Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


8–ந்தேதி முதல் நடந்துவந்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 11 Jan 2014 10:34 AM PST

சென்னை

8–ந்தேதி முதல் நடந்துவந்த தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் கேன் குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது.

252 நிறுவனங்களுக்கு தடை

கடந்த சில தினங்களுக்கு முன் நீர்வளம் குறைவான, வறட்சியான பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கும் 252 குடிநீர் நிறுவனங்கள் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதித்து தென்மாநில பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு கூறியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த 900–க்கும் மேற்பட்ட தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 8–ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால், தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 252 நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்தனர்.

தற்காலிகமாக வாபஸ்

கடந்த 3 நாட்களாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம், பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் நலன் கருதி நேற்று முன்தினம் இரவு முதல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முதல் கேன் குடிநீர் வினியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது.

சாதகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கே.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

category:

News Group Category:

மயிலாடுதுறை அருகே தண்டவாளத்தில் விரிசல்: செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

Posted: 11 Jan 2014 10:32 AM PST

மயிலாடுதுறை

திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மயிலாடுதுறையில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கி வந்தது. அப்போது நீடூருக்கும், ஆனந்ததாண்டவபுரம் ரெயில் நிலையங்களுக்கும் இடையில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை அந்த வழியாக சென்ற 2 பேர் பார்த்து ரெயில்வே கேட் கீப்பரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நீடூர் அருகே நிறுத்தினார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் தண்டவாள விரிசலை சரி செய்தனர். பின்னர் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.45 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்பட்டு வந்தது.

உரிய நேரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கவனித்ததால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது. விரிசல் காரணமாக காரைக்கால்–பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

 

image: 

category:

News Group Category:

‘மைலாப்பூர் திருவிழா’ கோல போட்டி வெளிநாட்டு பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்பு

Posted: 11 Jan 2014 10:31 AM PST

சென்னை

'மைலாப்பூர் திருவிழா' கோலப்போட்டியில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

12–வது ஆண்டு

சென்னை மைலாப்பூரில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் 'மைலாப்பூர் திருவிழா' நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 12–வது ஆண்டு 'மைலாப்பூர் திருவிழா' கடந்த 9–ந் தேதி காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் சிறப்பு அம்சமான கோலப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழாவில் முதல் முறையாக 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் கோலப்போட்டியும் பிரத்தியேகமாக மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன் நடைபெற்றது.

பெண்களின் உடற்பயிற்சி

பெரியவர்களுக்கான கோலப்போட்டி வழக்கம் போல் கோவில் வடக்கு மாட வீதியில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டு பாரம்பரிய கோலங்களை வரைந்தனர். இதில் எந்த விதமான சாயங்களும் பயன்படுத்தவில்லை. இந்த கோலப்போட்டியில் வெளிநாட்டு பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொதுவாக, அந்த காலங்களில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான 2 மணி நேரத்தில் பெண்கள் கோலம் போடுவது வழக்கம். இவ்வாறு கோலம் போடுவது, பெண்களின் மனதை ஒருமுகப்படுத்துவதுடன், உடற்பயிற்சியாகவும் அமைந்தது.

கோலம் போடுவது பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாக அமைந்துள்ளதால், அர்ஜென்டினா, ஜெர்மனி நாட்டவர்கள் 'மைலாப்பூர் திருவிழா' கோலப்போட்டியில் பெண்கள் கோலம் போடுவதை பார்வையிட்டு, உடலின் எந்த எந்த தசைகள் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு உடற்பயிற்சியாக அமைகிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்தனர்.

போக்குவரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

Posted: 11 Jan 2014 10:30 AM PST

கரூர் வட்டார போக்கு வரத்து கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு வார விழா

கரூர் வட்டார போக்கு வரத்து கழகம் சார்பில் 25–வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. அதன்படி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கிய இந்த விழாவிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் தலைமை தாங்கினார்.

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார் முன்னிலை வகித் தார்.

கண்காட்சி

சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஜெயந்தி கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வ லத்தை தொடங்கி வைத்தார். இதில் டிரைவர்கள் ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ள திருவள்ளுவர் மைதா னத்தில் அமைக்கப்பட்டு உள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பஸ் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

இந்த சாலை பாதுகாப்பு வார விழா தொடர்ந்து வருகிற 20–ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 2–ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

3–ம் நாள் நாளை (திங்கட் கிழமை) சாலை பாதுகாப்பு வாசகங்கள் கொண்ட பதாகை களுடன் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் சார்பில் ஊர்வலம் நடக்கிறது.

மருத்துவ முகாம்

17–ந்தேதி (வெள்ளிக் கிழமை) வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் டிரைவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடக்கிறது.

18–ந்தேதி (சனிக்கிழமை) சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

கட்டுரை போட்டி

19–ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் சிறந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டி, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, சாலை பாதுகாப்பில் ஓட்டுனர், பொது மக்கள் கடமை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி ஆகியவை நடக்கிறது.

20–ந்தேதி (திங்கட்கிழமை) வட்டார போக்குவரத்து அலுவலகம், பகுதி அலுவலகம், அனைத்து அரசு போக்கு வரத்து அலுவலகங்கள், பணி மனைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய உறுதி மொழி எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, தியாகராஜன், சதாசிவம், அனிதா, சிவக்குமார் மற்றும் கரூர் நகராட்சி துணை தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய குழு தலைவர் திருவிகா, தாந்தோணி ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம், கரூர் நகர அ.தி.மு.க. செய லாளர் வை.நெடுஞ்செழியன், போக்குவரத்து துணை முதன்மை காப்பாளர் சங்கர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

category:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்

Posted: 11 Jan 2014 10:25 AM PST

காஞ்சீபுரம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேர்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 14–ந் தேதி செவ்வாய்க்கிழமையில் பொங்கல் பண்டிகை வருவதால் அன்றைய தினம் பூங்காவிற்கு வார விடுமுறையாக இருந்தாலும் பார்வையாளர்கள் வசதிக்காக பூங்கா இயங்கும்.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 14, 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெருக்கடியின்றி நுழைவுச்சீட்டு பெறுவதற்காக 20 நுழைவுச்சீட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள்

பார்வையாளர்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வனத்துறை மற்றும் காவல் துறையினர் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பார்வையாளர்கள் கொண்டுவரும் உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக நாற்காலி, மேசை வசதியுடன் உணவு அருந்துமிடம் நுழைவுவாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு பார்வையாளர்கள் உணவளிப்பதை தவிர்க்கும் பொருட்டு விலங்கு இருப்பிட பகுதிகளுக்குள் உணவு பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இவற்றை பாதுகாத்து வைக்க கட்டணமில்லா பொருட்கள் வைப்பறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி

பார்வையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக கூடுதலாக 1000 வாகனங்கள் நிறுத்தும் இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கூடுதலாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. காவல்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சார வாரியம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூங்கா நிர்வாகத்திற்கு உதவுவதற்காக சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் வன மண்டலங்களிலிருந்து 150 வனத்துறை பணியாளர்கள் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 200–க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு மாணவர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

கரும்பு, மதுவுக்கு அனுமதியில்லை

வாகனத்துடன் தீயணைப்பு குழு, ஆம்புலன்சுடன் மருத்துவ குழு ஆகியவை தயார் நிலையில் இருக்கும். பல்வேறு வழித்தடங்களில் இருந்து 500–க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் மது, சிகரெட், கரும்பு மற்றும் பாலிதீன் பைகளை பூங்காவினுள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை.

பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

category:

News Group Category:

*ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

Posted: 11 Jan 2014 10:11 AM PST

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ரங்கா, ரங்கா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள்.

ஸ்ரீரங்கம் கோவில்

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என்ற பெருமை களுக்குரிய திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் புகழ் பெற்றதாகும்.

ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் சொர்க்கவாசல் வழியாக பெருமாளுடன் சென்றால் புண்ணியம் பெறலாம். நேரடியாக வைகுண்டத்திற்கு செல்லலாம் என்று நம்பப்படுவதால் இந்துக்களுக்கு இந்த விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவானது பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் வெகு விமரிசை யாக நடைபெறுகிறது.

