Daily Thanthi |
- பதவியில் இருக்கும் போதே கேள்வி எழுப்பாதது ஏன்? ஆர்.கே சிங்குக்கு காங்கிரஸ் கேள்வி
- உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட்
- ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் போட்டியிட்டால் தோல்வி அடைவார்: லாலு பிரசாத் யாதவ்
- சிக்மகளூரில் சித்தராமேஸ்வரா ஜெயந்தி விழா நாளை தொடங்குகிறது முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொள்கிறார்
- இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது: பாகிஸ்தான்
- ஆதாரங்களை திருத்தியதாக ஆம் ஆத்மி மந்திரி மீது குற்றசாட்டு: பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல்
- எட்வர்டு ஸ்னோடன் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றினார்: அமெரிக்கா வார இதழில் தகவல்
- ஐபில் மோசடி விசாரணையில் சுஷில் குமார் ஷிண்டே தலையிட்டார்: ஆர் கே சிங் குற்றசாட்டு
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி வீடு திரும்பினார்
- சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி
| பதவியில் இருக்கும் போதே கேள்வி எழுப்பாதது ஏன்? ஆர்.கே சிங்குக்கு காங்கிரஸ் கேள்வி Posted: 14 Jan 2014 10:07 AM PST புதுடெல்லி, ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆர்.கே.சிங்கோ அல்லது வேறு யாராக இருந்தாலும், அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடைய கவலையை பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். image: category:Tagging:News Group Category: |
| உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல்: 3 போலீசார் சஸ்பெண்ட் Posted: 14 Jan 2014 09:52 AM PST காசியாபாத், உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் அங்குள்ள 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.எனினும் பெண்களை தாக்கிய மூத்த போலீசாரை சஸ்பெண்ட செய்யாதால் சர்ச்சை எழுந்துள்ளது நேற்று இரவு டிரக்கும் மினிவேனும் நேருக்கும் நேர் மோதிகொண்ட விபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தை கண்டித்து அங்குள்ள பொதுமககள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைகளால் தாக்கியும் , உதைத்தும் லத்தியால் அடித்தும் துன்புறுத்தினர்.இந்த சம்பம் கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனினும் தாக்குதல் நடத்திய மூத்த போலீசார் ஸ்ரீபிரகாஷ் யாதவ் என்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பற்றி கூறிய மூத்த போலீஸ் அதிகாரி அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறிப்பது எங்கள் அலுவலக அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் மிகவும் மோசமான நிலமை நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரிகளும் சமாஜ்வாடி கட்சியினர் போல் செயல்படுவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| Posted: 14 Jan 2014 09:01 AM PST பாட்னா, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் கூறி வருகிறார். அங்கு அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அவர் ராகுல் காந்திக்கு சவால் விடுத்தார். இந்த நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வியை சந்திப்பார் என்று தெரிவித்தார். category:Tagging:News Group Category: |
| Posted: 14 Jan 2014 08:37 AM PST சிக்மகளூர், சிக்மகளூர் மாவட்டம் கடூரில் சித்தராமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்தராமேஸ்வரா 841–வது ஆண்டு ஜெயந்தி விழா நாளை(புதன்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் மாநில முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொள்கிறார். இந்த ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக சித்தராமேஸ்வரா கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் மற்றும் கார் நிறுத்த வசதிகள் போன்றவை செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. category:Tagging:News Group Category: |
| இந்திய ராணுவ தளபதி விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது: பாகிஸ்தான் Posted: 14 Jan 2014 08:15 AM PST இஸ்லமாபாத், இந்திய ராணுவத் தளபதி விக்ரம் சிங்கின் பேச்சு கோபமூட்டும் வகையில் உள்ளது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ராணுவதின ஆண்டு விழாவையொட்டி, இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம்சிங் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரரின் தலை துண்டிக்கப்பட்டதற்கு எந்த பதிலடியும் கொடுக்கவில்லையே? என்று, அவரிடம் கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த விக்ரம்சிங், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் தொடுத்தால் அதற்கு சமமான அளவில் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும், பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 10 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். ''உரிய பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பற்றி என்னால் உறுதியாக கூற முடியும். பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு அதிகாரியும், 9 வீரர்களும் கொல்லப்பட்டது மற்றும் 12 அல்லது 13 வீரர்கள் காயம் அடைந்தது பற்றி ஜியோ டி.