Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அசாருதீன் போட்டி

Posted: 28 Jan 2014 10:20 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 2009–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மொரதா பாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அசாருதீன் மேற்குவங்காள மாநிலத்தில்  போட்டியிடுவார். மேற்குவங்காளத்தில்

மேல்–சபை தேர்தல்: ஆந்திராவில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனுதாக்கல்

Posted: 28 Jan 2014 09:42 PM PST

டெல்லி மேல்–சபைக்கு ஆந்திராவில் இருந்து 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராமச்சந்திர ராவ், சுப்பராம ரெட்டி, எம்.ஏ.கான் ஆகிய 3 பேரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். சந்திர சேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி சார்பில் கே.கேசவராவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 4 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் 3 பேருக்கும் போதிய ஆதரவு உள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி வேட்பாளர் கே.கேசவராவ் காங்கிரஸ் ஆதரவு கொடுத் தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 38 தொகுதிகளுக்கு பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் தயார்

Posted: 28 Jan 2014 09:33 PM PST

பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் பாரதீய ஜனதா தேர்தல் பணியில் இறங்கியுள்ளது. மாநில பாரதீய ஜனதா மேலிட பொறுப்பாளரான நரேந்திர மோடியின் நெருங்கிய ஆதரவாளரான அமித்ஷா தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். அவர் மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து தொகுதி நிலவரம் பற்றி

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு உச்சவரம்பு 30 சதவீதம் அதிகரிக்க முடிவு: தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை

Posted: 28 Jan 2014 09:30 PM PST

ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் எவ்வளவு தொகை செலவு செய்யவேண்டும் என தலைமை தேர்தல் கமிஷன் வரையுறுத்தி உள்ளது. ஆனால் அரசியல் கட்சிகள் செலவு தொகையை குறைத்து மதிப்பிட்டு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்கிறது. இதை தடுக்க தேர்தலின்போது கட்சிகளின் பிரசாரங்களையும் ஆடம்பர செலவுகளையும் தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் வீடியோவாக எடுத்து கண்காணித்து வருகிறார்கள். என்றாலும் அதிக செலவுகளை தேர்தல் கமிஷனால் கட்டுப்படுத்த முடியில்லை. இதையடுத்து கட்சிகளின் தேர்தல் செலவு உச்ச வரம்பை 30 சதவீதம் வரை அதிகப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் ஒரு தொகுதியில் ரூ. 40 லட்சம் வரை

டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு தீர்ப்பு: உம்மன்சாண்டி பேட்டி

Posted: 28 Jan 2014 09:01 PM PST

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து பிரிந்து புரட்சிக்கர மார்க்சிஸ்ட் கட்சியை தொடங்கிய டி.பி. சந்திரசேகரன் கடந்த 2012–ம் ஆண்டு மே மாதம் 4–ந்தேதி கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 51 வெட்டுக் காயங்கள் இருந்தன. இந்த கொலை வழக்கு விசாரணை கோழிக்கோடு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் 3 பேர் உள்பட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

டீசல் டேங்கர் மீது சொகுசு பஸ் மோதி தீப்பற்றிய விபத்தில் 7 பேர் உடல் கருகி பலி

Posted: 28 Jan 2014 08:00 PM PST

மகாராஷ்ட்டிர மாநிலம், புனே நகரில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத் நோக்கி நேற்றிரவு 'வால்வோ' ரக சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மகாராஷ்ட்டிர மாநிலம், தானே அருகேயுள்ள குடே கிராமம் அருகே வந்த போது டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மீது அந்த சொகுசு பஸ் பயங்கரமாக மோதியது.

‘பான் கார்டு’ பெற புதிய நடைமுறை: வருமான வரித்துறை அறிவிப்பு

Posted: 28 Jan 2014 07:34 PM PST

பான் கார்டு' வழங்கக்கோரி விண்ணப்பிப்பதற்கான புதிய நடைமுறைகளை வருமான வரித்துறையின் கீழ் செயல்படுகிற மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, பான் கார்டு கேட்டு அதற்கான மையங்களில் விண்ணப்பிக்கிறவர்கள், விண்ணப்பத்துடன் அடையாள ஆவணம், முகவரி, பிறந்த தேதி ஆவணங்களை இணைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களால் சான்றளிக்கப்பட்ட நகல் ஆவணங்களுடன், அசல் ஆவணங்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒப்பிட்டு சரி பார்த்து விட்டு அசல் ஆவணங்கள் உடன் திருப்பி வழங்கப்படும். புதிதாக பான் கார்டு வழங்கக்கோரி விண்ணப்பிப்பவர்கள் அதற்காக ரூ.105 கட்டணம் செலுத்த வேண்டும். இதில் அனைத்து வரிகளும் அடக்கம். வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், பினாமி சொத்துக்களை வாங்கவும், விற்கவும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பதாக கண்டறியப்பட்டு, எதிர்காலத்தில் இதைத் தவிர்க்கும் வித

டுவிட்டரில் ராகுல்,மோடி குறித்து கருத்து: கெஜ்ரிவாலால் புதிய சர்ச்சை

Posted: 28 Jan 2014 07:23 PM PST

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் பேட்டியை தனியார் செய்தி சேனல் ஒன்று சமீபத்தில் ஒளிபரப்பியது. அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் இணைத்து, இந்திப்பட இசையமைப்பாளர் விஷால் தத்லானி 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார். அதில் அவர், 'ஒரு முட்டாளுக்கும், கொலையாளிக்கும் இடையே சிக்கிக்கொண்டேன்... இப்போது என்ன செய்வது இந்தியாவே?" என கூறி இருந்தார். இதை டெல்லி முதல்-மந்திரி அரவி