சொர்க்கவாசல் திறப்பு

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 31–ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து திருவிழாவின் 10–ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து திருவாய் மொழித்திருநாளின் முதல்நாள் நிகழ்ச்சியாகும்.

இதையொட்டி ஏகாதசி விரதம் இருந்த பக்தர்கள் கண்விழித்து பெருமாளின் திருநாமத்தை உச்சரித்த படி இருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் நம்பெருமாளை தோளில் சுமக்கும் ஸ்ரீபாதம் தாங்கிகள், அரையர்கள் அணிவகுத்து மூலஸ்தானத்திற்கு சென்றனர். சரியாக 3.15 மணிக்கு விருச்சிக லக்னத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை அணிந்து சிம்ம கதியில் மூலஸ்தானத் தில் இருந்து நம்பெருமாள் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்கள் நம்பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

பின்னர் மேலப்படி வழியாக கண்ணாடி சேவை சாதித்த நம்பெருமாள் ராஜமகேந்திரன் சுற்று வழியாக நாழி கேட்டான் வாசலுக்கு வந்தார். இதைத்தொடர்ந்து தங்க கொடிமரம் வழியாக பிரகாரத்தை சுற்றிய நம்பெருமாள் விரஜாநதி கரைக்கு வந்ததும் வேத விற்பன்னர்கள் ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை படித்தனர். அங்கு ஐதீகபடி நீராடிவிட்டு பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கிவிட்டு நம்பெருமாள் பரமபதவாசல் அருகில் வந்தார்.

அப்போது மணியக்காரர் உத்தரவு கொடுக்க பரமபதவாசல் கதவு திறக்கப்பட்டது. சரியாக அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலை நம்பெருமாள் கடந்தார். அவருடன் பக்தர்களும் வெளியே வந்தனர். அப்போது பக்தர்கள் ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா என்று கோஷம் எழுப்பினார்கள். சொர்க்கவாசலை கடந்த நம்பெருமாள் சந்திரபுஷ்கரனி, பூப்பந்தல் நடைபாதை, திருக்கொட்டகை வழியாக ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தார்.

21–ந் தேதி வரை...

அங்கு இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த பக்தர்கள் ரத்தின அங்கியில் ஜொலித்த நம்பெருமாளை பக்தி பரவசத்துடன் வணங்கினார்கள். அதன் பின்னர் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் ராப்பத்து விழா ஜனவரி 21–ந்தேதி வரை நடைபெறுகிறது. 21–ந் தேதி யன்று நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

3 அமைச்சர்கள்

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ஆனந்தன், உணவு அமைச்சர் காமராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரசு தலைமை கொறடா மனோகரன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணி யன், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்பட பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

category:

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெரம்பலூர் கலெக்டர்- எம்.எல்.ஏ. வழங்கினர்

Posted: 11 Jan 2014 10:10 AM PST

பெரம்பலூர்,

மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது, இரா.தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

மூன்று சக்கர சைக்கிள்கள்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் .

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தரேஸ் அஹமது பேசிய தாவது:-

பயன்படுத்தி கொள்ள வேண்டும்

தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல் படுத்தி வருகிறார். அந்த வகை யில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு மூன்று சக்கர வண்டி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ஊன்று கோல் வழங்கும் திட் டங்களின் கீழ் ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகிறது.

இது போன்ற நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண் டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கலெக்டர்-எம்.எல்.ஏ.

அதனை தொடர்ந்து 4 நபர்களுக்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரத்து 960 மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனங்களையும், 16 நபர்களுக்கு ரூ.78 ஆயிரத்து 560 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 7 நபர்களுக்கு ரூ.31 ஆயிரத்து 325 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும், 12 நபர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 940 மதிப்பிலான ஊன்று கோல்களையும் ஆக மொத்தம் 39 பேருக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரத்து 785 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக் டர் மற்றும் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கி னர்.

இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷாரோன் மரணம்

Posted: 11 Jan 2014 10:05 AM PST

ஜெருசலேம்

இஸ்ரேல் நாட்டின் 11–வது பிரதமராக பதவி வகித்த ஏரியல் ஷாரோன், நேற்று காலமானார். அவருக்கு வயது 85. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இவர், டெல் அவிவ் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உயிரிழந்த ஏரியல் ஷாரோனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் விடுதலைக்காக நடத்தப்பட்ட பல்வேறு போர்களில் முக்கிய பங்காற்றியுள்ள இவர், கடந்த 2001 முதல் 2006 வரை அந்நாட்டு பிரதமராக பதவி வகித்தார். கடந்த 1982–ம் ஆண்டுகளில் இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரியாக இருந்த இவர், லெபனான் மீதான இஸ்ரேல் படையெடுப்பில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

 

category:

News Group Category:

ரெயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் ஏமாற்றம்

Posted: 11 Jan 2014 10:05 AM PST

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

பொங்கல் பண்டிகை

சென்னையில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பண்டிகை காலங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்வதால் ரெயில்கள், பஸ்கள் என அனைத்திலும் கூட்டம் நிரம்பி வழியும்.

பொங்கல் பண்டிகையையொட்டி ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் கோவை, நாகர்கோவில் போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களை அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் விழா 14–ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் நேற்றே சென்னை ரெயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

வேதனையுடன் பயணம்

இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி எந்தவொரு சிறப்பு ரெயிலும் இன்று வரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். ரெயிலில் முன்பதிவு படுக்கை அல்லது இருக்கை வசதி கிடைக்காததால் வேதனையுடன் பயணம் செய்வதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ''ஏற்கனவே பெரும்பாலான ரெயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. தற்போது காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். ரெயில்வே நிர்வாகம் எந்தவொரு சிறப்பு ரெயிலையும் இதுவரை இயக்கவில்லை.

சிறப்பு ரெயில்கள்?

இதனால் கைக்குழந்தைகளுடனும், உடமைகளுடனும் நிற்க இடமில்லாமல் பயணம் செய்ய வேண்டியுள்ளது. தித்திப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட, திக்குமுக்காடி பயணம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல் சிறப்பு ரெயில்களை விரைவில் அறிவிக்க வேண்டும்'' என்றனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் 350–க்கும் மேல் உள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்கலும் கிடைக்கவில்லை

தட்கல் டிக்கெட் வாங்கவும் கடந்த 2 நாட்களாக முந்தைய நாள் இரவு முதலே ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை காலியாகிவிடுகின்றன. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இனி அறிவிப்பது சந்தேகம் தான் என்று பயணிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

கோதண்டராமசாமி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Posted: 11 Jan 2014 10:02 AM PST

அரியலூர் கோதண்ட ராமசாமி பெருமாள் கோவிலில் நேற்று நடை பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெருமாள் கோவில்

அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கோதண்ட ராமசாமி திருக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடை பெற்றது.முன்னதாக நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருக் கோவில் சார்பில் பெருமாள் நாச்சியார் திருக்கோலம்பூண்டு மோகினி அலங்காரத்தில் பக் தர்களுக்கு திவ்ய ரூபதரிசனத் தில் திருவீதியுலா வந்து ஆசி வழங்கினார்.

பரமபத வாசல் திறப்பு

நேற்று (சனிக்கிழமை) காலை 5-30 மணிக்கு நம் பெருமாள் எழுந்தருளி பரம பத வாசல் திறப்பு, ஆழ் வாராதிகள் மோட்ச சேவை மற்றும் திருவீதியுலா நடை பெற்றது.

அன்னதானம்

இதில் ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு பரமபத வாசல் வழியாக வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவிழாவை யொட்டி ஆங்காங்கே பந்தல் கள் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் நீதிமன்ற நிர்வாகத் தினர் மற்றும் திருக்கோவில் நிர் வாகத்தினர் செய்திருந்த னர்.வைகுண்ட ஏகாதசி விழா விற்கான ஏற்பாடுகளை அரி யலூர் இந்து சமய அற நிலை யத்துறை ஆய்வாளரும் தக் காருமான மு.சின்னசாமி, செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வை.மணி மற்றும் பக்தர்கள் செய்து இருந்தார்கள்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™