வி. கடந்த டிசம்பர் 23–ந் தேதி அன்று வெளியிட்ட தகவலை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தக்க பதிலடி கொடுத்து உள்ளதாக''அவர் மேலும் கூறினார். இதற்கு பாகிஸ்தான் ராணுவச் செய்தி தொடர்பாளர் ஆஸிம் பஜ்வா சில மணி நேரத்திலேயே பதில் அளித்தார். அவர் கூறுகையில், ""இந்திய ராணுவத் தலைமை தளபதி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் கோபமூட்டும் வகையிலும், வருத்தம் அளிக்கும் வகையிலும் உள்ளது.கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| ஆதாரங்களை திருத்தியதாக ஆம் ஆத்மி மந்திரி மீது குற்றசாட்டு: பதவி விலக எதிர்கட்சிகள் வலியுறுத்தல் Posted: 14 Jan 2014 07:54 AM PST புதுடெல்லி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஊழல் வழக்கு ஒன்றில் டெல்லி சிபிஐ கோர்ட்டில் சோம்நாத் பாரதியும் அவரது கட்சிக்காரரும் போராடி வந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல அவதூறானதும் என தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அவர் பதவி விலக வேண்டும் பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இல்லாவிடில் அரவிந்த் கெஜ்ரிவால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். எனினும் தன்மீதான குற்றசட்டை சோம்நாத் பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சோம்நாத்பாரதி மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் தவறானது என அரவிந்த் கெஜ்ரிவாலும் அவருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். image: category:Tagging:News Group Category: |
| எட்வர்டு ஸ்னோடன் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றினார்: அமெரிக்கா வார இதழில் தகவல் Posted: 14 Jan 2014 07:26 AM PST வாஷிங்க்டன், அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடன் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தினார். இதையடுத்து கைது செய்யப்படும் அபாயம் ஏற்பட்டதால், அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.அமெரிக்கா ரகசியமாக நட்பு நாடுகளை கண்கானித்த விவகாரத்தை ஸ்னோடன் வெளியிட்டதால் அமெரிக்காவுக்கு அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், எட்வர்டு ஸ்னோடன் ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கு முன் கிட்டதட்ட மூன்று வருடங்களாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியதாக அமெரிக்க வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இது பற்றி டெல்லியில் உள்ள தூதரகத்தில் கேட்டபோது உடனடியாக எந்த பதிலளிக்கவில்லை. image: category:Tagging:News Group Category: |
| ஐபில் மோசடி விசாரணையில் சுஷில் குமார் ஷிண்டே தலையிட்டார்: ஆர் கே சிங் குற்றசாட்டு Posted: 14 Jan 2014 06:55 AM PST புதுடெல்லி, ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய தொழில் அதிபரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவருமான ஆர்.கே.சிங் குற்றம் சாட்டியுள்ளர்.இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையிருந்தால் ஷிண்டேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கூறியுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி வீடு திரும்பினார் Posted: 14 Jan 2014 06:32 AM PST கோட்டயம்,- கேரள மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி இரத்த அழுத்தம் காரணமாக நேற்று காலை 8.30மணி அளவில் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை சீரானதை அடுத்து இன்று பிற்பகல் உம்மன் சாண்டி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருத்துவர்களின் அறிவுரைப்படி முதல் மந்திரியின் நிகழ்ச்சிகள் மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| சீனாவில் ஷூ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 16 பேர் பலி Posted: 14 Jan 2014 05:53 AM PST பெய்ஜிங்க், சீனாவின் கிழக்கு பகுதியான செஜியாங் மாகணத்தில் உள்ள 'ஷூ' தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது அப்போது எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் திணறி தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் 16 பேர் உடல்களையும் அவர்கள் மீட்டனர். படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |