மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி மனு: ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் வாதம் முடிந்தது
- வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- டெல்லி மேல்சபை தேர்தல்: ஆந்திரா போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற மறுப்பு- காங்கிரசுக்கு நெருக்கடி
- ஐதராபாத் தியேட்டர் குண்டு வெடிப்பு: லஸ்கர் தீவிரவாதிக்கு 7 ஆண்டு ஜெயில்- தனிக்கோர்ட்டு தீர்ப்பு
- திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து 2 வாலிபர்கள் தற்கொலை
- பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: அமெரிக்க உளவுத்துறை
- அத்வானி மீண்டும் போட்டி: பா. ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் 3–ந்தேதி வெளியாகிறது
- திருப்பதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: தமிழக தொழிலாளி பலி
- மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு
- பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேறினால் அரசியலில் இருந்து விலகுவேன்: கிரண்குமார் ரெட்டி
- டெல்லியில் சோனியாவுடன் ராம்விலாஸ் பஸ்வான் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
- 1984-ம் ஆண்டு கலவரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: டெல்லி அரசு முடிவு
- இந்தியாவில் 35 கிலோ தங்கத்தை கடத்தியவர் குஜராத்தில் கைது
- அசாமில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: 10 பேர் பலி
- நிதிஷ்குமாரும், சோனியாவும் பீகாரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று ஒரே மேடையில் பேசுகின்றனர்
- உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்த பீஜிங்கை பின்னுக்கு தள்ளிய டெல்லி
- மாநிலங்களவையின் மிகப்பெரிய பணக்கார உறுப்பினரான ரவீந்திர கிஷோர் சின்ஹா
- தீவிரவாதிகளால் நரேந்திரமோடிக்கு ஆபத்து: மத்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவல்
- "காங்கிரசின் நோக்கம்" என்ற ராகுலின் முயற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கம்
- இந்திய-மியான்மர் நாட்டு எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்
| தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி மனு: ராஜீவ் கொலையாளிகளின் வக்கீல் வாதம் முடிந்தது Posted: 29 Jan 2014 11:09 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் 3 பேர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் |
| வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு: ஜெயலலிதா மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Posted: 29 Jan 2014 11:02 PM PST முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991–94–ம் ஆண்டில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணையை சந்திக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த விசாரணையை 4 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் கீழ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது. |
| டெல்லி மேல்சபை தேர்தல்: ஆந்திரா போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற மறுப்பு- காங்கிரசுக்கு நெருக்கடி Posted: 29 Jan 2014 10:46 PM PST ஆந்திராவில் டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் வாபஸ் பெற மறுத்ததால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு 6 உறுப்பினர்களை தேர்வு செய்ய வருகிற 7–ந் தேதி ஓட்டுப்பதிவு- நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் 4 பேரையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி சார்பில் ஒருவரும், தெலுங்கு தேசம் சார்பில் ஒருவரும் சேர்ந்து எடுக்கப்பட முடியும். |
| ஐதராபாத் தியேட்டர் குண்டு வெடிப்பு: லஸ்கர் தீவிரவாதிக்கு 7 ஆண்டு ஜெயில்- தனிக்கோர்ட்டு தீர்ப்பு Posted: 29 Jan 2014 10:31 PM PST ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 2006–ம் ஆண்டு ஓடியன் தியேட்டர் காம்ப்ளக்சில் குண்டு வெடித்தது. இதுபற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. அப்போது இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை லஸ்கர் இயக்க தீவிரவாதி ஜியா–உல்–ஹக் முன்னின்று நடத்தியது தெரிய வந்தது. செல்போன் உரையாடல் மூலம் போலீசார் அவரது நடமாட்டத்தை பின் தொடர்ந்தனர். அவன் மும்பை குண்டு வெடிப்பு சதிகாரர்களான |
| திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து 2 வாலிபர்கள் தற்கொலை Posted: 29 Jan 2014 09:59 PM PST திருவனந்தபுரம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து 2 வாலிபர்கள் தற்கொலை |
| பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: அமெரிக்க உளவுத்துறை Posted: 29 Jan 2014 09:25 PM PST பாராளுமன்ற தேர்தல் மே மாத இறுதிக்குள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும் நிலையில் எந்த கட்சிக்கு எங்கெங்கு வெற்றி வாய்ப்பு உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, காங்கிரசை விட பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும், தனிப் பெரும் கட்சியாக பாரதீய ஜனதா இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளன. |
| அத்வானி மீண்டும் போட்டி: பா. ஜனதா முதல் வேட்பாளர் பட்டியல் 3–ந்தேதி வெளியாகிறது Posted: 29 Jan 2014 09:08 PM PST பாராளுமன்றத்துக்கு மே மாத இறுதிக்குள் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அனைத்து பிரிவினரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தினார். |
| திருப்பதியில் செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: தமிழக தொழிலாளி பலி Posted: 29 Jan 2014 09:04 PM PST ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் அதிக அளவில் செம்மரங்கள் உள்ளன-. இந்த செம்மரங்களுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக விலை கிடைப்பதால் கடத்தல் கும்பல்கள் மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். வனத்துறை மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கடத்தலை தடுத்தாலும் சிலர் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த |
| மு.க.ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு Posted: 29 Jan 2014 08:47 PM PST தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது மு.க.அழகிரி நீக்கம் குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ''ஸ்டாலின் இன்னும் 3 மாதங்களில் செத்து விடுவார் என்று உரத்த குரலில் என்னிடம் சொன்னார். இதை எப்படி தாங்கி கொள்ள முடியும்'' என்றார். |
| பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேறினால் அரசியலில் இருந்து விலகுவேன்: கிரண்குமார் ரெட்டி Posted: 29 Jan 2014 08:44 PM PST ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியாக ''ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு மசோதா'' மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்து வருகிறது. இந்த மசோதா மீது விவாதம் நடத்தி 23–ந் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆந்திர அரசை கேட்டுக் கொண்டார். ஆனால் மசோதா மீது உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டியது இருப்பதால் மேலும் 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று ஆந்திர அரசு கோரிக்கை விடுத்தது. இதனை பரிசீலித்த ஜனாதிபதி 1 வாரம் மட்டும் அதாவது 30–ந்தேதி வரை கூடுதலாக கால அவகாசம் அளித்தார். ஜனாதிபதியின் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ''மத்திய அரசு அனுப்பியுள்ள மசோதாவில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளது. இந்த மசோதா செல்லாது. அதனை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகருக்கு நோட்டீசு அனுப்பி உ |
| டெல்லியில் சோனியாவுடன் ராம்விலாஸ் பஸ்வான் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை Posted: 29 Jan 2014 08:13 PM PST பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பீகாரில், காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தனது மகனும் கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவருமான சிராக் பஸ்வானுடன் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்விலாஸ் பஸ்வான், பீகாரில் கூட்டணி குறித்து தெளிவுபடுத்தவும், கூட்டணியை இறுதி செய்யும் விதமாகவும் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறினார். மேலும், பீகாரில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசியதாக சிராக் பஸ்வான் தெரிவித்தார். இதற்கிடையே பீகாரில் குறைந்தது 10 தொகுதியாவது லோக் ஜனசக்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து லோக் ஜனசக்தி சார்பில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் சோனியாவிடம் வலி |
| 1984-ம் ஆண்டு கலவரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: டெல்லி அரசு முடிவு Posted: 29 Jan 2014 08:05 PM PST முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில், ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 'இந்த கலவரத்தை காங்கிரஸ் அரசு கட்டுப்படுத்தியது என்றும், ஆனால் குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தை மாநில அரசு ஆதரித்தது' என்றும் கூறியிருந்தார். இந்தநிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை நேற்று சந்தித்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், 1984 கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது குறித்து துணைநிலை ஆளுநரிடம் விவாதித்ததாகவும், இதற்கு துணைநிலை ஆளுநரும் சாதகமான பதிலை கூறியதாகவும் தெரிவித்தார் மேலும், சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பது மற்றும் அதற்கான கால நிர்ணயம் குறித்து அடுத்த |
| இந்தியாவில் 35 கிலோ தங்கத்தை கடத்தியவர் குஜராத்தில் கைது Posted: 29 Jan 2014 04:08 PM PST 35 கிலோ தங்க கட்டிகளை வெள்ளியுடன் கலந்து கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவினர் சஞ்சய் படேல் என்ற அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் |
| அசாமில் இரு பிரிவினருக்கிடையே மோதல்: 10 பேர் பலி Posted: 29 Jan 2014 03:02 PM PST அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியை இரு பிரிவினர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அசாமிற்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையேயான எல்லைப்பகுதியிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது |
| நிதிஷ்குமாரும், சோனியாவும் பீகாரில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று ஒரே மேடையில் பேசுகின்றனர் Posted: 29 Jan 2014 02:11 PM PST மத்திய அரசுக்கும் பீகார் மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடையே இரு நாட்களுக்கு முன்பு கூட கடும் மோதல் நீடித்து வந்தது. இந்த சூழலில் அம்மாநில முதல்வரான நிதிஷ்குமாரும் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் |
| உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்த பீஜிங்கை பின்னுக்கு தள்ளிய டெல்லி Posted: 29 Jan 2014 01:50 PM PST உடல் நலக்குறைவு உள்ளவர்கள் டெல்லியில் வசிக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் டெல்லியின் மோசமான அளவிடமுடியாத மாசு அவர்களது உடல்நிலையை மேலும் மோசமாக்குகிறது |
| மாநிலங்களவையின் மிகப்பெரிய பணக்கார உறுப்பினரான ரவீந்திர கிஷோர் சின்ஹா Posted: 29 Jan 2014 12:55 PM PST பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவீந்திர கிஷோர் சின்ஹா என்பவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். 800 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ள அவரிடம் 78000 பேர் பணி புரிவதாக தகவல் |
| தீவிரவாதிகளால் நரேந்திரமோடிக்கு ஆபத்து: மத்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவல் Posted: 29 Jan 2014 12:39 PM PST பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் 4 வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏப்ரல்-மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு |
| "காங்கிரசின் நோக்கம்" என்ற ராகுலின் முயற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் தொடக்கம் Posted: 29 Jan 2014 11:28 AM PST ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் ராகுல் காந்தியின் "காங்கிரசின் நோக்கம்" என்ற சோதனை முயற்சியை சச்சின் பைலட் இன்று தொடங்கினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பின்பற்றப்படும் ஜனநாயக நடைமுறையை பயன்படுத்தி காங்கிரஸ் |
| இந்திய-மியான்மர் நாட்டு எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் Posted: 29 Jan 2014 10:24 AM PST இந்திய-மியான்மர் நாட்டு எல்லைப் பகுதியான ஷில்லாங்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு மற்றும் சேதாரம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வரவில்லை. இன்று இரவு 7.16 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது மேகாலயா, நாகாலாந்து, அசாம், அருணாசல பிரதேசம் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |