மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரள மாநில சிறப்பு மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பு
- திருமணத்துக்கு முன் ‘செக்ஸ்’ உறவு நீதிக்கு புறம்பானது: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு
- பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்று விமர்சனம்: மன்மோகன்சிங்குக்கு மோடி இன்று பதில் அளிக்கிறார்
- அடுத்ததாக ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் முடிவை நிறைவேற்ற கெஜ்ரிவால் அரசு முடிவு
- கெஜ்ரிவாலை பின்பற்றி ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தராவும் ஆடம்பரத்தை குறைத்தார்
- டெல்லி அருகே வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: டாக்சி டிரைவரை போலீஸ் தேடுகிறது
- பாராளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி
- குடகு அருகே மாடுகளை அடித்துக் கொன்ற புலி சிக்கியது
- பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம்
- சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள வருட காலண்டரில் இடம் பெறாத ராஜஸ்தான்
- சபரிமலையில் ரூ.6½ கோடி செலவில் மாளிகைப்புறம் கோவில்கள் நவீனப்படுத்தப்படுகின்றன
- மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற போதை இளைஞர்கள் கைது
- மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல்
- 60 கோடி விவசாயிகளுக்காக 'தேசிய விவசாய வருமான ஆணையம்' அமைக்க மோடி அறிவிக்க வேண்டும்:ராம்தேவ்
- கோவா கட்டிட விபத்தில் பணியாளர்கள் 14 பேர் பலி
- 6 நாள் முதல்வர் கெஜ்ரிவால் பிரதமராக வருவதற்கு ஏன் கனவு காண முடியாது? - காங்கிரஸ் கிண்டல்
- பேஸ்புக் நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீரை ஊற்றிய வாலிபர்
- திருவனந்தபுரத்தில் பிரதமரின் காரின் முன்னால் பாய்ந்த பா.ஜனதா தொண்டர்கள் கைது
- சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய சமாஜ்வாடி தொண்டர்கள்: கண்காணிப்பு கேமரா அம்பலப்படுத்தியது
- வேலை நடந்து வந்த புதிய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி?
| கேரள மாநில சிறப்பு மந்திரி சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பு Posted: 04 Jan 2014 11:50 PM PST பிரதமர் மன்மோகன்சிங் கேரளாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். கேரள வந்துள்ள மன்மோகன்சிங்கை கவுரவிக்கும் வகையில் கேரள மாநில சிறப்பு மந்திரி சபை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது |
| திருமணத்துக்கு முன் ‘செக்ஸ்’ உறவு நீதிக்கு புறம்பானது: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு Posted: 04 Jan 2014 11:28 PM PST ''திருமணத்துக்கு முன் 'செக்ஸ்' உறவு வைப்பது நீதிக்கு புறம்பானது. இதை எந்த மதமும் ஏற்காது'' என டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாபை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். |
| பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்று விமர்சனம்: மன்மோகன்சிங்குக்கு மோடி இன்று பதில் அளிக்கிறார் Posted: 04 Jan 2014 11:02 PM PST மராட்டியத்தில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நரேந்திர மோடி பதில் அளித்து பேசுகிறார். பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி நாடு முழுவதும் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். அப்போது அவர் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைவர்களையும் குறை கூறி பேசி வருகிறார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது நரேந்திர மோடி |
| அடுத்ததாக ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கும் முடிவை நிறைவேற்ற கெஜ்ரிவால் அரசு முடிவு Posted: 04 Jan 2014 10:47 PM PST டெல்லியில் கட்டிட தொழிலாளர்களுக்கான புதிய அதிரடி திட்டங்களை கெஜ்ரிவால் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். டெல்லி முதல்– மந்திரியாக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். பதவி ஏற்ற மறுநாள் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். 2–வது நாள் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்தார். இந்த நிலையில் அடுத்த தேர்தல் வாக்குறுதியான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கான அதிரடி திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் |
| கெஜ்ரிவாலை பின்பற்றி ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தராவும் ஆடம்பரத்தை குறைத்தார் Posted: 04 Jan 2014 08:51 PM PST அரவிந்த் கெஜ்ரிவாலை பின்பற்றி ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தராவும் ஆடம்பரத்தை குறைத்தார். டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தின்போது எளிமையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். |
| டெல்லி அருகே வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: டாக்சி டிரைவரை போலீஸ் தேடுகிறது Posted: 04 Jan 2014 08:42 PM PST போலந்து நாட்டைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்தார். ''ஹரே கிருஷ்ணா'' இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதால் அவர் கடந்த 3 ஆண்டுகளாக ஆக்ரா – டெல்லி அருகே உள்ள மதுரா நகரில் தங்கி |
| பாராளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டி Posted: 04 Jan 2014 08:35 PM PST டெல்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இது பற்றி ஆலோசிக்க டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது |
| குடகு அருகே மாடுகளை அடித்துக் கொன்ற புலி சிக்கியது Posted: 04 Jan 2014 08:08 PM PST குடகு மாவட்டம் காபி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்கு உள்ள காபி தோட்டங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து தொல்லை கொடுத்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். |
| பூரி ஜெகநாதர் கோவில் பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிமுகம் Posted: 04 Jan 2014 07:40 PM PST 12 ஆம் நூற்றாண்டின் பாரம்பரியம் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் பணிபுரிந்துவரும் சுமார் 2,000 பூசாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. |
| சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள வருட காலண்டரில் இடம் பெறாத ராஜஸ்தான் Posted: 04 Jan 2014 07:07 PM PST இந்த வருடத்திற்கான இன்கிரெடிபிள் இந்தியா விளம்பர நாட்காட்டி மத்திய அரசின் சுற்றுலாத்துறையால் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டது. இந்தியாவில் பன்முகத்தன்மை கொண்ட சுற்றுலாத்தலங்களின் 24 |
| சபரிமலையில் ரூ.6½ கோடி செலவில் மாளிகைப்புறம் கோவில்கள் நவீனப்படுத்தப்படுகின்றன Posted: 04 Jan 2014 04:10 PM PST சபரிமலையில் உள்ள மாளிகைப்புறம் அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களை ரூ.6½ கோடி செலவில் நவீனப்படுத்த தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. சபரிமலையில், சாமி அய்யப்பனை தரிசனம் செய்த பக்தர்கள், மாளிகைபுறம் அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் பல |
| மும்பையில் குப்பை பொறுக்கிய 55 வயது பெண்ணை கற்பழித்து கொன்ற போதை இளைஞர்கள் கைது Posted: 04 Jan 2014 03:29 PM PST மும்பை காட்கோபர் பகுதியின் ஒரு ஓரமாக கடந்த 1-ம் தேதி அன்று குப்பை பொறுக்கும் 55 வயது பெண்மணி இறந்துகிடந்தார். முதலில் போலீசார் இதை தற்செயலான இறப்பு என்று எண்ணினர். பின்னர், பிரேத பரிசோதனை அறிக்கையானது அவர் கற்பழிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது. |
| மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் இல்லை: வீரப்ப மொய்லி தகவல் Posted: 04 Jan 2014 10:53 AM PST மானிய விலை கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறியுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சமாளிப்பதற்காக, வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. |
| 60 கோடி விவசாயிகளுக்காக 'தேசிய விவசாய வருமான ஆணையம்' அமைக்க மோடி அறிவிக்க வேண்டும்:ராம்தேவ் Posted: 04 Jan 2014 10:37 AM PST டெல்லியில் இன்று பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் நரேந்திர மோடியுடன் தலைவர் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொள்கிறார். இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை ராம் தேவ் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி நாட்டை சீரழித்து |
| கோவா கட்டிட விபத்தில் பணியாளர்கள் 14 பேர் பலி Posted: 04 Jan 2014 09:46 AM PST கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கனகோனா நகரின் சாவ்டி வார்டு பகுதியில் 5 அடுக்கு மாடிக்கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. ரூபி ரெசிடென்சி என்ற அந்த கட்டிடத்தில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று மாலை வேலை செய்துகொண்டிருந்தனர். |
| 6 நாள் முதல்வர் கெஜ்ரிவால் பிரதமராக வருவதற்கு ஏன் கனவு காண முடியாது? - காங்கிரஸ் கிண்டல் Posted: 04 Jan 2014 08:34 AM PST டெல்லி சட்டசபைத் தேர்தலில் மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக பொறுப்பேற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் |
| பேஸ்புக் நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீரை ஊற்றிய வாலிபர் Posted: 04 Jan 2014 05:31 AM PST பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் பேஸ்புக் நட்பை முறித்த பள்ளி மாணவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் தந்தையிடம் முசாபர் நகர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார். அப்போது மாணவிக்கும் |
| திருவனந்தபுரத்தில் பிரதமரின் காரின் முன்னால் பாய்ந்த பா.ஜனதா தொண்டர்கள் கைது Posted: 04 Jan 2014 04:57 AM PST கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மின்னணு கல்வியறிவு திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கி வைத்தார். மேலும் டி.சி.எஸ். நிறுவனத்தின் உலகளாவிய கற்றல் மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார். |
| சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய சமாஜ்வாடி தொண்டர்கள்: கண்காணிப்பு கேமரா அம்பலப்படுத்தியது Posted: 04 Jan 2014 04:24 AM PST உத்தர பிரதேச மாநிலம் லக்னோ- பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரானாகி சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களை சமாஜ்வாடி தொண்டர்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சொகுசு காரில் வந்த சமாஜ்வாடி கட்சியினர் 5 பேர், உரிய நுழைவு அனுமதி இல்லாமல் அந்த பகுதியைக் கடக்க முயன்றனர். இதனால் அவர்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காரில் இருந்த நபர்கள் துப்பாக்கியைக் காட்டி |
| வேலை நடந்து வந்த புதிய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் பலி? Posted: 04 Jan 2014 04:07 AM PST கோவாவின் தெற்கு பகுதியில் உள்ள கனகோனா நகரில் 6 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இன்று ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |