Tamil Star |
- முன்னாள் பெண் போராளிகளின் கதைகளை கூறும் நூல்
- வீட்டுக்கு குடிபோக மாட்டேன் : கேஜ்ரிவால்
- தமிழக மக்கள் துணையுடன் தேசிய அளவில் மாற்றம்: ஜெயலலிதா
- இந்தியத் தூதர் தேவயானியை சோதனை செய்வது போன்ற வீடியோ காட்சி பொய்யானது
- அமைச்சர் ரிசாட் பதியூதீன் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார்
- இலங்கைப் படையினருக்க பயிற்சி அளிக்கப்படக் கூடாது
- சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி!
- வடக்கில் கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
- திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி: சிறுவர்களின் பற்களும் மீட்பு
- முஷாரப்புக்கு உண்மையில் மாரடைப்பு ஏற்பட்டதா?
- உலக கிண்ண போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம்
- YouTube வழங்கவுள்ள புதிய வசதி
- புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் Processor
- புத்தாண்டில் 5,000 பேருக்கு விசா வழங்கும் கனடா
- வளரும் நாடுகளுக்கு தொல்லை தரும் உடற் பருமன்
- கடவுளுக்கு பதிலாக அல்லா! 321 பைபிள்கள் பறிமுதல்
- அதிர்ச்சி தரும் விளம்பரம் “மனித மூளை விற்பனைக்கு”
| முன்னாள் பெண் போராளிகளின் கதைகளை கூறும் நூல் Posted: 04 Jan 2014 11:07 PM PST
இலங்கையின் எழுத்தாளர் மற்றும் சமூக நடவடிக்கையாளர் சர்மிளா செய்யத் இந்த நூலை எழுதியுள்ளார். உம்மத் என்ற பெயரைக்கொண்ட இந்த நூல் இலங்கையின் முஸ்லிம் பெண் ஒருவர், தாம் சந்தித்த சுமார் 250 முன்னாள் பெண் போராளிகளை மையமாக வைத்து நூலை எழுதியுள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இன்னும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பெண்கள் போராளிகள் சமூகத்துடன் சேர்க்கப்பட்டாலும் கண்காணிக்கப்படுவதுடன் புறக்கணிக்கப்படுகின்றனர் என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பெண்களில் 75 வீதமானோர் உடல்ரீதியாக போரின் போது பாதிப்புக்களுக்கு உள்ளானவர்கள் என்று எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீட்டுக்கு குடிபோக மாட்டேன் : கேஜ்ரிவால் Posted: 04 Jan 2014 10:53 PM PST
இன்று காலை செய்தியாளர்களிடம் கூறிய கேஜ்ரிவால், அந்த வீட்டை திரும்ப ஒப்படைத்துவிட்டு, தனக்கு ஏற்ற அளவுக்கு சிறிய வீட்டை தருமாறு அரசிடம் கோர இருப்பதாகவும் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழக மக்கள் துணையுடன் தேசிய அளவில் மாற்றம்: ஜெயலலிதா Posted: 04 Jan 2014 10:50 PM PST
பொங்கல் திருநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் குன்னூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லாத வேட்டி-சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கியும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும், முடிவடைந்த பணிகளை தொடங்கியும் வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியது: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி-சேலை திட்டம், பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் நடப்பாண்டில் ரூ.486.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 1982ஆம் ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் விளைவாக ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து, நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் கடந்த 1983 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பு கைத்தறி நெசவாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி, சேலைகளின் தரம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்தப்பட்டுளளதால் அரசுக்கு கூடுதலாக ரூ.73.44 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்: பருவமழை பொய்த்து விட்டதாலும், தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகம் தர மறுத்ததன் காரணமாகவும் ஏற்பட்ட வறட்சி, பயிர்கள் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டில் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 ரொக்கம் ஆகிய சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்ற பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் ரூ.281 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பகல் கனவு காண்கிறார்கள்: நேரம் பார்த்து தேவையறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டுமென்பதே எனது நோக்கமாகும். இதுபோன்ற உதவிகளை செய்து வருவதால்தான் மக்கள் என் பக்கம் உள்ளனர். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதிமுக அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாமென சிலர் பகல் கனவு காண்கின்றனர். மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதை நினைத்தே அதிமுக அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. மக்களும் இந்த அரசுக்கு உறுதுணையாக உள்ளனர். பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. கால்பந்து காலால் உதைக்கப்படுகிறது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப்படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புற்க்கணிக்கப்படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரே நலம்தான் உள்ளது. அது தமிழக மக்களின் நலம். அதனால்தான் மக்கள் எப்போதும் என் பக்கம் உள்ளார்கள். நானும் மக்கள் பக்கம் உள்ளேன். தேசிய அளவில் மாற்றம்: தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் நிறைய உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமெனில் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மக்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படுமென நான் நம்புகிறேன் என்றார் முதல்வர் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.காமராஜ், பி.வி.ரமணா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளும் விழாவில் பங்கேற்றனர். 65 ஆயிரம் பேருக்கு வேலை… இலவச வேட்டி-சேலை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 65 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இலவச வேட்டி-சேலை திட்டத்தை நீலகிரி மாவட்டம் குன்னூரில் சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசும் போது இதைத் தெரிவித்தார். அவர் பேசியது: இலவச வேட்டி-சேலை திட்டத்தால் 15 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள், 50 ஆயிரம் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். 1.73 கோடி பெண்களும், 1.72 ஆண்களுமாக மொத்தம் 3.45 கோடி பயனாளிகள் பயன் அடைகின்றனர் என்றார் முதல்வர் ஜெயலலிதா. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியத் தூதர் தேவயானியை சோதனை செய்வது போன்ற வீடியோ காட்சி பொய்யானது Posted: 04 Jan 2014 10:41 PM PST
மேலும், இந்த விடியோ காட்சிகள் ஆபத்தானதாகவும், ஆத்திரத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் வெள்ளிக்கிழமை கூறியதாவது: அந்த விடியோ காட்சிகளில் இருப்பது தேவயானி கிடையாது. எனவே, இதில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகவும். அந்த விடியோ காட்சிகளில் உள்ள நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல், சில சமூக இணையதளங்கள் அதை ஒளிபரப்பி வருகின்றன. கண்டனம்: பொறுப்பற்ற முறையில் உருவாக்கப்பட்ட அந்த ஆபத்தான விடியோ தொடர்பாக அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அந்த விடியோ காட்சிகள் தொடர்பாக அமெரிக்க காவல் துறையினரிடம், வெளியுறவுத் துறை சார்பில் விவாதிக்கப்பட்டது. அப்போது அந்த வீடியோ காட்சி போலியானது என்பதை அவர்கள் உறுதி செய்தனர். வீடியோவில் காட்டப்படும் பெண்ணிடம் சோதனை செய்வது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஏனெனில், அமெரிக்க காவல் துறையினர் சோதனை செய்யும் முறை வேறு மாதிரியாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர். எனினும், அந்த விடியோ காட்சியை நான் பார்க்கவில்லை. இருந்தபோதிலும், அந்த விடியோ போலியானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று மேரி ஹார்ஃப் கூறினார். பின்னணி: பணிப் பெண்ணுக்கு விசா பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேவை அமெரிக்க போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அப்போது, அவரது ஆடைகளைக் களைந்து போலீஸார் சோதனை செய்ததாகவும், குற்றவாளிகளுடன் அவரை காவலில் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. வீடியோ பதிவுகள்: போலீஸ் காவலில் இருக்கும் ஒரு பெண்ணின் ஆடைகளைக் களைந்து போலீஸார் சோதனை செய்வது போலவும், அப்போது அப்பெண் கதறி அழுவது போலவும் மேற்குறிப்பிட்ட அந்த விடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமைச்சர் ரிசாட் பதியூதீன் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார் Posted: 04 Jan 2014 10:24 PM PST
அமைச்சர் பதியூதீன் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு திட்டமொன்றை முன்னெடுக்க உதவிகளை வழங்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் கோரியிருந்தார். ராஜதந்திர விதிகளை மீறி அமைச்சர் பதியூதீன் உதவிகளை கோரியதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு புறம்பான வகையில் அமைச்சர் உதவி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். 2009ம் ஆண்டில் சுனாமி வீடமைப்பு திட்டமொன்றுக்கு சவூதி அரேபியாவிடம் உதவி கோரிய போது அதற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய கட்சி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தது. தீகவாபியில் முஸ்லிம்களுக்கு வீடமைப்பு திட்டமொன்றை அமைத்துக் கொடுக்க சவூதி அரேபியாவிடம் உதவி கோரியமை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஒரு இன சமூகத்திற்கு நன்மை ஏற்படக் கூடிய வகையில் மட்டும் சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்திருந்தது. அமைச்சர் ரிசாட் பதியூதீன் இன அடிப்படையில் மட்டும் உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது. பிரதமர் டி.எம். ஜயரட்னவின் ஊடாக அமைச்சர் பதியூதீன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி கட்சியும் தெரிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைப் படையினருக்க பயிற்சி அளிக்கப்படக் கூடாது Posted: 04 Jan 2014 09:53 PM PST
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சமூக வலைத்தளங்களின் ஊடாக நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சி! Posted: 04 Jan 2014 09:36 PM PST
மேற்கத்தைய நாடுகள் சமூக வலைத்தளப் பயன்பாடு குறித்து நாட்டு மக்களுக்கு பயிற்சி அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது. எகிப்து, டியுனிசியா போன்ற நாடுகளில் அரச விரோத செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓர் மேற்குலக நாடுகளின் தூதரகம் யாழ்ப்பாணத்தில் காரியாலயம் அமைத்துள்ளது. திருகோணமலையிலும் காரியாலயமொன்றை அமைக்க எடுத்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு இந்திய அரசாங்கமும் கவனம் செலுத்தியுள்ளது. அரசியல் விமர்சனங்களைச் செய்ய மக்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் செயற்படுகின்றன. இதேவேளை, சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் பல்வேறு பயிற்சி பட்டறைகளை நடத்தி வருவதுடன், தற்போது பயிற்சி நெறியொன்றை நடாத்தவும் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கில் கடல் கொந்தளிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் Posted: 04 Jan 2014 09:19 PM PST
அதேநேரம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு கடலில் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 200 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் இதன்போது அலை சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு மேலெழும் என்றும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கவுள்ளார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்! Posted: 04 Jan 2014 09:10 PM PST
இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12ம் திகதி மகஸின் சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு செல்லும் வடக்கு மாகாண முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வார் என்று தெரியவருகிறது. கடந்த 2 ம் திகதி அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசியதன் பின்னணியில் வடக்கு முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மகஸின் சிறைச்சாலைக்கு வரவுள்ள வடக்கு முதலமைச்சர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நேரில் சந்தித்து பேச வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கைதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி: சிறுவர்களின் பற்களும் மீட்பு Posted: 04 Jan 2014 09:03 AM PST மன்னார்,திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியிலிருந்து சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள மனித புதை குழியில் இருந்து இன்று சனிக்கிழமையும் மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் சிறுவர்களின் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியிலிருந்து கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இன்று சனிக்கிழமை வரைக்கும் மனித எலும்பு கூடுகள் 18 உம், மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ன முன்னிலையில் […] |
| முஷாரப்புக்கு உண்மையில் மாரடைப்பு ஏற்பட்டதா? Posted: 04 Jan 2014 08:26 AM PST இஸ்லாமாபாத்:நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தப்பிக்க முஷாரப் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது போல் நாடகமாடுகிறாரா என்பது குறித்து மருத்துவ குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் மகன் பிலாவல் புட்டோ கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தானில், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை 2 நாட்களுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது. முதல் நாள் முஷாரப் ஆஜராகவில்லை. நேற்று நீதிமன்றத்துக்கு […] |
| உலக கிண்ண போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் Posted: 04 Jan 2014 04:05 AM PST
டுவென்டி- 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் வருகிற மார்ச் 16ம் திகதி முதல் ஏப்ரல் 6ம் திகதி வரை வங்கதேசத்தில் நடக்கவுள்ளது. தற்போது வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ளதால், உலக கிண்ண போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகம் தான். எனவே இப்போட்டிகளை இடமாற்ற ஐசிசி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் போட்டிகளை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இதேபோன்று ஆசிய கிண்ணப் போட்டிகளையும் நடத்த விருப்பம் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் நிஷந்தா ரனதுங்கா தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி முடிவு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 Jan 2014 03:46 AM PST
4K Streaming எனும் இத்தொழில்நுட்பத்தினை இந்த வருடம் இடம்பெறும் சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளது. அதேவேளை தொலைக்காட்சிகளில் பயன்படுத்தக்கூடிய Ultra HD 4K எனும் தொழில்நுட்பத்தினையும் YouTube நிறுவனம் 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்து வைக்கலாம் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் Processor Posted: 04 Jan 2014 03:41 AM PST Processor வடிவமைப்பு நிறுவனமான Allwinner ஆனது Octa-core தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4 ARM Cortex-A15 எனும் நவீன Processor இனை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இதனை இணைத்து பயன்படுத்துவதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள A80 Optimus எனும் Mother Board-யும் அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. டேப்லட்களின் பயன்படுத்தப்படும் இந்த Processor இல் USB Ports, Developer Pins ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புத்தாண்டில் 5,000 பேருக்கு விசா வழங்கும் கனடா Posted: 04 Jan 2014 03:33 AM PST
கனடாவில் வசித்து வரும் நபர்கள், தங்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளை அழைத்து கொள்ளும் விதமாக இந்த புதிய விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 5000 புதிய குடியேற்ற விண்ணப்பங்களை ஏற்க முடிவு செய்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட உறவினர்களை வரவழைப்பவர்கள் சில கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் எனவும் தெரியவருகிறது. கனடிய குடிவரவுத்துறை அமைச்சரான கிறிஸ் அலெக்சாண்டர், இவ்வாறான நடவடிக்கையானது மிகவும் துரிதமான செயற்பாடாக இருக்கும் எனவும், ஆனால் குறிப்பிட்ட நபர்கள் தங்க வேண்டிய காலத்தின் அளவு குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். புதய குடிவரவாளர்களுக்கான விதிமுறைகள் 1. புதிய குடிவரவாளர்களை வரவழைப்பவரது வருமானமானது ஆகக் குறைந்தது முன்பிருந்த தொகையிலும்பார்க்க 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட வருமானமானது 12 மாதங்களுக்குப் பதிலாகக் கடந்த 3 வருடங்களுக்கு அந்த நபர் பெற்றிருக்க வேண்டும். 2. புதியநபர்களை வரவழைப்போர்அவர்களைப் பொறுப்பேற்கும் காலம் 10 வருடங்களில் இருந்து 20 வருடங்களாக அதிகரித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வளரும் நாடுகளுக்கு தொல்லை தரும் உடற் பருமன் Posted: 04 Jan 2014 02:29 AM PST பணக்கார நாடுகளை விட, வளரும் நாடுகளில் உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த சமூக நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச அளவில் 146 கோடி பேர் உடற் பருமனாகி குண்டு மனிதர்களாக இருக்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 100 கோடியாக இருந்தது, இது 1980ம் ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம். இவ்வாறு உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம், இறைச்சி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கடவுளுக்கு பதிலாக அல்லா! 321 பைபிள்கள் பறிமுதல் Posted: 04 Jan 2014 02:20 AM PST
மலேசியாவில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர், தேசிய மதமாக இஸ்லாம் உள்ளது. இங்கு புத்த மதத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவ மத பிரசாகர்கள் கடவுள் என்ற சொல்லுக்கு மாறாக 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கிறிஸ்தவ நாளிதழ் ஒன்று கடவுளை அல்லா என்று குறிப்பிட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து முஸ்லிம் அறிஞர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடியதுடன், அதிரடி சோதனைகளையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடவுளை அல்லா என்று குறிப்பிட்ட கிறிஸ்தவ மத பிரசார குழுவினரிடம் இருந்து 321 பைபிள் புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 2 நிர்வாகிகளை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு ஜாமீனில் விடுவித்தனர். இதுகுறித்து கிறிஸ்தவ பைபிள் சொசைட்டி தலைவர் லீ மிங் சூன் கூறுகையில், செலாங்கர் மாகாணத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லா என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் சட்டத்துக்கு உட்பட்டுதான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துணை பிரதமர் முகைதீன் யாசீன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் அல்லா என்ற சொல் முஸ்லிம் மதத்தினருக்கும் மட்டுமான சொல், எனவே மற்ற மதத்தினர் அந்த சொல்லை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிர்ச்சி தரும் விளம்பரம் “மனித மூளை விற்பனைக்கு” Posted: 04 Jan 2014 02:08 AM PST
இன்றைய உலகில் வீட்டில் இருந்தபடியே ஒன்லைனின் மூலம் அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் சார்லஸ்(வயது 21) என்ற நபர் ஈபே மூலம் மனித மூளையை விற்றுள்ளார். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இண்டியானாவில் உள்ள இந்திய மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்திலிருந்து 60க்கும் மேற்பட்ட மூளைகளை அவன் திருடியுள்ளதாகயும், கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அவன் அந்த அருங்காட்சியகத்தில் அத்துமீறி நுழைந்து மூளை திசுக்களை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் மத்தியஸ்தர் ஒருவரை கொண்டு அவன் விற்றுள்ளான். இவரிடம் 6 மூளைகளை வாங்கிய நபர் ஒருவர், அருங்காட்சியகத்தின் நிர்வாக இயக்குனரான மேரி ஹெலன் ஹென்னஸ்சியுடன் தொடர்பு கொண்டு தான் வாங்கியுள்ள மூளைகளில் அருங்காட்சியகத்தின் முத்திரைகள் ஒட்டப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மேரி பொலிசிடம் புகார் தெரிவிக்கவே, தீவிர தேடுதல் வேட்டையின் பின் சார்லஸை பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சார்லஸை, சிறையில் அடைத்தனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
