ஜெய்சால்மீர்: பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கும் பாலைவனத் திருவிழா

Posted: 28 Jan 2014 07:04 PM PST

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் பாலைவனத் திருவிழா இந்த ஆண்டும் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி ஜெய்சால்மீரில் தொடங்க உள்ளது. மூன்று நாள் நடைபெறும் இந்தத் திருவிழா குறித்த ஏற்பாடுகளை சுற்றுலாத்துறையும், மாவட்ட நிர்வாகமும் கவனித்து வருகின்றன. கடந்த திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்த ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் மனராம் பட்டேல், துணை பிரிவு அதிகாரி கஜேந்திர சரண், 'ஐ லவ் ஜெய்சால்மீர்' அமைப்பின் புரவலர் மன்வேந்திர

2014ஆம் ஆண்டின் சூப்பர் நிலவு வரும் வெள்ளியன்று தெரியும்: விண்வெளி பவுண்டேஷன் தகவல்

Posted: 28 Jan 2014 03:58 PM PST

பூமியைச் சுற்றிவரும் சூரியன், சந்திரன் ஆகியவை இந்த ஆண்டு ஐந்து முறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் வாய்ப்பு வருகின்றது. அப்போது சந்திரன் சூரியனைவிட பூமியின் அருகில் வருவதால் அதனுடைய பிரகாசம் அதிகமாகவும், அளவு பெரியதாகவும் தெரியும் வாய்ப்பு உள்ளது. அளவில் பெரியதாகத் தோன்றும் இந்த சந்திரனே சுமார் 30 வருடங்களுக்குமுன்

இந்தியா ஜப்பானிடமிருந்து ராணுவ விமானத்தை வாங்குகிறது

Posted: 28 Jan 2014 03:47 PM PST

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதன் முறையாக இந்தியா ஜப்பானிடமிருந்து 1.65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு சந்தைகளில் பாதுகாப்பு வாகனங்களை விற்பதில்லை என்ற அந்நாட்டு பிரதமரின் தடை உத்தரவு

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து மற்றொரு தலைவர் விலகல்: பா.ஜனதாவில் இணைந்தார்

Posted: 28 Jan 2014 02:34 PM PST

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின் நாளுக்கு நாள் அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. இது மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தொடர்ச்சியாக எதிரொலித்து வருகிறது. பல்வேறு முக்கிய தலைவர்கள் அக்கட்சியில்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது: மேற்கு வங்க பெண்கள் ஆணையம் எதிர்ப்பு

Posted: 28 Jan 2014 01:58 PM PST

நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருதை மேற்கு வங்கத்தை சேர்ந்த புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழக துணைவேந்தரான சுஷாந்தா

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: சரத் பவார் உள்ளிட்ட 25 பேர் போட்டியின்றி தேர்வு

Posted: 28 Jan 2014 01:36 PM PST

நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் சரத் பவார் மற்றும் விஜய் கோயல் உள்ளிட்ட 25 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்த ஆறு உறுப்பினர்களும் அடங்குவர். அதிமுகவின் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ.கே. செல்வராஜ் மற்றும்

ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்கு ரத்தாக வாய்ப்பு

Posted: 28 Jan 2014 01:11 PM PST

முன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். வீரப்பன் கூட்டாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்த வழக்கு

2005க்கு முன் உள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் மாதம் வரை செல்லுபடியாகும்

Posted: 28 Jan 2014 11:21 AM PST

2005க்கு முன் உள்ள ரூபாய் நோட்டுகள் மார்ச் மாதம் 31ந் தேதி வரை மட்டுமே வர்த்தக பரிமாற்றத்திற்கு செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மார்ச் 31ந் தேதிக்கு பின் அந்நோட்டுகள் மாற்றுவது குறித்து வங்கிகளை மட்டுமே அணுகமுடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும்

நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாப்பு படையினர் 12 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

Posted: 28 Jan 2014 09:57 AM PST

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பொருட்டு 12 லட்சம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெறும் பொருட்டு பாதுகாப்பு படையினர் இங்கு காவலில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு

மத்திய அமைச்சர் பதவியிலிருந்து குமாரி செல்ஜா பதவி விலகல்

Posted: 28 Jan 2014 09:31 AM PST

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது பதவி விலகல் குறித்த முடிவை தெரிவித்த 51 வயதான செல்ஜா கட்சிப் பணிக்கு திரும்ப உள்ளதாக

காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு: முதல்வர் உமர் அப்துல்லா ராஜினாமா செய்யலாம்

Posted: 28 Jan 2014 09:03 AM PST

காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து பரூக் அப்துலாவின் மகன் உமர் அப்துல்லா அங்கு கடந்த 5 வருடங்களாக முதல்வராக இருந்து

மோடி பிரதமர் ஆவதை தடுக்க முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்: உ.பி. மந்திரி அசம் கான்

Posted: 28 Jan 2014 07:37 AM PST

மோடி பிரதமர் ஆவதை தடுக்க முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்: உ.பி. மந்திரி அசம் கான்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™