Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


நீங்கள் சுறாவின் உச்சக்கட்ட கோபத்தை பார்த்ததுண்டா?…..

Posted: 28 Jan 2014 03:23 AM PST

shark_angry_001.w245

shark_angry_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த அதிர்ஷ்டக்காரர்…..

Posted: 28 Jan 2014 03:19 AM PST

road_accident_001.w245

road_accident_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒருவேளை கடலுக்கும் இந்த பக்கெட்டுக்கும் Bluetooth Connection இருக்குமோ?….

Posted: 28 Jan 2014 03:14 AM PST

bucket_fish_001.w245

bucket_fish_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் குடியிருப்பு வளாகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 28 Jan 2014 03:04 AM PST

download (8)

download (8)கனடாவில் குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ரொறன்ரோ மாகாண பொலிசார், குடியிருப்பு வளாகம் ஒன்றிலிருந்து 25 கிலோ எடை கொண்ட கொக்கைன்(cocaine) என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் 3 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 24 கிலோ எடையுள்ள பானசிட்டேன்(phenacetin) என்ற போதை பொருளையும் பொலிசார் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பத்தில் கைதான 3 பேர் ரொறன்ரோ மாகாணத்தை சேர்ந்தவர்களாய் இருக்கலாம் என கருதப்படுகிறது.

இம்மூவர் மீது தொடரப்பட்ட வழக்கு, வருகிற பிப்ரவரி 1ம் திகதி நீதிமன்ற விசாரணைக்கு வரும் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க சொகுசு கப்பலில் மர்ம நோய்

Posted: 28 Jan 2014 02:58 AM PST

caribbean_003

caribbean_003அமெரிக்க சொகுசு கப்பலில் மர்ம நோய் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து கடந்த 21ம் திகதி ராயல் கரீபியன் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது.

இதில் 1,165 சிப்பாய்கள் உட்பட மொத்தம் 3050 பயணிகள் பயணம் செய்தனர், இந்நிலையில் 22 சிப்பாய்கள் உட்பட 303 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.

இவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது, எதிர்பாராத வகையில் நோய் தாக்குதலில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த நோய்க்கிருமி சம்பந்தப்பட்ட ஒரு நபரிடமிருந்தோ அல்லது நீர் மற்றும் அசுத்தமான நீர் மூலமாகவோ பரவி இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இத்தகவலை அமெரிக்க நோய் தடுப்பு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே கப்பல் தனது 10 நாள் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு வெர்ஜின் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

போப் ஆண்டவரின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட ‘புனித துணித் துண்டு’ திருட்டு

Posted: 28 Jan 2014 02:52 AM PST

pope_john_004

pope_john_004போப் ஆண்டவர் 2ம் ஜான் பாலின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட புனிதத் துண்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

1978ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை போப் ஆண்டவராக இருந்தவர் 2ம் ஜான் பால்.

இவரது ரத்தத்தில் நனைக்கப்பட்ட 'புனித துணித் துண்டு' ஒன்று பெட்டியில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இது மத்திய இத்தாலியின் அப்ரூஸோவில் உள்ள சிறிய தேவாலயம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 25ம் திகதியன்று தேவாலயத்தை உடைத்து அந்த புனிதப் பொருளை எடுத்துச் சென்று உள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலந்து நாட்டை சேர்ந்த முன்னாள் போப் ஆண்ட்வர் ஜான் பால் அமைதியை விரும்பும் போது எல்லாம் இந்த மலைப்பிரதேசத்தில் சென்று ஒய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நீலநிற கண்களுடன் ஆதிவாசி மனிதன்!

Posted: 28 Jan 2014 02:46 AM PST

hunter_gatherer_001

hunter_gatherer_0017000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஐரோப்பிய மனிதனின் கண்கள் நீலநிறமாக இருந்திருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் வடமேற்கிலுள்ள மலைக் குகையிலிருந்து கடந்த 2006-ம் ஆண்டு இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதை நன்றாக பாதுகாத்த ஆராய்ச்சியாளர்கள், அந்த மனிதர்களின் பற்களில் இருந்து டி.என்.ஏ.வையும், ஒருவரது மரபணுவையும் எடுத்து சோதித்து பார்த்தனர்.

அப்போது முந்தைய ஐரோப்பிய காட்டுவாசிகள், சுவீடன் பின்லாந்து மக்களின் மரபணுக்களுக்கு ஒத்துக்காணப்பட்டதை கண்டுபிடித்தனர்.

7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படும் அவர்களது, கண்கள் நீலநிறத்திலும், மரபணுக்களின்படி தோல் கருப்பாகவும், முடி கருப்பாகவோ அல்லது பழுப்பு நிறமாகவோ இருந்திருக்கின்றன என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான உருவப்படத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால், முந்தைய வேட்டையாடி ஐரோப்பியர்கள் வெள்ளையாக இருந்திருக்கலாம் என எண்ணியிருந்த நிலையில், இந்த ஆராய்ச்சி முடிவுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த மரபணு ஆராய்ச்சியானது காட்டுவாசிகளின், வேட்டை வாழ்க்கை எப்படி விவசாய வாழ்க்கைக்கு மாறியது என்பது பற்றிய ஒரு அனுமானத்தையும் கொடுத்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மருந்துகளை தரும் மலர்கள்

Posted: 28 Jan 2014 02:41 AM PST

images (3)

images (3)தலையில் சூடிக்கொண்டு அழகுபார்க்கும் மலர்கள் மருந்தாகவும் பயன்படுகின்றன. ஏராளமான மலர்கள் வாசனைத்திரவியங்கள் தயார் செய்வதற்கும், அலங்காரப்பொருட்களாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ பலன்களையும் அள்ளித்தருகிறது.

அந்த வகையில் மருந்தாக பயன்படும் சில மலர்கள்,

ஆவாரம் பூ

ரத்தத்துக்கு மிகவும் பயன்தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல்சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.

ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

 நெல்லிப்பூ

உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கு இது உகந்தது.

 செம்பருத்திப்பூ

இருதய பலவீனமடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

 ரோஜாப்பூ

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெடரர் சாதனையை நடால் முறியடிப்பார்: பீட் சாம்ராஸ் நம்பிக்கை

Posted: 28 Jan 2014 02:34 AM PST

63db2687-15df-457e-b5ff-16ddcbd07db5_S_secvpf

63db2687-15df-457e-b5ff-16ddcbd07db5_S_secvpfடென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்து பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், பிராஞ்ச் ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனை வீரராக உள்ளார். அவர் 17 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்று முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப் படியாக சாம்ராஸ் (அமெரிக்கா) 14 பட்டம் பெற்று 2–வது இடத்தில் உள்ளார். அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். உலகின் நம்பர் ஒன் வீரரான ரபெல்நடால் (ஸ்பெயின்) 13 கிராண்ட் சிலாம் பட்டம் பெற்று 3–வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை நடால் வென்று சாம்ராசை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியாமல் வாவ்ரிங்காவிடம் தோற்றார். இந்த நிலையில் பெடரரின் சாதனையை நடால் முறியடிப்பார் என்று பீட்சாம்ராஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் சகாப்தங்களில் ஒருவரான அவர் இது தொடர்பாக கூறியதாவது:– நடாலின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் பிரமிப்பாக இருக்கிறது. அவர் பந்தை திருப்பி அனுப்பும் விதம் அபாரமாக உள்ளது. இதுமாதிரி நான் இதற்கு முன்பு பார்த்தது கிடையாது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் நல்ல நிலையில் உள்ளார். பெடரரின் 17 கிராண்ட்சிலாம் பட்ட சாதனையை நடால் முறியடிப்பார். பெடரர் இனி 5 செட் ஆட்டத்தில் நடாலை தோற்கடிக்க முடியாது என்றே கருதுகிறேன். வாவ்ரிங்கா தான் அவருக்கு சவாலாக இருப்பார். இவ்வாறு சாம்ராஸ் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பூச்சிகளை கொல்லும் எறும்புகள் (வீடியோ இணைப்பு)

Posted: 28 Jan 2014 02:30 AM PST

ants_001

ants_001அமேசான் மழைக் காடுகளில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கலர் எறும்புகள் வசிக்கின்றன.

இவை தங்கள் இரையை பிடிப்பதே ஒரு விதமான பயங்கரத் திட்டமாக இருக்கிறது.

தாவரத்தின் தண்டின் அடிப்பகுதியில் தூண்களை போன்று மிருதுவான ப்ளாட்பார்மை அமைக்கின்றன.

மெல்லிய நார் போன்ற இழைகளால் ஆன இந்த ப்ளாட்பார்ம், பூச்சிகளை மிக எளிதாக ஒட்ட வைக்கிறது.

இதன் மேற்புரத்தில் ஆங்காங்கே பதுங்குகுழிகளை உருவாக்கி கொண்டு அதற்குள் வேலைக்கார எறும்புகள் பதுங்கி கொள்ளும்.

இந்த மிருதுவான பாதையில் இழுக்கப்பட்டு, அதன் மேல் நடந்து வரும் பூச்சிகளின் கால்களை குழிகளுக்குள் பதுங்கியிருக்கும் எறும்புகள் பிடித்து இழுத்து இவை சாகும் வரை கொட்டுகின்றன.

செத்த பின் இந்த பூச்சிகளை கொண்டு சென்று தங்கள் கூட்டில் வைத்து விடுகின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாநில செஸ் போட்டி: சென்னை மாணவி சாம்பியன்

Posted: 28 Jan 2014 02:26 AM PST

images (2)

images (2)தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவை சார்பில் பிரதியுஷா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிலையம் ஆதரவுடன் மாநில சதுரங்க (செஸ்) போட்டி சென்னையில் நடந்தது.

9 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இருபாலருக்கும் 6 பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் 800 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரக்காநந்தா (வேலம்மாள்), மோகனா (எஸ்.எஸ்.வி.) 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ராகுல் (ஸ்பார்டன்), ரிந்தியா (வேலம்மாள்), 13 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பிரஜேஷ் (பி.எஸ்.சீனியர் செகன்டரி), கிருத்திகா (வேலம்மாள்)., 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அஜய்கிருஷ்ணா (வேலம்மாள்) ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி

Posted: 28 Jan 2014 02:20 AM PST

india-vs-nz-live-streaming-2014

india-vs-nz-live-streaming-2014இந்தியா– நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் இன்று நடந்தது.  இந்திய அணி கேப்டன் டோனி இந்த முறையும் 'டாஸ்' வென்றார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா, 79 ரன்கள் விளாசினார். கேப்டன் டோனி 79 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 62 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரர்களாக குப்திலும் ரைய்டரும் களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். புவனேஸ்வர் குமார் வீசிய முதலாவது ஓவரில் குப்தில் 2 பவுண்டரிகளை விளாசினர். முகமது சமி வீசிய இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய பவுலர்களை திணறடித்தனர். 7 ஓவர்களின் முடிவிலேயே 54 ரன்கள் அடித்தனர். இந்நிலையில் ரைடரின் அதிரடிக்கு ஆரோன் முடிவு கட்டினார். 19 ரன்கள் எடுத்த நிலையில் அவர் நடையைக் கட்டினார். அவரை தொடர்ந்து முகமது சமி ஓவரில் குப்தில் அவுட் ஆகினார். பின்னர் இணைந்த வில்லியம்சன் மற்றும் டெய்லர் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விரட்டி ஸ்கோரை உயர்த்தினர். டெய்லர் 62 பந்துகளிலும், வில்லியம்சன் 67 பந்துகளிலும் அரை சதம் கடந்தனர். இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஆனால் வில்லியம்சன் 60 ரன்னைத் தொட்டபோது, துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 130 ரன்கள் சேர்த்து நியூசிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அடுத்து டெய்லருடன் மெக்கல்லம் இணைந்தார். இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்த இருவரும் நியூசிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். தொடர்ந்து அசத்தலாக ஆடிய டெய்லர் 110 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். மெக்கல்லம் தனது பங்குக்கு பவுண்டரிகளாக பறக்க விட்டார். இறுதியாக 49-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் அசத்தலான சிக்சரை பறக்க விட்டு ஆட்டத்திற்கு முடிவு கட்டினார். இதனால் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், நியூசிலாந்து அணி 280 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றியை ருசித்தது. டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5-வது ஒருநாள் போட்டி சம்பிரதாயமான ஆட்டமாக 31-ந்தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது. அதேசமயம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி மீண்டும் 2-ம் இடத்திற்குச் சென்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிகநேர தொடுதிரை பாவனையால் பிள்ளைகளுக்கு பாதிப்பு

Posted: 28 Jan 2014 02:15 AM PST

smartphones_tablets_phablets

smartphones_tablets_phabletsஸ்மார்ட் போன்கள், ரெப்லட் கருவிகள் போன்றவற்றை பிள்ளைகள் அதிக நேரம் பயன்படுத்துவது நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

இந்தப் பழக்கம் அடிமைத்தனத்தைத் தூண்டி, பிள்ளைப்பராய அபிவிருத்தியைப் பாதிப்பதாக அவுஸ்திரேலிய உளவியல் நிபுணர் ஜொசலின் ப்ருவர் தெரிவித்துள்ளார்.

கூடுதலான நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் மூளையில் ஒருவகை இரசாயனங்கள் கூடுதலாக சுரக்கின்றன. இந்தப் போக்கு பாவனையார்களை பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்று, புறவுலகின் விடயங்களில் இருந்து தனித்து விடச் செய்கிறதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக், ட்விற்றர் முதலான பிரயோகங்களின் கூடுதலான பயன்பாடு நீண்டகால அடிப்படையில் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கியூபாவில் பான் கி-மூன் முடி வெட்ட சென்ற கடையிலும் குவிந்த நிருபர்கள் கூட்டம்

Posted: 28 Jan 2014 02:06 AM PST

e556a601-1ad3-41ed-98bf-c8b28d48a13f_S_secvpf

e556a601-1ad3-41ed-98bf-c8b28d48a13f_S_secvpfகியூபாவில் இன்று நடைபெறும் லத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் நாடுகளுக்கிடையிலான இரண்டாவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் கியூபா நேற்று தலைநகர் ஹவானா வந்தடைந்தார். முதல் முறையாக கியூபா வந்துள்ள அவருக்கு அந்நாட்டின் மந்திரிசபை துணை தலைவர் மரினோ முரில்லோ ஜார்ஜ் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கியூபாவின் சமூகம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி தொடர்பாக அரசு உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய  பான் கி-மூன், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர், தனது உதவியாளரை அழைத்த அவர் 'முடி திருத்திக் கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது' என்று கூறினார். உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரித்த உதவியாளர், பழைய ஹவானா பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையத்துக்கு பான் கி-மூனை அழைத்து சென்றார். காலியாக இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்த அவருக்கு ஒரு பெண் சிகை அலங்காரம் செய்வித்தார். இதற்குள்,  ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் முடி வெட்டிக் கொள்வதற்காக அந்த கடைக்கு வந்திருக்கும் செய்தி அப்பகுதி மக்களிடையிலும், பத்திரிகையாளர்கள் நடுவிலும் காட்டுத் தீ போல பரவியது. கேமராக்களுடன் அங்கு வந்து குவிந்த அவர்கள், தூரத்தில் இருந்தவாறே பான் கி-மூன் முடி வெட்டிக் கொள்ளும் காட்சியை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து சென்றனர். இதனால், அந்த சிகை அலங்கார நிலையம் அமைந்துள்ள பகுதியில் சிறிது நேரம் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருவுற்ற தாய்க்கு ஏற்படும் உறுப்பு சேதங்களை சிசுவின் குருத்தணுக்கள் சமப்படுத்துகின்றன: புதிய தகவல்

Posted: 28 Jan 2014 01:57 AM PST

images (1)

images (1)கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களுக்கு திசுக்கள் சிதைவடைந்து, அதன் மூலம் இதயம், ஈரல், நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் சேதங்களை அவர்களின் கருப்பைக்குள் வளரும் சிசுவின் குருத்தணுக்கள் (ஸ்டெம் ஸெல்ஸ்) சமன்படுத்துகின்றன என்ற புதிய தகவலை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில வகை எலிகளை வைத்து பரிசோதனையில் ஈடுபட்டனர். இதற்காக, ஒளி உமிழக்கூடிய (ஃப்ளோரொஸெண்ட்) புரதங்கள் அடங்கிய மரபணுக்களை செயற்கை முறையில் உருவாக்கிய மருத்துவர்கள், ஆண் எலிகளின் உடலில் அதனை செலுத்தினர். பின்னர், அந்த ஆண் எலியை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்தி சில பெண் எலிகளை கருத்தரிக்கச் செய்தனர். கருவுற்றிருந்த காலத்தில், பெண் எலிகளுக்கு (செயற்கை முறையில்) லேசான இதய அதிர்ச்சி ஏற்பட செய்து துல்லியமாக பரிசோதித்தபோது, கர்ப்பத்துக்கு காரணமான ஆண் எலியின் மூலம் கருப்பைக்குள் உருவான சிசுவிடம் இருந்து பாய்ந்து சென்ற செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட ஒளி உமிழக்கூடிய (ஃப்ளோரொஸெண்ட்) புரதங்கள் அடங்கிய மரபணுக்கள், அந்த இதய அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலை தாய் எலிக்கு வழங்கி, அந்த பெண் எலி மாரடைப்பில் இறந்து விடாமல் தடுத்தது. இதன் அடிப்படையில், கர்ப்பம் மற்றும் பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு, நுரையீரல், சிறுநீரகம், மூளை போன்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் சேதங்களை அவர்களின் கருப்பைக்குள் வளரும் சிசுவின் குருத்தணுக்கள் (ஸ்டெம் ஸெல்ஸ்) சமன்படுத்துகின்றன என்ற பரிசோதனையின் முடிவை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர். கருவுற்ற காலங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்தில் இருந்தும் இதர உறுப்பு சேதங்களில் இருந்தும் சிசுவின் குருத்தணுக்கள் (ஸ்டெம் ஸெல்ஸ்) தடுப்பு கேடயமாக செயல்புரிகின்றன என்ற கூற்று இதற்கு முந்தைய சோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

விடு­தலைப் புலி­களை அழித்­த­ போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும் – தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்

Posted: 28 Jan 2014 01:48 AM PST

gunadasa-amarasekara

gunadasa-amarasekaraவிடு­தலைப் புலி­களை அழித்­த­ போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னையும் அர­சாங்கம் தடை செய்­தி­ருக்க வேண்டும். தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பே அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களைக் கொடுக்­கின்­றது என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­துள்­ளது.
அர­சாங்­கத்­திற்கு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­மாயின் அது முழு நாட்­டையும் பாதிக்கும். இதை அனைத்துக் கட்­சி­களும் புரிந்­து கொள்ள வேண்டும் எனவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர கருத்துத் தெரி­விக்­கையில், ஜெனீவா அழுத்­தங்­க­ளையும் நாட்டில் பிரி­வினை வாதத்­தி­னையும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பே ஏற்­ப­டுத்­து­கின்­றது. சர்­வ­தேச பிரச்­சி­னை­களைத் தூண்டி இலங்­கையில் தனித் ­தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கவே சம்­பந்தன் கூட்­டணி முயற்சி செய்து வரு­கின்­றது. நாட்டின் பிரச்­சி­னை­யாக இருந்த விடு­த­லைப் ­புலி தீவி­ர­வா­தி­களை அழித்த போதே தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பி­னையும் தடை செய்­தி­ருக்க வேண்டும். அன்று அர­சாங்கம் கவ­னிக்­காது செயற்­பட்­டமை இன்று நாட்­டிற்கே பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளது. இன்று அர­சாங்­கத்­திற்கு இருக்கும் முக்­கிய எதிரி தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்­பே­யாகும். அவர்­களின் செயற்­பாட்­டினை தடை செய்ய முடி­யு­மாயின் அர­சாங்­கத்­தினால் சர்­வ­தேச பிரச்­சி­னை­களில் இருந்து இல­கு­வாக வெளி­வர முடியும். எனினும், ஜனா­தி­பதி இதனை செய்­யா­தி­ருப்­பது ஏன் எனத் தெரி­ய­வில்லை. அர­சாங்கம் மக்கள் தொடர்­பி­லேயே முதலில் சிந்­திக்க வேண்டும். இலங்­கையில் மக்­களின் பெரும்­பான்மை விருப்­பத்­திற்கு அமை­யவே ஆட்சி நடத்த வேண்டும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் வார்த்­தை­களைக் கேட்டு இலங்­கையில் ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. தமிழ்த் தேசி­யக் ­கூட்­ட­மைப்­பி­னரின் ஒரே எண்ணம் இலங்­கையில் தனி தமிழ் ஈழத்­தினை உரு­வாக்­கு­வதே. திரு­கோ­ண­மலை தொடக்கம் மன்னார் வரையில் முழு­மை­யாக தன் வசப்­ப­டுத்தி இந்து சமுத்­தி­ரத்தில் தனி ஆட்சி நடத்தும் எண்­ணமே இன்று கூட்­ட­மைப்­பிற்கு உள்­ளது. இதனை அடை­யவே இன்று சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து கைகோர்த்து செயற்­ப­டு­கின்­றன. நாட்டின் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் இதனைப் புரிந்­து­கொள்ள வேண்டும். எதிர்­கால சிந்­த­னைகள் இல்­லாது தான் தோன்­றித்­த­ன­மாக அர­சியல் செய்­வதை ஐக்­கிய தேசி­யக் ­கட்சி கைவிட்­டு­ விட்டு நாட்­டிற்­காக செயற்­பட வேண்டும். அரசாங்கத்திற்கு பிரச்சினை ஏற்படின் அது முழு நாட்டிற்கும் பிரச்சினையேயாகும். சர்வதேச நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அது பொது மக்களையே பாதிக்கும். இதனை மக்கள் விளங்கிக் கொண்டு அரசாங்கத்துக்கு துணையாக செயற்பட வேண்டும் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகள், தீர்வுகள் தொடர்பாக அரசு மெத்தனப் போக்கில் செயற்படுகிறது – இரா.சம்பந்தன்

Posted: 28 Jan 2014 01:41 AM PST

r.sampanthan

r.sampanthanபோர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலும் வலி.வடக்கு மற்றும் சம்பூரைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர்.

அவர்களை குடியேற்றுவதாகப் பலமுறை அரசு நாடாளுமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தும் அதனை நிறைவேற்றாமல் உள்ளது.   அந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் என்பன இடித்து அழிக்கப்பட்டு இராணுவ ஆக்கரமிப்புக்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30 மணிவரை  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.   தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக அரசின் மெத்தனப் போக்குக்கு எதிரான தீர்மானம், வடமாகாண சபை குறித்தும் 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற வரவு – செலவுதிட்டத்தை தோற்கடித்த தமது கட்சி உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பன குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டன.

போர் முடிவடைந்தும் வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் பத்தா யிரத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வாழ்விடங்களில் குடியேற்றப்படாமல் உள்ளனர்.   அரசு தமிழ் மக்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகள், தீர்வுகள் தொடர்பாக மெத்தனப் போக்கில் செயற்படுகிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் இனப்பரம்பலை மாற்றி தமிழ் மக்களின் பூர்வீகப்  பகுதிகளை பெரும்பான்மை இன பிரதேசமாக மாற்றும் அரசின் திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:   தமிழர் பகுதிகளில் அதிகமான இராணுவப்பிரசன்னம் இருப்பதனால் மக்களின் வாழ்வாதாரம், சுதந்திரமான நடமாட்டம், பெண்களின் பாதுகாப்பு, சுயமரியாதை போன்றவற்றுக்கு, அசெளகரிகமாக உள்ளது. அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். போரின் இறுதிக் கட்டத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக அரசு எவ்வித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை – என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எகிப்து ராணுவ தலைமை தளபதி , அதிபர் வேட்பாளராக அறிவிப்பு

Posted: 28 Jan 2014 01:35 AM PST

9ff880be-d844-4b39-85ad-c7257e7ce315_S_secvpf

9ff880be-d844-4b39-85ad-c7257e7ce315_S_secvpfஎகிப்தில் மக்கள் புரட்சியால் அதிபராக இருந்த ராணுவ சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் கட்சி 3 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஜனநாயக ரீதியான தேர்தலில் முகமதுமுர்சி புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அரசியல் சட்டத்துக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாட்டி ராணுவத்தால் முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான அதிரடி நடவடிக்கையை ராணுவ தலைமை தளபதி அப்தெல்பதா அல்–சிசி மேற்கொண்டார்.

ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முர்சியை மீண்டும் பதவி அமர்த்தக் கோரி சகோதரத்துவ கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முர்சி பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

அதில் இருந்து இதுவரை சுமார் 1000 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் ஜனநாயக ரீதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை முகமது முர்சி அறிவித்து விட்டார். அதே நேரத்தில் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ராணுவ தலைமை தளபதி அப்தெல்பதா அல்–சிசி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது.

எனவே, இவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவை குறித்து நான் அறிவேன். என்னிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றுவேன். நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வேன் என சிசி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களே மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தேடுகின்றனர் – ஜனாதிபதி

Posted: 28 Jan 2014 01:25 AM PST

rajapaksa

rajapaksaஇலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்தமை போன்ற செயல்கள் மனித உரிமைகளை காக்கும் நாடு என்பதற்கான உதாரணங்களாகும். எனினும் இதனை கருத்திற்கொள்ளாது நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களே மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களை தேடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தென்மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

Posted: 28 Jan 2014 01:16 AM PST

download (7)

download (7)அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
எதிர்க்கட்சிகள் சில இந்த ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்த உள்ளன. கொழும்பின் முக்கிய இடங்களில் பேரணிகளை நடாத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. போதைப் பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணாமை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்க வேண்டும். வாழ்க்கைச் செலவு குறைக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்படவுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. கொழும்பு ஹைட் மைதானத்திலிருந்து ஒரு பேரணியும், கொம்பனித்தெரு, மருதானையிலிருந்து இரண்டு பேரணிகளும் ஆரம்பமாகவுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™