Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


எங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் காங்கிரஸ் வேதனையை அனுபவிக்கும்: கெஜ்ரிவால் சூசகம்

Posted: 18 Jan 2014 10:56 PM PST

டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– டெல்லியில் ஊழல் அதிகாரிகள் பலர் கடந்த ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஊழல் அதிகாரிகளுக்கும், ஊழல் அரசியல்வாதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். சில நாட்களில் நீங்கள் அதை பார்க்கப் போகிறீர்கள்.

இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட ஹெராயின் போதைப் பொருள்

Posted: 18 Jan 2014 10:11 PM PST

பஞ்சாப் மாநில பிரோஸ்பூர் பாகிஸ்தான் எல்லையில் உள்ளூர் காவல்துறையினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு கிலோ ஹெராயினும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதே பகுதியில் இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் மீண்டும் 20 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது

திரிச்சூர் அருகே கள்ளக்காதலை கைவிட மறுத்த வாலிபர் குத்தி கொலை

Posted: 18 Jan 2014 10:04 PM PST

கேரள மாநிலம் திருச்சூர் அருகேயுள்ள நெடும்புழா ரெயில் நிலையம் நேற்று பரபரப்பாக இயங்கி வந்தது. ரெயில் தண்டவாளத்தில் பயணிகள் நடந்து சென்றனர். அப்போது தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் கத்திக்குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் நெடும்புழா ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக நெடும்புழா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்

பீகார்: கால்நடை வர்த்தகர்களிடம் ரூ. 50 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல்

Posted: 18 Jan 2014 09:56 PM PST

பீகார் மாநிலத்தின் புக்சர் பகுதியைச் சேர்ந்த 20-22 கால்நடை வர்த்தகர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள இலம்பஜார் வர்த்தக சந்தையில் தங்களின் கால்நடைகளை விற்கச் சென்றுள்ளனர். அவற்றை விற்று கிடைத்த 50 லட்ச ரூபாய் பணத்துடன் அவர்கள் நேற்று ஹௌரா-அமிர்தசரஸ் செல்லும் ரெயிலில் ஏறியுள்ளனர். பனாகர் என்ற இடத்தில் இந்த ரெயிலைப் பிடித்த அவர்கள் பொதுப்பிரிவில் பயணம் செய்துகொண்டிருந்தனர். ராணிகன்ஞ்

ராகுல்காந்திக்கு உதவியாக பிரியங்காவை களம் இறக்கும் காங்கிரஸ்

Posted: 18 Jan 2014 09:54 PM PST

பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு தயார் ஆகி வருகின்றன. தேசிய கட்சியான பாரதீய ஜனதா நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்து விட்டது. இதன் பயனாக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. நரேந்திர மோடியின் செல்வாக்கால் காங்கிரஸ் மிரண்டு போனது. இதனால் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் இதை எதிர்பார்த்தனர்.

கெஜ்ரிவாலுக்கு எதிராக போராட்டம் தொடரும்: ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. ஆவேசம்

Posted: 18 Jan 2014 09:25 PM PST

''ஊழலை ஒழிப்பேன்'' என வாக்குறுதி அளித்து டெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது அவரது கட்சி எம்.எல்.ஏ.வான வினோத்குமார் பின்னி கூறிய குற்றச்சாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கெஜ்ரிவால் ஒரு பொய்யர். தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து விலகி வருகிறார். காங்கிரஸ் ஆணைப்படி ஆட்சி நடத்தி வருகிறார் என்று வினோத்குமார் பின்னி குற்றம் சாட்டினார். கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக வருகிற 27–ந் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

சுனந்தா தற்கொலை செய்திருக்க மாட்டார்: கேரள தோழி பேட்டி

Posted: 18 Jan 2014 08:58 PM PST

மத்திய மந்திரி சசிதரூரின் 3–வது மனைவி சுனந்தா டெல்லி ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது ஏற்படுத்திய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர் சாவில் நிலவும் மர்மம் பற்றி பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில்தான் முழுமையாக தெரியும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில் சுனந்தாவின் உடல்நிலை, அவருக்கு ஏற்பட்டு இருந்த நோய் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகி வருகிறது. சசிதரூரின் உறவினரும் முன்னாள் இந்திய தூதருமான சீனிவாசனின் மனைவி லேகா சீனிவாசன். இவர் திருவனந்தபுரத்தில் கருணா என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவர் சுனந்தாவுக்கு நெருங்கி

புதுடெல்லி ரெயில் நிலையத்தில் 5 'மல்ட்டி கியூஸைன்' உணவு விடுதிகள் திறக்க ஏற்பாடு

Posted: 18 Jan 2014 08:55 PM PST

நாடெங்கும் உள்ள ரெயில் நிலையங்களில் ரெயில்வே துறையின் சார்பில் பல உணவு விடுதிகள் (கேண்டீன்) நடத்தி, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, தொலைதூரம் செல்லும் ஒவ்வொரு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சமையல் கூடத்துடன் கூடிய உணவகங்கள்

ஒரே மேடையில் நிதிஷ்குமார் – லல்லுபிரசாத் நேருக்கு நேர் மோதல்

Posted: 18 Jan 2014 08:44 PM PST

பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமாரும், அவரது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவும் ஒரே விழாவில் பங்கேற்று ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி மோதிக் கொண்டது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது. "தைனிக் பாஸ்கர்" என்ற இந்தி பத்திரிகையின் பீகார் பதிப்பு தொடக்க விழா பாட்னாவில் நேற்று நடந்தது

நரேந்திர மோடியை பிரதமராக பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு

Posted: 18 Jan 2014 08:15 PM PST

வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய உத்திகள் பற்றி ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அக்கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்தை பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்து பேசினார்.

முஸ்லிம் மதகுரு மரணம்: நரேந்திர மோடி, ராகுல்காந்தி இரங்கல்

Posted: 18 Jan 2014 07:54 PM PST

முஸ்லிம் மத குரு மரணத்துக்கும், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியான சோக சம்பவத்துக்கும் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– மும்பையில் முஸ்லிம் மத குருவான சையத்னா முகமது புர்கானுதீன் மரணம் அடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை

அசாமில் இந்தி பேசும் மக்கள் மீது போராளிகள் தாக்கு: இரண்டு நாட்களில் 7 பேர் சுட்டுக்கொலை

Posted: 18 Jan 2014 02:59 PM PST

அசாமில் போடோலேண்டு பகுதிக்கு தனி அரசு அமைக்க கோரி என்.டி.எப்.பி. போராளிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 1986-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த போடோலேண்ட் அமைப்பில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

மனைவி மர்ம மரணம் சசிதரூரை மந்திரி பதவியில் இருந்து நீக்குங்கள்: சந்திரபாபுநாயுடு

Posted: 18 Jan 2014 02:09 PM PST

மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், சசிதரூரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று

கட்சி விரும்பினால் ‘பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்’: கெஜ்ரிவால் அறிவிப்பு

Posted: 18 Jan 2014 01:52 PM PST

"பாராளுமன்ற தேர்தலில் நானோ அல்லது எனது கட்சி எம்.எல்.ஏ.க்களோ போட்டியிடமாட்டோம்" என்று டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

சசிதரூர் மனைவி மரணத்துக்கு அளவுக்கு அதிகமான மருந்து காரணமா?

Posted: 18 Jan 2014 12:59 PM PST

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா தரூர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், மனஉளைச்சலை தடுப்பதற்கான மருந்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டது அவருடைய மரணத்துக்கு காரணமாக

ஆஸ்திரேலிய விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட மனநலம் குன்றிய ஆந்திர சிறுமி கற்பழிப்பு: பயிற்சியாளர் கைது

Posted: 18 Jan 2014 12:17 PM PST

ஆஸ்திரேலிய நியூகேசில் நகரில் ஆசிய பசிபிக் பிராந்திய விளையாட்டு போட்டி-2013 கடந்த நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக மனநலம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும்ம் நடைபெற்றன.

அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

Posted: 18 Jan 2014 10:30 AM PST

மர்மமான முறையில் டெல்லி ஓட்டலில் மரணமடைந்த மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லோதி ரோட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது பூத உலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் லோதி ரோட்டில் உள்ள இடு காட்டில் அவரது உடல் மாலை தகனம் செய்யப்பட்டது.

மனைவி சுனந்தாவை இழந்துவாடும் சசிதரூரை சோனியா நேரில் சந்தித்து ஆறுதல்

Posted: 18 Jan 2014 10:14 AM PST

மத்திய மந்திரியான சசிதரூரின் (57) மனைவி சுனந்தா புஷ்கர் (52) நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமான வகையில் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்துகிடந்தார். சுனந்தாவின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது.

ஜெய்ப்பூர் விமானநிலைய குப்பைத்தொட்டியில் கிடந்த 3 கிலோ தங்கம்

Posted: 18 Jan 2014 10:04 AM PST

ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தில் உள்ள சுங்க அனுமதி கவுண்டர் முன் இருக்கும் கழிவறையின் அருகே உள்ள குப்பைத்தொட்டியில் இன்று காலை 3 கிலோ தங்கம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகா எல்லையை 24 மணி நேரமும் திறந்து வைக்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்

Posted: 18 Jan 2014 06:19 AM PST

பாகிஸ்தான் வர்த்தகத்துறை மந்திரி குர்ரம் தஸ்தகிர் கான், இன்று டெல்லியில் மத்திய வர்த்தகத் துறை மந்திரி ஆனந்த் சர்மாவை சந்தித்தார். 20 மாத இடைவெளிக்குப் பிறகு வர்த்தக அமைச்சர்களுக்கிடையே நடந்த இந்த சந்திப்பில், பாரபட்சமின்றி வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™