மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 12 சிலிண்டர் அறிவிப்பால் மத்திய அரசு திணறல்: கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்
- வேறு சாதி வாலிபரை காதலித்த இளம் பெண்ணை, 12 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம்
- சீமாந்திரா அரசு ஊழியர் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. மீது தாக்குதல்
- கர்நாடகாவில் மாணவர்களுக்கு ரூ.830 கோடியில் இலவச லேப்டாப்: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு
- பாராளுமன்றம் 5–ந்தேதி கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் 17–ந்தேதி தாக்கல்
- சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு: மீண்டும் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா?
- தரமற்ற பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மானிய குழு அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- குடகு மாவட்ட பா.ஜனதா தலைவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 5 பேர் கைது
- ராஜஸ்தானில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜாகுவார் விமானம் விபத்து
- கெஜ்ரிவாலுடன் சமரசம் செய்வதா?: ஷிண்டே மீது ராகுல் அதிருப்தி
- கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை
- மும்பையில் 28 வயது வாலிபருக்கு 8 பைபாஸ் ஆபரேசன்
- 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
- கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல் அமைச்சர்: ஷிண்டே சாடல்
- என் தாய் சுனந்தாவிற்கு சசி தரூர் தீங்கு செய்யவில்லை: மகன் கருத்து
- கேரள கம்யூனிஸ்ட் தலைவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
- அமைச்சர் சோம்நாத் பார்தி நீக்கப்படுவாரா? கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடி
- டெல்லி சட்ட அமைச்சர் மீது உகாண்டா பெண் புகார்
- சர்தார் சரோவர் அணை விவகாரம்: மோடி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி
- அந்தமானில் கடத்தப்பட்ட 8 ஜராவா பழங்குடியின பெண்கள் மீட்பு: 7 பேர் கைது
| 12 சிலிண்டர் அறிவிப்பால் மத்திய அரசு திணறல்: கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் Posted: 22 Jan 2014 11:10 PM PST மத்திய அரசு தற்போது ஆண்டு ஒன்றுக்கு மானிய விலையில் குடும்பத்துக்கு 9 சிலிண்டர்கள் வழங்குகிறது. இந்த எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும் என்பதே பெண்களின் கோரிக்கை என்றார். |
| வேறு சாதி வாலிபரை காதலித்த இளம் பெண்ணை, 12 பேர் சேர்ந்து கற்பழித்த கொடூரம் Posted: 22 Jan 2014 10:46 PM PST மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம்மாவட்டத்தில் சபல்பூல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம் பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு வாலிபரை காதலித்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தார் கூடி விசாரணை நடத்தினார்கள். வேறு சாதி வாலிபரை காதலித்ததற்காக அந்த பெண்ணுக்கு கிராம தலைவர் |
| சீமாந்திரா அரசு ஊழியர் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. மீது தாக்குதல் Posted: 22 Jan 2014 10:18 PM PST ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க சீமாந்திரா பகுதி அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏற்கனவே 3 மாதம் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சட்ட சபையில் தெலுங்கானா மசோதா மீதான விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மசோதா மீது முதல்– மந்திரி கிரண்குமார் நேற்று இரவு |
| கர்நாடகாவில் மாணவர்களுக்கு ரூ.830 கோடியில் இலவச லேப்டாப்: சட்டசபையில் கவர்னர் அறிவிப்பு Posted: 22 Jan 2014 09:34 PM PST தமிழ்நாட்டில் பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச லேப்–டாப் வழங்கப்படுகிறது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இந்த திட்டத்தை உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவும் தனது மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார். |
| பாராளுமன்றம் 5–ந்தேதி கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் 17–ந்தேதி தாக்கல் Posted: 22 Jan 2014 09:23 PM PST தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைவதால் அதற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றம் வருகிற 5–ந்தேதி கூடுகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. 5–ந்தேதி பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார். |
| சோனியாகாந்தியுடன் கனிமொழி சந்திப்பு: மீண்டும் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படுமா? Posted: 22 Jan 2014 09:12 PM PST பாராளுமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க இதுவரை எந்த கட்சியும் முன்வரவில்லை. டெல்லி மேல்–சபை தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. தற்போது இரண்டு கட்சிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை |
| Posted: 22 Jan 2014 07:31 PM PST இந்தியாவில் மொத்தமுள்ள 127 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்படுவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் 2006-ம் ஆண்டு விப்லவ் சர்மா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பி.என்.தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது 44 நிகர்நிலை |
| குடகு மாவட்ட பா.ஜனதா தலைவரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 5 பேர் கைது Posted: 22 Jan 2014 04:25 PM PST குடகு மாவட்டம் விராஜ்பேட்டை டவுன் பகுதியை சேர்ந்தவர் சுஜா குசாலப்பா (வயது 50). இவர் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான அப்பச்சு ரஞ்சனின் தம்பி ஆவார். சுஜா குசாலப்பா குடகு மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்து வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு தான் |
| ராஜஸ்தானில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜாகுவார் விமானம் விபத்து Posted: 22 Jan 2014 03:04 PM PST ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையோரம் பாகிஸ்தானின் பஹவல்பூர் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள தார் பாலைவனப்பகுதியில் இந்திய விமானப்படையின் போர்விமானங்கள் போர்பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. நேற்று பிகானீர் மாவட்டத்தில் போர் பயிற்சியில் ஈடுபட்ட ஜாகுவார் போர் விமானம் அங்குள்ள நல் விமானப்படை விமானத்தளத்தில் தரையிறங்கியது. |
| கெஜ்ரிவாலுடன் சமரசம் செய்வதா?: ஷிண்டே மீது ராகுல் அதிருப்தி Posted: 22 Jan 2014 02:26 PM PST டெல்லியில் போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகர் முடங்கும் அளவு கட்சியினருடன் வீதிக்கு வந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதை முடிவுக்கு கொண்டு வர மத்திய உள்துறை மந்திரி ஷிண்டே சமரசம் செய்தார். அதன்படி, கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான போலீஸ் அதிகாரிகள் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். இதையடுத்து கெஜ்ரிவால் தனது போராட்டத்தை வாபஸ் பெற்றார். தனது போராட்டம் வெற்றி கண்டிருப்பதாக அவர் அறிவித்தார். இது |
| கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை Posted: 22 Jan 2014 01:01 PM PST ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் நாட்டு கடற்படை மீட்டுள்ளது. ஓமன் கடற்பகுதியில் கடந்த 18ம் தேதி பிரான்ஸ் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட போது |
| மும்பையில் 28 வயது வாலிபருக்கு 8 பைபாஸ் ஆபரேசன் Posted: 22 Jan 2014 08:21 AM PST மும்பையைச் சேர்ந்த 28 வயதான பிரஷாந்த் பவார் என்ற பொறியாளர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனக்கு ஏற்பட்ட தோள்பட்டை வலியை சாதாரண வலியாகக் கருதி பேசாமல் இருந்துவிட்டார். சிறிது நாட்களில் |
| 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் Posted: 22 Jan 2014 06:40 AM PST 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவுறுத்தியுள்ளது. |
| கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல் அமைச்சர்: ஷிண்டே சாடல் Posted: 22 Jan 2014 05:52 AM PST டெல்லியில் கடமையைச் செய்யாத போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், டெல்லி காவல்துறை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் கெஜ்ரிவால் தெருவில் |
| என் தாய் சுனந்தாவிற்கு சசி தரூர் தீங்கு செய்யவில்லை: மகன் கருத்து Posted: 22 Jan 2014 05:09 AM PST மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தார். அவரது சாவு குறித்து பல்வேறு யூக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதுபற்றி அவரது மகன் சிவ் மேனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது தாய் தற்கொலை செய்துகொள்வதில் உறுதியாக இருந்தார். எனது தாய்க்கு |
| கேரள கம்யூனிஸ்ட் தலைவர் சந்திரசேகரன் கொலை வழக்கில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு Posted: 22 Jan 2014 04:59 AM PST கேரளாவில் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.பி.சந்திரசேகரன் வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை |
| அமைச்சர் சோம்நாத் பார்தி நீக்கப்படுவாரா? கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடி Posted: 22 Jan 2014 03:44 AM PST டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி உகாண்டா பெண்ணை மானபங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நாடு முழுவதிலுமிருந்து அவருக்கு எதிராக பலத்த கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. |
| டெல்லி சட்ட அமைச்சர் மீது உகாண்டா பெண் புகார் Posted: 22 Jan 2014 03:12 AM PST டெல்லியில் சோதனை என்ற பெயரில் இரவு நேரத்தில் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி மீது ஆப்பிரிக்க பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் முன்பு டெல்லி சட்ட அமைச்சருக்கு எதிரான தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார் |
| சர்தார் சரோவர் அணை விவகாரம்: மோடி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி Posted: 22 Jan 2014 02:42 AM PST குஜராத்தில் சர்தார் சரோவர் அணை மற்றும் கால்வாய் விவகாரம் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் டோஜி கூறுகையில் |
| அந்தமானில் கடத்தப்பட்ட 8 ஜராவா பழங்குடியின பெண்கள் மீட்பு: 7 பேர் கைது Posted: 22 Jan 2014 01:49 AM PST அந்தமான் நிகோபார் தீவுகளில் சமூக விரோதிகளால் கடத்தப்பட்ட ஜராவா பழங்குடி இனத்தைச் சேர்ந்த 8 பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக தெற்கு அந்தமான் போலீஸ் சூப்பிரெண்டு சின்மாய் பிஸ்வால் கூறுகையில், "ஜராவா பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சில நபர்கள், அங்கிருந்த பெண்களை இரண்டு ரப்பர் படகுகளில் கடத்தி செல்வதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |