Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டும் விரைவில் இடம்பெறும்: சர்வதேச கபடி சம்மேளன தலைவர் நம்பிக்கை

Posted: 22 Jan 2014 09:55 AM PST

02310c1d-3da1-48f7-9c4a-58a280644a32_S_secvpf

02310c1d-3da1-48f7-9c4a-58a280644a32_S_secvpfபீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாடலிபுத்திரா விளையாட்டு அரங்கில், 61-வது தேசிய சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கின. தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியின் முதல் நாளான இன்று கர்நாடக கபடி அணியுடன் மோதிய விதர்பா அணி, 32-14 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் 17-29 என்ற புள்ளி கணக்கில் அரியானா அணியிடம் விதர்பா பெண்கள் அணி தோல்வியடைந்தது. போட்டி நடைபெறும் தங்களது சொந்த மண்ணான பாட்னா விளையாட்டு அரங்கில் உத்தரபிரதேச அணிக்கு எதிராக கடுமையாகப் போராடிய பீகார் அணி, 33-35 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆவேசமாக கூச்சலிட்டனர். இன்றைய துவக்க விழாவில் சர்வதேச அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவர் ஜனார்த்தன் சிங் கெலாட் பேசுகையில், "ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கபடியையும் சேர்க்க நாங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறோம். வெகுவிரைவில் ஒலிம்பிக் போட்டியில் கபடி விளையாட்டு இடம்பெறும் என உறுதியாக நம்புகிறோம்." என்று குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரம்புகளை உறுதியாக்கும் பலாப்பழம்

Posted: 22 Jan 2014 09:52 AM PST

jack_fruit_002

jack_fruit_002முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.

இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, சி , தயமின், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, நையாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.

1. பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

2. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

3. ஆஸ்துமாவால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இதன் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா போய்விடும்.

4. தைராய்டு குறைபாடு உள்ளவர்கள், இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு குணமாகும். மேலும் இது உடலுக்குத் தேவையான ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

5. குழந்தைகளுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. இதனை உண்பதால் எலும்புகள் வலுவடைகின்றன. இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இது எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராமல் தடுக்கிறது.

6. வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால், இது ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த பழத்தை சாப்பிட்டால், உடலை பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கிறது.

7. நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.

8. வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், நரம்புகளுக்கு உறுதி தரும்.

9. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

10. பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆஸ்திரேலிய ஓபனில் நடால்-பெடரர் அரையிறுதிக்கு தகுதி: பயஸ்-ஸ்டெபானிக் ஜோடி காலிறுதியில் தோல்வி

Posted: 22 Jan 2014 09:40 AM PST

3831869b-da96-4660-94cd-52ca07335e94_S_secvpf

3831869b-da96-4660-94cd-52ca07335e94_S_secvpfமெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக் குடியரசின் ஸ்டெபானிக் ஜோடி வெளியேறியது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்த ஜோடி, பிரான்சின் 13-ம் தரநிலை ஜோடியான மைக்கேல் லோத்ரா-நிக்கோலஸ் மகட் ஜோடியிடம் 2-6, 6-7 என்ற நேர்செட்களில் தோல்வியடைந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஸ்லோவேகிய வீராங்கனை டோமினிகா சிபுல்கோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

காலிறுதி ஆட்டத்தில், ரபேல் நடால், பல்கேரியாவின் கிரிகோர் திமித்ரோவை 3-6, 7-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மற்றொரு காலிறுதியில் ரோஜர் பெடரர் 6-3, 6-4, 6-7, 6-3 என்ற செட்கணக்கில் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் டோமினிகா சிபுல்கோவா, ரோமேனியாவின் சிமோனா ஹாலெப்பை 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

iPhone-களை சார்ஜ் செய்யும் நவீன சாதனம்

Posted: 22 Jan 2014 09:21 AM PST

iphone_charger_001

iphone_charger_001iPhone - இனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் துணைச்சாதனங்களில் வரிசையில் Star Wars Lightsaber எனும் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டார் வார் ரசிகர்களை கவரும் விதத்தில் உருவாக்கப்பட்ட இச்சாதனத்தை பயன்படுத்தி iPhone - களை சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

USB இணைப்பானைக் கொண்டுள்ள இந்த சார்ஜரிலிருந்து 2,800 mAh மின்கலங்களை சார்ஜ் செய்ய முடியும்.

மேலும் சுவாரஸ்ய நோக்கம் கருதி LED மின்குமிழ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்

Posted: 22 Jan 2014 08:40 AM PST

atm_machines_001

atm_machines_001மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே.

இந்நிலையில் உலகெங்கிலும் அதிகளவான கணனிகள் Windows XP இயங்குதளத்தில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதனால் அந்நிறுவனம் இக்கால எல்லையை 2015ம் ஆண்டு வரை நீடித்துள்ளது.

எனினும் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி உலகெங்கிலும் உள்ள வங்கி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும் 95 சதவீதமான பண இயந்திரங்களில் Windows XP இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 420,000 இற்கும் மேற்பட்ட இயங்திரங்கள் இவ்வியங்குதளத்தினைக் கொண்டுள்ளன.

இதேவேளை 15 சதவீதமான பண இயந்திரங்களில் தற்போது Windows 7 நிறுவப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கடைக்கு பொருள் வாங்க வந்த புலி…… அலறியடித்து ஓடும் மக்கள்!…

Posted: 22 Jan 2014 08:26 AM PST

tiger_shop_001.w245

tiger_shop_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பனி படர்ந்த சாலையில் படுவேகமாக பயணித்து சுக்குநூறாகிய கார்…..

Posted: 22 Jan 2014 08:05 AM PST

snow_accident_001.w245

snow_accident_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இதை ஒரே ஒரு தடவை பாருங்க…… சிரிப்பை அடக்கவே மாட்டீங்க!…..

Posted: 22 Jan 2014 07:41 AM PST

tv_chennal_001.w245

tv_chennal_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அடக்கடவுளே இப்படியும் கூட சரக்கு இறக்கலாமோ?….

Posted: 22 Jan 2014 07:11 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

கடும் பேராட்டத்திற்கு பின் சிங்கத்திற்கு இரையாகிய யானை…..

Posted: 22 Jan 2014 07:03 AM PST

elephant_lion_002.w540-50x50

elephant_lion_002.w540-50x50ஆப்பிரிக்க காட்டுப்பகுதி ஒன்றில் சிங்கம் ஒன்று தனியாக குட்டி யானையுடன் 30 நிமிடங்கள் வரை போராடிக் கொன்று அதனை இரையாக்கியுள்ளது.

இதனை பதிவு செய்த சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த 67 வயதான ஹேர்ட் என்பவர் குறிப்பிடுகையில் "இது ஒரு துயரமான சம்பவமாக இருந்த போதிலும் தமக்கு சிறந்த அனுபவமாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜில்லா’வுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jan 2014 06:44 AM PST

Jilla

Jillaதென்னிந்திய நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான 'ஜில்லா' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அத்திரைப்படம் தொடர்பில் வெளியான விமர்சனத்தைக் கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நடிகர் விஜயின் ரசிகர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், இலங்கைத் தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில் சினிமா நடிகர் ஒருவருக்கு ஆதரவாகப் போராடுவதா என்று ஆர்ப்பாட்டக்காரர்களை வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், விரட்டியடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரைப்படத்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பத்திரிகையொன்றில் விமர்சனமொன்று எழுதப்பட்டிருந்தது. இந்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குறித்த பத்திரிகை நிறுவனத்தின் முன்னால் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

இதன்போது, அங்கு வந்துள்ள வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், 'தமிழர்கள் மத்தியில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்க நீங்கள் இதற்கெல்லாம் போராட்டம் நடத்துகின்றீர்களே!, எங்கள் மக்களுக்காக நடைபெற்ற இத்தனை போராட்டங்களில் எவற்றில் நீங்கள் கலந்துகொண்டீரர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

"நடிகரின் கட்டவுட்டிற்கு பால் ஊற்றுதல் கோஷங்கள் போடுதல் என்று உங்கள் காலங்களை வீணடிக்கின்றீர்கள். உங்கள் எதிர்காலம் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றீர்கள். இங்கிருந்து நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது. நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் எனக்கூறி இங்கிருந்து அகன்று செல்லுங்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சாடியுள்ளார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கலைந்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மன்னார்,திருக்கேதீஸ்வரம் புதைகுழி இன்றும் தோண்டப்பட்டது!- எலும்புத்துண்டுகள் மீட்பு

Posted: 22 Jan 2014 06:30 AM PST

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி மீண்டும் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை மன்னார் நீதவான் முன்னிலையில் 10வது தடவையாக தோண்டப்பட்டது. இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கும் பணிகள் இடம்பெற்றன. இதன் போது இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் […]

உலகை கலக்கும் இணை பிரியா நண்பர்கள்

Posted: 22 Jan 2014 06:14 AM PST

இந்தோனேஷியாவை சேர்ந்த நபர் ஒருவர் புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கிராமம் டிலெம். இக்கிராமத்தை சேர்ந்த அப்துல்லா ஷொலெஹ்(வயது 33) என்பவர், முலன் என்ற புலியை செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். 3 மாத குட்டியாக இருந்ததில் இருந்தே, முலனை பாதுகாத்து வருகிறார் அப்துல்லா. தற்போது இருவரும் இணைபிரியா நண்பர்களாக உலா வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்லைன் டேட்டிங்கால் நேர்ந்த விபரீதம்

Posted: 22 Jan 2014 06:04 AM PST

ஒன்லைன் டேட்டிங் மூலம் அறிமுகமான பெண்ணை சந்திக்க வந்த நபர், கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் தான் ஒன்லைனில் அரட்டை அடித்த பெண்ணை சந்திப்பதற்காக கொலம்பியா வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டு, கடந்த 19ம் திகதி மயங்கிய நிலையில் காலி மாகாண பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றி குறித்த நபர் கூறுகையில், ஒன்லைனில் சந்தித்த பெண்ணை நேரில் காண்பதற்காக கொலம்பியா வந்தேன். அப்போது இந்த பெண்ணின் வளர்ப்பு மகள் […]

ஆண்களை நம்பாதீங்க! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்

Posted: 22 Jan 2014 06:00 AM PST

பிரான்சில் சமீபத்தில் வெளியான ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. பிரான்சை சேர்ந்த IFOP என்ற ஆராய்ச்சி மையம், ஆண்- பெண்களுக்கு இடையேயான உறவுகள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில், 55 சதவிகித ஆண்களும், மூன்றில் ஒரு பங்கு பெண்களும் தங்களது துணைக்கு துரோகம் செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆய்வை நடத்திய பிராகோஸ் கிராஸ்(François Kraus) என்ற ஆய்வாளர் கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பெண்ணின் காலுக்குள் புதைந்திருந்த தங்க புதையல்

Posted: 22 Jan 2014 05:55 AM PST

தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவரின் கால் மூட்டுக்குள் தங்கம் புதைந்திருந்தது தெரியவந்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடும் மூட்டு வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது கால் மூட்டில் ஏராளமான தங்க ஊசிகள் இருப்பது தெரியவந்தது. இதற்குமுன் கடும் கால்வலியின் காரணமாக அக்குபஞ்சர் முறையில் மருத்துவ பரிசோதனைகள் எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஊசிகள் தான் இவை என்பது தெரியவந்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உறைந்து போன ஆற்றில் த்ரில்லான பயணம்

Posted: 22 Jan 2014 12:27 AM PST

பனியில் உறைந்து போன மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் ஒருவர் த்ரில்லான பயணத்தை மேற்கொண்டுள்ளார். ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உலக நாடுகள் பலவும் பனிப்புயலால் சிக்கித் தவிக்கின்றன. சீனாவில் 0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால், ஆறுகள் பெருமளவும் உறைந்த நிலையில் காணப்படுகிறது. மஞ்சள் ஆறு உறைந்து பனிக்கடல் போன்று காட்சியளிக்கிறது, இந்நிலையில் பாலத்தின் வழியாக செல்வதற்கு பதிலாக மங்கோலாவில் 1 கி.மீ நீளமுள்ள மஞ்சள் ஆற்றை காரில் கடந்து நபர் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்காவில் மீண்டும் பனிப்புயல்: 2 அடி உயரத்திற்கு பனிப்படர்வு

Posted: 22 Jan 2014 12:22 AM PST

sotrm_001

sotrm_001அமெரிக்காவில் மீண்டும் கடும் குளிருடன் பனிப்புயல் தாக்கி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக்கிடக்கிறது. போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இன்னும் இரு நாட்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட எச்சரிக்கப்பட்டுள்ளதால், குளிரானது மைனஸ் 10 முதல்-25 டிகிரி செல்சியசிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவிற்கு முன்பே, வாஷிங்கடன் உள்ளிட்ட கிழக்கு பகுதி மாகாணங்களின் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மேற்கு விர்ஜினியா முதல் போஸ்டன் வரை உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2,900 விமானப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

வடதுருவ சுழற்சி காரணமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்குபகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதில் வரலாறு காணாத அளவிற்கு பெரும்பான்மையான இடங்களில் குளிரானது மைனஸ் 20 டிகிரிக்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு ரோந்துக் கப்பல்களே வழங்கவுள்ளோம்: இந்தியா

Posted: 21 Jan 2014 11:57 PM PST

இலங்கைக்கு போர்க்கப்பல் அல்ல. ரோந்து கப்பல்களையே வழங்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம், சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சின் உதவிசெயலாளர் ஜோசி இந்த சத்திய கடதாசியை சமர்ப்பித்துள்ளார். இந்த கப்பல்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை இந்திய கடற்பகுதிக்குள் செலுத்துவதில்லை என்று இலங்கை கடற்படையும் உறுதியளித்துள்ளதாக ஜோசி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இந்திய கடற்படையினரும் இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™