Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

Posted: 18 Jan 2014 09:30 PM PST

கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 7–ம் நாளான இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா)– செர்பியாவின் இவானோவிக் மோதினர். இதில் 5 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் செட்டை செரீனா கைப்பற்றினார். அடுத்த 2 செட்டையும் இவானோவிக் கைப்பற்றி வென்றார். செரீனாவை 4–6, 6–3, 6–3 என்ற செட் கணக்கில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து 292 ரன் குவிப்பு

Posted: 18 Jan 2014 09:22 PM PST

இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கியது. இந்திய அணி கேப்டன் டோனி 'டாஸ்' வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். இரு அணி வீரர்கள் விவரம்:– இந்தியா: டோனி (கேப்டன்), ஷிகார் தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர்குமார், இஷாந்த்சர்மா, முகமது ஷமி. நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), குப்தில், ரைடர், வில்லியம்சன், ரோஸ் டெய்லர், ஆண்டர்சன் […]

சர்வதேச அணுசக்தி நிபுணர்கள் குழு ஈரான் சென்றது

Posted: 18 Jan 2014 09:03 PM PST

அணு உலை தொடர்பாக ஈரான் நாட்டிற்கும், அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி ஈரானில் யுரேனியம் செரியூட்டுதல் கட்டுப்படுத்தப்படும். இந்த உடன்பாடு கடந்த வாரம் அமலுக்கு வந்தது. இதனை அடுத்து சர்வதேச அணுசக்தி கழக நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இன்று டெக்ரான் சென்றார்கள். இந்த குழுவிற்கு அணு விஞ்ஞானி மாச்சிமோ அபாரோ தலைமை ஏற்றுள்ளார். இவர்கள் ஈரானில் நதான், போர்டோவ் ஆகிய இடங்களில் உள்ள அணு உலைகளில் நாளை திங்கட்கிழமை ஆய்வை தொடங்குகிறார்கள்.

ஜெனிவா அமைதி பேச்சுவார்த்தைக்கு சிரியா போராளி குழுக்கள் சம்மதம்

Posted: 18 Jan 2014 08:56 PM PST

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் சண்டையிட்டு வருகின்றன. கடந்த 3 வருடங்களாக நடந்துவரும் இச்சண்டையில் அங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர். இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட அடுத்தவாரம் ஜெனிவாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருதரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் அதிபர் ஆசாத் பதவி விலகும் வரை […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பேராசிரியைக்கு ரூ.1½ கோடி விருது

Posted: 18 Jan 2014 08:42 PM PST

f16c57f9-38df-4d67-a8f0-a46da82f0c1f_S_secvpf

f16c57f9-38df-4d67-a8f0-a46da82f0c1f_S_secvpfஅமெரிக்காவில் உள்ள மிச்சோரி பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வான் சாஸ்திரம் இயல் பேராசிரியையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மீரா சந்திரசேகர் பணியாற்றி வருகிறார். இவருடைய கல்வி புகட்டு சிறப்பை பாராட்டி 2014–ம் ஆண்டிற்கான 'ராபர்ட் பாஸ்டர் ஷெர்ரி விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இதன் மூலம் உயரிய விருதுடன் அவருக்கு ரூ.1½ கோடி (2½ லட்சம் டாலர்) பரிசுதொகை கிடைக்கும். இந்த தகவலை பாய்லோர் பல்கலைக்கழக துணைத்தலைவர் எலிசபெத் டாவிஸ் அறிவித்தார். விருது பெற்ற பேராசிரியை மீரா சந்திரசேகர் 1968–ல் மைசூர் எம்.ஜி.எம். கல்லூரியில் பட்டப்படிப்பும், பிறகு சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து பட்டமும் பெற்றவர். இதுமட்டுமின்றி தனது சிறந்த பணிக்காக அமெரிக்காவில் ஏற்கனவே பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளிநொச்சியில் வேலையை ஆரம்பித்தது ஜனாதிபதி ஆணைக்குழு

Posted: 18 Jan 2014 08:28 PM PST

investi

investiஇலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தனது முதற்கட்ட விசாரணைகளை சனியன்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பாடசாலையில் ஆரம்பித்திருக்கின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்டட்டிருக்கின்றது.

இதற்கமைவாக இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே 13, 000 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எழுத்து மூலமான முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.

இந்த முதற்கட்ட விசாரணைகளில் 36 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களுடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆயினும் 84 பேர் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்ததாக இந்தக் குழுவின் செயலாளர் ஏ.டபிள்யூ. குணதாச தெரிவித்திருக்கின்றார்.

அழைக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மாத்திரம் பதிவு செய்யப்படும் என்றும், தன்னைப் போன்று அழைக்கப்படாத இடங்களில் இருந்து வந்திருந்தவர்களுக்கு வேறு ஒரு திகதியில் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பூநகரியைச் சேர்ந்த குமாரசாமி செல்வராசா தெரிவித்தார்.

காணாமல் போயிருந்த தனது மகன் வேறு சில இளைஞர்களுடன், கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்ட நிலையில் பஸ் ஒன்றில் இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்படுகையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியிருந்ததாகவும், அந்தப் படத்தையும் ஏனைய ஆவணங்களையும் கொண்டு தனது மகனைப்பற்றிய தகவல்களை ஆணைக்குழுவினரிடம் தெரிவித்து விளக்கம் கேட்பதற்காக இந்த விசாரணை நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்தாக அவர் தெரிவித்தார்.

குமாரகுலசிங்கம் இந்திராதேவி என்ற தாயார் தனது மகன் கடைக்குச் சென்றபோது காணாமல் போயிருந்ததாகவும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வியாபாரத்திற்காக வவுனியா சென்றவர்களுடன் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து காணப்பட்டதாகவும், அவரைப்பற்றிய விபரங்களைத் தெரிவித்து அவர் இருக்குமிடத்தைக் கண்டறிவதற்காக நம்பிக்கையோடு இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வந்திருந்ததாகத் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.டபிள்யூ குணதாச, விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக 84 பேர் வருகை தந்திருந்ததாகவும், அழைக்கப்பட்டிருந்தவர்களிடம் முதலில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு இந்த விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளினாலும் மற்றும் இராணுவம் பொலிசாரினாலும் தங்களுடைய உறவினர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

எங்களுக்குக் கிடைத்துள்ள 13, 000 முறைப்பாடுகளில், இராணுவத்தினர் 5000 பேர் காணாமல் போயிருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள் என்றார் குணதாச.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனந்தி விடயத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை!

Posted: 18 Jan 2014 08:21 PM PST

அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (18) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அனந்தி சசிதரன் தனிநபர் அல்ல, அவர் வடகிழக்கு மாகாணத்தில் மக்கள் பலம் மிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர், அதற்கு மேல் […]

கேஜ்ரிவால் புகார் மீது உரிய நடவடிக்கை: ஷிண்டே உறுதி

Posted: 18 Jan 2014 08:07 PM PST

5b86b53f-b5d5-4554-b413-3df1b4e61807_S_secvpf

5b86b53f-b5d5-4554-b413-3df1b4e61807_S_secvpfடெல்லி பொலிஸாருக்கு எதிராக துணை ஆளுநரிடம் அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் கொடுத்துள்ள புகார் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கேஜ்ரிவாலை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார். இவ்விகாரம் குறித்து ஏற்கெனவே துணை நிலை ஆளுநர் விசாரித்து வருவதாகவும் இருப்பினும் கேஜ்ரிவால் தன்னிடமும் இப்பிரச்சிமத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணையில் இருந்து தொழிலதிபர் ஒருவரை காப்பாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புகார் கூறிய முன்னாள் உள் துறை செயலர் இப்போது பாஜகவில் இணைந்து விட்டார். அதனால் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வதற்கு இல்லை என தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குப்பைத்தொட்டியில் மூன்று கிலோ தங்கம் மீட்பு

Posted: 18 Jan 2014 07:59 PM PST

ஜெய்ப்பூரின் சங்கநேர் விமான நிலையத்தின் கழிவறைக்கு அருகிலுள்ள குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட மூன்று கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து நேற்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாராவது இதனைக் கொண்டு வந்திருக்கலாம் அல்லது விமான நிலைய ஊழியர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்தனர். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர்கள் இந்த பார்சலை குப்பைத்தொட்டியில் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். தங்கம் இருந்த பார்சல் கிடைத்தவுடன் அங்கிருந்த பயணிகளை விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். […]

நாளாந்தம் 20 கோடி குறுந்தகவல்களை உளவு பார்க்கும் அமெரிக்கா

Posted: 18 Jan 2014 07:51 PM PST

nsa_mobile_001

nsa_mobile_001அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு, நாளாந்தம் 20 கோடி குறுந்தகவல்களை திருடி உளவு பார்ப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

என்.எஸ்.ஏ. முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்னோடென்னின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி கார்டியன் நாளிதழ் மற்றும் சனல்4 செய்தி தொலைக்காட்சி ஆகியவை இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் கைப்பேசிகளிலிருந்து அனைத்து விதமான தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது.

இந்த தகவல்களை பிரிட்டன் உளவாளிகளுக்கும் என்.எஸ்.ஏ. அளித்துள்ளது. ஆனால் முழுமையான தகவல்களை அளிக்காமல் குறிப்பிட்ட சில தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு குறித்து வங்கிகளிடம் இருந்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்களையும் என்.எஸ்.ஏ. திருடியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு வங்கி வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றங்கள் அவர்களின் எஸ்.எம்.எஸ். தகவல்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி பணப் பரிமாற்ற தகவல்களும் கண்காணிக்கப்பட்டுள்ளன.

இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் என்.எஸ்.ஏ. ரகசிய உடன்படிக்கை மேற்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜிசிஎச்கியூ என்ற அமைப்புடன் இணைந்து அந்த நாட்டு செல்போன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஜிசிஎச்கியூ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் சட்டவிதிகளுக்கு உள்பட்டுதான் நாங்கள் செயல்பட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து என்.எஸ்.ஏ. வட்டாரங்கள் கூறியபோது, சட்டப்பூர்வமாகவே எஸ்.எம்.எஸ். தகவல்கள் திரட்டப்பட்டன, நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை, இதுதொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்துள்ளது.

செல்போன்களில் இருந்து திரட்டப்பட்ட எஸ்.எம்.எஸ். தகவல்கள் டிஷ்பயர் என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

குறுந்தகவல்கள் அத்துமீறல்கள்

உலகம் முழுவதும் நாள்தோறும் 500 கோடி தொலைபேசி உரை யாடல்களை என்.எஸ்.ஏ. ஒட்டு கேட்டதாக அண்மையில் செய்தி வெளியானது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் உலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் களில் ரகசியமாக சிப் சொருகி தகவல்கள் திருடப்பட்டது குறித்தும் அண்மையில் செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது,

This posting includes an audio/video/photo media file: Download Now

செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்ய சாத்தியம்!

Posted: 18 Jan 2014 07:47 PM PST

mars_garden_001

mars_garden_001செவ்வாய்கிரகத்தில் விவசாயம் செய்யலாம். குறிப்பாக உணவு தானியங்களை பயிரிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் இத்தகவலை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

செவ்வாய் மற்றும் நிலவில் தாவரங்களை வளர்க்க முடியும் என்ற ஆராய்ச்சிக்காக நாசா வழங்கிய செவ்வாய் மற்றும் நிலாவின் செயற்கை மண்ணில் 14 தாவர இனங்களை பயிரிட்டு சோதனை நடைபெற்றது.

இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.

இது பொல்ல் அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருப்பை மாற்று சிகிச்சை: சுவீடனில் சாதனை

Posted: 18 Jan 2014 07:44 PM PST

donor_wombs_001

donor_wombs_001சுவீடனில் ஒன்பது பெண்களுக்கு, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உடலுறுப்புகள், மற்றவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் நடைமுறை உள்ளது.

தற்போது, கைகள், முகம் மற்றும் பிற உறுப்புகளும் பொருத்தப்படுகின்றன. பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாத பெண்களும், புற்றுநோய் காரணமாக, கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும் குழந்தையை பெற்றெடுக்கும் வகையில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.

இதுவரை, கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு இறந்த பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட கருப்பை பயன்படுத்தப்பட்டு வந்தது.

இதற்கு முன் துருக்கியிலும், சவுதி அரேபியாவிலும் இத்தகைய கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் தோல்வி ஏற்பட்டது.

பிரிட்டன், ஹங்கேரி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சுவீடனில் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒன்பது பெண்களுக்கு அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை பொருத்தப்பட்டுள்ளன.

இது குறித்து, கோத்தன்பர்க் பல்கலைக்கழக மருத்துவர் மேட்ஸ் பிரான்ஸ்டிராம் தகவல் தருகையில்,

கருப்பை பொருத்தப்பட்ட பெண்களில், பெரும்பாலானோர் 30 வயதுடையவர்கள். இவர்களுக்கு பரிசோதனை முயற்சியாக கருப்பை பொருத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர்; அறுவை சிகிச்சை முடிந்து ஏழு வாரங்களுக்குப் பிறகு, கருப்பை ஆரோக்கியமாக, நல்ல முறையில் இயங்கி வருகிறது.

இந்த அறுவை சிகிச்சை குறித்த முழு அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும் என மருத்துவர் மேலும் குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உள்ளுரில் அரசியல்த் தீர்வுகிடைக்கும் என்ற எண்ணம் அருகிவருகின்றது – விக்கினேஸ்வரன்

Posted: 18 Jan 2014 07:38 PM PST

உள்ளுரில் எமக்கு அரசியல்த் தீர்வுகிடைக்கும் என்ற எண்ணம் அருகிவருகின்றது இதன் காரணமாக பலரும் சர்வதேச அரசியல் நெருக்குதல்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் நடைபெற்ற முள்ளந்தண்டுவடம் பாதிப்படைந்தோர்க்கான சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்புவிழா பிரதம அதீதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணசபை நிறுவப்பட்ட பின்னர் முதலாவது முள்ளந் தண்டுவடம் பாதிப்படைந்தவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையம்,"வைகறை"என்ற […]

நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரித்தானியா

Posted: 18 Jan 2014 07:19 PM PST

South African Navanethem Pillay, U.N. High Commissioner for Human Rights, speaks during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Thursday, June 30, 2011. Pillay told reporters she was "disappointed" that China welcomed Sudan's President Omar al-Bashir during a visit this week, rather than arrest him to ensure he stands trial. She said that "the whole world favors trial" for al-Bashir for his role in the civil war in Sudan that killed more than 2 million people. (AP Photo/Keystone, Martial Trezzini) GERMANY OUT - AUSTRIA OUT

South African Navanethem Pillay, U.N. High Commissioner for Human Rights, speaks during a press conference at the European headquarters of the United Nations in Geneva, Switzerland, Thursday, June 30, 2011. Pillay told reporters she was ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

இலங்கை குறித்து அடிக்கடி பேசப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு புதுவருட வாழ்த்து

Posted: 18 Jan 2014 07:07 PM PST

art.mahinda.rajapaksa.afp_.gi_

art.mahinda.rajapaksa.afp_.gi_இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத்திற்கும், சீன மக்களுக்கும் மலரப் போகும் புதுவருடம் சிறந்த வருடமாக அமைய வேண்டும் என வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சீன புதுவருட நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார்.

சீனா நாட்டின் புதுவருடம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி பிறக்கின்றது.

இந்த நிகழ்வின் போது, உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சீன அரசாங்கத்திற்கும், சீன மக்களுக்கும் மலர போகும் புதுவருடம் சிறந்த வருடமாக அமைய வேண்டும் என தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பம்

Posted: 18 Jan 2014 07:03 PM PST

வடக்கு கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை இன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பமானது. கிளிநொச்சி கிராம சேவையாளர் பிரிவில் இருந்து கிடைக்க பெற்ற 36 முறைப்பாடுகள் தொடர்பிலே விசாரணைகள் இடம்பெறவுள்ளன. எவ்வாறாயினும், காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியாதவர்களுக்கு முறையிட முடியும் எனவும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று முதல் 21 ஆம் திகதி வரையில் விசாரணைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1990 […]

தரையிலேயே ராக்கெட் விட்ட முதல் ஆள் இவராகத் தான் இருப்பாரு…. (இதனை யாரும் முயற்சிக்க வேண்டாம்)

Posted: 18 Jan 2014 07:24 AM PST

rocket_gas_001.w245

rocket_gas_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நொடிப்பொழுதில் சுட்டு வீழ்த்தப்படும் மனிதன்… மனித உயிரின் மதிப்பு இவ்வளவு தானா?….

Posted: 18 Jan 2014 07:17 AM PST

shooting_man_002.w245

shooting_man_002.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

போட்டியில் சும்மா பூமியே அதிருதுல்ல…..

Posted: 18 Jan 2014 07:04 AM PST

skipping_woman_001.w245

skipping_woman_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களை மதி மயங்க வைக்கும் அற்புதமான இயற்கை சூழல்….

Posted: 18 Jan 2014 06:59 AM PST

garden_001.w245

garden_001.w245பசுபிக் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரிஹோன் எனும் இடத்தில் காணப்படும் புற்சூழில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாகக் காணப்படுகின்றது. நீர் மேற்பரப்பில் காணப்படும் இப்புற் சூழல் Grass Water Bed என அழைக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™