மன அழுத்தத்திற்கான மாத்திரைகள் சாப்பிட்டு இருக்கலாம் எனவும் தகவ்ல் வெளியாகி உள்ளது.

image: 

category:

News Group Category:

திருச்சியில் பரபரப்பு தண்டவாளத்தில் கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி போலீசார் விசாரணை

Posted: 20 Jan 2014 08:47 AM PST

திருச்சி

திருச்சியில் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் கல்

திருச்சி டவுண் ரெயில் நிலையம் வழியாக நேற்று  இரவு சரக்கு ரெயில் ஒன்று வந்தது. டவுண் ரெயில் நிலையத்திற்குள் வரும் போது சிக்னல் கிடைக்காததால் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தை பார்வையிட்டனர்.

அப்போது தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பகுதியின் அருகே கல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கல்லை அகற்றினர். அதன்பின்னர் சிக்னல் கிடைத்ததால் ரெயிலை இயக்கினர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்கிரிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தண்டவாளத்தில் கல் வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்றது தெரியவந்தது.

தண்டவாளத்தில் கல் வைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மேலும் டவுண் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டவாளத்தில் கல் வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

image: 

category:

News Group Category:

போக்குவரத்து நெரிசல் கெஜ்ரிவால் போராட்டத்தை ஜந்தர் மந்தருக்கு மாற்ற கோரிக்கை

Posted: 20 Jan 2014 07:53 AM PST

புதுடெல்லி,

டெல்லி ரெயில் பவன் எதிரே மத்திய அரசுக்கு எதிராக முதல்–மந்திரி கெஜ்ரிவால் மற்றும் மந்திரிகள் 144 தடை உத்தரவை மீறி தர்ணா போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக டெல்லி மத்திய செயலகம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 10 நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்று கெஜ்ரிவால் எச்சரித்து இருப்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாற்றும்படி போலீஸ் அதிகாரிகள் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியரசுதின விழா ஒத்திகைக்காக ஏற்கனவே விஜய்சவுக் பகுதி மற்றும் ராஜபாதை பகுதி முழுவதையும் போலீசார் போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடிவிட்டனர். தர்ணா போராட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்பதை தடுப்பதற்காக நார்த் பிளாக் பகுதியில் பட்டேல் சவுக், மத்திய செயலகம், உத்யோக் பவன் மற்றும் ரேஸ்கோர்ஸ் ஆகிய 4 மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.
 

category:

News Group Category:

"குன்னத்தூர் சத்திரத்தில் மரகதலிங்கம் இல்லை; ஸ்படிகலிங்கம் மட்டுமே இருந்துள்ளது" மதுரை மாநகராட்சி ஐகோர்ட்டில் அறிக்கை

Posted: 20 Jan 2014 07:37 AM PST

மதுரை,

குன்னத்தூர் சத்திரத்தில் மரகதலிங்கம் இல்லை என்றும், ஸ்படிகலிங்கம் மட்டுமே இருந்துள்ளது என்றும், அந்த ஸ்படிகலிங்கம் கருவூலத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மரகதலிங்கம் மாயம்

மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் எஸ்.முத்துக்குமார், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே குன்னத்தூர் சத்திரம் கடந்த 2009–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம் மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த மரகதலிங்கத்தை காணவில்லை. மரகதலிங்கம் எங்கு உள்ளது என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். ஹவாலா மோசடி பேர்வழிகளால் தான் மரகதலிங்கம் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச உளவுப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மரகதலிங்கம் இல்லை

இந்த வழக்கில் மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கூறி இருப்பதாவது:–

குன்னத்தூர் சத்திரம் இடிக்கப்பட்ட போது அங்கு இருந்த பொருட்கள் மாநகராட்சி கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தன. மரகதலிங்கம் குறித்து மாநகராட்சி அலுவலர்கள், குன்னத்தூர் சத்திரத்தை நிர்வகித்து வந்தவர்கள் உள்ளிட்ட 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், 3 'இஞ்ச்' உயரமுள்ள ஸ்படிகலிங்கத்தை மட்டுமே சத்திரத்தில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறியது போன்ற ஸ்படிகலிங்கம் கருவூலத்தில் உள்ளது. அந்த ஸ்படிகலிங்கத்தின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று நவரத்தினக்கல் நிபுணர் தெரிவித்துள்ளார். சத்திரத்தில் இருந்த தாமிர பட்டயமும் தொல்லியல் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சத்திரத்தில் மரகதலிங்கம் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

போலீசாருக்கு உத்தரவு

இந்த நிலையில் அந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர்ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மரகதலிங்கம் மாயமானது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தல்லாகுளம் போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

News Group Category:

அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்

Posted: 20 Jan 2014 07:27 AM PST

டெல்லியில் தடையை மீறி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம். அருகில் டெல்லி மாநில மந்திரிகள் மனீஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி உள்ளிட்டோர் உள்ளனர்.

1

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி

Posted: 20 Jan 2014 07:23 AM PST

மத்திய பிரதேசம் போபாலில் நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுடன் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கலந்துரையாடியபோது எடுத்தப்படம்.
 

9


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™